Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தடங்களுக்கு வருந்துகிறோம்
தடங்களுக்கு வருந்துகிறோம்
தடங்களுக்கு வருந்துகிறோம்
Ebook82 pages27 minutes

தடங்களுக்கு வருந்துகிறோம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீமா ஏஜன்ஸியின் விஸ்தாரமான அலுவலக அறையிலிருந்து வெளிப்பட்டார்கள் சந்தீப்பும், பாஸ்கரும். இரண்டு பேரிடமுமே அவசரத்தனம் நிரம்பிக் கிடந்தது.
 "பாஸ்கர் அநியாயம் பண்ணிட்டாங்க. ஐ.டி. பீப்பிள். வந்து நம்மை இந்தப் பாடு படுத்திட்டாங்க."
 "போன்போட்டு சொல்லிட்டியில்ல...?"
 "ம்... சொல்லியிருக்கேன். இருந்தாலும்? நாளைக்கு மேரேஜ்... இன்னும் மாப்பிள்ளை வந்து சேரலியேன்னு பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ஒரே பதைப்பாத்தானே இருக்கும்...?"
 "வாஸ்தவந்தான்! அதான் இப்ப மறுபடியும் போன் போட்டு எப்படியும் ஃபோர் ஹவர்ஸ்ல வந்துடுவோம். ஆபீஸ் ப்ராப்ளம் முடிஞ்சதுன்னு... சொல்லப் போறோமே."
 பேசிக்கொண்டே –
 ரிஸப்ஷன் ஹாலுக்கு வந்தார்கள்.
 "ரமேஷ்... மறுபடியும் லைன் கிடைச்சுதா?"
 "வெயிட் ஏ... மினிட்... சந்தீப்... அந்த சேர்ல உட்காருங்க... இப்ப வாங்கித் தர்றேன்...!"
 "ப்ளீஸ்... கொஞ்சம் சீக்கிரமா..."
 அந்த ஃபைபர் இருக்கைகளில் நிறைந்து கொண்டார்கள்.
 பத்து நிமிஷம். ரமேஷ் கூப்பிட்டான்.
 "சந்தீப்... உன்னோட அதிர்ஷ்டம் லைன் மக்கர் பண்ணாமே கிடைச்சுட்டது..."சந்தீப் வேகமாய் வந்து ரிஸீவரை எடுத்தான் உரத்த குரலில் கத்தினான்.
 "ஹலோ..."
 மறுபக்கமிருந்து குரல் தெளிவாக ஆனால் நிறைய ஆத்தில் கேட்டது.
 "ஹலோ... யாரு...?"
 "நான் சந்தீப் பேசறேன்... அங்கே பேசறது யாரு?"
 பதிலுக்கு அப்பாவின் குரல் கேட்டது.
 "என்னடா ஆபீஸ்ல இன்னும் வேலை முடியலையா?"
 "முடிஞ்சதுப்பா... அதை இன்ஃபார்ம் பண்ணத்தான் போன் செஞ்சேன்... நீங்க, அங்கே பயந்துட்டிருக்கக் கூடாது பாருங்க... இப்ப புறப்பட்டா இன்னும் நாலு மணி நேரத்துல் அங்கே வந்து சேர்ந்துடுவேன்... எப்படியும் பனிரெண்டு - மணிக்கெல்லாம் வந்துடுவேன்..."
 "ஆபீஸ்ல ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"
 "ஒண்ணுமில்லேப்பா... வந்த ஐ.டி.பீப்பிள்ஸ் இப்பத்தான் கிளம்பிப் போறாங்க... அவங்க நினைச்சிட்டு வந்த மாதிரி எதுவுமே கிடைக்கலை... பத்து பதினஞ்சு தடவை ஸாரி சொல்லிட்டு போனாங்க... யாரோ எவனோ மொட்டை பெட்டிஷன் எழுதிப்போட்டதை நம்பிகிட்டு வந்துட்டாங்க... இனிமே பிரச்சனையில்லை... பாடலூர்க்கு அடுத்த பஸ்ஸிலேயே புறப்பட்டு வந்துட்டிருக்கேன்..."
 "நீ மட்டும் தனியாவா வர்றே?"
 "இல்லே... கூட என்னோட ஃபிரெண்ட் பாஸ்கர் வர்றான்..."
 "சீக்கிரமா புறப்பட்டு வந்து சேருங்க..."
 "ம்... ம்..."
 ரிஸீவர்களைச் சாத்தினார்கள்.
 அந்த ரிஸப்ஷன் ரமேஷ் புன்னகைத்தான்"என்ன மாப்பிள்ளை ஸார்... கிளம்பியாச்சா?"
 "ம்..."
 "மை அட்வான்ஸ் கங்கிராட்ஸ்...!"
 "தாங்க்யூ..."
 "பாஸ்கர்..."
 "என்ன...?"
 "என் சார்பா மாப்பிள்ளைக்கு காலையில் இன்னொரு பிடி அட்சதை போட்டுடு..."
 "போட்டுட்டு..."
 சிரித்துக் கொண்டே - இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். மெயின்ரோடு கலகலத்துக் கொண்டு வாகனங்களில் இரைச்சலோடு தெரிந்தது .ஃப்ளோரஸண்ட் வெளிச்சம். நெடுக தூவியிருந்தது.
 "ஆட்டோ பிடிச்சு... பஸ் ஸ்டாண்ட் போயிடலாமா? காலியாப் போற அந்த ஆட்டோவைக் கூப்பிடு..."
 சந்தீப் கை தட்டினான்.
 சந்தீப்பின் கை தட்டலைக் காதில் வாங்கிய ஆட்டோ டிரைவர் - திரும்பிப் பார்த்து அவர்களின் கையசைப்பிற்கு ஆட்டோவை திருப்பிக் கொண்டு வந்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224720118
தடங்களுக்கு வருந்துகிறோம்

