Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Victor Commission
Victor Commission
Victor Commission
Ebook68 pages41 minutes

Victor Commission

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Victor Commission

Read more from Arnika Nasser

Related to Victor Commission

Related ebooks

Related categories

Reviews for Victor Commission

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Victor Commission - Arnika Nasser

    8

    1

    இந்த மெஹா நாவலை வாசிக்கும் முன்பு நீங்கள் கீழ்க்கண்ட கதாபாத்திரங்களை சந்தித்து விடுங்கள். ஆழ்ந்த வாசிப்புக்கு உதவும். ஒகே?

    1. நரேந்தர்

    பாரம்பரியமிக்க இந்திய தேசியக் கட்சிகளில் ஒன்றான நால்வர்ணக் கட்சியின் தலைவர். வயது 44. உயரம் 170 செ.மீ. கோதுமை நிறம். அரசியலுக்கு வருவதற்கு முன் கப்பலில் பணி புரிந்தவர். தந்தையின் திடீர் மரணத்துக்கு பின் அரசியலில் திணிக்கப்பட்டவர். அடிப்படையில் உல்லாசி. ஆழ்கடல் நீச்சல் செய்வதில் சாகசன்.

    - பிரான்ஸ் தேசத்துப் பெண்ணை காதல் திருமணம் செய்து ‘உலகம் தேசமாக’ என்ற கருத்தை விலியுறுத்தியவர்.

    செய்தி தொழில் நுட்ப புரட்சியிலும் கணினி தொழில்நுட்ப புரட்சியிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

    அரசியலின் மரபு சார்ந்த கருத்துக்களை உடைத்தெறிய வேண்டும் என உத்வேகம் கொண்டவர்.

    அயல் நாட்டு தளவாடங்களை வாங்குவதில் செய்யப்பட்ட ஊழலில் பிரதமர் பதவியை இழந்தவர்.

    1991 பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 320 இடங்களையாவது கைப்பற்றிவிட வேண்டும் எனும் முனைப்பில் கடுமையாய் உழைப்பவர்.

    2. முத்தமிழன்

    தென் பிராந்தியக் கட்சிகளில் ஒன்றான வெல்வெட் கட்சியின் தலைவர். வயது 72. மத்திம உயரம். மாநிறம். வேழத்தின் சிரம் போல் தலை. குளிர் கண்ணாடி. கனத்த மூக்கு. சிரத்தை மீசை. நாவல் நிற உதடுகள். வெள்ளை முழுக்கை சட்டை. கட்சிக்கரை வேட்டி. தோளில் சால்வை. வலது கை விரலில் கட்சி ஸ்தாபகர் உருவம் கொண்ட மோதிரம்.

    முத்தமிழன் அடிப்படையில் ஒரு மரபுக் கவிஞன். புரட்சி எழுத்தாளர். தமிழ் உணர்வு இரத்தத்தில் கலந்தவர். நட்பு என்று கை நீட்டினால் தோள் கொடுப்பவர். எதிரி என்று வாள் சுழற்றினால் அதிரடிப்போர் தொடுப்பவர். கொண்ட கொள்கையில் பிடிவாதமானவர்.

    அறுபது லட்சம் உறுப்பினர்களை இராணுவக் கட்டுப்பாடாய் கைக்குள் வைத்திருப்பவர். முதலமைச்சராய் இருந்த போதும் இல்லாத போதும் ஒரே வித மனநிலை கொண்டவர்.

    3. தெய்வநாயகி

    தென் நாட்டின் பிராந்தியக் கட்சிகளில் ஒன்றான நீலக் கட்சியின் தலைவர். வயது 48. சிவந்த தடித்த திரேகம். விக் வைத்த தலைகேசம். பரத நாட்டிய மேதை. இறந்த தலைவரின் அந்தரங்க நட்பால் கட்சித் தலைமையைக் கைப்பற்றியவர். எழுபது லட்சம் ஒட்டர்களை உள்ளங்கையில் இறுக்கி வைத்திருப்பவர்.

    4. தீவிரவாதத் தலைவன் தனஞ்செயன்

    இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள நீலாங்கர் தீவில் இயங்கும் தீவிரவாதத் தலைவன். தீவின் மொத்த ஜனத்தொகை ஒரு கோடியே எழுபது லட்சம். அதில் இருபது சதவீதத்தினர் தமிழர். தமிழர்கள் அங்கு இரண்டாம் தரக் குடிமகனாய் நடத்தப்படுவது கண்டு வெகுண்டு தனி இயக்கம் அமைத்தான் தனஞ்செயன்.

    பாலஸ்தீன கொரில்லாக்களைவிட அயர்லாந்து தீவிரவாதிகளைவிட தனது இயக்கத்தினருக்கு கடுமையான போர் யுக்திகள் சொல்லிக் கொடுத்திருந்தான் தனஞ்செயன்.

    வயது 37. கனத்த மத்திம உயரம். குறுக்கமான முகம். ராணுவச் சீருடை, தலையில் சீருடை தொப்பி. முறுக்கு மீசை. கொள்கைக் கண்கள் பளபளக்கும் மூக்கு.

    தனஞ்செயனின் ஒரே பலவீனம் - மற்ற தீவிரவாத இயக்கங்களை அழித்தொழித்தல்.

    5. நாதமுனி

    ரஷ்ய பல்கலைக் கழகத்திலும் அமெரிக்க பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்தவர்.

    உயரமான ஒல்லி திரேகம். வயது அறுபது. இருபதுக்கு மேற்பட்ட சர்வதேச மொழிகள் கற்றவர். அரசியலை கற்றுக் குடித்தவர். இருள் சாணக்கியன். சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து விளையாடும் மனித கரப்பான்பூச்சி அவர். கட்சி வித்தியாசமின்றி அனைத்து அரசியல் தலைகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1