Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ரத்த ஞாயிறு
ரத்த ஞாயிறு
ரத்த ஞாயிறு
Ebook80 pages26 minutes

ரத்த ஞாயிறு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லான் மத்தியில் பிரம்பு நாற்காலிகள் வட்டமாய் போடப்பட்டிருக்க - மத்தியில் ஒரு டீபாய் காப்பிக் கோப்பைகளோடு தெரிந்தது.
 காலை நெடுக நீட்டி நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார் டைரக்டர் - பரத்வாஜ்.
 சற்றே நரை கலந்த ஃப்ரென்ச் தாடி வைத்து க்ரீம் நிறத்தில் பைஜாமா அணிந்திருந்தார். தேசப்பிதா ஸ்டைலில் மூக்குக் கண்ணாடி. தொடர்ந்து ஏழு வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். அந்த தெம்பு உடம்பில் தெரிந்தது.
 பரத்வாஜுக்கு எதிரே உட்கார்ந்திருந்தார் - ப்ரொட்யூசர் ராமலிங்கம். நெற்றியை அடைத்துக் கொண்டு சந்தனப் பட்டை, கதர் வேஷ்டி, சட்டை கக்கத்தில் ஒரு கறுப்பு லெதர் பை.
 இந்த நிமிஷம் அவர் முகத்தில் கவலை ரேகைகள்.
 "படத்தை முடிக்க லேட்டாயிட்டே போகுது. கொஞ்சம் மனசு வெச்சு படத்தை சீக்கிரமா முடிக்கக்கூடாதா?"
 பரத்வாஜ் தலையை ஆட்டினார்.
 "வாஸ்தவம்தான் ராமலிங்கம். என்னோட அனுபவத்தில் முதல் தடவையா இப்படி லேட்டாயிருக்கு."
 "எனக்குப் படம் பண்ணும்போதுதான் இப்படி ஆகணுமா...? கதையை முடிவு பண்ணி எவ்வளவு நாளாச்சு...? இன்னும் ஷூட்டிங்கைத் துவங்கினபாடில்லை... பணம் மட்டும் தண்ணியா செலவழியுது."
 "ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும், டேக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் குடுத்துத்தானே ஆகணும்."
 "டயத்துக்கு காரியம் நடந்தா நான் பணம் செலவாகறதைப் பத்திக் கவலைப் படவே மாட்டேன். எப்பதான் ஷூட்டிங்கை ஆரம்பிப்பீங்க...? சொல்லுங்க..."
 "ஸ்க்ரிப்ட் ரெடியானா ஆரம்பிச்சுரலாம்."ஸ்க்ரிப்ட் எப்ப ரெடி ஆகும்...?"
 "இந்தத் தாமதத்துக்கெல்லாம் காரணம் கதாசிரியர் ராஜராஜன்தான். அவர் ஸ்க்ரிப்டைத் தர லேட் பண்றதால தான் இவ்வளவு பிரச்சினையும்."
 "எங்கே அந்த ஆளு...?"
 "வழக்கம் போல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண 'ஸ்கை வியூ' ரிசார்ட்டுக்குப் போய்ட்டார்."
 "ரொம்ப லேட் ஆகும்ன்னா ஆளைத் தூக்கிடுங்க வேற யாரையாச்சும் போட்டுக்கலாம். இப்பல்லாம் புதுசா வர்றவங்க நல்லாவே ஸ்கிரிப்ட் பண்றாங்க."
 பரத்வாஜ் தலையாட்டி மறுத்தார். "புது ஆள் வேண்டாம்..."
 "ஏன்...?"
 "ராஜராஜன் என்னோட யூனிட் ஆளு... நல்ல டேலண்ட்டட் ஆசாமி. வரிசையா நான் ஏழு ஹிட் குடுத்திருக்கேன்னா... அந்த ஏழிலும் அவரோட ஸ்க்ரிப்ட்டுக்கும் பங்கு இருக்கு... நல்லா செய்யக்கூடியவர். இந்த தடவை கொஞ்சம் அதிகமா டயம் எடுத்திட்டார்..."
 "பணம் போட்டிருக்கேன்... வட்டி ஏறிட்டே போகுது."
 "அதுக்காக அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு காரியம் பண்ணக்கூடாது. ஸ்க்ரிப்ட் நல்லா இல்லைன்னா படம் ஊத்திக்கும். ஷூட்டிங் ஆரம்பிக்கட்டும் ராமலிங்கம். எக்ஸ்ட்ரா கால்ஷீட் வாங்கி டிலேயை சரிக்கட்டிடலாம். படம் நல்லா வந்ததுன்னா போட்ட பணத்தைக் காட்டிலும் நாலைஞ்சு மடங்கு அள்ளிடலாமே."
 ராமலிங்கத்தின் முகம் புன்னகைக்கு போயிற்று.
 சில விநாடி இடைவெளிக்கு பின் கேட்டார்.
 "இந்தப் படத்துல வில்லன் கேரக்டர் வித்தியாசமா எதிர்பார்க்கறேன்று ராஜராஜன் கிட்டே சொன்னீங்களா...?"
 "ஆமா! ஸ்க்ரிப்ட் பண்ணும்போது வில்லன் டயலாக்ஸ் வித்தியாசமா எழுதிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன்...""அந்த ரோலுக்கு புதுமுகம் போட்டாத்தான் சரியாவரும்ன்னு நான் நினைக்கிறேன்."
 "வித்தியாசமான வில்லன் வேணும்ன்னு இமேஜ் இல்லாத புது ஆள் போடறது பெட்டர். ஒரு ஆளைக் கூட பார்த்து வெச்சிருக்கேன். அஞ்சு மணிக்கு மேல வரச் சொல்லியிருக்கேன். நீங்க கொஞ்ச நேரம் இருந்தீங்கன்னா ஆளைப் பார்த்துட்டுப் போயிரலாம்."
 "நீங்க பார்த்து செலக்ட் பண்ணினாப் போதும். ஒரு கேஸ் விஷயமா வக்கீலைப் பார்க்கணும். அஞ்சு மணிக்கு அப்பாயின்மெண்ட்."
 சொல்லிக்கொண்டே எழுந்த ராமலிங்கம் விடைபெற்று சற்றுத் தள்ளி பேவ் மென்ட்டில் நின்றிருந்த அவருடைய காரில் ஏறிப் புறப்பட்டார்.
 செய்தித் தாளில் பார்வையை நிறுத்தினார் பரத்வாஜ்.
 நிமிஷங்கள் கடந்த போது -
 இளங்கோ பங்களா வாசலில் தயங்கித் தயங்கி பிரவேசித்தான். விக்கட் கதவைத் திறந்துவிட்ட கூர்க்கா ராம் வழக்கமான சிடுசிடு முகத்தை சுத்தமாய்த் துடைத்து விட்டு பான் கறை படிந்த பற்களைக்காட்டி சிரித்தான்.
 "டைரக்டர் லான்ல உட்கார்ந்திருக்கார். போய்ப் பாரு."
 இளங்கோ தயக்கமாய் சிமெண்ட் பாதையில் நடையை எட்டிப் போட்டான்.
 பரத்வாஜ் அமர்ந்திருந்த பிரம்பு நாற்காலியை சமீபித்து பவ்யத்தோடு கை கூப்பனார்.
 "வணக்கம் ஸார்."
 செய்தித்தாளில் புதைந்திருந்த பரத்வாஜ் நிமிர்ந்தார். இளங்கோ மறுபடியும் கும்பிட்டான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223450047
ரத்த ஞாயிறு

