Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollamath Thudikkuthu Manasu
Kollamath Thudikkuthu Manasu
Kollamath Thudikkuthu Manasu
Ebook177 pages1 hour

Kollamath Thudikkuthu Manasu

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Kollamath Thudikkuthu Manasu

Read more from Jdr

Related to Kollamath Thudikkuthu Manasu

Related ebooks

Related categories

Reviews for Kollamath Thudikkuthu Manasu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollamath Thudikkuthu Manasu - JDR

    13

    1

    ஆல் இந்தியா ரேடியோ, மாநிலச் செய்திகள் வாசிப்பது புஷ்பராஜ்!

    ...தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. மா.கெ.அ. கட்சியின் இமயவன் அணி நாளை மறுநாள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க உள்ளது என அந்த அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் விஜயா தெரிவித்தார்...

    வான தேசத்தின் தேர்தலில் தனக்கு வாக்கு அளிக்குமாறு ஓட்டுக் கேட்டுவிட்டு மிஸ் நிலா சென்றுவிட்டிருக்க, மிஸ்டர் சூரியன் தனக்கு வாக்குக் கேட்டுத் தன் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்.

    பூமி இருள் கட்சியிலிருந்து ஒளி கட்சிக்குக் கட்சித் தாவல் நடத்தியிருந்தது.

    சங்கம் வளர்த்த மதுரையில், ஒரு காலத்தில் குதிரைப் பந்தயம் நடந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தன.

    மா.கெ.அ. கட்சியின் இமயவன் அணித் தலைவர் இமயவன், தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முதல் பொதுக் கூட்டத்திற்கான ஆயத்த வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

    ஜே.எஸ், டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், முதலாளி சபேசனின் விரட்டலுக்கு ரோபர்ட்டாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

    பத்துக்கு இருபது அடி அளவில் ஐந்து அடி உயரத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. தவிர, நுழைவாயில்களில் ஆர்ச் வேலைகள்.

    வயதில் அரைச்சதம் அடித்துவிட்ட சபேசன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் சுறுசுறுப்போடு வலம் வந்து கொண்டிருந்தார்.

    இந்தாலே... முத்தரசு! என்னய்யா மசமசன்னு நின்னுட்டிருக்கே! குழியைத் தோண்டுல. ஒரு குழி தோண்டுறதுக்கே இப்படி நேரம் ஆக்கினா வேலை எப்ப முடியும்?

    ஏலேய்... மாணிக்கம்...

    என்ன முதலாளி?

    நா புதுசா ஒரு பயல வேலைக்குப் புடிச்சிவிட்டேனே. அந்தப் பய எப்படி வேலை பார்க்கிறான்?

    மூர்த்தி தானே? ரொம்ப நல்லா வேலை செய்யறான் முதலாளி. நம்ம ஆளுங்க ரெண்டு பேர் சேர்ந்து தூக்குற பலகையை அவன் ஒருத்தனே அலாக்காத் தூக்கிப் போடுறான். அஞ்சு நிமிஷம் முடுக்கிற போல்ட்ட அவன் ரெண்டே நிமிசத்திலே முடுக்குறான். ரொம்ப விறுவிறுப்பு முதலாளி... மேடை செக்ஷன் மாணிக்கம் சான்றிதழ் வழங்கினான்.

    பயல பாத்ததுமே நா எட போட்டுட்டேன். நல்லா நெளிஞ்சு சுளிஞ்சு வேலை செய்வான்னு... வேல தெளிவுனா நம்மகிட்டயே தக்க வச்சுக்க வேண்டியதுதான்.

    வேலையில மட்டுமில்ல முதலாளி, மூளையிலேயும் பெரிய்ய ஆளாயிருக்கான். அப்ப அப்ப நல்ல நல்ல ஐடியாக்கள், எல்லாம் தர்றான்.

