Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magizhampoo Thendral
Magizhampoo Thendral
Magizhampoo Thendral
Ebook232 pages7 hours

Magizhampoo Thendral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Magizhampoo Thendral

Read more from Arnika Nasser

Related to Magizhampoo Thendral

Related ebooks

Related categories

Reviews for Magizhampoo Thendral

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magizhampoo Thendral - Arnika Nasser

    22

    1

    சூரியன் உதிர்ந்த இருட்டு. தாமரை தனித்து நிற்கிறாள். நிற்கும் திசையை அறிய கண்கள் கழைக் கூத்தாடுகின்றன. திசை மயக்கம். மிரண்டு இலக்கு இல்லாமல் ஓடுகிறாள். ஓடிய திசையில் ஒற்றைக் கதவு திறக்கிறது. திடீர் ஒளி பிரளயம்.

    ஒற்றைக் கதவு வழியே அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள் தாமரை.

    அறையின் கூரைப் பகுதியிலிருந்து ஏதோ தாமரை மீது விழுகிறது.

    விழுந்ததை கைகளில் ஏந்திக் கொள்கிறாள் தாமரை.

    விழுந்தது குழந்தை. பச்சிளம் குழந்தை. தொப்புள் கொடி உதிராத குழந்தை.

    குழந்தை பொக்கை வாய் திறந்து சிரிக்கிறது. கைகால்கள் உதைத்து குதூகலிக்கிறது. விழுந்த ஒற்றைக் குழந்தையை தாமரை ரசித்துக் கொண்டிருக்கும் போதே அது நடந்தது!

    ஆலங்கட்டி மழை போல குழந்தை மழை தாமரை மீது. தாமரையின் விரிந்த கைகளுக்குள் சிக்காமல் தரையில் சிதறிய குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை.

    ஆஹா! எத்தனை வகைவகையான குழந்தைகள்! கறுப்பு கொழுகொழு ஆப்பிரிக்கன் குழந்தை! மூக்கு அமுங்கிய மஞ்சள்நிற சீனக் குழந்தை! மாநிறம். ரத்தச் சிவப்பு நிறம். வெள்ளை நிறம். நொடிக்கு நொடி குழந்தைகள் மழை அடர்ந்தது. தாமரை முதலில் பயந்தாள். ‘குழந்தைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி இறந்து போய்விடுவேனோ?’ ஆனால் திணறவில்லை. கண்களை குறுக்கி யோசித்தாள் தாமரை.

    ‘இத்தனை ஆயிரம் குழந்தைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துப் போய் நமது எஜமானியம்மாவுக்கு பரிசளிப்போமா?’

    ‘பாவம் எஜமானியம்மா!’

    ‘ஒரு குழந்தை இல்லாமல் ஏழு வருடங்களாக உலக வேதனைப்படுகிறாளே...’

    ஆப்பிள் மலையில் ஒரு சிறப்பான ஆப்பிள் தேர்ந்தெடுப்பது போல ஒரு சிறப்பான குழந்தையை தேர்ந்தெடுத்தாள் தாமரை.

    குழந்தையின் முகம் கண்டு ஆனந்தமாய் அதிர்ந்தாள்.

    காரணம் குழந்தையின் பாதி முகம் எஜமானியம்மா இந்துமதி போலவும் பாதி முகம் முதலாளி திவாகர் போலவும் காணப்பட்டது.

    இரு பாதிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து கரைந்து முழு முகமானது.

    குழந்தை வாய் திறந்து பேசியது.

    என் பெற்றோர் திவாகர் - இந்துமதி தம்பதியினரிடம் என்னை பாதுகாப்பாய் கொண்டு போய் சேர் பெண்ணே!

    குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அறையிலிருந்து வெளியேறினாள். இருட்டு நீலம் பாரித்திருந்தது.

    ஓடத் தொடங்கினாள் தாமரை. பின்னால் யாரோ துரத்துவது போல தெரிந்தது. ஓடிக்கொண்டே பின்னால் பார்த்தாள்.

    ஒரு விகாரக் கிழவன்! -

    துரத்திக்கொண்டே கத்தினான்.