Read more from Rajeshkumar

Related to ரத்த ஞாயிறு

Related ebooks

Related categories

Reviews for ரத்த ஞாயிறு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ரத்த ஞாயிறு - Rajeshkumar

    1

    ‘பரத்வாஜ் இல்லம்’

    அகலமான வாயில் கதவுக்கு இருபுறமும் செவ்வக சைஸ் க்ரானைட் கல்லில் பெயர் செதுக்கப்பட்டிருக்க - ஷுட் மெட்டலால் ஆன அந்த பங்களா கேட்டுக்கு வெளியே அந்நேரத்துக்கே சொற்ப கும்பல் குழுமியிருந்தது.

    காம்பவுண்ட் கேட்டின் இடைவெளி வழியே பங்களாவின் முகப்பை தரிசித்து விட சிலர் எம்பி எம்பி முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்டுக்குள் அடர்த்தியாய் வளர்ந்த மரங்கள் பச்சை நிற சுவர் போல பங்களாவை சூழ்ந்து கொண்டு அவர்கள் முயற்சியை முறியடித்தது.

    விக்கெட் கதவு சேலாகத் திறந்து - சீஸாப் பச்சை யுனிபார்ம் அணிந்த கூர்க்கா வெளிப்பட்டான். அவன் கையில் வார்னிஷ் மெருகோடு ஒரு லத்தி.

    எல்லாரும் தள்ளி நில்லுங்க.

    கூட்டத்தை நோக்கி கர்ஜனை பண்ணி அடிக்கிற பாவனையோடு வேகமாய் லத்தியை ஓங்கினான்.

    சீட்டுக்கட்டு சரிவது மாதிரி கும்பல் பயத்தோடு ஒட்டுமொத்தமாய் பின் வாங்கியது.

    ‘‘கூர்க்காண்ணே... ஒரே நிமிஷம் உள்ளே விடுங்கண்ணே... உள்ளே போய் பேர்டிகோ ஓரமா ஒண்டி நின்னுக்கறேன்."

