Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீ மட்டுமே வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்
Ebook123 pages41 minutes

நீ மட்டுமே வேண்டும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓசூமி கராத்தே பயிற்சிப் பள்ளி.
 இங்கே தற்காப்புக் கலைகள் மிகச் சிறந்த முறையில் குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொடுக்கப்படும் என்கிற தமிழ் வாசகங்கள் இடம் பெற்றிருந்த அந்த போர்டின் ஒரு ஓரத்தில் 'ஸ்கூல் ஆப் செல்ப் டிபென்ஸ்' - என்கிற ஆங்கில வாசகமும் தெரிந்தது.
 உள்ளே –
 சதுரம் சதுரமான பச்சைக் கம்பளங்களின் மேல், வெள்ளைநிற தொளதொளப்பான ஆடைகளில் ஆண்கள் ஜோடிஜோடியாக கால்களையும் கைகளையும் உயர்த்திக் கொண்டு - பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே இளம் கராத்தே மாணவர்கள். ஹீ... ஹா... என்கிற சத்தம் சீராக காது மடலை உரசிக் கொண்டிருக்க, சத்யேசு அந்த மாணவர்களுக்கு மத்தியில் மெதுவாய் நடந்தான். கண்களில் தீவிர கண்காணிப்பு பார்வை.
 சத்யேசுக்கு அபார உயரம். சினிமாஸ்கோப் மார்பு. உதட்டில் எந்த நேரமும் மெலிசான ஒரு புன்னகை. இவனுக்கும் 'டிக் டிக்' ஏஜென்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதை இன்னும் இரண்டு அத்தியாயம் கழித்து தெரிந்து கொள்ளலாம்.
 நடந்து கொண்டிருந்த சத்யேசு சட்டென்று நின்றான். கராத்தே பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த மாணவனின் தோளைத் தட்டினான்.
 "தப்புப்பா... உதைக்கிற கால் எப்படி இருக்கணும்ன்னு சொல்லியிருக்கேன்... பாடத்தை ஞாபகப்படுத்திப் பாரு..."
 "சார்..." அவன் வியர்த்த முகமாய் விழித்தான்"உதைக்கிற கால் வளைஞ்சிருந்தா... அதனோட முழு சக்தியையும் எதிராளிமேல் பிரயோகிக்க முடியாது. புரிஞ்சுதா?"
 "புரிஞ்சுது சார்."
 "எங்கே உதை பார்க்கலாம்?"
 அவன் எதிரிலிருந்த மாணவனை நோக்கி காலை உயர்த்திய அதே நேரம்-வாசல் கேட் அருகே ஆட்டோ சத்தம் கேட்டது.
 திரும்பிப் பார்த்த சத்யேசுக்கு மீட்டர் சார்ஜை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சல்வார் கம்மீஸ் பெண் தெரிந்தாள். அழகாக இருந்தாள். சல்வார் கம்மீஸ் அவளுடைய உடம்பின் ஏற்ற இறக்கங்களுக்கு கீழ்படிந்திருந்தது. சத்யேசை நோக்கி வந்தாள்.
 "மிஸ்டர் சத்யேசு?"
 "நான் தான்..."
 "என் பெயர் சுகிர்தா."
 சொல்லிக் கொண்டே கையை நீட்டினாள். சத்யேசும் கை கொடுத்தான். ஸ்பாஞ்சு மாதிரி எவ்வளவு மிருதுவான உள்ளங்கை.
 "உனக்கு என்ன வேண்டும்?"
 அவள் கராத்தே கூட்டம் முழுக்க ஒரு தரம் பார்வையை டூர் அனுப்பிவிட்டுத் திரும்பினாள்.
 "எவ்வளவு நாள்ல கராத்தே கத்துக்க முடியும்?"
 கேட்டவளின் முகத்தை இப்போதுதான் சத்யேசும் முழுசாகக் கவனித்தான். அந்த முகத்தில் அற்புதமான அழகைத் தவிர வேறொரு கோட்டிங்கும் இருந்தது. பயம்? கலவரம்? மிரட்சி?
 "எதுக்காகக் கேட்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
 "கத்துக்கத்தான்..."இங்கேயா?"
 "எஸ். உங்கள் கிட்டேதான்."
 "சாரி மிஸ் சுகிர்தா. இங்கே பெண்களை எடுக்கிறதில்லை. சப் சிடி சென்டரில் ஒரு கராத்தே பள்ளி இருக்கு. நீங்க அங்கே போறது நல்லது."
 "ப்ளீஸ் மிஸ்டர் சத்யேசு..."
 அவள் பேசத் தொடங்கிய வாக்கியத்தை வெட்டினான் சத்யேசு –
 "சாரி..."
 அவள் கொஞ்சலாய் தொடர்ந்தாள்.
 "உங்களைப் பற்றி வெளியே கேள்விப்பட்ட பின்னாலதான் நான் நேரா உங்களைத் தேடி வந்தேன். இந்த நகரத்தில் கராத்தேயை சரியான முறையில் சொல்லிக் கொடுக்கிறதுக்கு உங்களைத் தவிர வேறு ஆளே இல்லையாம்."
 சத்யேசின் முகத்தில் புன்னகை 'வாக்கிங்' போனது.
 "யாரோ உங்ககிட்டே என்னைப் பத்தி அதிகமாகப் புகழ்ந்திருக்காங்க..."
 "அவையடக்கமா பேசுறீங்க மிஸ்டர் சத்யேசு. ரொம்ப நம்பிக்கையோட நான் இங்கே வந்திருக்கேன். என்னை ஏமாத்திடாதீங்க. ப்ளீஸ்..."
 "உங்களைப் போல எத்தனையோ பேர் ஏற்கெனவே என்னை வந்து கேட்டாங்க. பெண்களுக்கு சொல்லித் தருவதில் நிறைய சிரமம் இருக்கு, மிஸ் சுகிர்தா."
 "மத்தவர்களைப் போல் பொழுது போக்கா நான் இதைக் கத்துக்கலை... ஒரு இக்கட்டான சூழ்நிலைல மாட்டியிருக்கேன். தற்காப்புக் கலை இப்போதைக்கு எனக்கு ரொம்ப அவசியம்னு பட்டுதான் உங்களைத் தேடி வந்திருக்கேன்.உங்களுக்கு என்ன பிரச்சினை? அந்த இக்கட்டான சூழ்நிலையை என்கிட்டே சொல்ல முடியுமா? நான் ஏதாவது உதவி பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்."
 அவள் பார்வையில் தயக்கப் பறவைகள் பறந்தன