    ஓடாதே! நில்! குழந்தையை நீ திவாகர் - இந்துமதி தம்பதியினரிடம் சேர்ப்பிக்க விடமாட்டேன்!

    ஓடின தாமரை தடுக்கி எதன் மீதோ விழுந்தாள்.

    தொமீர்! கயிற்றுக்கட்டிலிலிருந்து அம்மாவின் மேல்.

    குழந்தையை தாமரையின் கையிலிருந்து பறிக்க பிரம்ம பிரயத்தனம் செய்தான் கிழவன்.

    விடமாட்டேன்! விடமாட்டேன்! விடமாட்டேன்! என தாமரை அலற அம்மா எழுந்தமர்ந்து தாமரையை உலுப்பினாள்.

    என்னடி விடமாட்ட? எதடி விடமாட்ட? கனவா?... இன்னும் கனவிலிருந்து விடுபடாது அரற்றினாள் தாமரை.

    அம்மா பொறுமை இழந்து தாமரையின் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள்.

    ஸ்... ஸ்... ஆ! விழித்து வலித்த தொடையை நீவினாள் தாமரை. நிதானத்துக்கு வந்தாள்.

    ஓவ்! நான் கண்டது கனவா? திரும்பி அம்மாவை முறைத்தாள்.

    அம்மா சனியனே! இதுக்கு போய் கிள்னியா? தீயா வலிக்குது! பாய்ந்து அம்மாவின் தொடையில் கிள்ளினாள் தாமரை.

    ஸ்... ஸ்...

    இம். இப்டித்தான் எனக்கும் வலிச்சது. யானைக்கும் யானைக்கும் சரியா போச்சு. திரும்ப கிள்ளிப்புடாத!

    அம்மா பூங்கோதை வீட்டு வேலைகள் செய்து மகளை படிக்க வைப்பவள். கணவனால் கைவிடப்பட்ட பூங்கோதையின் ஒரே ஆறுதல் தாமரைதான்.

    பூங்கோதை ஏழெட்டு வீடுகளில் வேலை பார்த்தாலும் பிரதானமாய் பார்ப்பது இந்துமதி வீட்டில்தான்.

    இந்துமதி வீட்டில் சாப்பாடோ பலகாரமோ எது கொடுத்தாலும் பத்திரமாக எடுத்து வந்து தாமரைக்கு ஊட்டி விடுவாள்.

    முந்தின வருடம் தாமரை வயதுக்கு வந்த போது அபூர்வா பட்டுப் பாவாடையும் மேக்கப் செட்டும் கண்ணாடி வளையல்களும் செயின் மாடல் கொலுசும் பரிசளித்தாள் இந்துமதி. தாமரையின் படிப்புக்கென்று இதுவரை எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் இந்துமதியிடம் கடன் வாங்கியிருக்கிறாள் பூங்கோதை.

    ஆனால் இதுவரை கொடுத்த பணத்தை இந்துமதி திருப்பிக் கேட்டதே இல்லை. மாத சம்பளத்திலும் கழித்ததே இல்லை.

    பெயருக்குத்தான் இந்துமதி எஜமானியம்மா. ஆனால் தாமரை இந்துமதியை ‘க்கா... இந்துக்கா’ என்றுதான் விளிப்பாள்.

    இந்துமதியும் திவாகரும் அரசுப்பணியில் இருப்பவர்கள். இருவரும் வேலைக்குச் செல்லும்போது வீட்டுச் சாவியை நம்பி பூங்கோதையிடம்தான் கொடுத்துவிட்டு போவார்கள்.

    இந்துமதி பிரதோஷத்துக்கு பிரதோஷம் ஈஸ்வரன் கோயிலுக்கு. செல்லும் போது பூங்கோதைதான் மாலை கட்டித் தருவாள்.

    மகளை உறுத்தாள் பூங்கோதை.

    ஏழை பாழைகளுக்கு கனவு வருமா? எனக்கெல்லாம் படுத்தா அடிச்சுப்போட்ட மாதிரி தூக்கம்தான். (முகத்தில் சுவாரசியம் கூட்டி) சரி... என்னடி கனவு கண்ட?