    சபேசன்-மாணிக்கம் உரையாடலின் மூலப் பொருளாய் இருந்த மூர்த்தியின் வடிவம் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

    மூர்த்தி அந்த வேலையில் முந்தின நாள்தான் சேர்ந்திருந்தான். சுருட்டையாய்த் தலைமுடி, யூரியா, பொட்டாஷ், சிங்க் சல்பேட் போட்டு வளர்த்தது போன்ற புஷ்டியான மீசை. மூக்கின் அருகில் மினி ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய அளவில் ஒரு மச்சம்... ஜிம்-மில் வலுவேற்றிய கரண் மஸில்கள். சினிமாத்தனம் இல்லாமல் சத்தியமாகவே நாலு பயில்வான்களைத் தனியாய்ச் சமாளிக்கும் பலம். இவைகளின் நிகர மொத்தம்தான் மூர்த்தி.

    நுழைவாயில் பக்கமாக கேட்ட ஹாரன் ஒலி சபேசன்-மாணிக்கம் உரையாடலுக்கு முற்றும் போட்டது.

    நான்கு அம்பாஸிடர்கள் சர்...சர்...சர்...சர்...என வந்து நின்றன.

    மாணிக்கம்... மாவட்டச் செயலாளர் வர்றாரு... நா போய்ப் பேசறேன். நீ போய் வேலையைக் கவனி என்ற சபேசன், கார்களை நோக்கிப் போனார்.

    கார்களிலிருந்து வெள்ளையும் சள்ளையுமாய் கரை வேஷ்டி ஆசாமிகள் உதிர்ந்தார்கள். வந்தவர்கள் மதுரை மாவட்டச் செயலாளர் கருணாகரனும், அவரது வாக்கிங் ஸ்டிக்குகளும். (கைத்தடிகளும்)

    வணக்கம் அண்ணே! வாங்க. என்று ஒரு வரவேற்பை விநியோகித்தார். கூடவே இலவச இணைப்பாக ஒரு கூழைக் கும்பிடு.

    என்னய்யா சபேசன்... மேடை வேலை என்ன நிலைமையில இருக்கு?

    ராப்பகலா வேலை நடக்குங்க. கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்...

    மேடைப் பக்கம் திரும்பிப் பார்த்த கருணாகரன்.

    நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள முடிச்சிரணும்... என்று சொல்ல, ஒரு வாக்கிங் ஸ்டிக் குறுக்கிட்டது.

    அண்ணே, ஸ்டேஜ்ல பேனர் கட்டணும். முன்பக்கம் ரெண்டு கட்அவுட் வைக்கணும்.

    யோவ் பதினேழாவது வட்டம், பேனர் வேலை உம் பொறுப்பு. மயில்சாமி! கட்அவுட் பொறுப்பு உங்க ஒன்றியத்துக்கு. பந்தல்காரங்களை எதிர்பார்க்காமல் நீங்களே செட்டப் பண்ணிடுங்க...

    சரிங்கண்ணே... தலையாட்டின கைத்தடிகள்.

    ‘மாவட்டம்’, கைத்தடிகள் புடைசூழ மேடையைச் சுற்றிப் பார்த்தார்.

    ஆட்கள் இரும்புச் சட்டங்களில் பலகைகளை வைத்து போல்ட் போட்டு முடுக்கிக் கொண்டிருந்தார்கள். மேடை தயாராகிக் கொண்டிருந்தது.

    சபேசன்...

    சொல்லுங்க... அண்ணே!

    ஸ்டேஜ்லே மொத்தம் பதினோரு சேர் போடணும். சென்டர்லே தலைவருக்கு சோபா போடணும், ரைட் சைடு மைக் ஸ்டாண்ட் வைக்கணும்.

    மாவட்டம் சொல்லிக் கொண்டிருக்க, போல்ட் முடுக்குவது போன்ற பாவ்லாவுடன், அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மூர்த்தி, ‘தடக்’கென்று நிமிர்ந்தான்.

    அவனது கண்கள் மாவட்டம் சுட்டிக் காட்டிய இடங்களை நோக்கி நகர்ந்தன. அவன் கண்கள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிவப்பேறிக் கொலை வெறியோடு மின்னின.

