Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இலவசம் ஒரு வானவில்
இலவசம் ஒரு வானவில்
இலவசம் ஒரு வானவில்
Ebook173 pages42 minutes

இலவசம் ஒரு வானவில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில்வர் க்ரே க்ளாஸிக் காண்டஸாவில் சாய்ந்து ஹிண்டு பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த சுந்தரலிங்கம் காரை ஓட்டிக் கொண்டிருந்த மகன் பதியின் தோளைத் தொட்டார்.
 "பதி...! இன்னிக்கு பேப்பர் பார்த்தியா?"
 "இல்லேப்பா... காலையிலிருந்து நிறைய என்கேஜ்மெண்ட்ஸ். பேப்பரை கண்ணால கூட பார்க்கலை..."
 "லெட்டர்ஸ் டூ த எடிட்டர் பகுதியில் ஒரு இண்ட்ரஸ்டிங்கான லெட்டர்..."
 "என்ன லெட்டர்...?""அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலேயும் வேலை செய்யற நபர்களுக்கு ரிடையர்மெண்ட் வயசு ஐம்பத்தெட்டு, வயசு ஐம்பத்தெட்டானதுமே சர்வீஸிலிருந்து அவர்களை ரிலீஃப் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வெச்சுடறாங்க. அதுக்கு அரசாங்கம் சொல்ற காரணம் ஐம்பத்தெட்டு வயசுக்கு மேல அவங்க ஆணாயிருந்தாலும் சரி... பெண்ணாயிருந்தாலும் சரி வேலை செய்யற திறமை குறைஞ்சு போய் பார்க்கற வேலைக்கு தகுதியில்லாதவர்களா போயிடறாங்களாம்..."
 "சரியான காரணம்தானே...?"
 சுந்தரலிங்கம் சிரித்தார்.
 "இந்த இடத்துலதான் அந்த லெட்டரோட முக்கியமான பாயிண்ட் வெளியே வருது..."
 "என்ன பாயிண்ட்..?"
 "வயசு ஐம்பத்தெட்டு ஆயிட்டா வேலை செய்யற திறமை குறைஞ்சு போயிடறதா சொல்லப்படற ஒரே ஒரு காரணத்துக்காகத்தானே ஓய்வு கொடுத்து அனுப்பறாங்க..."
 "ஆமா..."
 "ஐம்பத்தெட்டு வயசாயிட்டா ஒரு க்ளார்க் வேலை பார்க்கக்கூட தகுதியில்லைன்னு சொல்ற நம்ம அரசாங்கம் எண்பது வயசு ஜனாதிபதியையும் எழுபது வயசு பிரதமரையும் எப்படி ஏற்றுக் கொள்கிறது. நாட்டுப் பொறுப்பு, அரசாங்க நிர்வாகம்ங்கிறது மிகப் பெரிய விஷயம்... இல்லையா...?"
 "பதி சிரித்தான்.
 "நல்ல பாயிண்ட்தான்...! ஐம்பத்தெட்டு வயதானதுமே அரசாங்க வேலையை கவனிக்க தகுதியில்லைன்னு சொல்ற அரசாங்கம் எண்பது வயது ஜனாதிபதியையும் எழுபது வயது பிரதமரையும் நிர்வாக வேலைகளை கவனிக்க அனுமதிக்கிறது சரியில்லைதான். இதை பதவிக்கு வர்றவங்க யோசிச்சு பார்க்கணும்..."
 சுந்தரலிங்கம் காரை ஓட்டிக் கொண்டிருந்த மகனின் தோளைத் தொட்டார்பதி! எனக்கும் இப்போ வயசு அறுபது. மூளை ஒத்துழைப்பு கொடுத்தாலும் உடம்பு ஒத்துழைப்பு தர்றதில்லை, ஸோ கம்பெனி நிர்வாகம் எனக்கு ரொம்பவும் சிரமமாத் தெரியுது. ஸோ இந்த மாசத்திலிருந்து கம்பெனியோட எல்லாப் பொறுப்புகளையும் நீ ஏத்துக்கணும், என்னை ரிலீஃப் பண்ணனும்..."
