Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bathil Tha Bharath!
Bathil Tha Bharath!
Bathil Tha Bharath!
Ebook118 pages48 minutes

Bathil Tha Bharath!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணத்தை மறைத்து வைத்துவிட்டு திடீரென மரணத்தை தழுவும் விபுநாத். பணத்தை கண்டுபிடிக்க விபுநாத்தின் மனைவி ஜெயராணி, பரத் சுசீலாவை கொடைக்கானலுக்கு வரவைக்கிறாள். பரத்தும் சுசீலாவும் இணைந்து பணத்தை மட்டுமல்லாமல் சில பல அதிர்ச்சி தரும் தகவல்களையும் கண்டுபிடிக்கின்றனர். அந்தத் தகவல்கள் என்ன என்பதை பரத் சுசீலாவுடன் இணைந்து பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580100908065
Bathil Tha Bharath!

Read more from Pattukottai Prabakar

Related to Bathil Tha Bharath!

Related ebooks

Reviews for Bathil Tha Bharath!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bathil Tha Bharath! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பதில் தா பரத்!

    Bathil Tha Bharath!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அன்புள்ள உங்களுக்கு

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்

    நான் எழுதும் துப்பறியும் கதைகளில் தொடர்ந்து இடம்பெறும் கற்பனைப் பாத்திரங்கள் பரத் - சுசீலா.

    வாசகர்கள் மத்தியில் இவர்கள் என்னைவிட பிரபலம். என்னைச் சந்திக்கும் வாசகர்களின் ஒன்றாவது கேள்வி: பரத் - சுசீலாவுக்கு எப்ப சார் கல்யாணம்?

    இந்தப் பாத்திரங்களை கற்பனையாக உருவாக்கியபோது இத்தனை தூரம் இவர்கள் வரவேற்பைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

    பரத் ஒரு வக்கீல். மூன்லைட் டிடெக்டிவ் ஏஜன்ஸி என்கிற பெயரில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்துபவன். அவனுக்கு நிறுவனத்திலும், வாழ்க்கையிலும் கிட்டத்தட்ட பார்ட்னராக செயல்படும் இனிய காதலி சுசிலா. துள்ளலும் குறும்பும் அதே சமயம் புத்திக்கூர்மையும், சாதுர்யமும் கலந்து அமைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்கள் இடம்பெற்ற நாவல்கள் இவர்கள் இடம் பெறாத நாவல்களைவிட சற்று அதிகம் விற்பனையானதாக புத்தக வெளியீட்டாளர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    பரத் - சுசீலா பங்கு பெற்ற துப்பறியும் நாவல்களை தனிப்பட்ட தொகுதிகளாக, அழகிய புத்தக வடிவில் வாசகர்களான உங்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணம். இதோ இப்போது உங்கள் கைகளில் மேலும் ஐந்து தொகுப்புக்கள்! இதில் பரத்-சுசீலா பங்குபெற்று துப்பறிந்த ஆறு சுவையான நாவல்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இந்த நாவல்கள் யாவும் உங்களால் அதிகம் பாராட்டப் பெற்றவை. தனிச் சிறப்புகள் வாய்ந்தவை.

    பரத் - சுசீலா வரிசையின் முதல் ஐந்து தொகுப்புகளுக்கு நீங்கள் அளித்த ஊக்கம் தற்பொழுது மேலும் ஐந்து தொகுதிகளை வெளியிடும் உற்சாகத்தை தந்துள்ளது.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    37/1, கெனால் பேங்க் ரோடு,

    கஸ்தூரிபா நகர், அடையாறு,

    சென்னை-20.

    அழைக்க: 044-24415709

    அனுப்ப: pkpchennai@yahoo.co.in

    1

    மலைகளில் ராணி ஊட்டியின் மகள் மலைகளில் இளவரசியான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தவப்புத்ரியான, கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரத்துச் சொச்ச மீட்டர்கள் உயரத்தில் உள்ள, நகரும் மலைப்பாம்பின் நெளிவுகளாய் நாற்பத்தெட்டு கிலோ மீட்டர்களுக்கு மலைப்பாதை கொண்ட உள்ளங்கையும், விரல்களும் போன்ற அமைப்பில் அமையப்பெற்ற ஏரியும், அதில் மிதக்கும் படகுகளும், (டூ ஸீட்டர் பெடல் போட் 30 நிமிடங்களுக்கு ரூபாய்-10, டெபாஸிட் ரூபாய் 10) கொண்ட இத்தனை வரிப் புதிர்களில் அநேகமாய் நீங்கள் கண்டுபிடித்துவிட்ட இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கடைசி க்ளுவாவது, நமது சென்னை தொலைக்காட்சியின் பவர்ஃபுல் ஒளிபரப்பு கோபுரம் நிறுவப்பட்டுள்ள... யெஸ் கொடைக்கானல்தான்.

