Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உலராத ரத்தம்
உலராத ரத்தம்
உலராத ரத்தம்
Ebook150 pages53 minutes

உலராத ரத்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கங்கப்பா வாழைக் கன்றை அதிர்ந்துபோய் நின்றிருந்த ருத்ரமூர்த்தியின் கையில் திணித்துவிட்டு பதட்டத்தோடு குழியருகே வந்தார். மண்டியிட்டு உட்கார்ந்து குழிக்குள் எட்டிப் பார்த்தார்.
வெகுவாய் அழுகிப்போன அந்த விரல்களில் சதை பாகங்கள் உரித்து எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. குப்பென்று ஒரு கவுச்சு நாற்றம் அடித்தது.
கையில் கடப்பாரையோடு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த பட்ராச்சாரியாரின் குரல் வெடவெடத்தது... “ஐ.ஜி. ஸார்... பொ... பொணத்தை யாரோ... இ... இ... இங்கே கொண்டாந்து புதைச்சிட்டு போயிருக்காங்க. நல்ல நாளும் அதுவுமா கிரஹப் பிரவேசம் செய்யப்போற இந்த சமயத்திலா இது வெளியே வரணும்... கர்மம்... கர்மம்...”
“பட்ராச்சாரியார்? மொதல்ல மண்ணைத் தள்ளி அந்தக் குழியை மூடுங்க. சுடுகாடா இருக்கிற இந்தப் பங்களாவை வாங்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். ஆனா எங்கப்பா கேட்கலை. இப்ப பார்த்திங்களா வாழைக் கன்றை நடறதுக்கு குழியைத் தோண்டினா பொணம் கைளை நீட்டுது... ம்... மண்ணை போட்டு வேற பக்கமா ஒரு குழியைத் தோண்டுங்க.”
“அதுவும் சரிதான்” நகர முயன்ற பட்ராச்சாரியாரை கங்கப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது “கொஞ்சம் நில்லுங்க.”
பட்ராச்சாரியார் நிற்கிறார்.
“குழியை மூடாதிங்க... அந்தப் பிணத்தை முழுசுமா தோண்டி வெளியில எடுத்து போடணும். அந்த பிணம் ஆணா பெண்ணா... இந்த இடத்துக்கு யார் கொண்டு வந்து எப்படிப் புதைச்சாங்கன்னு போலீசைவிட்டு கண்டுபிடிக்கச் சொல்லணும்.போலீசா?” முகம் மாறினார் ருத்ரமூர்த்தி. “கங்கப்பா! இந்த விஷயத்தை பெரிசு பண்ணிடாதே! கிரஹப்பிரவேசத்தை நடத்தப்போற இந்த நல்ல நாள்லே போலீசைக் கூப்பிட்டு அசிங்கம் பண்ணிடாதே.”
கங்கப்பா முகம் இறுகிப் போய் இருந்தார் “ருத்ரமூர்த்தி! நான் ஒரு எக்ஸ் போலீஸ்மேன். இதையெல்லாம் பார்த்துட்டும் பார்க்காத மாதிரி போக என்னால முடியாது. பாடியோட ஃபிங்கர்ஸைப் பார்த்தா சமீபத்தில் புதைச்ச பொணமாத்தான் தெரியுது. உன்னோட பங்களாவில் இருக்கிற யாரையாச்சும் ஒருத்தரைக் கூப்பிட்டு குழியைத் தோண்டி பொணத்தை வெளியே எடுக்கச் சொல்லு.”
“கங்கப்பா.”
“நான் சொன்னதை செய் ருத்ரமூர்த்தி போலீஸ் வந்து பாடியை பாத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போனப்பறம்... உன்னோட கிரஹப்பிரவேச பங்ஷனை வெச்சுக்கோ.”
ருத்ரமூர்த்தி இருண்டுபோன முகத்தோடு - போர்டிகோ தூணோரமாய் நின்றிருந்த - எடுபிடி வேலைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த கந்தப்பனைப் பார்த்தார். எரிச்சலான குரலில் சொன்னார்.
“அந்தக் கடப்பாறையை வாங்கித் தோண்டுடா.”
“சரிங்கய்யா.” ஓடி வந்து பட்ராச்சாரியார் கையில் இருந்த கடப்பாறையை வாங்கிக்கொண்ட கந்தப்பன், குழியை நெருங்கி அகலமாய் கொத்த ஆரம்பித்தான். கங்கப்பாவைத் தவிர எல்லோரும் எட்டடி பின்வாங்கி தூரப் போய் நின்று கொண்டார்கள்.
“பாடி மேல கடப்பாரை குத்து படாமே ஜாக்ரதையா...” கங்கப்பா கர்சீப்பால் முகத்தைப் பொத்திக்கொண்டே சொல்ல, கந்தப்பன் தலையை ஆட்டியபடி தோண்ட ஆரம்பித்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
உலராத ரத்தம்