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223367826
நீ மட்டுமே வேண்டும்

Read more from Rajeshkumar

Related to நீ மட்டுமே வேண்டும்

Related ebooks

Related categories

Reviews for நீ மட்டுமே வேண்டும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீ மட்டுமே வேண்டும் - Rajeshkumar

    1

    நான் தீர்மானமான குரலில் சொன்னேன். அண்ணா! நான். வேலை பார்க்கிற கம்பெனி முதலாளி நல்லவர்தான். ஆனால், அந்த கம்பெனியோட நடவடிக்கைகள் சரியில்லை. ஏதோ நிழல் காரியம் பண்ணுகிறார்கள்.

    நான் -

    பெண்: பெயர் பிரின்சி. வயது? வரும் ஜூனோடு இருபத்து மூன்று. என்னைப் பார்க்கிற எந்த அந்நிய ஆணும் சில விநாடி நேரமாவது பார்வையில் கற்பழிக்காமல் இருக்க மாட்டான். என்னைப் பற்றி பின்னால் நிறைய சொல்கிறேன். இப்போது நான் என் அண்ணனோடு பேச வேண்டும்.

    அண்ணன் என்னை ஏறிட்டார்.

    நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா பிரின்சி...

    தீர்க்கமா- நேத்து ராத்திரி பூராவும் தூங்காமே யோசிச்சுப் பார்த்துட்டுதான் இந்த முடிவுக்கு வந்தேன்.

    கம்பெனியில் ஏதோ நிழல் காரியம் பண்றதா சொன்னியே... அதென்ன நிழல் காரியம்...?

