Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirakkaathe Abaayam
Thirakkaathe Abaayam
Thirakkaathe Abaayam
Ebook114 pages2 hours

Thirakkaathe Abaayam

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Thirakkaathe Abaayam

Read more from Jdr

Related to Thirakkaathe Abaayam

Related ebooks

Related categories

Reviews for Thirakkaathe Abaayam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirakkaathe Abaayam - JDR

    24

    1

    ஹோட்டல் சோன்யாவின் பார்க்கிங் ஏரியாவில், தனது க்ரீம் கலர் மாருதியைப் பார்க் செய்தார் அவர்.

    அவர்?

    ஆறடிக்கு ஒரே ஓர் இஞ்ச் குறைவான உயரம். அந்த உயரத்திற்குக் கட்டான உடல் வாகு. அந்த உடல் முழுவதும் பணக்கொழுப்பின் மினுமினுப்பு.

    அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்துவிட்டாலும், ஏதே, நாற்பது வருடத்திற்கு முன் தான் பிறந்தவர் போலத் தோற்றம். சாம்பல் வண்ண சபாரி சூட் அணிந்திருந்த அவர், காரைப் பூட்டிக்கொண்டு திரும்பினார்.

    பார்க்கிங் பகுதியின் பொறுப்பாளன் (வயது 15 தான்) அவருக்குப் பணிவாய் ஒரு சல்யூட் செலுத்தினான். அலட்சியப்படுத்தி நடந்தார் அவர்.

    ரெஸ்ட்டாரண்ட் வாசலுக்கு வந்தார்.

    மஹாராஜா உடையணிந்துகொண்டு வாயில் காப்போன் வேலை செய்துகொண்டிருக்கும் வாசல் ஆசாமி, ஒரு வளை வளைந்து கதவைத் திறக்க, உள்ளே வந்தார் அவர்.

    வெல்கம் ஸார்... என்று வரவேற்று, காலியாய் இருந்த டேபிளைக் காட்டிய பேரரை ஒரு கையசைப்பில் தவிர்த்துவிட்டு, ரெஸ்ட்டாரண்ட்டின் பின் வழியாக லாட்ஜிங் ரிசப்ஷனுக்கு வந்தார்.

    ‘ரோபோ’ பாணியில் எழுந்து, அளவுப் புன்னகை ஒன்றை வழங்கினாள், ரிசப்ஷனிஸ்ட்.

    அவளது 168 செ.மீ. உயரத்தில் 4 செ.மீ. பாட்டா ஹை ஹீலின் உபயம். ஆனால், 36-24-36 இல் செயற்கை இல்லை என்பது முக்கியக் குறிப்பு. நேற்று காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எடை இயந்திரம் அவளை ஏந்திக்கொண்டு 44 கிலோ என்று எடை கூறியது. ஆனால், அவள் துல்லியமாக 43 கிலோ.655 கிராம் என்பதுதான் நிஜம்.

    நெல்லை மாவட்டக் கரிசல் காட்டில் விளைந்த பருத்தி (கோ-1 ரகமாம்) பஞ்சாகி, நூலாகி, புடைவையாகி அவள் உடலைச் சுற்றிப் பிறவிப்பயனை அடைந்திருந்தது. சேலம் உருக்காலையின் எவர்சில்வர் ஹூக்... வேண்டாம் சார்... ஒரு வாசகத் தாய்க்குலம் முறைக்கிறது.

    அக்மார்க் பசும் வெண்ணெயில் மிஸ்டர் பிரம்மா செய்த தேவதைச் சிலைக்கு உயிர் வந்தது போல அவள் இருந்தாள். இமைத்துடிப்பு ஒவ்வொரு தடவையும் மின்னல் எஃபெக்ட் கொடுத்துக்கொண்டிருந்தது. மூக்கு, வார்ப்பா அல்லது செதுக்கலா என்று சந்தேகம் தந்தது. அவளது உதடுகள் இருந்த - டைப்பில் எல்லா - மகளிருக்கும் உதடுகள் இருந்தால் லிப்ஸ்டிக் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் ஏழு லிவர் பூட்டுப் போட்டுப் பூட்டிவிடலாம். பிரம்மா அவளைப் படைக்கும்போது கன்னக் கதுப்புகளுக்கு ஸ்பெஷலாக ஒரு மொசைக் மிஷினால் பாலிஷ் ஏற்றியிருப்பார் போல் தோன்றியது. அந்தக் கன்னத்தில் கொசு உட்கார்ந்தால் வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொள்ளும். அப்படி ஒரு வழவழப்பு.

    கழுத்து லாமினேட்டட் பளபளப்புடன் ஜொலித்தது. கழுத்தின் கீழ் திருஷ்டிப் பொட்டு போல ஒரு சின்ன மச்சம் தெரிந்தது. அதற்கும் கீழ் வர்ணிக்கும் முன், அவர் குறுக்கிட்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்.

    ரூம் நம்பர் ட்ரிபிள் ஃபைவ்... க்கீ ப்ளீஸ் என்றார் அவளிடம்.