Read more from ராஜேஷ்குமார்

Related to உலராத ரத்தம்

Related ebooks

Related categories

Reviews for உலராத ரத்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உலராத ரத்தம் - ராஜேஷ்குமார்

    1

    ரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடி வயிற்றில் சூரியன் மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று வளர ஆரம்பித்தது, ரோட்டோர புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க - ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.

    காரை ஓட்டிக் கொண்டிருந்தார் ருத்ரமூர்த்தி.

    தன்னுடைய அறுபதாவது வருஷத்தை வருகிற ஏப்ரல் மாதம் தொடப்போகும் ருத்ரமூர்த்தி தொண்ணூறு சதவீத வழுக்கையில் இருந்தார். நரைமீசையை நேரம் செலவழித்து செதுக்கியிருந்தார். மெலிதான பச்சை நிறத்தில் கூலிங்கிளாஸை மாட்டியிருந்தார்.

    அவருக்கருகே, அவருடைய தோளையொட்டினாற்போல் உட்கார்ந்து - காற்றில் பிசிறடித்து முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றையை நிமிஷத்திற்கொருதரம் ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தாள் சுகிர்தா. போன மாதத்தோடு இருபது வயசை முடித்துக்கொண்ட இந்த சுகிர்தா, அறுபது வயதை தொடப்போகும் ருத்ரமூர்த்திக்கு இரண்டாவது மனைவி.

    ஒரு வருஷத்திற்கு முன்னால் ருத்ரமூர்த்தி மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோது அவரை கவனித்துக்கொள்ள ராஜரத்தினம் நர்ஸிங் ஹோமிலிருந்து நர்ஸாக வந்த சுகிர்தா, ருத்ரமூர்த்தியின் மஞ்சள் காமாலை நோய் முழுசுமாய் குணமாவதற்குள் அவர் கையாலேயே தன் கழுத்துக்கு மஞ்சள் கயிற்றை வாங்கிக் கொண்டவள்.

    காரின் பின் சீட்டில் இடது பக்கத்திலிருந்து முதல் ஆளாய் உட்கார்ந்து நேர் பார்வை பார்த்துக்கொண்டு வருபவன் சூர்யகாந்தன். ருத்ரமூர்த்தியின் முதல் வித்து. அவனுக்குப் பக்கத்தில் மாநிறமாய், சுமாரான அழகில் உட்கார்ந்திருப்பவள் முக்தா, சூர்யகாந்தனின் மனைவி.

    முக்தாவுக்குப் பக்கத்தில் சிவப்பாய் - ஆனால், லட்சணத்தை தொலைத்துவிட்டு வந்தவள்போல் உட்கார்ந்து இருப்பவள் கல்பனா. அவளோடு ஒட்டிக்கொண்டு பின் சீட்டில் வலது கோடியில் உட்கார்ந்திருப்பவன் சந்திரகாந்தன். ருத்ரமூர்த்தியின் இரண்டாவது வித்து. எதிரே வந்த லாரிக்கு வழி கொடுத்து ஒதுங்கி, பின் கியரை மாற்றி வேகம் எடுத்த, ருத்ரமூர்த்தி காரில் நிலவிக் கொண்டிருந்த கனமான மௌனத்தை தன் தொண்டைக் கனைப்பால் கெடுத்தார்.

    என்ன எல்லாருமே உம்முன்னு உட்கார்ந்துட்டு வர்றீங்க? ஏதாச்சும் பேசிட்டு வாங்களே... புது பங்களாவுக்கு குடிபோற சந்தோஷம் உங்கள்ல யாருக்குமே இல்லையே... ம்...

    சூர்யகாந்தன் உச் கொட்டினான்.

