Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காலமெல்லாம் உன்னோடு
காலமெல்லாம் உன்னோடு
காலமெல்லாம் உன்னோடு
Ebook87 pages29 minutes

காலமெல்லாம் உன்னோடு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“துர்கா... ஏய்...துர்கா என்ன பண்றே”
குரலில் அதிகாரமும், ஆணவமும் சேர்ந்து ஒலித்தது.
“இதோ வந்துட்டேன்கா... மொட்டை மாடியில் உங்க துணிகளை காயப் போட போனேன்”
அவள் முன் வந்து நின்றாள் பதினெட்டு வயது பருவ மங்கை துர்கா.
தோட்டக்காரன் பேத்தி... எனக்கு நிகராக எவ்வளவு வனப்பும், வசீகரமுமாக இருக்கிறாள். மாநிறமாக இருந்தாலும் களையாக... கடவுள். இந்த ஏழைக்கு இவ்வளவு அழகை வாரி வழங்கி இருக்கிறானே.
அவளை பார்க்கும்போது ஏற்படும் பொறாமை உணர்வு மனதில் தோன்றி மறைந்தது.
“அக்கா... என்ன செய்யணும் சொல்லுங்க”
“என்னோட ரெட் சுடிதார் அலமாரியில் இருக்கு. எடுத்து அயர்ன் பண்ணி கொண்டு வா. அப்படியே சமையல்காரம்மாகிட்டே சொல்லி. வெஜிடபிள் சூப் வாங்கிட்டு வா”
படி இறங்குகிறாள் துர்கா.
பூஜை அறையில். சபேசன் கண்மூடி அமர்ந்திருந்தார்.
பகவானே என் ஒரே மகள் நந்தினி. அவ வாழ்க்கை நல்லபடியாக அமையணும். தாயில்லாத அவளுக்கு ஒரு அன்பான குடும்பத்தை காட்டு.
எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்.
இன்னைக்கு கே.என்... பில்டர்ஸ்னு சிறப்பாக பிஸினஸ் பண்ணிட்டிருக்கிறது காரணம் என்னோட உழைப்பு. என் அப்பா எனக்கு சொல்லி கொடுத்த நேர்மை. அவர் பெயரிலேயே கம்பெனி ஆரம்பிச்சு இன்னைக்கு சிறப்பாக வாழ்ந்திட்டிருக்கேன்சிலீரென்று கண்ணாடி டம்ளர் மாடி அறையில் விழுந்து உடையும் சப்தம் கேட்கிறது.
அதை தொடர்ந்து பளாரென்று அறையும் ஓசையும்,
“உனக்கு அறிவிருக்குதா... ஆள் தான் தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கே. ஒரு டம்ளரை ஒழுங்காக பிடிச்சு கொண்டு வந்து கொடுக்க துப்பில்லை”
நந்தினியின் கோபக்குரல்.
“அக்கா, நான் பார்த்து தான் கொடுத்தேன். நீங்க நான் சரியா பிடிக்காம...”
“எதிர்த்தா பேசறே... போ... இங்கிருந்து...”
வீடே அதிரும்படி நந்தினி கத்த. வேலையாட்கள் பதறியபடி மாடி ஏற, பூஜை அறையிலிருந்து வெளிவந்த சபேசன், இதையெல்லாம் பார்த்தபடி மெளனமாக நிற்கிறார்.
நந்தினியின் இந்த முன் கோபமும், ஆத்திரமும் குறையவே குறையாதா... சின்ன வயதிலிருந்த பிடிவாத குணம்.
தாயில்லாதவள் என்று செல்லம் கொடுத்து வளர்த்ததால், அவள் வளர வளர அவளோடு சேர்ந்து, அவளது பிடிவாத கோப குணமும் அல்லவா... வளர்ந்து கொண்டு போகிறது. மனதில் கவலை சூழ்ந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
காலமெல்லாம் உன்னோடு

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to காலமெல்லாம் உன்னோடு

Related ebooks

Reviews for காலமெல்லாம் உன்னோடு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காலமெல்லாம் உன்னோடு - பரிமளா ராஜேந்திரன்

    1

    அண்ணா நகரில் பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த பிரம்மாண்டமான கட்டிடம்.

    கே.என்.பில்டர்ஸ் என்ற எழுத்துக்கள் பொன்னிறத்தில் பளபளக்க, நாலைந்து காபின் தாண்டி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி அறையில், வி.ஐ.பி. சேரில், தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்து...

    தூய வெண்ணிற வேஷ்டி, சட்டை அணிந்து தோற்றத்திலேயே ஒரு கெளரவம் தெரிய அமர்ந்திருந்தார் சபேசன்.

    அவர் முன் பவ்யமாக நின்ற, அவரது பி.ஏ. பத்ரி பைலை எடுத்து அவரிடம் கொடுத்தான்...

    என்ன பத்ரி... வேளச்சேரி சைட்டுக்கு செங்கல் லோடு... அஞ்சு இறக்க சொன்னது... வந்து சேர்ந்தாச்சா

    மூக்கு கண்ணாடியை இறக்கி சபேசன் கேட்க,

    "ஆமாம் சார். ராத்திரியே வந்து இறக்கி வச்சதாக வாட்ச்மேன் போன் பண்ணி சொன்னான்.