    ச்சு. உன்கிட்ட எதுக்கு சொல்லணும்?

    டி... டி... டிடிடிடி... சொல்லுடி!

    அப்றம் எதுக்கு கிள்ன?

    தப்புத்தான் கன்னுக்குட்டி!

    கனவை சவுண்ட் எபெக்ட் விஷுவல் எபெக்ட்டுடன் விவரித்தாள் தாமரை.

    என்னடி இது? சினிமா மாதிரி கனவு கண்டிருக்க?

    கனவுல வந்த குழந்தைகளோட வாசனை இன்னும் என் மூக்குலயே நிக்குதும்மா...

    சரி... தூங்கு!

    அதெப்டி? இந்தக் கனவை இப்பவே போய் இந்துக்காகிட்ட சொன்னாத்தான் பரம நிம்மதி!

    மணி மூன்றரைடி. விடியட்டும். நான் வேலைக்கு போறப்ப கூட வந்து சொல்லு...

    முடியாது. இப்பவே சொல்லியாகணும். வரியா, நானே போய்க்கவா?

    இப்ப போய் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டாங்க?

    மாட்டாங்க!

    இவர்களின் சேரிக்கும் இந்துமதியின் பங்களாவுக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம்.

    பூங்கோதையும் தாமரையும் பல்துலக்கி முகம் கழுவி தலை வாரிக்கொண்டனர். வழியில் மகிழம்பூ பறித்து மடியில் கட்டிக் கொண்டாள் தாமரை.

    தாயும் மகளும் ஓட்டமும் நடையுமாய் பங்களா நோக்கி விரைந்தனர்.

    வெளிகேட் இரும்புச்சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்தது.

    மறைவில் இருந்த அழைப்புமணியை அமுக்கினாள் பூங்கோதை.

    நெடுநேரத்துக்குப் பின் உள்ளே வெளிச்சம் பூத்தது... உள்கதவைத் திறந்து நடந்து போர்டிகோவுக்கு வந்தாள் இந்துமதி.

    யாரு?

    பூங்கோதைம்மா!

    என்ன... எதாவது பிரச்சனையா?

    இல்லம்மா!

    பின்ன?

    ஒரு நல்ல செய்தி சொல்ல வந்தம்!

    வந்தம்னா உன் கூட யாரு?

    என் அருமை மக தாமரை!

    வயசுப் பெண்ணைக் கூட்டிக்கிட்டு இந்த நேரத்ல நீ வரலாமா? வெளிகேட்டைத் திறந்து இருவரையும் உள்ளே அனுமதித்தாள் இந்துமதி.

    பூப்போட்ட இரத்தச் சிவப்புநிற ராசாத்தி நைட்டியில் இந்துமதி.

    இந்துமதி. வயது 29. உயரம் 160 செ.மீ. சிவந்த நிறம். சதைத்த நடிகை ரேவதி சாயல்.

    என்ன நல்ல செய்தி? சொல்லு பூங்கோதை!

    தாமரைகிட்டயே கேளுங்க! தாமரையை செல்லமாக முறைத்தாள் இந்துமதி.

    தாமரை. வயது 15. பத்தாம் வகுப்பு படிப்பவள். மகாநதி சோபனா சாயல்.

    என்னடி தாமரை... என்னடி நல்ல செய்தி?

    மொதல்ல உங்க கையை நீட்டுங்க!

    எதுக்கு?

    நீட்டுங்கன்னா நீட்டுங்க! நீட்டினாள் இந்துமதி.

    மகிழம்பூவைக் கொட்டினாள் தாமரை.

    க்கா! உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுது!

    நெகிழ்ந்தாள் இந்துமதி. இரு மார்பக நுனிகளிலும் மென்த்தால் சிலிர்ப்பு. கர்ப்பப்பை குலுங்கியது.

    யார் சொன்னா? குடுகுடுப்பைக்காரனா?

    இல்ல... கனவு!

    அட... கனவுக்கா இந்த ஆர்ப்பாட்டம்? என்ன கனவு?

