Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மைக்ரோ விழிகள்
மைக்ரோ விழிகள்
மைக்ரோ விழிகள்
Ebook166 pages39 minutes

மைக்ரோ விழிகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்திஜி நினைவு ஆசிரமம்.
 வளைவான போர்டில் இருந்த பெயிண்ட் உதிர்ந்த எழுத்துக்களை மிகுந்த சிரமத்துடன் கோர்த்துப் பார்த்தால்தான் படிக்க முடியும்.
 போர்டை அடுத்து மல்லாக்காய்த் திறந்து கிடந்த நீளமான இரும்பு கிராதி கேட் பெரும்பாலும் துருப்பிடித்துப் போய் இருந்தது.
 கேட்டுக்கு அப்பால் வெகு நீளமான மைதானப் பரப்பு செங்காவி நிறக் கார்ப்பெட் விரித்து வைத்த மாதிரி பரவிக்கிடந்தது. அதில் ஆங்காங்கே ஏகப்பட்ட வருஷங்களாக உடம்பை வளர்த்துக்கொண்ட அடர்த்தியான மரங்கள் சூரியனோடு ஒத்துழையாமைப் போர் நடத்தித் தரையில் வெயிலைக் கொட்ட விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன.
 'அறம் செய விரும்பு... ஆறுவது சினம்...' கோரஸான குழந்தைகள் சத்தம் ஒருவித ரிதத்தோடு காற்றில் கலப்படமாகிக் கொண்டிருந்தது. அது பார்வை இழந்த குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம்.
 சுண்ணாம்பு கோபி அடித்த அகலமான கட்டிடத்தில் வரிசையாய் கண்ணிலடிக்கும் கதவுகளும், ஜன்னல்களும் கட்டிடத்துக்கு ஒரு அழகான தோற்றம் கொடுத்துக் கொண்டிருக்க - நேர் மேலே பறக்கிற தேசியக்கொடி எக்ஸ்ட்ரா கெட்-அப் தர முயற்சித்தது.
 அந்த நாளின் காலை நேரப் பத்து மணிக்கு ஒரு ஸ்டாண்டார்ட் 2000 அந்த ஸ்கூல் காம்பவுண்டுக்குள் பிரவேசம் ஆனது. எச்.எம். அறைக்கு வெளியே ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த ப்யூன் கிரி கண்களில் கேள்விக்குறி ப்ரசன்னமாக அந்தக் காரைப் பார்த்தான்.வன் ஆச்சர்யத்துக்குக் காரணம் இருந்தது. அந்தப் பள்ளியின் காம்பவுண்டுக்குள் ஒரு மொபட் நுழைவதே கூட ஆச்சர்யத்துக்குரிய விஷயம்தான். உள்ளே இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அநாதைக் குழந்தைகள்... அல்லது அவ்வளவாய் வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள்.
 எப்போதோ ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி ஆரம்பித்து வைத்த ஃபண்டின் உதவியால் இலவசமாக நடத்தப்படும் சேவைப் பள்ளி. ஏதாவது விழா வெட்டி என்றால் யாராவது பெரிய மனிதர் வந்து கொடியேற்றி விட்டுப் போவதோடு சரி.
 மற்றபடி பள்ளியைத் திரும்பிப் பார்க்கக்கூட ஆளில்லை.
 கார் நேராகக் கட்டிடத்தின் மையத்துக்கு வந்து வராண்டாவை ஒட்டின மாதிரி ஓய்வடைந்தது. ஒரு சுத்தமான டிரைவர் பட்டெனக் கார் கதவைத் திறந்து இறங்கினான்.
 ஒருவித அவசரத்தோடு காரைச் சுற்றி வந்து, பின் கதவையும் திறந்துவிட்டான்.
 "உதவின்னதும் பயந்திட வேண்டாம். உங்களாலே சுலபமா செய்யக்கூடியதுதான்."
 "என்னால முடிஞ்ச உதவியை நிச்சயமா செய்யறேன்..."
 அந்தப் பெண்மணி சொன்னதும், சற்று மகிழ்ச்சியான பார்வையோடு நிமிர்ந்த அஜித்மேனன் சொன்னார்.
 "எனக்கு ரெண்டு பார்வை இழந்த சிறுவர்கள் வேணும்..."
 "எதுக்காக…?"
 "கடந்த ரெண்டு வருஷமா ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன்... அந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடியற தருவாயில் இருக்கு..."
 "என்ன ஆராய்ச்சி."
 "பார்வை இழந்தவர்களுக்கு திரும்பப் பார்வை கிடைக்க வழி செய்யக்கூடிய ஆராய்ச்சி."
 "ஏதாவது ஆப்ரேஷனா?"நோ... நோ... வித்தவுட் ஆபரேஷன்... வித்தவுட் மெடிஸன்... பார்வை கிடைக்க சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கேன்..."
 திகைப்பு பரவின கண்களால் அவரைப் பார்த்தாள் அந்தப் பெண்மணி.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223176053
மைக்ரோ விழிகள்

