Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorkkam
Sorkkam
Sorkkam
Ebook97 pages36 minutes

Sorkkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sorkkam

Read more from Rajeshkumar

Related to Sorkkam

Related ebooks

Related categories

Reviews for Sorkkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorkkam - Rajeshkumar

    19

    1

    கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு அம்பு போல் காரைச் செலுத்திக் கொண்டிருந்த ‘மெளனா’வை கொஞ்சம் பயத்தோடு பார்த்தான் அட்சய்.

    "மெளனா...’’

    ம்...

    கார்ல இருக்கிற ஸ்பீடா மீட்டரைப் பார்த்தியா?

    பார்த்துட்டுத்தானே காரை ஓட்டிகிட்டு இருக்கேன்...

    நூத்தி இருபதுல போயிட்டிருக்கே... கார் லேசா ஸ்கிட்டானாலும் நீயும் நானும் நாளைக்கு கைப்பிடி சாம்பல்...

    அழகான இருபத்து மூன்று வயது மெளனா, அந்த அழகான இருபத்தேழு வயது அட்சயைப் பார்த்து கண்ணடித்தாள்.

    ஏண்டா... இப்படி பயப்படறே...?

    இப்படி ரேஷ் ட்ரைவிங் பண்ணினா பயப்படாமே எப்படி இருக்க முடியும்...? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் பெத்துக்க முடியாது போலிருக்கே?

    மெளனா சிரித்தாள்.

    கவலைப்படாதே... நான் பெத்துத் தர்றேன்... சொன்னவள் காரின் வேகத்தை மேலும் ஒரு பத்து கிலோமீட்டர் அதிகப்படுத்தினாள்.

    மெளனா! வேண்டாம்! ஏதிர்ல பார்த்தியா எவனோ ஒருத்தன் லாரியோ - பஸ்ஸோ ஹெட்லைட்டை அணைக்காமே வர்றான். வேண்டாம் இந்த ரிஸ்க் ட்ரைவ்... வேகத்தைக் குறை.

    அட்சய்... இந்த ஈ.சி.ஆர். ரோட்ல 120 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைஞ்சு ட்ரைவ் பண்ணினா அது நம்மை மாதிரியான இளைய தலைமுறைக்கு பெருத்த அவமானம்.

    ப்ளீஸ் மெளனா... இது ராத்திரி நேரம்...! நேரம் பத்தரை மணி. நிறைய பேர் ஆல்கஹாலிக் யூஸ் பண்ணிட்டு தாறுமாறாய் வண்டியை ஓட்டிக்கிட்டு வருவாங்க.

    பேசாம வாடா பயந்தாங்கொள்ளி...! உன்னைக் காதலிச்சதுக்குப் பதிலா அந்த ஓமக்குச்சி ஓமநாதனைக் காதலிச்சிருக்கலாம்... எதிரே வந்த ஒரு லாரி காரை ஒரு அங்குல இடைவெளியில் சீய்த்துக் கொண்டு போக, அட்சய் கண்களை மூடிக் கொண்டான். மௌனா சிரித்தாள்.

    அட்சய்! உன்னை நிறைய மாத்த வேண்டியிருக்கு. வெளிநாட்டுக்குப் போய் எம்.எஸ். பண்ணிட்டு வந்திருக்கே... ஒரு நாளாவது என்னை கன்னத்திலாவது கிஸ் பண்ணியிருக்கியாடா...?

    எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்...!

    ஏன் இப்ப பண்ணினா என்னவாம்...?

    எதையுமே கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணினாத்தான் த்ரில்...

    உன்னைத் திருத்தவே முடியாதுடா...!

    மெளனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே தொலைவில், இருட்டில் நடுரோட்டில் ஒரு டார்ச்சின் வெளிச்ச வட்டம் தெரிந்தது.

    யாரோ வண்டியை நிறுத்தறாங்க...

    போலீஸ் மாதிரி தெரியுது...