    சந்தோஷமா பேசறதுக்கு என்னப்பா இருக்கு. அந்த பழைய ஜமீன் வீட்டை அநியாய விலைக்கு வாங்கி, லட்சங்களைக் கொட்டி புதுப்பிச்சு இன்னிக்கு கிரகப்பிரவேசம் நடத்தப் போறீங்க. சிட்டிக்கு சென்டர்ல ஜம்ன்னு இருந்த நம்ப பழைய பங்களாவையும் விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்க. எல்லாருமே அந்த ஜமீன் பங்களாவில்தான் இருக்கப் போறோம்ன்னு பிடிவாதமா சொல்லிட்டீங்க. இப்படி எல்லாமே உங்க இஷ்டப்படி நடக்கிறப்போ நாங்க பேசறதுக்கு என்ன இருக்கு...?

    பல்செட்டின் உபயத்தில் சிரித்தார் ருத்ரமூர்த்தி.

    டேய்... சூர்யா... நாம இப்போ குடிபோகப் போகிற பங்களா ரொம்பவும் ராசியான பங்களாவாம். நம்ப ஜோசியர் சொல்றார்...

    அவர் சொல்வார்... உங்க மனசுல என்ன எண்ணம் ஓடுதோ அதை அப்படியே கிரகிச்சுகிட்டு உங்களுக்கு ஏத்த மாதிரி சொல்வார். போயும் போயும் அந்த ஜோசியர் பேச்சை நம்பி ஒரு சத்திரத்தை விலைக்கு வாங்கிட்டீங்கப்பா. அதென்ன ஜமீன் பங்களா மாதிரியாகவா இருக்கு?

    கோபமாய் பேசிய சூர்யகாந்தனுக்கு வயது முப்பது. ருத்ரமூர்த்தியின் சாயலை கொஞ்சம் அதிகமாகவே வாங்கியிருந்தான்.

    ருத்ரமூர்த்தி காரின் வேகத்தை குறைத்து பின்னால் திரும்பி சின்ன மகன் சந்திரகாந்தனைப் பார்த்து புன்னகைத்தார். உன்னோட பங்குக்கு நீ என்னடா சொல்லப்போறே சந்திரா?

    அண்ணன் சொன்னதுல என்னப்பா தப்பு? அந்த ஜமீன் பங்களாவை நீங்க வாங்கினது மகா தப்பு. சரி... வாங்கினது வாங்கிட்டீங்க. அந்த பங்களாவை வேற யாருக்காவது வாடகைக்கு விட்டிருக்கணும். அதை விட்டுட்டு அந்த குடோன் மாதிரி இருக்கிற பங்களாவை மெனக்கட்டு போய் புதுப்பிச்சு இப்போ கிரகப்பிரவேசமும் நடத்தி குடும்பத்தோடு மொத்தமா குடிபோகவும் போறீங்க. எங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட இஷ்டமில்லேப்பா...

    சுகிர்தா முதன் முறையாக வாயைத் திறந்தாள். ருத்ரமூர்த்தியை கொஞ்சம் கோபமாய் ஏறிட்டாள். இதோ பாருங்க, உங்க ரெண்டு சன்ஸுக்குமே அந்த ஜமீன் பங்களாவுக்கு குடிவர பிரியமில்லை. அவங்களை எதுக்காக வற்புறுத்தி கூட்டிட்டு போறீங்க. அவங்களுக்கு வேற பக்கமா ஏதாவது ஒரு பங்களா பார்த்து குடுத்துடுங்க. நாம ரெண்டு பேரு மட்டும் அந்த ஜமீன் பங்களாவில் இருந்துக்கலாம்...

    நீ சொல்றதும் சரிதான் சுகி... வேற ஒரு பங்களா தோதா கிடைக்கிறவரை அவங்க நம்மகூட கொஞ்ச நாள் இருக்கட்டும். அந்த இருக்கிற கொஞ்ச நாள்லேயே இவங்களுக்கும் அந்த ஜமீன் பங்களா பிடிச்சு போயிடும்...

    மாமா!

    மூத்த மருமகள் மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

    என்னம்மா முக்தா என்றபடி திரும்பினார் ருத்ரமூர்த்தி.

    மாமா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது.

    பரவாயில்லை சொல்லம்மா.

    அந்த ஜமீன் பங்களாவைப் பத்தி ஊர்ல பலவிதமா பேசிக்கறாங்க. அந்த ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த பெரியவங்க யார் இறந்து போனாலும் அவங்களை பங்களாவுக்குள்ளேயே அடக்கம் பண்ணுவாங்களாம். பங்களாவுக்குப் பின்னாடி இருக்கிற காலி நிலத்தில் நிறைய சமாதிகள் இருந்ததாம். அப்படி சமாதி மயமா இருக்கிற அந்த பங்களாவுக்குள்ளே நாம நிம்மதியா இருக்க முடியுமா மாமா...?