 "பதி சிரித்தான்.
 "ஏம்பா... இந்த விஷயத்தைச் சொல்றதுக்காகத்தான் ஹிண்டு பேப்பர்ல வந்த மேட்டரைப் படிச்சீங்களா?"
 சுந்தரலிங்கம் புன்னகைத்தார்.
 "பதி! இப்போ உனக்கு வயசு இருபத்தேழு, நீ எம்.பி.ஏ. முடிச்சுட்டுத்தான் கம்பெனிக்குள்ளே காலடி எடுத்து வெச்சே, ஆனா, நான் என்னோட இருபதாவது வயசிலேயே உன்னோட தாத்தாகிட்ட இருந்து கம்பெனி பொறுப்புக்களை வாங்கிட்டேன். கடந்த நாற்பது வருஷ காலமா என்னோட உழைப்பைக் கொட்டி இந்தக் கம்பெனியை வளர்த்துட்டு வந்திருக்கேன். இனி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். இத்தனை நாளும் கம்பெனிக்கு எக்ஸிக்யூடீவ் டைரக்டராய் இருந்த நீ இனிமே மானேஜிங் டைரக்டர் என்கிற அந்தஸ்துக்கு உயரணும்..."
 "அப்பா...! நான் குருவி! பனங்காயை என் தலையில வைக்கறீங்களே...?"
 "இந்தக் குருவிக்கு பனங்காயும் இலவம் பஞ்சுதான்னு எனக்குத் தெரியும்... வர்ற போர்டு டைரக்டர்ஸ் மீட்டிங்கிலேயே இதைப் பத்தி நான் பேசிடறேன். நீ மறுத்து எதுவும் பேசிடக் கூடாது.."
 "பேசலை..."
 "அப்புறம்...! இன்னொரு முக்கியமான விஷயம்..."
 "என்ன... என்னோட கல்யாண விஷயமா...?"
 "அதேதான்.."
 "இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்பா..."
 "நோ...! திஸ் ஈஸ் ரைட் டைம் டூ மேரி... நான் போன வாரத்திலிருந்து பெண் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்..."இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்பா..."
 "ஏன்... எந்தப் பெண்ணையாவது மனசுல நினைச்சுட்டிருக்கியா...?"
 "சேச்சே...!"
 "என்னடா சேச்சே...? காதலிக்கிறது ஒண்ணும் தப்பில்லை. சினிமாக்களில் வர்ற அப்பா மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். நீ காதலிக்கிற பொண்ணு யாராயிருந்தாலும் பரவாயில்லை... சொல்லு... அந்தப் பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..."
 "அப்பா...! எனக்கு சாப்பாட்டுல கத்திரிக்காய் எப்படி பிடிக்காதோ... அதே மாதிரி வாழ்க்கையில இந்தக் காதல் என்கிற வார்த்தையும் எனக்கு பிடிக்காது. நீங்க பார்த்து பேசி முடிவு பண்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. ஆனா இப்ப வேண்டாம், ஒரு ஆறு மாசம் போகட்டும்..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223264507
இலவசம் ஒரு வானவில்

