Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விவேக் vs விவேக்
விவேக் vs விவேக்
விவேக் vs விவேக்
Ebook98 pages32 minutes

விவேக் vs விவேக்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை பத்து மணி.
 ப்ரஸ் மீட் நடந்து கொண்டிருந்தது. முன்னாள் மத்திய மந்திரி அருள்பிரகாசம் தன்னுடைய அறுபது வயது உடம்புக்கு பளீரென்ற கதர் வேஷ்டியையும் சர்ட்டையும் கொடுத்து கண்களுக்கு ரோல் கோல்ட் பிரேமிட்ட கண்ணாடியை மாட்டியிருந்தார். வீடியோ கேமிராக்களின் வெளிச்சத்தில் பத்து விநாடிகளுக்கு ஒரு முறை நனைந்து கொண்டிருந்தார். நிருபர்களிடமிருந்து கேள்விகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி அவரை நோக்கி வந்தன.
 "அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மத்தியில் ஆளும் கட்சி உங்களை அறிவித்துள்ளது. இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன...?"
 அருள்பிரகாசம் புன்னகைத்தார். "ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம் இது. ஆளும் கட்சிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பிரதமர் ஜெகதீஷ் வர்மா அவர்களுக்கு என்னுடைய நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
 "உங்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தீர்களா...?"
 "நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அரசியலை விட்டே விலகி ஓய்வு எடுக்க தீர்மானித்து இருந்தேன். அந்த சமயத்தில்தான் இப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நான் என்றைக்குமே பதவிகளைத் தேடி போகிறவன் கிடையாது. சென்ற வருடம் மத்திய மந்திரியாக இருந்தேன். பிரதமர் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு தமிழ்நாட்டில் நம் கட்சிக்குள் ஏகப்பட்ட கோஷ்டிகள். கட்சி வளராமல் போனதுக்கு கோஷ்டி பூசல்கள்தான் காரணம். நீங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிகளை கவனிக்க முடியுமா என்று கேட்டார். உடனே ஒப்புக் கொண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப்பணிகளை கவனிக்க தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன்... கடந்த ஒரு வருட காலத்தில் கட்சியில் இருந்த கோஷ்டி பூசல்களை ஒழித்துவலுவுள்ள கட்சியாக மாற்றியிருக்கிறேன். இனி ஒரு சட்டசபை தேர்தல் வந்தால் நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடித்து கோட்டைக்கு போவோம்..."
 "ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது...?"
 "பிரகாசமாக உள்ளது. பெரும்பாலான எம்.பி.க் களும் எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு தருவதாக சொல்லியுள்ளார்கள். கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..."
 "ஜனாதிபதி பதவி ஒரு அலங்கார பதவி மட்டுமே! அதிகாரம் படைத்தது அல்ல என்று சொல்லப்படுவது பற்றி...?"
 "அது ஒரு தவறான கருத்து... ஜனாதிபதி எல்லா அதிகாரங்களும் படைத்தவர்தான். அரசியல் சட்டத்தை முழுமையாக படிக்காமல் பேசப்படுகிற அரைவேக்காட்டு பேச்சு... நாடு போகிற போக்கை உன்னிப்பாய் கவனிக்கிற மிக முக்கியமான பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு."
 "இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றுவீர்களா?"
 "நான் மாற்ற வேண்டியது இல்லை. இந்தியா தானாகவே ஒரு வல்லரசாக மாறிவிடும். அதை இந்த உலகத்தில் உள்ள எந்த நாடும் தடுத்து நிறுத்திவிட முடியாது..."
 ஒரு இளவயது நிருபர் எழுத்து கேட்டார். "நீங்கள் ஜனாதிபதியாகப் போகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ரியாக்ஷன் என்ன...?"
 "என் மனைவி இப்போது உயிரோடு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு இருப்பது ஒரே ஒரு மகள். அவள் பெயர் நவசக்தி. அவளுக்கு இதில் மிகுந்த மகிழ்ச்சி."
 "உங்கள் மகள் நவசக்தியிடம் பேட்டி எடுப்பதற்கு - விரும்புகிறோம்... ஏற்பாடு செய்ய முடியுமா...?"
 "இதோ...!" என்று சொன்ன அருள்பிரகாசம் தன் கையில் இருந்த செல்போனை உயிர்ப்பித்து எண்களைத் தட்டிவிட்டு மாடியில் இருக்கும் மகளோடு பேச ஆரம்பித்தார்."அம்மா நவசக்தி... உன்னோட கம்ப்யூட்டர் ப்ராஸஸிங்கை ஒரு பத்து நிமிஷத்துக்கு நிறுத்திட்டு கீழே வாம்மா..."
 "என்னப்பா...! பிரஸ் மீட் முடிஞ்சுதா...?"
 "இன்னும் முடியல்லேம்மா... உன்கிட்டே பேட்டி எடுக்கணும்ன்னு ரிப்போர்ட்டர்ஸ் விரும்பறாங்க... வந்துட்டு போம்மா."
 இந்த பேட்டி, போட்டோகிராஃபி, வீடியோ இதையெல்லாம் உங்களோடவே நிறுத்திக்க கூடாதாப்பா...?"
 "ப்ளீஸ்... வாம்மா... தே ஆர் வெயிட்டிங்..."
 "பத்து நிமிஷம்தான்...! அதுக்கு மேல் நோ பேட்டி...!"
 "சரி... வாம்மா..."
 அருள்பிரகாசம் செல்போனை அணைக்க ஒரு நிருபர் கேட்டார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223208365
விவேக் vs விவேக்

