Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாழம்பூவே... ஆழம்போ..!
தாழம்பூவே... ஆழம்போ..!
தாழம்பூவே... ஆழம்போ..!
Ebook85 pages27 minutes

தாழம்பூவே... ஆழம்போ..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"காதல் கிளி"களுக்குள் கசமுசா.
 "மூடிய அறைக்குள் மூர்க்கமாக பேச்சு வார்த்தைகள்."
 "ஆவேசமாக வெளிப்பட்டாள் ஜ்வாலா!"
 ரசிகர்களின் கனவு ராணியும், பிரபல இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜ்வாலா நமது நிருபருக்கு பேட்டி அளிக்கையில் -
 நடிகர் கிஷோரை ஒரு காமுகன் என்று வர்ணித்தாள்.
 சிரித்துப் பேசிய என்னை தனியறைக்குள் அழைத்துப் போய் கற்பழிக்க முயற்சித்தார் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள்.
 இது தொடர்பாக - நடிகர் கிஷோரின் மேல் மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தாள்.
 பத்திரிகைச் செய்தியை எடுத்துக்கொண்டு பரபரப்போடு ஓடிவந்தான் கோபி.
 "ஏண்டா ஓடி வர்ற?"
 பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் கொட்டிக் கொண்டபடியே கேட்டான் கிஷோர்.
 "பேப்பர்..."
 "தெரியும். ஜ்வாலாவோட பேட்டிதானே?"
 "என்னண்ணே, இத்தனை நிதானமாப் பேசறீங்க? படிச்சுப் பார்த்தீங்களா?"
 "ஏன் பதர்ற? என்னாச்சு இப்ப?"
 "அந்தம்மா கேஸ் போட்டுட்டா?"

நான் பார்த்துட்டு... சரி சரி எதுக்கு? அடுத்த கால்ஷீட் பாரு!"
 "அண்ணே அவ ஆபத்தானவ. எல்லா டைரக்டர்களுக்கும் நெருங்கின பழக்கம்!"
 "டைரக்டர் மட்டுமா? லைட் பாய்லேருந்து, எடுபிடி வரைக்கும் அவளைத் தொடாத ஒரே ஆள் நான் தான். ஆயிரம் பேரைப்பார்த்த அபூர்வ பரத்தை'னு தலைப்பு தரலாம். விடுரா, நமக்கு தலைக்குமேல வேலை!"
 டெலிபோன் ஒலித்தது.
 "யாருனு பாரு!"
 "அண்ணே, பெரியவர்!" கோபி சொன்னதும், ஓடிப்போய் ரிசீவரை வாங்கினான் கிஷோர்,
 "நமஸ்ஸ்காரம் சார்!"
 "நேரமிருந்தா வீட்டுக்கு வர முடியுமா கிஷோர்?"
 "தோ, கிளம்பிட்டேன் சார்!"
 "என்னண்ணே! விஜயா கார்டன்ல டூயட் ஸாங் இருக்கே! ராதிகா கால்ஷீட் டைட் அண்ணே!"
 "பரவால்லை. மணிவண்ணன் படம்தானே? நான் சொன்னேன்னு போன் பண்ணிடு. ஒரு மணி நேரம் லேட்டா வர்றன்னு சொல்லு!"
 புறப்பட்டு விட்டான்.
 "பெரியவர்" என்று அவர்களால் வர்ணிக்கப்படுவது இயக்குநர் சந்தான கிருஷ்ணன்தான். கிஷோரை கதாநாயக அந்தஸ்த்துக்கு உயர்த்தி, இத்தனை பிரபலமாக உருவாக்கியதே அவர் தான்.
 இப்போதெல்லாம் அவர் அதிகப் படங்கள் செய்வதில்லை.
 வருஷத்துக்கு ஒன்று வந்தால் அபூர்வம். அதுவும் கவலைப்படமாகவே இருக்கும்?
 'அவர் அழைத்து விட்டால், காரணம் கூடக் கேட்காமல் ஆஜராகி விடுவான்!'
 அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே பாய்ந்தான்"வா கிஷோர்! எப்படியிருக்கே?"
 "உங்க ஆசிகளோட சௌக்யமா இருக்கேன்!"
 "ஒக்காரு. பர்ஸனலா உங்ககூட ஒரு விஷயம் பேசணும் கிஷோர்!"
 "சொல்லுங்க சார்! என்ன செய்யணும் நான்?"
 "நான் சொல்லி, உடனே நீ 'சரி'ன்னு தலையாட்டக்கூடிய விஷயம் இல்லை - கிஷோர் இது!"
 "நீங்க சொல்லி, எதை சார் மறுத்திருக்கேன். நான்?"
 "நான் உங்ககிட்ட ஏதாவது கேட்டிருக்கேனா கிஷோர்?"
 "உங்களுக்கு தரக்கூடிய அளவு என்ன தகுதி எனக்கு இருக்கு சார்!"
 "நோ... நான் கேக்கப்போறது எதுன்னு தெரிஞ்சா, நீ ஆச்சர்யப்படமாட்டே!"
 "சொல்லுங்க சார்!"
 "நீ 'ஜ்வாலா'வை கல்யாணம் செஞ்சுக்கக் கூடும்னு இன்னிக்குக் காலைல பத்திரிகை பாக்கற வரைக்கும் நான் நினைக்கலே!"
 "நீங்களுமா?"
 "அதில தப்பென்ன கிஷோர்? ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபது படங்கள் செஞ்சாச்சு. அடிக்கடி வெளில போறது, பேட்டிகளை சேர்ந்து தர்றது... இதெல்லாம் யாரையுமே யோசிக்கச் செய்யாதா?"
 "பேட்டியை படிச்சீங்களா சார்?"
 "ம். கற்பழிப்பு நாடகமெல்லாம் ஜ்வாலா விட்ட கப்ஸான்னு புரிஞ்சுது. நீ அவளைத் தூக்கியெறிஞ்சு பேசிட்டியா?"
 "என்ன ஒரு துல்லியமான கணிப்பு?" அயர்ந்தான் கிஷோர்.
 "நா அவளை ஒரு தோழியா நினைச்சுதான் சார் பழகறேன். அவதான் கொஞ்சம் முறைகேடா யோசிக்க...""இட்ஸ் ஓ.கே... மறந்துரு!"
 "நம்ம விஷயத்துக்கு இன்னும் வரலை நீங்க!"
 "நம்ம விஷயத்தோட ஆரம்பம்தான் இது!"
 "புரியலை!"
 "நீ ஜ்வாலாவுக்குச் சொந்தம்னா நான் குறுக்கே வர விரும்பலை. அதான் இத்தனை நாளா பேசலை!"
 "குறுக்கேன்னா?"
 "இனிமே பீடிகை வேண்டாம். உன்னை... உன்னை... என் மாப்பிள்ளையாக்கிக்க எனக்கு அனுமதியுண்டா கிஷோர்?"
 சட்டென எழுந்து விட்டான் கிஷோர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223996439
தாழம்பூவே... ஆழம்போ..!