    ஹைவேஸ் ரோட்டினின்றும் தடாலென்று பிரிந்த அந்த செம்மண் பாதையின் காரை நுழைத்த ருத்ரமூர்த்தி, கார் அந்த பாதையில் ஒரு நிமிஷம் ஓடி சீரான வேகத்துக்கு வந்ததும் முக்தாவை திரும்பிப் பார்த்தார்.

    அம்மா முக்தா! ஊர்ல இருக்கிற பலரும், பலதும் சொல்லுவாங்க! நீ சொல்ற மாதிரி அந்த பங்களாவுக்கு உள்ளே, தரை மட்டத்துக்கு கீழே சமாதிகள் இருக்கலாம். இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஜமீன் பரம்பரை இறந்துபோன ராஜாக்களை பங்களாவுக்குள்ளே புதைச்சிருக்கலாம். அதெல்லாம் எப்பவோ நடந்துபோன விஷயம். இப்போ அந்த பங்களாவை ரொம்பவும் மாத்திருக்கேன்.

    அந்த பங்களாவை நீங்க என்னதான் மாத்தினாலும் அதுல மயான வாசம் கண்டிப்பா அடிக்கும் மாமா...

    செம்மண் புழுதி ஹோலி பண்டிகை கலர் பவுடராய் பறக்க, கார் கொஞ்சம் தொலைவில் தெரிந்த வெள்ளை நிற பங்களாவை குறிவைத்து குதித்து குதித்தி ஓடியது. ருத்ரமூர்த்தி புன்னகையோடு சின்ன மருமகள் கல்பனாவை பார்த்தார்.

    என்னம்மா கல்பனா... எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு பேசி முடிச்சிட்டாங்க... நீயும் ஏதாவது சொல்லப் போறயா...

    மாமா... எச்சில் விழுங்கினாள் கல்பனா.

    சொல்லும்மா.

    மாமா... எனக்கு இந்த பேய், பிசாசு, ஆவி அதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை... இருந்தாலும், நம்ம பங்களா பழைய வாட்ச்மேன் சம்சாரம் ரெண்டு நாளைக்கு முன்னாடி பங்களாவுக்கு பழைய சேலை கேக்கிறதுக்காக வந்திருந்தா...

    யாரு...? நம்ம வாட்ச்மேன் சண்முகத்தோட சம்சாரம் பொன்னியா?

    ஆமாம்.

    என்ன சொல்லிட்டு போனா?

    கல்பனா மறுபடியும் அவஸ்தையாய் எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னாள். மாமா! அந்த பொன்னி ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஜமீன் பங்களாவுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த புறம்போக்கு நிலத்துல குடிசை போட்டுகிட்டு வயல் நடவு வேலைக்கு போயிட்டிருந்தாளாம். காலியா இருக்கிற அந்த பங்களாவைச் சுற்றியும் கத்தாழையும், புல்லும் முளைச்சி இருக்குமாம்... யாருமே இல்லாத அந்த பங்களாவுக்குள்ளே ராத்திரி நேரமானா யாரோ சிரிக்கிற சத்தமும்... ஒரு பொண்ணு அழற சத்தமும் கேட்குமாம். ‘போ... பொன்னி உன்னோட பிரமையா இருக்கும்’ன்னு சொன்னேன். அதுக்கு அவ இல்லேம்மா நிஜந்தான்... வேணுமின்னா எங்க வூட்டுக்காரரை கேட்டுப் பாருன்னு சொல்றா.

    கல்பனா சொல்லி முடித்ததும் ருத்ரமூர்த்தி சிரித்தார்.

    அந்த பொன்னி அவ்வளவுதான் சொன்னாளாம்மா?

    மாமா! அது உங்களுக்கு சிரிப்பா இருக்கு. ஆனா, எனக்கு நினச்சாலே உடம்பை யாரோ வருடி விடற மாதிரி சிலிர்க்குது.

    "அம்மா கல்பனா! ஒரு பங்களா ரொம்ப காலமா பூட்டியே கிடந்தா இப்படித்தான் ஏதாவது கற்பனை பண்ணி பேசிட்டிருப்பாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1