Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தெய்வம் தந்த பூவே
தெய்வம் தந்த பூவே
தெய்வம் தந்த பூவே
Ebook108 pages34 minutes

தெய்வம் தந்த பூவே

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துவைத்து, துவைத்து கட்டுவதால் பழுப்பேறிய வேஷ்டி, மேலே கதர் துண்டு, உழைத்து, தேய்ந்து தளர்ந்த கைகள், வயது மூப்பின் காரணமாக முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள்.
கருப்பு நிறம் தான் என்றாலும், வெய்யிலில் நின்று வேலை பார்த்ததால், மேலும் கருத்த தேகம், வாசல் திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தாள் மித்ரா.
“என்னம்மா, எல்லா வேலையும் முடிஞ்சுதா. அடுத்த புதன்கிழமை நிறைஞ்ச அமாவாசை. நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கு கடையை ஆரம்பிச்சுடாலாமா”
“சரிப்பா, எல்லாம் தயாரா இருக்கு. டைலரிங் ஷாப்பும் சேர்த்து வைக்கிறதாலே, இடம் தான் கொஞ்சம் நெருக்கமாக இருக்கு. பெரிசா இருந்த இடம் மெஷின்வாங்கி போட்ட பிறகு சின்னதா போன மாதிரி தெரியுது.
இருந்தாலும் ஏரியா நல்லா இருக்கு, ஜனங்க அதிகம் நடமாடாற இடம். பக்கதிலேயே பஸ் ஸ்டாண்டு எனக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா...”
“அதுதாம்பா வேணும். எந்த ஒரு காயத்திலும் ஆர்வமும், ஈடுபாடும் ரொம்ப அவசியம். உனக்கிருக்கிற திறமைக்கு நீ நல்லா வருவேம்மா”
“இருந்தாலும், நமக்கு சாப்பாடு போட்ட நிலத்தை வித்துட்டோமேன்னு தான் மனசுக்கு வருத்தமா இருக்குப்பா”
“இதிலே வருத்தப்பட என்னம்மா இருக்கு. இனி நிலத்தில் வேலை செய்யற தெம்பு எனக்கில்லை. உழைச்ச வயசு முடிஞ்சாச்சு. அந்த பணம் உன்னோட வாழ்க்கைக்கு பயன்படட்டும்னு தான் வித்தேன்.”
“அண்ணனுக்கு இதிலே கொஞ்சமும் விருப்பமில்லை. நிலத்தை விற்றது கூட பெரிசில்லை, நான் சுயமா தொழில் ஆரம்பிக்கிறது சுத்தமா பிடிக்கலை.“இங்கே பாரு மித்ரா. உங்க ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு. அவன் ஆண், நீ பெண் அவ்வளவு தான். நிலம் வித்த பணத்தை சரிபாதி அவன்கிட்டே கொடுத்துட்டேன்.
இன்னும் சொல்ல போனால் இனிமேதான் உன் கல்யாணம் மற்ற செலவுகள் இருக்கு.
பொறுப்புள்ள பிள்ளையா எதுவும் செய்ய நினைக்காம, நீ செய்யற வேலையிலும் முட்டுகட்டைபோட்டா எப்படி.
நீ அவனை பத்தி கவலைபடாதே. உன் கவனமெல்லாம், உன்னால் முடியுமான்னு இன்னைக்கு உன்னை ஏளனமாக பாக்கறவங்க முன்னால், நல்ல அளவில் வந்து சாதித்து காட்டுவதில் தான் இருக்கணும். புரியுதா”
“சரிப்பா நீங்க எப்ப சென்னைக்கு வர்றீங்க”
“எதுக்குமா. அதுக்குள்ள என்னை கூப்பிடற. முதலில் கடையை ஆரம்பிச்சு, அதை நடத்துவதில் கவனமா இரு. இன்னும் இரண்டு மாசம் போகட்டும், நானும் இந்த கிராமத்தை காலி பண்ணிட்டு, உன்னோடு வந்திடறேன். போதுமா”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
தெய்வம் தந்த பூவே

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to தெய்வம் தந்த பூவே

Related ebooks

Reviews for தெய்வம் தந்த பூவே

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தெய்வம் தந்த பூவே - பரிமளா ராஜேந்திரன்

    1

    அலாரம் அடிப்பதற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்த மித்ரா. அவசரமாக குளியலறை நோக்கி சென்றாள்.