Read more from Rajeshkumar

Related to இலவசம் ஒரு வானவில்

Related ebooks

Related categories

Reviews for இலவசம் ஒரு வானவில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இலவசம் ஒரு வானவில் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    க்ளோனிங் (Cloaning) என்கிற இந்த வார்த்தை இந்த 1997 ல் மிகவும் பிரபலமான வார்த்தை. (குஷ்பு மாதிரி) க்ளோனிங் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களுமே தத்தம் வாரிசுகளை உருவாக்க இனப்பெருக்கம் செய்கின்றன. (மனித இனந்தான் வேகம் இதில் அதிகம்) மனித இனத்தில் பிறக்கும் குழந்தைகள் தன் தாய் தந்தையின் குணநலன்களை ஜீன் என்று அழைக்கப்படும் மரபணுக்கள் மூலம் பெறுகின்றன. அத்துடன் தாத்தா பாட்டியின் குணங்களும் அதில் இருக்கும். இயற்கையான வழியில் வாரிசுகளை உருவாக்கும் முறை இது. ஆனால், இதற்கு நேர்மாறான முறையில் வாரிசுகளை உருவாக்கும் முறைக்குத்தான் க்ளோனிங் என்று பெயர்.

    ஊட்டி மலைப்பாதையில் அந்த டாக்ஸி சிரமத்தோடு ரீங்காரம் செய்தபடி ஏறிக் கொண்டிருந்தது.

    டிரைவர் சிரத்தையாய் டாக்ஸியின் ஸ்டீயரிங்கை கையாண்டுக் கொண்டிருக்க - பின் சீட்டில் தாடி வைத்த முப்பது வயது இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் படுத்திருந்தார்கள்.

    பெண் அழகாக இருந்தாள். இருபத்தி மூன்று வயது இளமை எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பூரண மெஜாரிட்டியோடு ஆட்சி செய்து கொண்டிருந்தது.

    கழுத்தில் புது மஞ்சளைப் பூசிக் கொண்ட தாலி தங்கச் சங்கிலியோடு சேர்த்து மின்னியது. தலைக்குக் கட்டியிருந்த இளம் நீல வர்ண ஸ்கார்ப் குளிர்காற்றில் படபடத்தது.

    டாக்ஸி ஒரு ஹேர்பின் வளைவை பெருமூச்சுகளோடு கடந்தபோது அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

    என்னங்க...?

    ம்...

    லேசா வயித்தைப் புரட்டுது...

    காட் ரோடு ஜர்ணின்னா அப்படித்தான் இருக்கும். என் மடியில படுத்துக்கறியா...?

    ம்...

    படுத்துக்கோ... அவன் வசதியாய் சாய்ந்து தன் மடியைக் காட்ட அவள் ஒரு ரோஜா மாலை போல் அவனுடைய மடியில் மெத்தென்று சாய்ந்தாள்.

    வாய்ல மிட்டாய் போட்டுக்கறியா ஜமுனா...?

    வேண்டாம்...

    கொஞ்சம் க்ளூகோஸ்...?

    வேண்டாங்க...உங்க மடியே போதும்.

    அவன் அவளுடைய வயிற்றை மெல்ல தடவி விட்டான். ஊட்டிக்கு இப்பத்தானே ஃப்ர்ஸ்ட் டைம் வர்றே... அதனாலதான் இந்த வயிற்றுப் புரட்டல். நாலைஞ்சு தடவை வந்துட்டா அப்புறம் இந்த அவஸ்தை இருக்காது .

    இப்ப மணி என்னங்க...

    ஆறு... பத்து...

    எத்தனை மணிக்கு ஊட்டி போய் சேர்வோம்?

    ஏழு மணியாயிடும்...

    காட்டேஜ்ல ரூம் கிடைக்குமா...?

    போன் பண்ணித்தான் சொல்லியாச்சே...? என்றவன் அவளை காதோரம் குனிந்து சாக்லேட் வாசனையோடு சொன்னான். காட்டேஜும் அங்கே இருக்கிற இரட்டைக் கட்டிலும் நமக்காக வெயிட் பண்ணிட்டிருக்கும்...

    கெட்ட வார்த்தை பேசாதீங்க...

    கட்டில் கெட்ட வார்த்தையா?

    "போதும் வழியல்... டாக்ஸி டிரைவர் காதுல விழுந்துடப் போகுது...

    விழட்டுமே...! அதனால என்ன...?

    உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்.

    இந்த தைரியம் எப்பயிருந்து வந்தது தெரியுமா?

    எப்பயிருந்து...?

    உன் கழுத்துல தாலி கட்டின நிமிஷத்திலிருந்து

    எனக்கு இன்னும் ஆச்சர்யமாவே இருக்கு...

    எது...?

    நம்ம கல்யாணம் நடந்தது...

    ஏன்? என்மேல உனக்கு நம்பிக்கையில்லாமே இருந்ததா...?

