Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காகித புலிகள்!
காகித புலிகள்!
காகித புலிகள்!
Ebook148 pages33 minutes

காகித புலிகள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வானத்தில் இருந்த சிதிலமான நிலாவும், கும்பலான நட்சத்திரங்களும் சவுக்குத் தோப்புக்குள் சொற்பமான வெளிச்சத்தைக் கொட்டியிருக்க அந்தப் பெண் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு மல்லாந்து விழுந்திருந்தாள். கறுப்பு நாய் ஒன்று பெண்ணின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. லாரி டிரைவர் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து வீச நாய் விழுந்தடித்துக் கொண்டு ஓடி மறைந்தது.
 அன்பழகனும் செல்வகுமாரும் அந்தப் பெண்ணின் உடலை நெருங்கி குத்துக் காலிட்டு உட்கார்ந்தார்கள்.
 "மாரிமுத்து...! தீப்பெட்டி இருக்கா...?"
 "இருக்கு ஸார்..."
 "ஒரு குச்சியை... உரசு..."
 எடுத்து உரச - வெளிச்சம் மெலிதாய் பரவி பத்து விநாடி நேரம் அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது.
 இளம் பெண். வயது 20 லிருந்து 25 க்குள். அழகாக இருந்தாள்.
 செல்வகுமார் லேசாய் பதட்டப்பட்டார்.
 "மாரிமுத்து...! இன்னொரு தீக்குச்சியை உரசு.உரசினான்.
 வெளிச்சத்தில் மறுபடியும் பார்த்த செல்வகுமார் அன்பழகனின் தோளைத் தொட்டார். "அன்பு...! இது யார்ன்னு தெரியுதா...?"
 "தெரியலையே...?"
 "நம்ரதா..."
 "நம்ரதாவா... அது யாரு...?"
 "நீ டி.வி.யில் வர்ற சீரியல்களைப் பார்க்கறது உண்டா...?"
 "டி.வி.யில் நியூஸ் பார்க்கிறதோடு சரி..."
 "அதுதான் உனக்குத் தெரியலை. இந்தப் பொண்ணு ஒரு டி.வி நடிகை. இன்னிக்கு சேனல்களில் வந்துகிட்டிருக்கிற எல்லா அழுகை சீரியல்களிலும் இந்த நம்ரதா இருப்பா..."
 மாரிமுத்துவும் பக்கத்தில் வந்து குனிந்து பார்த்துவிட்டு "ஆமா... ஸார்... அந்தப் பொண்ணுதான்..." என்றான்.
 செல்வகுமார் நம்ரதாவின் உடம்பை மெல்ல புரட்டினார். உடம்பின் எந்த பாகத்திலும் ரத்த சேதம் இல்லை.
 அன்பழகன் சொன்னார்.
 "ஸ்ட்ராங்குலேஷன் மாதிரி தெரியுது. கழுத்துல பாருங்க. ரத்த வரி. கயித்தைப் போட்டு இறுக்கியிருக்காங்க..."
 மாரிமுத்து உரசின மூன்றாவது தீக்குச்சியின் வெளிச்சத்தில் நாசித்துவாரங்களில் உறைந்து போயிருந்த ரத்தமும் தெரிந்தது.
 "என்ன செய்யலாம் அன்பு...?"
 "கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துடலாம். அவங்க இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துடுவாங்க."
 "இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் யாரு...?"சத்யநாராயணன்..."
 செல்வகுமார் எழுந்தார். "அன்பு...! நீ இங்கேயே இரு. நான் வேனுக்குப் போய் வயர்லஸ்ல பேசிட்டு வர்றேன்."
 வந்த வழியே இருட்டில் நடந்து தோப்பைவிட்டு வெளியே வந்து ரோந்து வேனைத் தொட்டார். வேனுக்குப் பக்கத்தில் நின்று ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்த டேவிட், செல்வகுமாரைப் பார்த்ததும் பாதி சிகரெட்டை பூட்ஸ்காலுக்கு கீழே போட்டுத் தேய்த்தார். அதைக் கண்டு கொள்ளாத செல்வகுமார் வேனுக்குள் ஏறி வயர்லஸ்ஸை உசுப்பிவிட்டு சிறிய மைக்கில் பேச ஆரம்பித்தார்.
 "ஈ ஸி ஆர்... பேட்ரோலிங் ஸ்க்வாட். நான் செல்வகுமார்..." மறுமுனையில் கண்ட்ரோல் ரூம் ஆபீஸர் மனோகரன் சிரித்தார்.
 "என்ன செல்வம்... ரோந்து வேட்டையில் ஏதாவது மாட்டிகிச்சா...?"
 "இல்ல... இது வேற விவகாரம்..."
 "என்ன...?"
 "காசிக்குப்பம் பக்கத்துல ஒரு சவுக்குத் தோப்புக்குள்ளே ஒரு பெண்ணோட டெட்பாடி..."
 "அடேடே... இது ஹாட் நியூஸ் ஆச்சே...?"
 "ஹாட் நியூஸ்தான்... செத்துப் போன பொண்ணு யார்ன்னு தெரிஞ்சா இன்னமும் 'ஹாட்' ஆயிடுவீங்க..."
 "யாரு...?"
 "டி.வி.யில் வர்ற அழுமூஞ்சி தொடர்களைப் பார்க்கிறது உண்டா...?"
 "ம்... ட்யூட்டி இல்லாத நாட்களில பார்க்கிறது உண்டு."
 "அதுல 'நம்ரதா'ன்னு ஒரு பொண்ணு நடிக்குமே?"
 "தெரியும்... அந்தப் பொண்ணு இல்லாத டி.வி. சீரியலே கிடையாதே...?"
 "அந்த 'நம்ரதா'தான் சவுக்குத் தோப்புக்குள்ளே செத்துக் கிடக்கிறா."என்னது...! நம்ரதாவா...?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224892907
காகித புலிகள்!