    இளநீலநிற மைசூர் சில்க் புடவையில், எளிமையாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, சுவாமி விளக்கேற்றி கண்மூடி நின்றாள்.

    "கடவுளே, என்னுடைய முயற்சிக்கு நீதான் துணை இருக்கணும்.

    வாழ்க்கையில் ஒரு பெண்ணாக, என்னாலும் ஜெயித்து காட்டமுடியும்ங்கற என் நம்பிக்கை என்னையும், என்னை சேர்ந்தவங்களையும் நல்லபடியா வாழ வைக்கணும்."

    சின்னதாக வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டின் கீழே பிறை போல குங்குமத்தை வைத்துக் கொண்டால்.

    காஸ் அடுப்பில் ஒரு டம்ளர் தண்ணீரை சுட வைத்து, லெமன்டீ பவுடர் இரண்டு ஸ்பூன் போட்டு ஆத்தி, குடித்தவள்.

    ஹாண்ட்பாக்கை எடுத்துக் கொண்டு வாசல்கதவை பூட்டினாள்.

    ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போனவளை பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதி பார்த்து புன்னகைத்தாள்.

    ‘என்னம்மா, சாயிந்திரம் வரும்போது உங்களுக்கு ஏதும் வாங்கிட்டு வரணுமா"

    ‘ஆமாம், மித்ரா. போகும்போது கூப்பிட வேண்டாமேன்னுதான் சொல்லாம இருந்தேன்.’

    ‘என்னம்மா இது. இதிலென்ன இருக்கு. என்ன வேணும் சொல்லுங்க’

    காபிபொடியும், அப்பாவுக்கு சாத்துகுடி பழமும் வாங்கிட்டு வரணும்மா

    சரிம்மா.

    பணம் தரட்டுமா

    வாங்கிட்டு வந்துட்டு அப்புறம் வாங்கிக்கிறேன்.

    "அப்புறம் மித்ரா... சாய்ந்திரம் வரும்போது உனக்கு எதுவும் ராத்திரி சாப்பாடு வாங்கிட்டு வந்துடாத, இன்னைக்கு நைட் ரவாகிச்சடி செய்ய போறேன் உனக்கு ரொம்ப பிடிக்குமே. உனக்கும் சேர்த்து செய்துடறேன்.

    சரிம்மா... நான் வரேன்

    ***

    இவள் இந்த வீட்டிற்கு குடிவந்து ஒரு வருஷத்தில் பார்வதி அவளிடம் தாயின் பரிவோடு அன்பு பாராட்டி நெருக்கமானாள்.

    தனி மனுஷியாய் இருக்கும் மித்ராவும், வயதான தம்பதிகளான பார்வதி, சிவனேசனுக்கு தன்னால் முடிந்த உதவி ஒத்தாசைகள் செய்து அவர்கள் மனதில் இடம்பிடித்தாள்.

    ***

    வா மித்ரா சொன்ன மாதிரி கரெக்டா எட்டு மணிக்கு வந்துட்டே வீட்டினுள் நுழைந்த தோழியை வரவேற்றாள் பூஜா.

    சரி, கிளம்பலாமா பூஜா

    நான் அப்பவே ரெடி வா போகலாம்

    அந்த பெரிய வீட்டின் முன்புறம், அந்த நான்கு கடைகள் வரிசையாக இருந்தது.

    அவள் எதிர்பார்ப்பு ஏற்றாற்போலவே இருந்தது. முதல் கடை சற்று அகலமாக இருப்பது போல தோன்ற,

    பூஜா, எல்லாமே காலியாக தானே இருக்கு. அப்படின்னா, முதல் கடையை பேசி அட்வான்ஸ் கொடுத்துடலாம்

    "என்னம்மா, பிடிச்சிருக்கா. நீங்க டைலரிங் ஸ்கூல் வைக்க போறேன்னு சொல்லுறீங்க. எப்படியும் பத்து மெஷின்போடலாம், இடம் பெரிசு. பின்பக்கம் பாத்ரூம் வசதி இருக்கு.