    இன்னதுதான்னு சொல்ல முடியலை. ஆனால் கம்பெனி சரியில்லை. மாலை ஐந்து மணியானால் போதும்... எல்லா ஊழியர்களையும் வெளியே அனுப்பிச்சுடுவாங்க. கம்பெனி முதலாளி அந்த நேரத்துக்குத்தான் பதட்டமாயிருப்பார்.

    என் அண்ணன் சிரித்தார்.

    உனக்கு எதிலும் சந்தேகம்தான். ஒரு கம்பெனின்னு சொன்னால் எவ்வளவோ வியாபார இரகசியங்கள் இருக்கும். அதையெல்லாம் நாம் கண்டுக்கக் கூடாது... நம்ம வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்.

    சாரிண்ணா... அப்படி என்னால இருக்க முடியலை...

    உன்னோட பாஸ் என்றைக்காவது எந்த சந்தர்ப்பத்திலாவது உன்கிட்ட முறை தவறி நடந்திருக்கிறாரா?

    இல்லை...

    இரட்டை அர்த்தம் வர்ற மாதிரி பேசியிருக்காரா?

    இல்லை...

    கம்பெனியில் இருக்கிற மத்த ஊழியர்கள்?

    அவர்களும் என்கிட்டே கண்ணியமாத்தான் பேசறாங்க- பழகறாங்க. சில பேர்களோட பார்வை மட்டும் தப்பாயிருக்கும்.

    அதை தவிர்க்க முடியாது. ஏன்னா என்னோட தங்கச்சி அழகான பொண்ணு...

    நான் புன்னகைத்துக் கொண்டே - என்னுடைய கைபேக்கைப் பிரித்து - ஒரு கவரை எடுத்து என் அண்ணனிடம் நீட்டினேன்.

    என்ன இது...?

    என்னோட ராஜினாமாக் கடிதம்.

    இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு பிரின்சி.

    எனக்கு அது மாட்டுக் கொம்புதான் அண்ணா. இந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு இன்னும் பத்தே நாள்லே வேற ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து காட்றேன்.

    அண்ணன் தோள்களை குலுக்கினார்.

    ம்... நீ இவ்வளவு உறுதியாக இருக்கும்போது... நான் என்ன சொல்ல முடியும்...? ராஜினாமா லெட்டரைக் கொடுத்துட்டு உடனடியா வீட்டுக்கு வந்து சேரு. கம்பெனி இன்றைக்கு லீவுதானே?

    ஆமா! ஆனால், எம்.டி இருப்பார்.

    நான் கிளம்பினேன்.

    வீதியின் முனைக்கு வந்து- காலியாய் போன ஆட்டோ ஒன்றை பிடித்து, பதினைந்து நிமிடத்தை பிரயாணத்தில் கரைத்து, என்னுடைய கம்பெனியின் பிரமாண்டமான காம்பவுண்டு கேட்டுக்கு முன்னால் இறங்கிக் கொண்டேன். மீட்டர் பார்த்து காசு கொடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டு, வாட்ச்மேன் கொடுத்த சல்யூட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனேன்.

    ஆரோக்கியமான கட்டிடம். கட்டிடத்தைச் சுற்றிலும் கூர்சீவின பென்சில்கள் மாதிரி தைல மரங்கள் நின்றிருந்தன. மெட்டாடர் வேன்களிலும் லாரிகளிலும் லக்கேஜ் இனமாய் தெரிந்தது. கம்பெனி விடுமுறையானதால் உள்ளே பாலைவன அமைதி.

    நான் - நீளமான சலவைக்கல் வராந்தாவில் நடந்து - கோடியில் இருந்த - மேனேஜிங் டைரக்டர் அறைக்கு முன்னால் வந்து நின்றேன்.

    அறைக்கு முன்னால்- ஸ்டூலில் உட்கார்ந்திருந்த அட்டெண்டர் என்னைப் பார்த்ததும் வணக்கம் சொல்லிக் கொண்டே எழுந்தான்.

    அம்மா...

    எம்.டி.யைப் பார்க்கணும். உள்ளே யாராவது இருக்காங்களா?

    யாரும் இல்லேம்மா...

    நான் உள்ளே போலாமா...?

    இருங்கம்மா... கேட்டுட்டு வந்துடறேன். சொன்னவன் கதவைத்திறந்து கொண்டு உள்ளே போய், உடனே வெளியே வந்து, போங்கம்மா என்றான்.

