Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வர்ணம் இழந்த வானவில்
வர்ணம் இழந்த வானவில்
வர்ணம் இழந்த வானவில்
Ebook103 pages35 minutes

வர்ணம் இழந்த வானவில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகப்பரப்பில் குழப்பம். அப்படியே இருக்க - வருண் மார்க்கெட்டிங் மேனேஜர் விஸ்வநாத்தைப் பார்த்தான்.
 "கனிஷ்கா காஸ்மெட்டிக்ஸ் வேன் வந்திருக்கு. அதைப் பார்த்துட்டுத்தான் லோடிங் செக்ஷனுக்கு போன் பண்ணினேன். டெலிவரி இன்னிக்கு இல்லைன்னு சொன்னாங்க..."
 "எஸ் சார்... அது சம்மந்தமாத்தான் நான் பேச வந்தேன்..."
 "ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு... என்ன ப்ராப்ளம்... இன்னிக்கு டெலிவரி குடுக்கறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்களா...?"
 "இல்லை சார்... ப்ரொடக்ஷன்லயோ... டெலிவரியிலயோ எந்தப் பிரச்சனையும் இந்த நிமிஷம் வரைக்கும் இல்லை சார்..."
 "அப்புறம் என்ன பிரச்சனை?"
 "கனிஷ்கா காஸ்மெட்டிக்ஸ் வேன் லோடிங்கிற்காக இப்போ வரலை சார்..."
 "பின்னே...?"
 "அன்லோடிங் பண்றதுக்காக வந்திருக்கு..."
 "வாட்...? வாட் டு யூ மீன்..."
 "நம்ம கிட்டேயிருந்து சரக்கை ஏத்திகிட்டுப் போறதுக்காக வரலை சார்... வாங்கிட்ட சரக்கை திருப்பி இறக்கிட்டுப் போறதுக்காக வந்திருக்கு..."
 "ஏன்...? என்ன பிரச்சனை...?"
 "தெரியலை சார்..."என்ன, தெரியலையா...?"
 "நான் ஆன வரைக்கும் கேட்டுப் பார்த்துட்டேன் சார்... எங்க எம்.டி. உங்க எம்.டி. கிட்டே பேசிக்குவார்... டோட்டல் கன்சைன்மென்டும் இன்னிக்கு ஈவினிங் உங்க கம்பெனிக்கே திரும்பி. வந்துடும்... உங்ககிட்டே நாங்க எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க சார்..."
 "யு ஆர் எ மார்க்கெட்டிங் மேனேஜர்...? எக்ஸிக்யூட்டிவ் ராங்க்ல வர்றிங்க...! மார்க்கெட்டிங்கைப் பொறுத்தவரைக்கும் தொண்ணூறு சதவித உரிமையை உங்களுக்கு கொடுத்திருக்கேன்... இதெல்லாமே அவங்களுக்குத் தெரியும்... பிரச்சனை என்னன்னு உங்ககிட்ட கூட சொல்ல மறுத்துட்டாங்களா...?"
 "ஆமா சார்."
 ஒரே ஒரு லாட்ன்னா பரவாயில்லை... டோட்டல் கன்சைன்மென்ட்டையும் திருப்பி அனுப்பறேன்னா சொன்னாங்க...?"
 "ஆமா சார்..."
 "என்ன மிஸ்டர் விஸ்வநாத் அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி குடுக்கறிங்க... முக்கால் கோடி கன்சைன்மென்ட்... ரிட்டன் வாங்கினா பிழைப்பு என்னாகறது...?"