    ரோடு மேலே வீடு அமைந்ததாலே, இப்படி கடைகட்டி விடலாம்னு, என் பையன் சொன்னான். அவன் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிவச்ச பணத்தில் தான் கட்டினேன்."

    அங்கிள் அட்வான்ஸ் கொஞ்சம் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்.

    இவ என்னோட நெருங்கிய சிநேகிதி. கிராமத்திலிருந்து நிலத்தை வித்து, தொழில் பண்ணலாம்னு முடிவு பண்ணி செலவு பண்றா.

    இன்னும் தொழில் தொடங்கவேறு பணம் தேவைபடுது. பாங்க் லோனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு.

    கொஞ்சம் குறைச்சுங்குங்க அங்கிள்.

    நீங்க முதல் கடையை கேட்கறீங்க. அதுக்கு இரண்டு தெருவின் பார்வை கிடைக்குது. அதுவுமில்லாம அது மத்ததை விட இரண்டடி அகலம் ஜாஸ்தி. கட்டிட செலவே எனக்கு எக்கசக்கமாயிடுச்சு. நீ தெரிஞ்ச பொண்ணு, உனக்காக குறைச்சா தான்.

    யோசித்தவர்,

    சரி ஐம்பதுக்கு பதிலா, நாற்பதாயிரம் அட்வான்ஸ் கொடுங்க. வாடகை இரண்டாயிரம் தான். அதைகுறைச்சுடாதீங்க

    பூஜா, மித்ராவை பார்க்க, அவள் தலையசைத்து சம்மதம் சொல்ல, ஓ.கே. அங்கிள். நாங்க எடுத்துக்கிறோம். டோக்கன் அட்வான்ஸ் எதுவும் தரட்டுமா

    வேண்டாம்மா. அட்வான்ஸ் மொத்தமா கொடுங்க. முதல் கடை உங்களுக்கு தான்.

    அடுத்த வாரத்தில் வந்து கொடுக்கிறோம்

    அவரிடம் விடைபெற்று, ஸ்கூட்டியை கிளப்பினாள் மித்ரா.

    ***

    "அப்புறம் என்ன மித்ரா. இடமும் அமைஞ்சாச்சு. பாங்க் லோனும் ஏற்பாடு பண்ணியாச்சு.

    "உன்கிட்டே எம்பாரய்டரி, தையல்கத்துக்க, புக்கிங்கில் இப்பவே இருபது பேர் வரைக்கும் இருக்காங்க.

    அமோகமாக பிஸினஸ் ஆரம்பிக்க வேண்டியது தான்"

    "எனக்கு தெரிஞ்ச தொழில் இதுதான் பூஜா. இப்ப இருக்கிற வேலை எனக்கு மனசுக்கு பிடிக்கலை. ஓரளவு நிறைவா சம்பளம் வருதேன்னு போயிட்டு இருக்கேன்.

    அப்பா கொடுத்த தைரியம் தான், தனியா தொழில் தொடங்க காரணம்."

    2

    துவைத்து, துவைத்து கட்டுவதால் பழுப்பேறிய வேஷ்டி, மேலே கதர் துண்டு, உழைத்து, தேய்ந்து தளர்ந்த கைகள், வயது மூப்பின் காரணமாக முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள்.

    கருப்பு நிறம் தான் என்றாலும், வெய்யிலில் நின்று வேலை பார்த்ததால், மேலும் கருத்த தேகம், வாசல் திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தாள் மித்ரா.

    என்னம்மா, எல்லா வேலையும் முடிஞ்சுதா. அடுத்த புதன்கிழமை நிறைஞ்ச அமாவாசை. நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கு கடையை ஆரம்பிச்சுடாலாமா

    "சரிப்பா, எல்லாம் தயாரா இருக்கு. டைலரிங் ஷாப்பும் சேர்த்து வைக்கிறதாலே, இடம் தான் கொஞ்சம் நெருக்கமாக இருக்கு. பெரிசா இருந்த இடம் மெஷின்வாங்கி போட்ட பிறகு சின்னதா போன மாதிரி தெரியுது.

    இருந்தாலும் ஏரியா நல்லா இருக்கு,

    Enjoying the preview?
    Page 1 of 1