    நான் உள்ளே போனேன்.

    ஏர்கண்டிஷனர் ‘ம்ம்ம்ம்’ என்று சுருதி கூட்டிக் கொண்டிருக்க - அறை ஜில்லுப்பாய் இருந்தது. மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பைல் ஒன்றில் தீவிரமாய் மூழ்கியிருந்த என்னுடைய பாஸ் நிமிர்ந்தார்.

    நான் புன்னகைத்தேன். வணக்கம் சார்.

    வணக்கம் பிரின்சி. உட்கார்.

    நான் உட்கார்ந்தேன்.

    என்ன விஷயம்...? நீயாகவே என்னைப் பார்க்க வந்திருக்கே?

    நான் ஒன்றும் பேசாமல் பேக்கை திறந்து உள்ளேயிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினேன்.

    என்ன இது...?

    என்னோட ராஜினாமா கடிதம் சார்.

    பாஸ் துல்லியமாய் திடுக்கிடுவது தெரிந்தது. என் கையிலிருந்து வாங்கிய கடிதத்தைப் பிரித்துக்கூடபார்க்காமல் மேசையின் மேல் போட்டுவிட்டு ஆச்சரியக் குரலில் கேட்டார்.

    நீ வேலைக்கு சேர்ந்து மூணு மாசம் கூட ஆகலை... அதுக்குள்ளே ராஜினாமாவா?

    நான் பதிலொன்றும் சொல்லாமல் - என் இடது கை விரல்களின் நெயில் பாலீஷ் பூச்சைப் பார்த்தேன்.

    என்ன காரணம் பிரின்சி?

    அண்ணன் வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிவிட்டார்.

    பாஸ் மெல்ல சிரித்தார். ரோலிங் நாற்காலியில் ஒரு கால் வட்டம் சுழன்றார். நீ சொல்ற காரணம் நம்பும்படியா இல்லையம்மா...

    நான் உஷ்ணமாய் நிமிர்ந்தேன். சார்! என்னோட காரணம் நம்பும்படியாக இருக்கோ... இல்லையோ... அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. என்னோட அண்ணனுக்கு நான் வேலைக்கு போறது பிடிக்கலை. ராஜினாமா பண்ணச் சொன்னார். ராஜினாமா கடிதத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டேன். என்னோட அக்கவுண்டை செட்டில் பண்ணிவிட்டால் நான் போய்கிட்டே இருப்பேன்.

    பாஸ் சிகரெட்டை உதட்டுக்குக் கொடுத்தபடியே கேட்டார். உனக்கு இங்கே கொடுக்கிற சம்பளம் போதலையா?

    நான் சொன்னேன். இந்த சம்பளம் மாதிரி வேற எந்த கம்பெனியிலும் வாங்க முடியாது.

    யாராவது உன்கிட்டே தப்பா நடந்துக்கப் பார்த்தாங்களா?

    இல்லை சார்.

    பின்னே ஏம்மா ராஜினாமா...?

    நான் எரிச்சலானேன். சார்! என்னோட ராஜினாமாவுக்கான காரணத்தை இந்த கடிதத்தில் சொல்லியிருக்கேன். அந்த காரணம்தான் உண்மை! என்னோட கணக்கை செட்டில் பண்ணி அனுப்பிச்சிட்டீங்கன்னா... சந்தோஷப்படுவேன்.

    பாஸ் என்னுடைய ராஜினாமா கடிதத்தை எடுத்து படித்துவிட்டு - இண்டர்காமின் ரிஸீவரை எடுத்தார். ஒரு பட்டனைத் தட்டிவிட்டு கரகரத்தார்.

    நாராயணன்! என்னோட அறைக்கு வாங்க... என்ன வேலையில் இருந்தாலும் அதை அப்படியே விட்டுட்டு வாங்க...

    பாஸ் - ரிஸீவரை அமர்திவிட்டு - மூக்குக் கண்ணாடியை சரியாய் பொருத்திக் கொண்டு என்னை ஏறிட்டார்.

    "வேற எந்த கம்பெனியிலிருந்தாவது

    Enjoying the preview?
    Page 1 of 1