Read more from Rajeshkumar

Related to மைக்ரோ விழிகள்

Related ebooks

Related categories

Reviews for மைக்ரோ விழிகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மைக்ரோ விழிகள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    அந்த நீலநிற மாருதி கார் நெடுஞ்சாலை - 47ல் ராக்கெட்தனமாய் வழுக்கிப் போய்க் கொண்டிருந்தது. வானப் பரப்பில் விடிகாலை நேரம் துவக்கமாகிக் கொண்டிருந்தது.

    சுற்றுப்புறங்களில் மெல்லிசாக வெளிச்சம் விழத் துவங்கி இருக்க - காரைக் கையாண்டு கொண்டிருந்த வினய்குமார் காருக்கு முன்னால் தவழ்ந்து கொண்டிருந்த ஹெட்லைட்டின் இள மஞ்சள் வெளிச்சத்தை ஸ்விட்சைத் தட்டிக் காணாமல் பண்ணினான்.

    உத்தேசமாய் வினய்குமாரின் வயதை இருபத்தியொன்பது எனலாம். வடக்கத்தி ஹீரோ மாதிரி உயரமாய் சிவப்பாய் தோற்றம் தந்தான். பிறவிப் பணக்காரன் என்பது முகத்தில் நோட்டீஸ் அடித்து வைத்த மாதிரித் தெரிந்தது.

    அவன் தோளில் தலையைச் சாய்த்து தூங்கி விழுந்து கொண்டிருந்தாள் சுபலேகா. வினய்குமாரைக் காட்டிலும் மூணரை வயது குறைச்சலானவள். மூணரை வருஷமாய் அவனின் மனைவி. அசப்பில் பானுப்ரியாவை நினைவுபடுத்தினாள். நறுக்கி எடுத்த மாதிரியான அவளின் உதடுகள் வினய்குமாரை ரொம்பவும் கவர்ந்த அம்சம்.

    பின் சீட்டில் பிராக்கெட் மாதிரி உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் குட்டி வினய்குமார் குரு. போஷாக்கான வளர்ச்சியுடன் தெரிந்தான். ஸ்வெட்டருக்குள் கமுக்கமாய் அடங்கியிருந்தான். அவனுடைய வயதுக்கு அவன் பேசும் வார்த்தைகள் ரொம்ப அதிகம் என்பது வினய் குமார், சுபலேகாவின் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம்.

    சாத்திக் கிடந்த ஜன்னல் கண்ணாடியை வினய்குமார் ஏற்றிவிட - குளிர்காற்று ப்ரிஜ்ஜின் ஜில்லிப்போடு காருக்குள்ளே பிரவேசித்து - சுபலேகாவின், குருவின் தூக்கத்தை இரக்கமில்லாமல் கலைத்துவிட்டது.

    காற்றில் அலைய ஆரம்பித்த நீள நீளமான கேசங்களை ஒதுக்கிவிட்டபடியே தலையை உயர்த்தினான். வினய் குமாரைக் பொய்க் கோபத்தோடு முறைத்துச் செல்லமாய்ச் சிணுங்கினாள்.

    ஜன்னலைச் சாத்துங்க. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும்.

    என்னது...?

    இன்னும் தூங்கணும்ன்னு சொன்னேன்.

    ராத்திரி பூராவும் கொட்டக் கொட்ட விழிச்சிருந்து காரை ஓட்டிட்டு வர்ற என்கிட்டே இப்படிச் சொல்ல உனக்கு எத்தனை தைரியம் இருக்கணும்?

    உங்க தலைவிதி அப்படி இருந்தா அதுக்காக நான் என்ன பண்ண முடியும்?

