Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thuli Naragam
Oru Thuli Naragam
Oru Thuli Naragam
Ebook115 pages37 minutes

Oru Thuli Naragam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Oru Thuli Naragam

Read more from Arnika Nasser

Related to Oru Thuli Naragam

Related ebooks

Related categories

Reviews for Oru Thuli Naragam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thuli Naragam - Arnika Nasser

    1

    ‘வானவில்’ பத்திரிகை அலுவலகம்.

    மொபட்டில் வந்திறங்கினான் ஸ்ரீகோபாலகிருஷ்ணன். வாகனத்தை ஸ்டாண்டிட்டான்.

    கோபாலகிருஷ்ணனை சுருக்கமாக ‘ஸ்ரீ’ என்றே அழைப்பர். ஸ்ரீ ஆன்மிகக் கட்டுரைகளும் ஆன்மிகச் சிறுகதைகளும் எழுதுகிற ஒரு சைவ எழுத்தாளன்.

    வயது முப்பது. உயரம் 5’-8". ரோஜாநிறம். சுருள்கேசம். தாறுமாறாய் மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை. பிரிமியம் மில் வேட்டி, கால்களில் காதிம் செருப்பு.

    நெற்றியில் விபூதிப்பட்டை பெரிய வட்டக்குங்குமத்துடன்.

    ஸ்ரீயின் வாய் அடிக்கடி ‘முருகா!’ என ஆலாபிக்கும்.

    புராணங்களையும் இதிகாசங்களையும் கரைத்துக்குடித்தவன்.

    சென்னையில் மழை பெய்ய பக்தி சிரத்தையாய் ‘மழைமாலை’ பாடுவான்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்கள் பற்றிய தகவல்களும் அவனுக்கு அத்துபடி.

    மாசாணியம்மன் கோயிலின் அருமை பெருமை பற்றி ஒரு வார்த்தை கேட்டால் போதும் ஸ்தல புராணத்தை அள்ளி விடுவான்.

    சின்னசேலம் திரௌபதியம்மன் கோயிலைப்பற்றி ஒரு வார்த்தை கேட்டால் போதும் அந்த கோயில் அர்ச்சகரின் அருமை பெருமைகளை விவரிப்பான்.

    மொத்தத்தில் அவன் ஒரு ஆன்மிக என்ஸைக்ளோபீடியா

    அவனது இடதுதோளில் தொங்கும் ஜோல்னாப்பையில் குங்குமப்பொட்டலங்களும் விபூதி பொட்டலங்களும் லாமினேட் பண்ணப்பட்ட கையடக்க சாமி படங்களும் நிறைந்திருக்கும்.

    ரிசப்ஷனிஸ்ட்டிடம், எடிட்டர் என்னை வரச் சொன்னாராம்!

    இன்டர்காமில் தொடர்பு கொண்டு, உங்களுக்காகத்தான் காத்திக்கிட்டுருக்காராம் போங்க சார்

    குளிர்பதன முட்டப்பட்ட அறைக்குள் வணங்கியபடி புகுந்தான்.

    நமஸ்காரம் எடிட்டர் சார்!

    நமஸ்காரம் மிஸ்டர் பக்திமான். உக்காருங்கோ! என்றார் ராமபத்ரன்.

    எதிரில் அமர்ந்தான்.

    அப்புறம்?

    நீங்க கூப்ட்டீங்களாம்!

    உங்களுக்கு கல்யாணமாகி எத்னி வருஷமாகுது?

    அஞ்சுவருஷம்!

    உங்க மனைவி பெயர்?

    குகப்ரியா!

    வேலைக்கு போறாங்களோ?

    இல்ல. அவங்க ஹவுஸ் ஒய்ப்தான்!

    உங்களுக்கு போன நாலாவது வருஷம் ரெட்டைக் குழந்தைக பிறந்ததில்ல?

    ஆமா!

    ரெண்டும் ஆண்குழந்தைகள் தானே?

    ஆமா!

    ஒட்டிப்பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் பண்ணி பிரிக்க நினைக்கலையா?

    ஆபரேஷனுக்கு லட்சக்கணக்கில செலவழியுமாம். பணத்துக்கு எங்க போறதுன்னு மௌனமா இருக்கம்!

    வாடகை வீட்லதான குடியிருக்கீங்க?

    ஆமா, சிட்லபாக்கத்ல!

    சொந்தமா ஒரு பிளாட் இருந்தா நல்லாயிருக்கும்ல? அதுவும் தி.நகர்லனா?

    என்ன சார். எது எதுவோ கேள்விகள் கேட்டு விளையாடுறீங்க?

    "எல்லாம் காரியமாத்தான் கேக்கிறேன். மொதல்ல நா கேக்ற கேள்விகளுக்கு வரிசையா பதில் சொல்லுங்க! நீங்க ஆன்மிகக் கதைகள் தவிர சமுகக்கதைகள், காதல்கதைகள் க்ரைம் கதைகள் எழுதியது உண்டா

    இல்லை!