    தாமரை சொல்ல ஆரம்பிக்க இந்துமதியின் பின் வந்து நின்றான் திவாகர்.

    முழுக்க கேட்ட இந்துமதி ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

    உன் கனவு மெய்ப்படுமா?

    திவாகர். வயது 35. நடிகர் பிரகாஷ்ராஜ் சாயல். மனைவியின் முன்னுக்கு வந்தான்.

    ஏய் தாமரை! கவிதைதான் உனக்கு எழுதத் தெரியும்னு நினைச்சேன். கதையும் எழுதுவ போல. நிஜம் போலயே கனவு கண்டியா? இல்ல... எஜமாமனியம்மாவ நைஸ் பண்ண ஜல்லியடிக்றியா?

    திவா! பொம்பளைங்க பேசும்போது நீ ஏன் வர்ற? தூங்கப் போ!

    ஆடிக்காட்டியபடி உள்ளே போனான்.

    க்கா! விடியக்கால கனவு ஒரு நாளும் பொய்க்காது. உங்க வயித்ல ஒரு பட்டுக்குட்டி பொறக்கப் போகுது!

    உன் வாய் முகூர்த்தம் - சொன்ன மாதிரி நடந்துட்டா - நீ எது கேட்டாலும் தருவேன்!

    நிஜம்மா?

    சத்தியமா... கேளுடி... எது வேணும் உனக்கு? பத்து பவுன்ல நெக்லஸ் செஞ்சு போடுரேன்... லேடி பேர்டு சைக்கிள் வாங்கித்தரேன்... இலட்சரூபா உன் காலடில கொட்ரேன்...

    க்கா... எனக்கு பணம் நகை வேணாம்... உங்களுக்கு குழந்தைன்னா உசுரு. எனக்கு படிப்புன்னா உசுரு. நா சொன்னமாதிரி உங்களுக்கு குழந்தை பிறந்துட்டா உங்க செலவுலயே என்னை படிக்க வச்சு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் லெக்சரர் ஆக்குவீங்களா?

    ப்பூ! இவ்வளவுதானா உன் ஆசை? படிக்க வைக்றேன்டி. சத்தியமா படிக்க வைக்றேன்டி!

    தாமரையின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தாள் இந்துமதி.

    பூங்கோதை நெக்குருகினாள். திவாகர் சிலிர்த்தான். பரம்பொருள் எதிர் மறையாய் தலையசைத்து சிரித்தது!

    அந்த சிரிப்பில் மில்லியனுக்கும் கூடிய மர்மமுடிச்சுகள் நெளிந்தோடின!

    2

    இந்துமதி, பூங்கோதை! மணி நாலரை ஆகுது. நீயும் உன் மகளும் திரும்ப இப்ப சேரிக்கு போக வேணாம். நீ மேல ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி வீட்டு வேலைகளைக் கவனி. தாமரை விடிஞ்சதும் வீட்டுக்குப் போகட்டும்!

    பூங்கோதை தலையசைத்தாள்.

    சரிம்மா!

    வீட்டுக்குள் நடக்கும் தாமரையின் தோளில் கை போட்டபடி நடந்தாள் இந்துமதி.

    டென்த் பப்ளிக் எக்ஸாம். எப்படி படிக்ற? எத்ன மார்க் வாங்குவ?

    நல்லா படிக்றேன்க்கா. அய்நூறுக்கு நானூத்தி எம்பது வாங்குவேன்!

    ஸ்கூல் பர்ஸ்ட்டா வருவ - அப்டின்னா - இல்ல?

    ஸ்டேட் பர்ஸ்ட்டா வருவேன்க்கா!

    கணவன் இல்லாத இரண்டாவது படுக்கையறைக்கு நடந்தாள் இந்துமதி.

    எதிரே அமரச் சொல்லி அமர்ந்தாள். தாமரையோ தரையில் அமர்ந்து கொண்டாள்.

    தாழ்வு மனப்பான்மை இது தாமரை!

    இல்ல... மரியாதைக்கா!

    மரியாதை மனசில இருந்தா போதும்டி...