    ச்சீ... தள்ளி நில்லு. டைரக்டர் வர நேரமாச்சு. நீ குறுக்கே நின்னா. என்னோட சீட்டைக் கிழிச்சிருவாங்க.

    லத்திக்கு பயந்து கும்பல் மேலும் ஒதுங்கி நிற்க -

    கும்பலோடு கும்பலாய் இளங்கோவும் ஒதுங்கினான்.

    அவன் கண்களில் கலக்கமும் ஆர்வமும் ஒரு சேர பரவியிருந்தது.

    பேண்ட், சர்ட் கசங்கி தெரிந்தாலும் நல்ல அகல உயரங்களோடு லட்சணமாய் தெரிந்தான்.

    கூர்க்கா, கும்பலில் இருந்த இளங்கோவை அடையாளம் கண்டு கண்களில் கோபத்தைக் காட்டியபடியே கேட்டான்.

    இன்னிக்கும் நீ வந்துட்டியா.

    டைரக்டர் கண்ணுல படற வரைக்கும் வந்துட்டேதான் இருப்பேன். ஒரே ஒரு நிமிஷம் என்னை அவர்கிட்டே பேச விட்டாப் போதும்...!

    பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே... இந்த வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிற நேரம் எங்காச்சும் போய் வேலை தேடு... உருப்படுவே.

    நடிக்கணும்ங்கற வெறியோட ஊரை விட்டு ஓடி வந்திருக்கேன்...

    உன்னை மாதிரி தினமும் ஆயிரம் பேர் மெட்ராசில் வந்து இறங்கறான். ம்... அப்படி தள்ளிப் போ...

    அவன் கத்திய - அந்த விநாடி -

    விக்கெட் கதவு மறுபடியும் லேசாய்த் திறந்தது.

    உள்ளே இருந்து இன்னொரு கூர்க்காவின் தலை தெரிந்தது.

    ராம். கூப்பிட்டது.

    என்னது...?

    டைரக்டர் கார் கிளம்பியிருச்சு. இடைஞ்சல் இல்லாம வாசலைக் க்ளியர் பண்ணிவை. டிஸ்டர்பன்ஸ் ஆச்சுன்னா அவருக்குக் கோபம் வந்துரும். நானும் நீயும்தான் அர்ச்சனை வாங்கணும்.

    இன்னிக்குக் கும்பல் அதிகமா இருக்கு. விடிஞ்சும் விடியாததுமா இங்கே வந்து கூடிக்கறான்ங்க. டேய்... ஓரமாப் போங்கடா... போங்கடான்னா...

    பதட்டத்தோடு கூட்டத்தை ஒதுக்கி வைத்தான்.

    வாயில் கேட் கோட்டைக் கதவு போலத் திறந்து கொள்ள – இலவம்பஞ்சு வெள்ளையில் க்ளாசிக் கான்ட்டெஸ்ஸா ஒரு தேர் போல வெளிப்பட்டது.

    அண்ணே...

    பரத்வாஜ் அண்ணே...

    காத்திருந்த கும்பலுக்கிடையே பரபரப்புத் தோன்றியது. கூச்சல்கள் கிளம்பின.

    கண்ணாடி பாதி இறங்கியிருந்த ஜன்னல் வழியே பரத்வாஜின் ஒரு செகண்ட் புன்னகை முகம் மட்டுமே தெரிந்து மறைந்தது.

    அந்த ஒரு செகண்டிலேயே ஜென்ம சாபல்யம் பெற்று விட்டதைப் போலப் பலரும் பரவசப்பட்டுக் கொண்டார்கள்.

    கார் வெளியே வரும்போது ஆர்வத்தோடு ஓடி வந்து முன்னால் நின்ற இளங்கோ கார் வேகமாய் போவதைப் பார்த்துவிட்டு முகம் பூராவும் கவலையைத் தேக்கி வைத்துக்கொண்டான். அத்தனை நேரப் பரபரப்பும் கலைந்து கூட்டம் சின்னச் சின்ன சலசலப்புடன் கரைய ஆரம்பித்தது.

    இளங்கோ ரோட்டின் ஓரமா உட்கார்ந்து விட்டான். முப்பது நிமிடங்கள் கரைந்த போயிருக்க -

    அடி வயிற்றில் பசி சுண்டியிழுத்தது.

    பாக்கெட்டில் இருந்த சொற்பப் பணம் இன்னும் இரண்டு நாளைக்குத் தாங்குமா என்று சந்தேகமாயிருந்தது.

    தலையைக் கவிழ்த்து உட்கார்ந்திருந்தவனை லத்தி தட்டியது.

    நிமிர்ந்தான். கூர்க்கா.

    "எல்லோரும் போய்ட்டாங்க. விட்டா இங்கேயே செட்டிலாயிடவே போலிருக்கே. போய்யா... போயி ஏதாவது காரியத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1