    எழுத விரும்பியது உண்டா?

    இல்லை!

    உங்களால் அப்டிபட்ட கதைகளும் எழுதமுடியும் என நம்பிக்கை உண்டா?

    அப்டி நா நினைச்சு பாத்ததில்லை சார். பீடிகை போடாம நேரடியா விஷயத்துக்கு வாங்க சார்!

    என் தம்பிக்கும் எனக்கும் நேத்து நைட் பயங்கர வாக்குவாதம்!

    எந்த சப்ஜக்ட்டை... பத்தி?

    உங்களை பத்திதான் எங்க விவாதமே. ஆன்மிக கதை கட்டுரை எழுதினாலும் உங்க ரைட்டிங் ஸ்டைல் க்ரைம் ரைட்டர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்பது என் கட்சி. என் தம்பியோ ‘நீங்க ஒரு பழைமைவாதி- உங்களால் ஒருக்காலும் க்ரைம் த்ரில் கதைகள் எழுத முடியாது!’ என சாதிக்கிறான். எனக்கும் அவனுக்கும் ஐம்பது லட்சரூபாய் பந்தயம்!

    அய்யய்யோ... என்ன பந்தயம் சார்?

    நீங்க மாற்றுப்புனை பெயர்ல ஒரு திகில் தொடர் 52 வாரத்துக்கு என் பத்திரிகைல எழுதிக்காட்டிட்டா- அந்தக்கதையை வாசகர்கள் ஏத்துக்கிட்டா பத்திரிகை சர்க்குலேஷன் நீங்க தொடர் எழுதுற பீரியடுல குறைஞ்சது பத்து சதவீதம் கூடினா என் தம்பி எனக்கு அம்பது லட்ச ரூபாய் தந்திருவான். நீங்க திகில் தொடர் எழுத மறுத்துட்டா- அல்லது நீங்க எழுதுற கதை வாசகரிடையே மாபெரும் தோல்வியை தழுவிட்டா- அல்லது உங்க கதையால என் பத்திரிகை சர்க்குலேஷன் குறைஞ்சிட்டா நான் என் தம்பிக்கு அம்பது லட்ச ரூபா தந்திடனும். இதுதான் போட்டி. இப்ப நீங்க என் பத்திரிகைக்கு திகில் தொடர் எழுதுறது எனக்கு மானப்பிரச்சனை. நான் சொன்னமாதிரி நீங்க திகில் தொடர் எழுதிக்குடுத்தா 25 இலட்ச ரூபாய் குடுத்திடுறேன். உங்க ட்வின்ஸை பிரிக்க ஆகும் மருத்துவசெலவையும் ஏத்துக்கிறேன். நீங்க நான் தரும் 25லட்சத்ல தி.நகர்ல ஒரு ஆடம்பர பிளாட் வாங்கலாம். பிளாட் வாங்கினது போக ஒரு அஞ்சுலட்சம் மிஞ்சும். பேங்க்ல போட்டா மாசம் அய்யாயிரம் ரூபா வட்டி கிடைக்கும். என்ன சொல்றீங்க?

    திடீர்னு கேட்டா நான் என்ன சொல்றது சார்! விக்கித்துப்போனான் ஸ்ரீ. முப்பதாயிரம் பக்கம் ஆன்மிக விஷயங்கள் எழுதின என் கை த்ரில் கதை எழுதுமான்றது எனக்கே திகைப்பா இருக்கு. மனசுக்குள்ள இருக்கறதுதான எழுத்ல வெளிவரும்? அம்மாஞ்சிதனமா நான் எதாவது எழுதப்போய் பத்திரிகையோட சர்க்குலேஷன் நிரந்தரமா பாதிச்சிடப் போகுது?

    சிரித்தார் எடிட்டர். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதன். உங்க ஆழ்மனசில வக்கிரமும் வன்முறையும் கட்டாயம் இருக்கும். மனசுக்குள்ள நீந்தி மனசை கொஞ்சம் ட்யூன் பண்ணாபோதும்- அசத்திரலாம் நீங்க. ஸ்ரீ! நீங்க வெற்றிலை பாக்கு போடுறமுறைல கூட ஒரு வன்முறையான செக்ஸ் அவதானிச்சிருக்கேன். நீங்க விபூதி குங்குமம் வச்சிட்டு வரதில கூட புணர்ச்சியின் உச்சகட்டம் வர்ண அடையாளங்களாய் உணர்ந்திருக்கிறேன். ஸ்ரீயால் யாருமே தொடாத ஒரு அட்டகாசமான ஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’ காலிபரில் ஒரு ஆவிகதை உலககட்டாயம் எழுதமுடியும். ஒரே கதை ஸ்ரீ. அப்றம் நீங்க ஆவிகதை எழுதவே வேண்டாம்.

    "யோசிக்க அவகாசம் வேணும் சார்!’’

    "இதுல யோசிக்க என்ன இருக்கு? நீங்க சொல்ற மாற்றுப்புனை

    Enjoying the preview?
    Page 1 of 1