Read more from Rajeshkumar

Related to தடங்களுக்கு வருந்துகிறோம்

Related ebooks

Reviews for தடங்களுக்கு வருந்துகிறோம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தடங்களுக்கு வருந்துகிறோம் - Rajeshkumar

    1

    சீமா காஸ்ட்யூம்ஸ் பிரைவேட் (லி) கம்பெனி - டைப்ரைட்டர்களின் படபடப்பு. ஃபைல்களின் புரட்டல்கள். அட்டென்டர்களின் நகரல்கள். நேற்றைக்கு முன் தின டெஸ்பாட்ச் நோட் எடுப்பா... - ரஹீம்...! சுசிலா எண்டர் - பிரைசஸுக்கு அனுப்பின இருபதாயிரம் பில் என்னாச்சு?- அலுவலக ரீதியான சம்பாஷனைகள். அதிக சப்தமில்லாமல் - வேலைக்கிடையே - உங்க அக்காவுக்கு எப்ப மாலா சீமந்தம்? - தாரகராம்ல போன மாசம் எடுத்த சில்க் சாரிக்கு தர்ட் இன்ஸ்டால்மென்ட் கட்டிட்டியா? பெண் ஊழியர்களின் கமுக்கலான அரட்டை.

    நேரம்?

    அலுவலின் இரண்டாவது பாதியில் 3.00 மணி.

    சீஃப் அக்கவுண்ட்டன்ட் சந்தீப்பின் மேஜைக்கு இப்போது நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.

    எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்த தனபால் விரல் நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டே கூப்பிட்டார்.

    சந்தீப்...

    ஸார்...?

    நீ மத்யானம் லீவ் இல்லே...

    ஆமா ஸார்...

    இன்னும் இங்கிருக்கே?

    புறப்படணும் ஸார்... ஒரு பாலன்ஸ்ஷீட் டேலி ஆகாம உதைச்சிட்டிருந்தது. இப்பதான் முடிஞ்சது... புறப்பட்டாச்சு... எம். டி. யைப் பார்த்து சொல்லிட்டு கிளம்பறேன்...

    உன் கூட பாஸ்கரும் வர்றானா?

    ம்...! மாப்பிள்ளை தோழனே அவன்தானே?

    பாஸ்கர் சற்று தள்ளிச் சதுர சதுர கம்பியிட்ட கேஷ் கிடங்குகள் சார்ஜை வேறொரு ஆசாமியிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தான். சந்தீப் பாஸ்கர் இருந்த பக்கம் திரும்பினான்.

    பாஸ்கர்...

    என்னடா...?

    சார்ஜை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டியா?

    ம்... பண்ணிட்டிருக்கேன்...

    நான் எம். டி. யைப் பார்த்துட்டு வர்றேன்... அதுக்குள்ளே நீ முடி...