    அப்படியெல்லாம் இல்லை...

    பின்னே...?

    ஒரு பயம்தான்...

    என்ன பயம்...?

    நிறைவேறாத காதல் லிஸ்டில் நம்ம காதலும் இடம் பெற்றுவிடுமோ என்கிற சின்ன பயம்தான்...

    ஜமுனா! நம்ம காதல் ஜெயிச்சதுல எந்த ஆச்சர்யமும் இல்லை. உனக்கும் அப்பா அம்மா ஃபேமிலின்னு யாரும் கிடையாது. எனக்கும் எந்த உறவும் கிடையாது. நம்ம காதலுக்கு குறுக்கே நிக்க யாராவது இருந்தாத்தானே சந்தேகம் வரணும்...?

    டாக்ஸியின் வேகம் குறைந்தது.

    அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். டிரைவர் ரோட்டோரமாய் டாக்ஸியை ஒதுக்கி நிறுத்திக் கொண்டிருந்தான்.

    என்ன டிரைவர்...

    ஸார்... ஒரு பத்து நிமிஷம் டாக்ஸியிலேயே இருங்க. என்னோட வீடு அந்த யூகலிப்டஸ் மரங்களுக்குப் பின்னாடித்தான் இருக்கு. போய் என்னோட ஒய்ஃபுக்கு பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்.

    சரி... சரி... போய்க் குடுத்துட்டு வா. லேட் பண்ணிடாதே... குளிர் ஜாஸ்தியாகறதுக்குள்ளே ஊட்டி போய்ச் சேர்ந்துடணும்...

    சீக்கிரமாவே போயிடலாம் ஸார்... பணத்தைக் குடுத்ததுமே ஓடி வந்துடுவேன்...

    டிரைவர் டாக்ஸியைவிட்டு இறங்கி ரோட்டோரமாய் வளர்ந்திருந்த முல்லைச் செடிகளை மிதித்துக் கொண்டு மரங்களுக்குப் பின்னால் மறைந்து போனான்.

    டாக்ஸியின் இயக்கம் இப்போது நின்று போயிருந்ததால் சுற்றுப்புறம் முழுவதும் கனத்த நிசப்தம்.

    யூகலிப்டஸ் மரங்களின் இலைகள் மட்டும் வீசிய குளிர் காற்றுக்கு ஏற்றபடி ரகசியம் பேசியது.

    அவன் கூப்பிட்டான்.

    ஜமுனா...

    ம்...

    என் மடியிலிருந்து கொஞ்சம் தலையை எடுத்துக்கறியா...?

    ஏன்...?

    வெளியே ஒரு அவசர வேலை இருக்கு...

    என்ன வேலை...?

    இடது கை சுண்டு விரலைக் காட்டினான்.

    இப்படிக் காட்டினா என்ன அர்த்தம்...?

    மூச்சா போகணும்ன்னு அர்த்தம்...

    ச்சே...! இதுதானா... போய்ட்டு வாங்க... அவன் மடியினின்றும் எழுந்து பின் சீட்டுக்கு சாய்ந்து கொண்டாள்.

    அவன் டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். காத்திருந்த குளிர்காற்று முகத்தில் மோதியது. உள்ளங்கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தான்.

    ஐம்பதடி தூரம் போனதும் ரோட்டோர இறக்கத்தில் இறங்கி புதராய் மண்டிய வேலிக்காத்தான் செடிகளுக்குப் பின்னே மறைந்து ஸ்வெட்டர் அணிந்திருந்த மார்புப் பகுதிக்குள் கையைக் கொண்டு போய் செல்போனை எடுத்து அதற்கு உயிரூட்டினான்.

    டயலில் எண்களைத் தட்டிவிட்டு - மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் குரல் கொடுத்தான்.

    ஹலோ...

    யாரு...?

    நான்தான் ஸார் மனோ...

    மறுமுனையில் நலிந்த ஆண் குரல் ஆர்வமாய்க் கேட்டது.

    என்ன மனோ... ஊட்டி போய் சேர்ந்துட்டியா?

    "இல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1