Read more from Rajeshkumar

Related to காகித புலிகள்!

Related ebooks

Related categories

Reviews for காகித புலிகள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காகித புலிகள்! - Rajeshkumar

    காகித புலிகள்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    தொடர்ந்த நடை.

    நத்தையின் காலடியில்

    மலை உச்சி.

    - அமுதபாரதி.

    1

    ஈஸ்ட்கோஸ்ட் ரோடு ஒரு கான்க்ரீட் ரிப்பன் மாதிரி நீநீநீளமாய்த் தெரிய, போலீஸின் ரோந்து ஆர்மர்ட் வேன் சுகமாய் வழுக்கிக் கொண்டிருந்தது.

    நேரம் நள்ளிரவு 2.15.

    வானத்தில் உடைந்த நிலா. அதைச் சுற்றி கேலி செய்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். ஒரே சீராய் வீசிக் கொண்டிருக்கும் கடல் காற்று. ரோந்து வேனுக்குள் வயர்லஸ் மெதுவாய் கரகரக்க, விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமாரும், அன்பழகனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அன்பு...

    சொல்லு...

    உனக்கு உண்மையிலேயே இந்த போலீஸ் உத்யோகம் பிடிச்சிருக்கா...?

    ஏன் அப்படி கேட்கிறே...?

    ட்யூட்டியை ஒழுங்கா பார்க்க முடியலையே... பேசாமே வேலையை ராஜினாமா பண்ணிட்டு தோள்ல ஒரு துண்டைப் போட்டுகிட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்த்துடலாம்ன்னு இருக்கேன்.

    சேர்றதுதான் சேர்றே... ஆளுங்கட்சியில் சேர்ந்துடு.

    ஏன்...?

    மந்திரியாயிடலாமே...!

    நீ என்னதான் சொல்லு... போலீஸ் டிபார்ட்மெண்ட் இப்ப முன்ன மாதிரி இல்லை. நிறைய கரப்ஷன். போலீஸ்ல இருக்கிற மேலதிகாரிகளில் சிலபேர் ஒரு சாதாரண கவுன்சிலரைப் பார்த்தாக்கூட சல்யூட் போட்டுகிட்டிருக்காங்க... வர வர இந்த காக்கி யூனிஃபார்மை போட்டுக்கவே கேவலமாயிருக்கு...