 "ஏதோ சீரியசான மேட்டர் இருக்கு சார்... இல்லைன்னா அவங்க இவ்வளவு கோபமா பேசமாட்டாங்க... கன்சைன்மென்ட்டை பல்க்கா இப்படி திருப்பி அனுப்பறேன்னு சொல்றது ரொம்பவும் சீரியசான விஷயம்... நாலு வேன் நிறைய சரக்கு திரும்பி வந்திருச்சு... நீங்க பார்த்தது நாலாவது வேன்..."
 "நம்ம மார்க்கெட்டிங் பேட்டர்ன்ல அவங்களுக்கு ஏதாவது அதிருப்தி இருக்கா...?"
 "இல்லை சார்... நம்ம அப்ரோச் பிடிச்சுப்போய்தான் கடந்த இரண்டு வருஷமா இயர்லி கன்சைன்மென்ட் வாங்க ஆரம்பிச்சாங்க... டெலிவரி, புரொடக்ஷன்... இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள் எழுந்தப்போ என்னைக் கூப்பிட்டு பேசினாங்க. நானும் அவங்களோட பிரச்சனைகளை சரிபண்ணிக் குடுத்துட்டு வந்திருக்கேன். ரெண்டுவருஷமாவே நமக்கிடையே வெரி ஸ்மூத் ட்ரான்சாக்ஷன் நடந்திட்டு வந்திருக்கு... இன்னிக்கு அவங்களோட மூர்க்கமான ரியாக்ஷனுக்கு என்ன காரணம்னு என்னால புரிஞ்சிக்க முடியலை..."
 "க்வாலிட்டி கன்ட்ரோல் எப்படி இருக்கு...?"
 "அதில் நாம் ரொம்ப கவனமா இருக்கோம் சார்... நீங்க வாங்கிப் போட்டிருக்கிற வெளிநாட்டு கருவிகள் மூலமா உற்பத்தியாகற ஒவ்வொரு லாட்டையும் தரோவா இன்ஸ்பெக்ஷன் பண்றோம்... க்வாலிட்டில் நாம் என்னிக்குமே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதில்லை சார்... நம்ம க்யூசி லெபாரட்டரியையும், தர நிர்ணய முறைகளையும் காட்டித்தான் பெரிய பெரிய ஆர்டர்களை வாங்கறோம்..."
 "வேலை செய்யறவங்க சில சமயம் சோம்பேறித்தனமா இருந்தா விட்டுடலாம்... சின்ன விஷயம் தானேன்னு சில ப்ரொசீஜர்சை அலட்சியப் படுத்தலாம்... அந்த அலட்சியம் இந்த மாதிரி விபரீதங்களுக்கு காரணமா அமைஞ்சுடக் கூடும்..."
 "நான் இன்னிக்குக் கூட லேபுக்குப் போய்... எல்லாம் முறையா நடக்குதான்னு பார்த்தேன். சார்... எல்லா நடைமுறைகளும் இம்மி பிசகாம! கடைபிடிக்கப்படுது."
 "ப்ரொடக்ஷன் இன்சார்ஜ்கிட்டே சொல்லி இன்றைய ப்ரொடக்ஷனின் க்வாலிட்டி இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்டை சரி பார்த்தீங்களா...?"
 விஸ்வநாத் பலமாய்த் தலையசைத்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 5, 2024
ISBN9798224009039
வர்ணம் இழந்த வானவில்