    சபேசனும் கருணாகரனும் இன்னும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

    மேடை அலங்காரம் தூள் கிளப்பணும்ய்யா...

    நச்சுனு செஞ்சிடுறோம் அண்ணே! அதெல்லாம் எங்களோட வேலை. நாளைக் கழிச்சு நீங்க வந்து பாருங்க. நீங்களே அசந்துடுற மாதிரி அமர்க்களமா செஞ்சிடுறோம்.

    மாவட்டம் ஒரு சிரிப்போடு தலையை அசைத்துக் கொண்டார்.

    அண்ணே, எலக்ஷன் நிலவரம் எப்படி இருக்கு?

    நம்ம தலைவர் கட்சியிலிருந்து பிரிஞ்ச பிறகு அங்கே இப்ப என்ன வேல்யூ இருக்கு? இந்தத் தடவை ஆட்சி நம்ம கையிலதான். நம்ம தலைவர்கிட்டே முணுமுணுத்துக் கொண்டிருந்த - செந்தமிழன் செல்லாக் காசாப் போயிட்டாரு. தலைவரை முறைச்சதுக்கு நிலைமையைப் பார்த்தீரா?

    ஏரியா நிலவரம் எப்படியிருக்கு அண்ணே?

    அண்ணா, பெரியார், காமராஜர், பசும்பொன், சிதம்பரனார் எல்லாம் பாதிக்குப் பாதி ஜெயிச்சு வந்துருவோம். திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை இந்த மூணுலேயும் முக்கால்வாசி எங்களுக்குத்தான். தலைவர் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே வருவாரு...பாருங்களேன்.

    தலைவர் நாளை மறுநாள் தான் பிரச்சாரத்தை ஆரம்பிக்கப் போறாரா?

    ஆமாம் சபேசன். சென்ட்டிமென்ட்லா இங்கேயிருந்துதான் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கப் போறாரு. தொண்டர்களைப் பார்த்துக் கட்சிக் கொடியை அசைச்சுப் பிரசாரத்தைத் தொடங்கி வைப்பாரு. பிறகு தேர்தல் அறிக்கையைத் தலைவர் வெளியிடுவாரு.

    கருணாகரன் சொல்லச் சொல்ல மூர்த்தி நிமிர்ந்தான். தீவிரமான சிந்தனைக்குப் போனான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக, சபேசனை நெருங்கினான். மூர்த்தியைக் கண்ட சபேசன் சிநேக முலாம் பூசப்பட்ட ஒரு சிரிப்பை உதிர்த்தார்.

    என்ன மூர்த்தி?

    நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒரு ஐடியா சொல்லலாமா?

    என்ன சொல்லப் போறே?

    வந்து... கொடி அசைக்கிறது ரொம்பப் பழையபாணி. இப்ப மாடர்னுக்கு ஏத்தாப்போல கவர்ச்சியா ஒரு ராட்சச பலூனைப் பறக்கவிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கி வச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அதுல தேர்தல் சின்னத் தையும் செட்டப் பண்ணிடலாம். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.

    கேட்டுக் கொண்டிருந்த மாவட்டத்தின் முகத்தில் 1000 வாட்ஸ்!

    அட, நல்ல ஐடியாவா இருக்கே! யாருய்யா இந்த ஆளு?

    நம்மகிட்ட தான் வேலை பார்க்கிறான். ரொம்ப சூட்டிகையான பையன். பேரு மூர்த்தி.

    அண்ணே... என்று குறுக்கிட்டது ஒரு வாக்கிங் ஸ்டிக்.

    ரெண்டு நாளுதானே - இருக்கு. பலூனுக்கு எங்கேண்ணே போறது?

    பலூன் தானே? அதை எங்கேயாவது வாங்கிரலாம்.

    சார், எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்கிட்டே ஃபாரின் பலூன் ரெண்டு இருக்கு. எட்டடி விட்டம் இருக்கும். ரொம்பப் பிரும்மாண்டமான பலூன். அதுக்குத் துணி உறை போட்டு, துணி உறையில் கட்சிச் சின்னம் வரைஞ்சிடலாம். ஸ்ட்ராங்கா ஒரு இடத்திலே கட்டிட்டா எலக்ஷன் முடியற வரை பறக்க விடலாம். ரொம்ப அட்ராக்டிவா இருக்கும், சார்.