    என்ன பண்ண முடியுமா? பெண்டாட்டி கஷ்டப்பட வேண்டாம், பாவம்ன்னு நினைச்சு நானே ஓட்டிட்டு வந்தேன் பாரு... எனக்கு இது தேவைதான். ராத்திரியே ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை உன்னை உலுப்பி எழுப்பி கார் ஓட்டச் சொல்லி இருக்கணும்.

    கோச்சுக்காதீங்க... பிக்னிக் ஸ்பாட்ல அலைஞ்ச அலைச்சல்ல எக்கச்சக்கமா டயர்ட்.

    நான் மட்டும் அலையலையா?

    நீங்க ஜாலியா பிக்னிக்கை என்ஜாய் பண்ணிட்டு வந்தீங்க...

    நீ...?

    குருவை மேய்க்கவே எனக்கு சரியாயிருந்தது. நீங்க தான் பார்க்கறீங்களே... என்னமா லூட்டி அடிக்கறான்...

    என்கிட்டே விட்டா நான் பார்த்துக்க மாட்டேன்னா சொல்றேன்?

    நான் உங்ககிட்டே விடமாட்டேன்னா சொல்றேன்? இவன் தான் எப்பப் பார்த்தாலும் அம்மா, அம்மான்னு என் புடவையைப் பிடிச்சுக்கிட்டே இருக்கானே. நான் என்ன செய்ய...?

    எல்லாப் பொம்பளைங்களுக்குமே குழந்தை ஒரு சாக்காய் போச்சு.

    ஓஹோ! அய்யா எத்தனை பொம்பளைங்களை இதுவரைக்கும் பார்த்திருக்கீங்க...?

    வேண்டாம்டா சாமி! ஒரே ஒரு பொம்பளையையே என்னால வெச்சு சமாளிக்க முடியலை...

    எல்லா ஆம்பளைங்களுக்குமே இது ஒரு வழக்கமான புலம்பலாப் போச்சு

    ஏய்… ஏய்... நான் சொன்னதையே திருப்பிச் சொல்லித் தாக்கறியா? செல்லமாய் அவளை அவன் அடிக்கப் போன விநாடி -

    மம்மி...

    குருவின் மழலை இழையோடும் குரல் காதில் வந்து மோத - இருவரும் திரும்பினார்கள். குரு சுண்டுவிரலை உயர்த்திக் காட்டினான்.

    ஃபிஷ் அடிக்கணும்...

    பின் சீட்டிலிருந்து தாவின அவனைக் கைகளில் அள்ளி முத்தம் தந்த சுபலேகா -

    ஏங்க காரைக் கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க... என்றாள்.

    அப்பா! கடைசியில் என் மகன் தான் என்னைக் காப்பாத்தினான். குரு ஃபிஷ் அடிச்ச பிறகு நான் போய் பின் சீட்டில் ஹாயாத் தூங்கப் போறேன். அம்மாதான் இனி காரை ஓட்டிட்டு வரணும்...

    சரி, சரி, சரி. கொஞ்சம் விட்டா அழ ஆரம்பிச்சுடுவீங்க போலிருக்கு. அடம் பிடிக்கறதுல குருவை விட மோசம் நீங்க.

    கார் அந்த மரத்தின் ஓரமாக ஒதுங்கி நின்றது. கதவை விரித்த சுபலேகா குருவை கீழே இறங்கச் சொல்லித் தொடர்ந்து தானும் இறங்கப் போனாள்.

    இறங்க முயன்றவளின் கையைப் பற்றித் தடுத்தான் வினய்குமார்.

    என்னங்க...?

    குரு இறங்கி மரத்துக்குப் பின்னால போய்ட்டு வரட்டும். அதுவரைக்கும் இங்கே எனக்கு ஆகஸ்ட் நாப்பத்தேழு!

    இவன் தனியா எப்படி...

    அதெல்லாம் போவான்... குரு... நீ அந்த மரத்துக்குப் பக்கத்திலே போய் ஃபிஷ் அடிச்சுட்டு வா... நானும் அம்மாவும் கார்லயே உக்காந்திருக்கோம், சரியா...?

    சரி டாடி... தலையாட்டிக்கொண்டே உற்சாகமாக ஓடினான் குரு. அவன் போனதுதான் தாமதம். வெடுக்கென்று அவளை இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் வினய்குமார்.

    ச்சை நீங்க படு மோசம்...

    திட்டினாளே ஒழிய

    Enjoying the preview?
    Page 1 of 1