    என் எண்ணப்படி விடுங்களேன்!

    நைட்டியின் டப்பாக்கட்டை தளர்த்தி மகிழம்பூக்களை படுக்கையில் குவித்தாள் இந்துமதி.

    யானைத் தந்த நிறத்தில் மகிழம்பூக்கள் மலர்ந்திருந்தன. உடன் சந்தன நிற ஏலக்காய்களாய் மகிழம்பூ மொட்டுகள்.

    பூக்களை கொத்தாய் எடுத்து முகர்ந்தாள் இந்துமதி.

    வாசனை ஸாக்ஸபோன் இசை போல் மயக்கியது. வயதுக்கு வந்த பெண்ணின் கைக்குட்டை போல் மணத்தது. ராஜநாகத்தை வாக்கிங் கூட்டிச் செல்வது போன்ற பொய் அனுபவத்தைத் தந்தது.

    நானும் கேக்கணும் கேக்கணும்னு நினைச்சேன் தாமரை. ஏன் நீ எப்ப பாத்தாலும் எனக்கு மகிழம்பூவ பரிசளிக்ற?

    தாமரை சிரித்தாள்.

    பார்வைக்கு மகிழம்பூ - ரோஜா, மல்லிகை மாதிரி அழகா இருக்காது; தாழம்பூ அளவுக்கு அசிங்கமாகவும் இருக்காது. ஆனாலும் அசத்தும் வாசனை. அதோட வாசனைய சில நொடி மோந்து பாத்தா போதும் - கவிதை மழையா கொட்டும் எனக்கு. உங்களுக்கு குழந்தை பிறக்கணும்ன்ற வேண்டுதலோட தினம் தினம் உங்க கைகள்ல பூக்களை கொட்றேன். ஒவ்வொரு வகை பூவுக்கும் ஒரு தேவதை உண்டுன்னு நம்புறேன். மகிழம்பூவுக்கான தேவதை உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்காமலா போய்டும்?

    இந்துமதி நெகிழ்ந்து போய் தாமரையின் கைகளை பற்றிக் கொண்டாள்.

    உன்னுடைய பதினைஞ்சு வயசுக்கு மீறிய உடல், மனவளர்ச்சிடி உனக்கு!

    முறுவலித்தாள் தாமரை.

    அதென்னடி டாக்டர், இன்ஜீனியர்னு ஆக ஆசைப்படாம - லெக்சரராக ஆசைப்படுற?

    தாமரையின் கண்கள் உயிர்த்து ஏகாந்தத்தில் நிலைத்தன.

    டீச்சிங் மகோன்னதமானது அக்கா. ஒரு நல்ல டீச்சர் ஆயிரம் அறிவாளிகளை எதிர்கால உலகத்துக்கு உருவாக்கித் தர முடியும்.

    இந்துமதி பிலிம் டிவிஷனில் டாக்குமென்ட்ரி எடுப்பவள்.

    உன்னுடைய வார்த்தைகளை கேக்க சந்தோஷமாயிருக்கு. உன்னைப் போன்ற நம்பிக்கையான இளைய தலைமுறைகளை பாக்கும் போது ஆசிரிய சமுதாயத்தின் மீதான அவநம்பிக்கை மறைகிறது!

    தாமரை எழுந்தாள்.

    மணி அஞ்சே முக்கால் ஆகுது. புறப்படுரேன்க்கா!

    ஓடிப்போய் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து இனிப்புகளை கவர்ந்தாள் இந்துமதி. தாமரையிடம் நீட்டினாள்.

    வேண்டாம்க்கா!

    பரவாயில்லை... வச்சுக்க!

    தாங்க்ஸ்! என்ற தாமரை இந்துமதியின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு புறப்பட்டாள்.

    அவள் ஓடி மறைவதை கண்ணிமைக்காமல் பார்த்தாள் இந்துமதி. கன்னத்திலுள்ள ஈரத்தை வருடிக் கொண்டாள்.

    கணவனிருக்கும் படுக்கையறைக்கு நடந்தாள்.

    வலது

    Enjoying the preview?
    Page 1 of 1