    மதியம் மூன்று மணி வரை நன்றாய் இருந்த மேகங்களுக்கு மூன்று மணி ஒரு நிமிடத்திற்கு ஜலதோஷம் பிடித்து முகம் கறுக்கத் தொடங்கின. வருக வருகவென்று மழைக்கான வரவேற்பு. பச்சைக் கொடியசைப்பாய் மரங்களின் தலையசைப்பு, தூரத்தில் புறப்பட்டது ஊரையே கவ்வும் பனிப்பிசாசு.

    க்ரீன் வேலிவ்யூ காட்டும் மரணப் பள்ளத்தாக்கு அருகே பஜ்ஜி போடுவதை நிறுத்தினார்கள், சோளம் வறுப்பதை ஒத்தி வைத்தார்கள். பையன் குளிர்பான கிரேடுகளைத் தூக்கி தற்காலிகக் கடைக்குள்ளே வைத்தான், போலீஸ் விசில் ஊதி டூரிஸ்ட்களை விலகச் சொன்னது, தத்தமது கேமிராக்களை லென்ஸ் கவர் போட்டு மூடி, மனைவியின் தோள்களை இறுக்கிக்கொண்டு பயணிகள் தங்கள் வாகனங்களுக்கு விரைந்தார்கள்.

    சாலைக்கு அந்தப் பக்கம் பராமரிக்கப்பட்ட கோல்ஃப் கிளப்பின் பச்சைப் புல்வெளிச் சறுக்கலில் ஸ்வெட்டர் அணிந்த பெரிய கைகள் விளையாட்டை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

    விபுநாத் கடைசி கடைசியாய் அந்தப் பந்தை ஸ்டிக்கால் நிதானம் பார்த்தார். இரண்டு செல்ல ஓங்கல்களுக்குப் பிறகு அதைக் கொடுக்க வேண்டிய அழுத்தத்துடன் மண்டையில் தட்ட அது எகிறிப் பறந்து விழுந்து, உருண்டு, ஹோல் அருகில் தவழ்ந்து, விளிம்பில் தயங்கிவிட்டு லொடக் என்று உள்ளே விழுந்ததும்... சகலரும் கைதட்டினர்.

    ஃபன்டாஸ்டிக் விபுஜி!

    விபுநாத் ஸ்டிக்கைப் பையன் முதுகில் சுமந்த ஸ்டிக் பேகில் நுழைத்துவிட்டு டவல் எடுத்து கழுத்தில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

    நான் புறப்படறேன் ரிஸ்ட் பாண்டையும், பீக் தொப்பியையும் கழற்றிப் பையன் மேல் எறிந்துவிட்டு ஸ்வெட்டர் உள்பாக்கெட்டில் இருந்து சிகரெட் கேஸ் எடுத்து, பற்றவைத்து, அது முடிய இருந்தபோது தன் காண்ட்டெஸா அருகில் இருந்தார்.

    டிரைவர் பின் கதவை மகா மரியாதையாகத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தான்.

    விபுநாத் ஏறியதும், காதலியைப்போல கதவைக் கையாண்டு மூடிவிட்டுத் தன் ஸீட்டில் அமர்ந்து புறப்பட்டான்.

    மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்ட விபுநாத்திற்கு பொன்விழா வயது நெருங்குகிறது என்பதை பர்த் சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்த பிறகுதான் நம்ப முடியும். தலையில் ஒரே ஒரு கற்றை நரையை சாமர்த்தியமாக டை பூசி, புருவங்களுக்கு லேசாக மை போட்டு, மீசையில் செம்பட்டை முடிகள் பார்த்துப் பார்த்துப் பிடுங்கி, தினம் ஷேவ் செய்து தன்னை முப்பத்தைந்தைத் தாண்டி யாரையும் மதிக்க விடுவதில்லை.

    கொடைக்கானலில் அதிகமான ஏக்கர் ப்ளம்ஸ் தோட்டம் யார் வைத்திருக்கிறார்கள்? விபுநாத்!

    கொடைக்கானலில் உள்ள ஹோட்டல் கானல்க்யூன் (பார் அட்டாச்ட்) யாருடையது? விபுநாத்துடையது.

    Enjoying the preview?
    Page 1 of 1