Read more from Rajeshkumar

Related to வர்ணம் இழந்த வானவில்

Related ebooks

Related categories

Reviews for வர்ணம் இழந்த வானவில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வர்ணம் இழந்த வானவில் - Rajeshkumar

    1

    வி.ஜே. கெமிக்கல்ஸ் (பிரைவேட்) லிமிடெட்.

    மூன்று மாடிக் கட்டிடத்தின் உச்சந்தலையில் பளிச்சென்று மெட்டாலிக் எழுத்துக்கள் பித்தளை நிறத்தில் தெரிய, கட்டிடத்தின் உடம்பு சாம்பல் நிற டிஸ்டெம்பரில் குளித்திருந்தது. ஒரு வெளிநாட்டுக் கம்பெனிக்குரிய தோரணை கட்டிடத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் தெரிந்தது.

    கம்பெனியை நிர்வாகிக்கிற வருண் இளைஞன். சாதாரண டவுண் பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் படித்தவன். அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் பேச்சிலர் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி முடித்த கையோடு வேலைக்குப் போக மாட்டேன் என்று சபதமெடுத்து இந்த நிறுவனத்தை ஐநூறு சதுர அடி வீடு ஒன்றில் ஆரம்பித்தவன். அவனுடைய அபார மூளையை உரமாய் வாங்கிக் கொண்டு கம்பெனி ஐந்தே வருஷங்களில் அசுர வளர்ச்சியைத் தொட்டு விட்டது. இப்போது இந்தக் கம்பெனிக்கு வயது பதினைந்து.

    சாதனை படைத்த அந்த வருணை பார்க்க வேண்டுமென்றால் மேல் தளத்தில் இருக்கும் அவனுடைய அறைக்குத்தான் போக வேண்டும். வாருங்கள் போகலாம்.

    மேனேஜிங் டைரக்டர் என்று பச்சை குத்தியிருந்தது அறைக்கதவு. உள்ளே அமர்த்தலாய் உறுமும் ஏ.சி. உட்புறச் சுவர்களில் சிவில் ஆர்க்கிடெக்ட்களின் கைவண்ணம் தொழில்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட ஷீல்டுகள். வெள்ளைப் பின்னணியில் வண்ணக் கோடுகள் நெளியும் க்ராஃப் வரை படங்கள். இத்தனைக்கும் நடுவே வருண். வயது நாற்பது. முன் நெற்றியில் விழும் முடிக் கற்றையில் இரண்டே இரண்டு முடிகள் மட்டும் வெள்ளியைப் பிரதிபலித்தன. மற்றபடி வேண்டிய இளமை அவனிடம் மிச்சமிருந்தது.

    லேப்டாப் கம்ப்யூட்டரில் கம்பெனியின் அன்றைய நிலவரங்களை சோதித்துக் கொண்டிருந்த வருணை டெலிபோன் செல்லமான சுருதியில் கூப்பிட்டுக் கொண்டிருந்தது.

    ரிசீவரை எடுத்து காதில் வைத்தான்.

    ஹலோ...

    நான் தாரா பேசறேன்...

    காதுகளில் பாதாம் கீரைப் பாய்ச்சுகிற குரல்,

    சொல்லு தாரா... என்றான் வருண்,

    என்னது... சொல்லு தாராவா...?

    என்ன குரல் கோபமா இருக்கு...?

    கோபமாவும் இருக்கு... லேசா சந்தேகமாகவும் இருக்கு...

    என்ன சந்தேகம்...?

    உங்களுக்கு வீடு... பெண்டாட்டி... ரெண்டு குழந்தைகள் இதெல்லாம் ஞாபகம் இருக்கா, இல்லையாங்கற சந்தேகம்...

    ரிசீவரில் வாய்விட்டுச் சிரித்தான் வருண்.

    தாரா தொடர்ந்து கோபத்தைக் குரலில் காட்டினாள்.

    நான் ஜோக் அடிக்கலை. இப்ப மணி என்னான்னு பார்த்து சொல்றீங்களா...?

    ஏழரை...

    ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ரெடியா இருக்கச் சொன்னீங்க. அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்துட்டு இப்ப போன் பண்றேன்...

    பொம்பளைங்க கிளம்பி ரெடியாக எப்பவுமே லேட் ஆகுமே... அதனாலதான் நான் அசட்டையா இருந்துட்டேன்...

    இந்த சமாளிக்கிற பிசினெஸ் எல்லாம் வேண் டாம்... என்னிக்கு நான் நீங்க சொல்ற டயத்துக்கு கிளம்பாம இருந்திருக்கேன்...

    டெலிபோனை வெச்சதும் முதல் காரியமா ரெண்டு கையாலும் கன்னத்தில் போட்டுக்கறேன்... போதுமா...? ஸாரி... ஸாரி...

    யாருக்கு வேணும் உங்க ஸாரி...