    ம்...

    சந்தீப் அலுவலக ஹாலுக்கு வெளிப்பக்கம் வந்தான். மொசைக் புள்ளிகளோடு வராந்தா எதிரே M.D. (மானேஜிங் டைரக்டர்) என்று பித்தளைப் பிரகாச எழுத்துக்களை மேலே அப்பிக்கொண்டிருந்த தேக்கு மரக் கதவு.

    உள்ளே சுழல் நாற்காலிக்குத் தன்னைக் கொடுத்திருந்த எம்.டி. வாசுதேவன் ஆறரை அடி உயரத்தை சர்வ சாதாரணமாகத் தொட்டிருந்தார். தங்க டாலடிக்கும் பிரேமுக்குள் வெள்ளெழுத்து கண்ணாடி தெரிந்தது. படிக்காத சமயங்களில் கண்ணாடி கையில் சுழலும்.

    உள்ளே நுழைகிற சந்தீப்பை பார்த்ததும் முகம் நிறைய ஆச்சர்யத்தைக் காட்டினார் அவர்.

    என்ன சந்தீப்... நீங்க இன்னும் போகலையா? மத்யானம் நீங்க லீவ் எடுத்திருக்கிறதா நினைச்சுட்டிருக்கேன்...

    லீவ் தான் ஸார்... பட், அக்கவுண்ட் ஒண்ணு டேலி ஆகாம இருந்தது. அதை டேலி பண்ண இவ்வளவு நேரம் ஆயிருச்சு... முடிச்சே கொடுத்துட்டுப் போயிடலாம்னு இருந்துட்டேன்...

    இப்ப என்ன ஆச்சு...? முடிஞ்சதா...

    ம்... முடிஞ்சது ஸார்...

    இருந்தாலும் உங்களை மாதிரி இப்படி ஆபீஸ், ஆபீஸ்னு ஆபீஸைக் கட்டிட்டு அழக்கூடாது. நாளைக்கு காலைல எட்டு மணிக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு... இன்னிக்கு மத்யானம் மூணு மணி வரைக்கும் ஆபீஸ்ல உக்காந்துகிட்டு இருக்கீங்களே. ம்... ம்... புறப்படுங்க...

    ஸார்... இங்கே இருக்கற பாடலூர்ல தானே மேரேஜ்...! இப்ப கிளம்பினா. கூட மூணு மணி நேரம்தான். ராத்திரி ஏழு மணிக்குள்ளே போய் சேர்ந்துடலாம்...

    ம். கிளம்புங்க. கிளம்புங்க... பேசிட்டே இருக்காதீங்க…

    நாளைக்கு காலைல நீங்க அவசியம் மேரேஜுக்கு வந்துடணும்.

    வர்றேன்... வர்றேன்.

    நீங்க வந்து முன்னாடி நின்னாதான். நான் பொண்ணு கழுத்தில் தாலியே கட்டுவேன்...

    வாசுதேவன் கண்ணாடியைக் கையில் சுழற்றிக் கொண்டு புன்னகைத்தார்.

    கண்டிப்பா வர்றேன்.

    வாசுதேவனிடம் சொல்லிக் கொண்ட பின் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். கேஷ் கவுண்ட்டரை நெருங்கி பாஸ்கரிடம் கேட்டான்.

    என்னடா... நாம கிளம்பலாமா?

    ம்...

    பாஸ்கர் காஷ் கவுண்ட்டரினின்றும் வெளியே வந்தான். சந்தீப்பைத் திட்டினான்.

    உன்னைப் போல ஒரு கல்யாண மாப்பிள்ளையை நான் பார்த்ததேயில்லைடா? நாளைக்குக் காலையில மேரேஜை வச்சுகிட்டு இந்த நிமிஷம் வரைக்கும் ஆபீஸைக் கட்டிட்டு அழுதிட்டிருக்கே!

    எம்.டி.யே திட்டினார்!

    பின்னே திட்டமாட்டாரா?

    சரி... சரி... கிளம்பியாச்சு... வா…

    அலுவலகத்திலிருந்த முக்கியஸ்தர்களிடம் சொல்லிக் கொண்டு - காலையில் திருமணத்துக்கு மறக்காமல் வரச் சொல்லி - மறுபடியும்

    Enjoying the preview?
    Page 1 of 1