    இவங்களுக்கு வேற வேலையே கிடையாது. பொழுது போகலைன்னா ஈ.சி.ஆர். ரோட்ல வந்து நின்னுடுவாங்க... மெளனா சலித்துக் கொண்டே காரின் வேகத்தைக் குறைத்தாள். சாலையின் ஓரமாய் பேட்ரோலிங் ஜீப் ஒன்று ரிவால்விங் சிவப்பு விளக்கோடு தெரிய, நான்கைந்து போலீஸ் அதிகாரிகள் பார்வைக்குக் கிடைத்தார்கள். சாலையின் எதிர்பக்கத்தில் சில கார்கள், டூ வீலர்கள் மடக்கப்பட்டு தாறுமாறாய் இருந்தன. மெளனா காரை நிறுத்த, போலீஸ் அதிகாரி பக்கத்தில் வந்தார். குனிந்து கார்க்குள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு மெளனாவிடம் ஷோ மீ யுவர்... ட்ரைவிங் லைசென்ஸ்... அண்ட் ஆர்.ஸி.புக்... மெளனா டாஷ் போர்டைத் திறந்து ஒரு பாலிதீன் உறைக்குள் இருந்த இரண்டையும் எடுத்துக்காட்ட அந்த அதிகாரி அவைகளை வாங்கிப் பார்த்தார். பிறகு மெளனாவையும் அட்சயையும் ஒரு தீர்க்கமான பார்வையில் கழுவிவிட்டு கேட்டார்.

    ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃபா...?

    இல்லை... லவ்வர்ஸ் என்றாள் மெளனா. மெளனாவின் துணிச்சலான பதிலில் ஒரு விநாடி திகைத்துப் போன போலீஸ் அதிகாரி மறுவிநாடியே எரிச்சலானார்.

    "என்னது...! லவ்வர்ஸ்ஸா...? நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்ங்கிறதுக்கு என்ன அத்தாட்சி...? உனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவன் ஒரு ரேட் பேசி உன்னைத் தள்ளிட்டு வந்து இருக்கலாமில்லையா...? மெளனாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அட்சய் ஏதோ கோபமாய் பேச முயல, அவனைக் கையமர்த்திய மெளனா அந்த போலீஸ் அதிகாரியை ஒரு புன்னகையோடு ஏறிட்டாள்.

    ஓ! உங்களுக்கு அப்படியொரு சந்தேகம் இருக்கா?

    சந்தேகம் என்ன... நீங்க ரெண்டு பேரும் அப்படிப்பட்ட கேஸ்தான்... மொதல்ல ரெண்டு பேரும் வண்டியை விட்டு இறங்குங்க... மெளனா காரை விட்டு இறங்காமல் தன் இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்தினாள்.

    "இதோ பாருங்க ஸார்... நான் நினைச்சிருந்தா நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவின்னு பொய் சொல்லியிருக்கலாம். பட் நான் உண்மையை சொன்னேன். நீங்க நினைக்கிற மாதிரி நாங்க ஒண்ணும் லோஃபர்ஸ் கிடையாது. டீஸண்டான ஃபேமியிலிருந்து வர்றோம்...’’

    என்ன சொன்னே...! டீஸண்டான ஃபேமிலியா? உன்னோட ஃபேமிலி டீஸண்டான ஃபேமிலியா... இல்ல ராத்திரி நேர பிசினஸில் மட்டும் கொடிகட்டிப் பறக்கிற ஃபேமிலியான்னு நாங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கறோம். மொதல்ல இறங்கு...

    ...

    மெளனா அந்த போலீஸ் அதிகாரியையே பார்க்க அவர் குரலை உயர்த்தினார்.

    ஏய்... என்ன பார்க்கிற... சொன்னது காதுல விழலை...? இறங்குடி... மொதல்ல... இந்த லுக்கு விடற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். மெளனா காரினின்றும் கீழே இறங்க, அட்சய்யும் மறுபக்கக் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான்.

    போலீஸ் அதிகாரி தன் கையில் வைத்து இருந்த லட்டியால் மெளனாவின் தோளை

    Enjoying the preview?
    Page 1 of 1