Read more from Devibala

Related to தாழம்பூவே... ஆழம்போ..!

Related ebooks

Reviews for தாழம்பூவே... ஆழம்போ..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாழம்பூவே... ஆழம்போ..! - Devibala

    ebook_preview_excerpt.htmlYnF~uN-pУa?M^&m@JaɎAp@`$E|"Oݙٙ%&ܝo?~N_|vbNݟcw5/z{{[լݯm}okK`WSgW.{vNܽ+orKK|}- {x'|.˲N7 3غ3z u@ Dm|P>/EoB .`y>993e Mvo`G >Nnb@ylY C9{v.MܠTJ (/V`( 0`` <ؠtY*Fxj(+4puݨWa4h#Zj:v-HW>J~ H/)/`Yf2h25[ .;b Bf9y ֔ m_r5EtMa')`$mT2%Ąǘwd=~}&hn)uf#?)Cpzc|5`} C`.u:cH+&,b@1Ab( c%R.CE?=xb.{AkE$nZ\3>;οL?JH#BJК/(4r҂"%8PDO/iMFϙ3d` エ\8j9!1HT*ܫqK%t rWcUT2ŖP& Uyy^1En%MX%3'[u[(0VjJ5J- d-"7JHL8PN#Y!2}oyQ0l$ÒrHR B LF+ h ERWZB;6Q _\MBcY SӍ$p/<-ѥ<ѦUe%qΘ #uFvnIngibcs=2Ɂ:CH :Fa\ I+z`5Ϳ5OaZq.!E2]5iKodX*9C:C9DnM'*~2%׆0ƙCcҥWlV1뱦m]/_ 3ҏR_n荈gGs'c}&.~~5r,. BGzmՎ_l8EAsaBmbDyo*Cx#1 ǾH^E",[獫
    Enjoying the preview?
    Page 1 of 1