Read more from Rajeshkumar

Related to விவேக் vs விவேக்

Related ebooks

Related categories

Reviews for விவேக் vs விவேக்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விவேக் vs விவேக் - Rajeshkumar

    1

    ஹைகோர்ட் ஜட்ஜ் சத்யநாதன் தன் இரவு உணவை முடித்துக் கொண்டு மாடியில் இருக்கும் தன்னுடைய மினி லைபரரியை நோக்கி செல்ல முயன்றபோது டைனிங் டேபிளுக்குப் பக்கத்தில் இருந்த டெலிபோன் தன் தொண்டையைத் திறந்தது.

    லூர்து...!

    சாப்பிட்ட தட்டுக்களை எடுத்து டைனிங் டேபிளை சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த வேலையாள் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தான்.

    அய்யா...!

    போன்ல யாருன்னு பாரு...

    சரிங்கய்யா...

    எம்.எல்.ஏ., எம்.பி.ன்னு யாராவது பேசினா நான் வீட்ல இல்லேன்னு சொல்லிடு.

    சரிங்கய்யா லூர்து சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்து காதுக்கு கொடுத்து மறுபக்கக் குரலை செவிமடுத்துவிட்டு ரிஸீவரை இடது கைவிரல்களால் பொத்திக் கொண்டு சத்யநாதனை ஏறிட்டான்.

    அய்யா...! போன்ல க்ரைம் ப்ராஞ்சு ஆபீஸர் விவேக் பேசறார்...!

    அப்படியா... கொடு...! சத்யநாதன் வேகவேகமாய் வந்து ரிஸீவரை வாங்கிக் கொண்டார்.

    ஹலோ... மிஸ்டர் விவேக்... குட் ஈவினிங்...!

    குட் ஈவினிங்... ஸார்...! ஸாரி ஃபார் த - டிஸ்டர்பன்ஸ். ராத்திரி தூங்கப் போகிற நேரத்துல உங்களுக்கு தொந்தரவு தர்றேன்...!

    நோ... நோ...! இதுல எந்த தொந்தரவும் கிடையாது. காரணம் இல்லாமே நீங்க யார்க்கும் போன் பண்ண மாட்டீங்களே சொல்லுங்க... என்ன விஷயம்...?

    நீங்க இப்ப ஃப்ரீயா ஸார்...?

    ஃப்ரீதான்...!

    உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசலாமா?

    பை... ஆல் மீன்ஸ்... தாராளமா...

    ரெண்டு வருஷத்துக்கு முந்தி பூவாணி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பந்தமான வழக்கு முடிவடைகிற ஸ்டேஜுக்கு வந்தாச்சுன்னு நினைக்கிறேன்...

    யூ... ஆர்... கரெக்ட் மிஸ்டர் விவேக்....! அந்த வழக்கோட எல்லா கட்ட விசாரணையும் முடிஞ்சு நேத்திக்குத்தான் லாயர்ஸோட ஆர்க்யூமெண்ட்ஸும் நடந்தது. அடுத்த வாரம் தீர்ப்பு...

    கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கவாசகன் குற்றவாளியா... இல்லையா... என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் ஸார். உங்கள் முடிவு எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் நீங்கள் தீர்ப்பை எழுதும் முன்பாக நான் சொல்லப் போகிற சில உண்மைகளை பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்...!

    உண்மைகளா...? என்ன உண்மைகள்...?