    தாரா! என்னைப் புரிஞ்சிக்க... டெல்லில இருந்து ஒரு முக்கியமான கஸ்டமர் விசிட் வந்துட்டான். பாதி நாள் அவனோட போயிடுச்சு... கம்பெனி கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும்...

    இன்னும் அரை மணி நேரம் ஆகுமா...?

    அது வரைக்கும் டி.வி. பார்த்துட்டிரு...

    என்னங்க விளையாடறீங்களா...?

    ஏழு மணிக்குன்னா ஏழு மணிக்கே போயாகணும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா...? கீதாஞ்சலி ரெஸ்டாரெண்ட் எங்கே போயிடப்போகுது... அரை மணி நேரத்தில் நான் வந்துடறேன்...

    புரியாம பேசறீங்களே... நாம ரெண்டு பேர் மட்டும் போறதா இருந்தா எப்போ வேணா போலாம்... குழந்தைங்க விக்கியையும், சிந்துவையும் கூட்டிட்டுப் போறதா இருக்கோம். லேட் ஆச்சுன்னா அதுக தூங்கிடும்... அவங்க நச்சரிப்புக்காகத்தான் இந்த ப்ரொக்ராமே போட்டோம்...

    சரி... இன்னிக்கு இல்லைன்னா நாளைக்குப் போகலாம்...

    குழந்தைங்களை டிஸப்பாயின்ட் பண்ணாதீங்க... அது பெரிய பாவம்... முடியலைன்னா ஏன் ப்ராமிஸ் பண்றீங்க...? காலைல போறப்ப ரெண்டு பேரும் உங்ககிட்டே எத்தனை தடவை திருப்பித் திருப்பிக் கேட்டாங்க... அப்பவே இன்னிக்கு முடியாதுன்னு சொல்லியிருந்தா பிரச்சனை இல்லை... அவங்க ரொம்ப ஆசையோட இருக்காங்க... இல்லைன்னா காரையாவது அனுப்பி வைங்க... நானே அவங்களைக் கூட்டிட்டுப் போறேன்...

    கவலைப்படாதே... இன்னும் அரைமணி நேரம் பொறுத்துக்க... சரியா எட்டு பத்துக்கு நான் வீட்ல இருப்பேன். போதுமா...?

    ம்…

    ரிசீவரை வைத்தான்.

    மீண்டும் லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையில் கண்களைப் பதிய விட்டான். எண்ணிக்கைகளும் வரைபடங்களும் அன்றைய தேதியுடன் திரையில் மேலேறிக் கொண்டே இருந்தன. நிறுத்தி நிதானமாய் படிக்க வேண்டிய இடங்களை ஃப்ரீஸ் போட்டுப் பார்த்தான்.

    மெமோ ஸ்லிப்பில் முக்கிய விபரங்களை வார்த்தைகளாகக் குறித்துக் கொண்டான்.

    சரியாய் எட்டு மணிக்கு கம்ப்யூட்டரை அணைத்தான்.

    எழுந்து கார் சாவியைப் பொறுக்கிய போது - திரைச்சீலை லேசாய் விலகி கண்ணாடி ஜன்னல் வழியே கம்பெனியின் வாசல் கதவு தெரிந்தது.

    வாசலில் பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சம்.

    செக்யூரிட்டி கார்டு பரபரப்பாய் மெயின் கேட்டை அகலமாய் திறந்து கொண்டிருந்தான்.

    ஸ்டாண்டர்டு வேடன் ஒன்று உள்ளே பிரவேசித்தது.

    வருண் நெற்றியைத் சுருக்கிப் பார்க்க - அதன் உடம்பின் பக்கவாட்டில் பெரிய எழுத்துக்களில் ‘கனிஷ்கா காஸ்மெட்டிக்ஸ்’ என்று பெயிண்டில் தீட்டப்பட்டிருப்பதைப் படிக்க முடிந்தது.

    இன்டர்காமை அருகில்

    Enjoying the preview?
    Page 1 of 1