    மாந்தளிர் விரல்களால் சாவி எடுத்துத் தந்தாள்.

    வாங்கிக்கொண்டு லிஃப்ட் ஏறினார். ஐந்தாம் மாடியில் 555ஆம் எண் அறைக்குள் புகுந்தவர், அடுத்த இருபதாம் நிமிடம் வித்தியாசமாய் வெளிப்பட்டார்.

    பாலியெஸ்டர் வேஷ்டி, ஸீ த்ரூ சட்டை, மைனர் செயின், கண்களில் கூலிங் கிளாஸ் எனத் தோற்றத்தில் மாற்றம் காட்டினார்.

    மீண்டும் லிஃப்டில் பயணித்துக் கீழிறங்கி, ரெஸ்ட்டாரண்ட் பகுதியைத் தவிர்த்துவிட்டுப் பக்கவாட்டுப் பகுதி வாசல் வழியாக வெளியேறி, லாட்ஜிங் செஷனுக்கான பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த பச்சை நிற அம்பாசிடரில் ஏறிச் சென்றார்.

    அவர்

    புரிந்துகொண்டிருப்பீர்களே, ஒரு நிழலான ஆசாமி என்று!

    அதே! அடுத்த அத்தியாயத்தில் அறிமுகமாகப் போகும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவர்.

    2

    முப்பத்தைந்து டிகிரி சாய்வில் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் சூரியன்.

    சாலைகளில் நெருக்கமாய் வாகனங்கள்... வாகனங்கள்...மேலும் வாகனங்கள்...

    மாமனார் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டர், பைக்குகளில் இளம் மனைவியை பில்லியனில் ஏற்றிக்கொண்டும் சாலையோர ஃபிகர்களைப் பார்த்துக்கொண்டும் பயணிக்கும் இளம் மற்றும் நடுத்தர வயதுக் கணவன்மார்கள்...

    இனம் புரியாத கவர்ச்சியில் கல்லூரி (அ) பள்ளி செல்லும் அழகான மற்றும் சுமாரான ஸ்கூல் கோயிங் ஃபிகர்களுக்குக் கறுப்புப் பூனைப் படைப் பாதுகாப்புப் போலப் பின் தொடரும் டீன் ஏஜ் இளைஞர்கள்...

    லேசாகத் திரும்பிப் பார்த்தும் ஓரக்கண்ணால் கவனித்தும் புன்னகையா இல்லையா என்று புரியாதபடி ஒரு மார்க்கமாக உதடுகளை அசைத்தும் அந்தக் க.பூ.களைப் புல்லரிக்க வைத்துப் புளகாங்கிதமடையச் செய்கின்ற தாவணி மற்றும் மாடர்ன் டிரஸ் மாணவிகள்...

    இன்ன பிற காட்சிகளோடு சுறுசுறுப்பாய் இருந்த காலை.

    கோவை நகரின் இதயப் பகுதியான காந்திபுரத்தில், சந்தடி நிறைந்த மெயின் ரோடின் ஓரத்தில், அமர்க்கள்மாய் அமைந்திருந்த ஹோட்டல் ஆஷோர்.

    மார்பிள் பதித்த தரையும், சன் மைக்கா ஒட்டப்பட்ட டைனிங் டேபிளும், டிஸ்டம்பர் பூசப்பட்ட சுவரும், குஷன் அமைக்கப்பட்ட நாற்காலிகளுமாய்ப் படுரிச்சாக இருக்கும் ஹோட்டல் ஆஷோரின் ரெஸ்டாரண்ட் பிரிவையோ அல்லது-

    இந்த ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டுடுறா கண்ணா...என் செல்லம் சாப்பிடுமா சாப்பிட்டுடு. நீ சாப்பிடாட்டி அதோ கறுப்பா குண்டா உட்கார்ந்திருக்காரே மீசை மாமா, அவர்கிட்ட புடிச்சிக் குடுத்திடுவேன்... என்று குழந்தைக்கு ஊட்டுகிற, குழந்தை பெற்றும் வயிறு தள்ளாத மற்றும் கட்டுக்குலையாத முப்பது வயது முடிவடைந்த அழகான தாய்க்குலத்தையோ அல்லது-

    தோ டீ ஷர்ட்டும், ஜீன்சும் போட்டிருக்கானே தடியன்... அப்பவே பிடிச்சு என்னை முறைச்சிட்டே இருக்கான்ங்க... என்று தோசையைப் பிய்த்தபடியே காதலனிடம் சிணுங்குகிற சிவப்புச் சுடிதார் காதலியையோ வர்ணிக்கப் போவதில்லை.

    இந்தக் கதைக்கு மகா முக்கியமான வி.வி.ஐ.பி.க்களான விஜயசேகரையும் சத்யமூர்த்தியையும் மட்டும் வர்ணிக்கலாம்.

    விஜயகுமார்- நெருங்கிய நண்பர்களுக்கு விஜய். அவனது அப்பாவுக்கு ‘தண்டச்சோறு.’ ஐந்தடி எட்டு அங்குல உயரத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1