    சத்யா சார்... காலையில் வந்ததும் இஞ்சினியரை கூட்டிகிட்டு அங்கே தான் போயிருக்காரு"

    நான்தான் நேத்தே சத்யாகிட்டே சொல்லிட்டேன். அவன் நம்ம கன்ஸ்ட்ரக்ஷனில் சேர்ந்த இரண்டு வருஷமாக தான் என்னோட வேலை பளு கணிசமாக குறைஞ்சிருக்கு. படிச்சவன், நல்ல திறமைசாலியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கான்

    சொன்னவர்,

    போன் அழைக்க,

    ஹலோ கே.என். பில்டர்ஸ் சபேசன்

    "சார்... நான் பரமசிவன் பேசறேன். சிவா ஸ்டீல் ஒர்க்ஸ்... கம்பெனி வச்சுருக்கேன். உங்க நண்பர் அருணசாலம் மூலமாக உங்களை பத்தி கேள்விப்பட்டேன்.

    சென்னையில் கே.என். பில்டர்ஸ் கட்டின, ப்ளாட்ஸ் நல்ல விலைக்கு போகுது. ஜனங்க அவங்க கட்டின கட்டடமாக இருந்தா. தரமாக இருக்கும்னு நம்பி வாங்கறாங்க. அப்படின்னு பரவலாக பேசறாங்க.

    எனக்கு ஆதம்பாக்கத்தில் ஐம்பது சென்ட் இடமிருக்கு. நீங்கதான் உங்க பொறுப்பில் அபார்ட்மெண்ட் கட்டி தரணும்.

    நீங்க நேரில் வந்து பார்க்கிறதாக இருந்தா நான் உங்களை கூட்டிட்டு போறேன்."

    தயவு பண்ணி மண்ணிக்கனும். எனக்கு முடிஞ்சு கொடுக்க வேண்டிய கட்டிடமே பத்துக்கு மேலே இருக்கு. அதுவுமில்லாம ப்ளாசா மால் ஓனர் புதுசா இரண்டு அப்பார்ட்மெண்ட் கட்டிட காண்ட்ராக்ட் போட்டிருக்காரு. என்னால இப்ப முடியாது

    சார்... நீங்க அப்படி சொல்ல கூடாது. நீங்க தான் கட்டித்தரணும்னு ஆசைப்படறேன். ஆறுமாசம் காத்திருக்க சொன்னாலும் நான் தயாராக இருக்கேன். உங்க ப்ரெண்ட் அருணாசலத்தை பேச சொல்லட்டுமா

    சிபாரிசு எல்லாம் வேண்டாம். உண்மையில் நேரம் இல்லாததால் தான் ஒத்துக்க தயங்குறேன். என் மேல் நம்பிக்கை வச்சு வர்றவங்களுக்கு அவங்க எதிர்பார்த்தபடி கட்டி தரணுங்கிறது தான் என் எண்ணம். ஓ.கே. என் அஸிஸ்டெண்ட் சத்யாவை கலந்துகிட்டு நானே உங்களை கூப்பிடறேன்

    மே... ஐ... கம் இன் சார்

    வா சத்யா உனக்காகத்தான் வெயிட் பண்றேன்

    ‘‘இஞ்சினியர்கிட்டே சொல்லி... கிச்சன் மேடை, சிங்க் வைக்கிறது எல்லாம், மாத்தி வைக்க ஏற்பாடு பண்ணிட்டேன். அவரும் நம் ஐடியாவை ஏத்துக்கிட்டு... வித்தியாசமாக இருக்கு. அமைப்பு நல்லா இருக்கும்னு சொன்னாரு"

    வெரிகுட். அந்த ப்ளாட்ஸ் எல்லாம் புக் ஆகிடுச்சு. எல்லாருமே... ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க. கொஞ்சம் வித்தியாசமாக எதிர்பார்க்கிறாங்க. உன்னோட ஐடியா... நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது சத்யா

    சொன்னவர், எழுந்து அங்கிருந்த வாட்-ரோபை திறக்கிறார்.

    இதிலே... இரண்டு லட்சம் கேஷ் இருக்கு... பாங்கில் கட்டிட்டு... நீ பெசன்ட்நகர் சைட்டுக்கு போய்... பார்த்துக்க. எனக்கு பில்டர்ஸ் மீட்டிங் இருக்கு கிளம்பறேன்

    வெளியே நின்ற, டயோட்டா காரில் ஏறிக்கொள்ள டிரைவர் காரை கிளப்ப...

    கார் வெண்ணையாக வழுக்கிக் கொண்டு தெருவில் பறக்கிறது.

    2

    "துர்கா... ஏய்...துர்கா என்ன பண்றே"

    குரலில் அதிகாரமும், ஆணவமும் சேர்ந்து ஒலித்தது.

    இதோ வந்துட்டேன்கா... மொட்டை மாடியில் உங்க துணிகளை காயப் போட போனேன்

    அவள் முன் வந்து நின்றாள் பதினெட்டு வயது பருவ மங்கை துர்கா.

    தோட்டக்காரன் பேத்தி... எனக்கு நிகராக எவ்வளவு வனப்பும், வசீகரமுமாக இருக்கிறாள். மாநிறமாக இருந்தாலும் களையாக... கடவுள். இந்த ஏழைக்கு இவ்வளவு அழகை வாரி வழங்கி இருக்கிறானே.

    அவளை பார்க்கும்போது ஏற்படும் பொறாமை உணர்வு மனதில் தோன்றி மறைந்தது.

    அக்கா... என்ன செய்யணும் சொல்லுங்க

    என்னோட ரெட் சுடிதார் அலமாரியில் இருக்கு. எடுத்து அயர்ன் பண்ணி கொண்டு வா. அப்படியே சமையல்காரம்மாகிட்டே சொல்லி. வெஜிடபிள் சூப் வாங்கிட்டு வா

    படி இறங்குகிறாள் துர்கா.

    பூஜை அறையில். சபேசன்

    Enjoying the preview?
    Page 1 of 1