    ஸார்... போனில் எதுவும் வேண்டாம். நீங்க அனுமதி கொடுத்தா உங்க வீட்டுக்கு நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்.

    ஸாரி மிஸ்டர் விவேக்...! நீங்கள் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர். போலீஸ் டிபார்ட்மெண்டில் இருப்பவர்கள் நீதிபதிகளை கோர்ட் வளாகத்தில் சந்தித்து பேசலாமே தவிர - அவர்களுடைய வீட்டில் சந்தித்து பேசுவது மரபு இல்லை.

    பின் எப்படி ஸார்...? நான் உங்களோடு பேசியாக வேண்டுமே...!

    ஒன்று செய்யலாமா...?

    சொல்லுங்க ஸார்...

    இப்போ மணி எட்டு. நான் ஒன்பது மணி சுமார்க்கு காரை எடுத்துக்கிட்டு பீச் ரோட்டுக்கு காத்து வாங்க வருவேன். நீங்களும் அங்கேயே வந்துருங்களேன்... கார்க்குள்ளே உட்கார்ந்து பேசிடலாம்.

    இது... நல்ல யோசனை ஸார்...! பீச் ரோட்டில் எந்த இடம்...?

    ஆல் இண்டியா ரேடியோ ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற பஸ் ஸ்டாப்...

    ஓ.கே... ஸார்...

    ஷார்ப்பா ஒன்பது மணிக்கு வந்துருங்க விவேக். லேட் பண்ணிட வேண்டாம். பத்து மணிக்கெல்லாம் நான் பெட்ல இருக்கணும்... ஊருக்கு போயிருக்கிற என்னோட மனைவியும் மகளும் சரியா 10.05 க்கு எஸ்.டி.டி. பண்ணி பேசுவாங்க... நான் போனை அட்டெண்ட் பண்ண வீட்ல இல்லைன்னா அவங்க கோபத்தை ஃபேஸ் பண்ண முடியாது...

    நோ... ப்ராப்ளம் ஸார்... உங்ககிட்ட பேச எனக்கு பத்து நிமிஷம் போதும்... ஒன்பதரை மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு போயிடலாம்...!

    தென்... ஓ.கே...! உங்க மனைவி ரூபலா எப்படியிருக்காங்க...?

    ஃபைன் ஸார்...! பேசறீங்களா...? பக்கத்துலதான் உட்கார்ந்து டீ.வி. வாட்ச் பண்ணிட்டிருக்கா...

    வேண்டாம்... வேண்டாம்... டீ.வி. பார்க்கிற பெண்களை தொந்தரவு பண்றது பெரிய பாவம். இது கலிகால பழமொழி!

    இதோ... ரூபலா பேசறா ஸார்...

    சத்யநாதன் ரிஸீவரை காதோடு ஒட்ட வைத்து இருக்க, மறுமுனையில் ரூபலாவின் குரல் கேட்டது.

    அங்கிள்...! எப்படியிருக்கீங்க...?

    வெரி ஃபைன்...!

    ஆன்ட்டியும் உங்க டாட்டர் ஹெலினாவும் போன வாரமே ஊர்க்கு போறதா சொன்னாங்க...?

    நேத்தைக்கே... கிளம்பிப் போயிட்டாங்க. ஊரில நெருங்கிய சொந்தத்துல ஒரு கல்யாணம். போக வேண்டிய கட்டாயம். போய்ட்டாங்க. ஒரு வாரம் கழிச்சுத்தான் வருவாங்க...

    ஹெலினாவுக்கு எப்போ மேரேஜ் அங்கிள்...?

    மாப்பிள்ளை பார்த்துட்டேயிருக்கோம்... அவளுக்கு ஸ்டேட்ஸ் மாப்பிள்ளைதான் வேணுமாம்... ரெண்டு மூணு வரன் வந்திருக்கு. கன்ஸிடர் பண்ணிட்டிருக்கோம்...

    ஓ.கே... அங்கிள் சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுங்க... உங்க வீட்டு பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.

    எப்படியும் ரெண்டு மாசத்துக்குள்ளே எங்க வீட்டு பிரியாணியை நீயும் மிஸ்டர் விவேக்கும் சாப்பிடலாம்... ரிஸீவரை விவேக்கிட்டே குடும்மா...!

    இதோ...!

    மறுபடியும் விவேக்கின் குரல் கேட்டது.

    "ஸார். ஒன்பது

    Enjoying the preview?
    Page 1 of 1