    சரி...பலூன் பொறுப்பை நீயே ஏத்துக்க. கேஸ் கீஸ் அடைச்சு நாளை மறுநாள் காலைல கட்டிடு... மேடைப் பக்கத்துலே ரிப்பன் வெட்டினா பலூன் மேலே போற மாதிரி செட்டப் பண்ணிடு. செலவுப் பணத்தை வவுச்சர் போட்டு வாங்கிக்க.

    சரிங்க சார். நா எல்லா ஏற்பாட்டையும் நச்சுனு செஞ்சிடுறேன். நாளைக்கு ராத்திரியே பலூன் செட்டப் பண்ணிடுறேன்.

    மாவட்டம் இன்னும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுக் கார் ஏறிப் போனார். கைத்தடிகளும் அதே.

    மூர்த்தி, சபேசனிடம் வந்தான். சபேசன் மூர்த்தியைப் பார்த்த பார்வையில் 30 சதவீதம் பூரிப்பு, 20 சதவீதம் பெருமை, 50 சதவீதம் பாராட்டும் கலந்திருந்தன.

    பிரமாதமான ஐடியா எல்லாம் சொல்றியேப்பா... வந்தாரே அவரு மா.கெ.அ. கட்சி இமயவன் அணியோட மதுரை மாவட்டச் செயலாளர், அவரே அசந்து போயிட்டாரே...

    மூர்த்தி படு அடக்கமாய்ப் புன்னகை செய்தான்.

    ஐயா உத்தரவு கொடுத்தீங்கன்னா நா போய் பலூனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்திடுவேன்.

    சபேசன் தலை அசைத்தார் அனுமதி மூர்த்தி நன்றி சொல்லி வெளியேறினான். அவன் மனத்தில் துல்லியமாய் ஒரு கொலைத் திட்டம் விரிந்தது.

    ‘இமயவனே... இரு வருகிறேன்... தேர்தல் பிரச்சாரமா ஆரம்பிக்கிறாய்? நான் உனக்கே முடிவு கட்டறேன்...’

    ரேஸ் கோர்ஸ் மைதானத்திலிருந்து வெளியேறிய மூர்த்தி, அசோக் ஓட்டல் தமிழ்நாடு ஓட்டல் வழியாக நடந்து, மதுரை சமூகப் பணிக் கல்லூரி அருகில் ஆட்டோவைப் பிடித்தான்.

    அண்ணா நகர் போப்பா.

    இருபது ரூபா ஆகும் சார்.

    வாங்கிக்க. போ.

    ஆட்டோ கேபரே நடிகை பாணியில் ஒரு முனகல் முனகி விட்டு ட்டுர்... டூர்... டுர்ர்ர்ர்...

    ஆட்டோ வர்மக் கலைப் பயிற்சி நிலையம் அருகே போனபோது, ஒரு வெள்ளை ஜிப்பாக்காரரைப் பார்த்துப் பரபரப்படைந்தான் மூர்த்தி.

    டிரைவர் ஸ்லோ பண்ணுப்பா. ஆட்டோ வேகம் குறைந்து கிட்டத்தட்ட நிற்க, ஆட்டோவைத் திருப்பு. திருப்பினான்.

    அதோ அந்த வெள்ளை ஜிப்பாக்காரர்கிட்டே நிறுத்து.

    நிறுத்தினான்.

    ஆட்டோ நின்றதும் திரும்பிப் பார்த்த வெள்ளை ஜிப்பா ஆசாமி, தன் டீன் ஏஜைப் பதிமூன்று வருடத்திற்கு முன்பே தொலைத்திருந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கிய மூர்த்தியைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு கேள்விக்குறி!

    "வணக்கங்க... நீங்க... செந்தமிழன்

    Enjoying the preview?
    Page 1 of 1