    இதோ பார் அன்பு... நீயும் நானும் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்து இன்னும் ரெண்டு வருஷம் கூட முடியலை... அதுக்குள்ளே இப்படி சலிச்சுகிட்டா எப்படி...? நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட் மட்டும் இல்லை. எல்லா டிபார்ட்மெண்ட்டுகளிலும் கரப்ஷன் இருக்கு. நல்லா படிச்ச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்கூட அரசியல்வாதிகளோட அடிவருடிகளாகத்தான் செயல்பட்டுகிட்டு இருக்காங்க...

    செல்வம்...! நான் ஒண்ணு சொல்லட்டுமா?

    சொல்லு...

    பப்ளிக் தங்களுக்கு பாதுகாப்புன்னு நினைக்கிறது யாரை?

    போலீஸைத்தான்...

    ஒருத்தன் தன்னோட பெண்டாட்டியையும் குழந்தைகளையும் வீட்ல தனியா விட்டுட்டு தைரியமா பிசினஸுக்காக வெளியூர் போறான்னா அதுக்குக் காரணம் போலீஸ் இருக்குங்கிற எண்ணம்தான். இதை நீ ஒத்துக்கறியா?

    ஒத்துக்கறேன்...

    "அப்படி இருக்கும்போது நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கிற ஒவ்வொரு ஆபீஸரும் சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நடந்துக்க வேண்டாமா...? அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் சரி... எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் சரி அவர்கள் தப்பு பண்ணியிருந்தா நடவடிக்கை எடுக்க வேண்டாமா...?

    செல்வகுமார் பதில் சொல்வதற்குள் வேனை ஓட்டிக் கொண்டிருந்த ஐம்பது வயது டிரைவர் டேவிட் இடைமறித்தார்.

    ஸார்... நான் கொஞ்சம் பேசலாமா...?

    ம்... ம்...

    இன்னிக்குக் காலையில் வந்த எல்லா பேப்பர்களிலும் மனித உரிமைக் கமிஷன் வெளியிட்ட ஒரு அதிரடி ரிப்போர்ட் பிரசுரமாகியிருந்தது. பார்த்தீங்களா ஸார்...?

    இல்லையே... என்ன ரிப்போர்ட் அது...?

    மனித உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே அந்த மனித உயிர்களை துச்சமாய் நினைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. உயிர் என்பது ஏழைகளுக்கும் ஒன்றுதான். பணக்காரர்களுக்கும் ஒன்றுதான். பணக்காரர்கள், அதிகாரப் பதவிகளில் உள்ளவர்கள் புகார் கொடுத்தால் அதை பூஜை பிரசாதமாய் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீஸார் ஏழை மக்கள் கொடுக்கும் புகார்களை கண்டு கொள்வதேயில்லை. அப்படியே புகார்களைப் பெற்றுக் கொண்டாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் எழை எளியவர்களுக்கு நடுவில் போலீஸின் செல்வாக்கும் மதிப்பும் சரிந்து போயிருக்கிறது.

    பார்த்தியா... அன்பு... டேவிட் சொல்றதை!

    ம்... ம்... கொஞ்சம் அதிர்ச்சியான ரிப்போர்ட்தான்.

    டிரைவர் டேவிட் தொடர்ந்தார். இது மட்டும் இல்லை ஸார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆல்கஹாலிக் அனானிமஸ் எனப்படும் ஒரு தொண்டு நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் செய்த ஆய்வுகள்படி போலீஸ் டிபார்ட்மெண்டில் பணிபுரிகிற அதிகாரிகளில் 80 சதவீதம் பேர் மது அருந்துவதாகவும், அதில் 40 சதவீதம் மித மிஞ்சிய குடிகாரர்களாக மாறி மதுவுக்கு அடிமையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

    ஆஹா...! எப்பேர்ப்பட்ட பாராட்டு...? அந்த ஆய்வு ரிப்போர்ட்டை ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டிக் கொண்டால் நல்லாயிருக்கும்...

    நம்ம டிபார்ட்மெண்ட்டை நாமே கிண்டல் பண்ணக்கூடாது...

    "இது கிண்டல் இல்லை அன்பு...! தாங்க முடியாத மனவேதனையின் வெளிப்பாடு...! ஒரு பேட்டை தாதா மேல கையை வைக்கிறதுக்குகூட மேலதிகாரியின் பர்மிஷனை கேட்க வேண்டியிருக்கு... ஒண்ணுமில்ல...

    Enjoying the preview?
    Page 1 of 1