Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttraththin Thirappu Vizha
Kuttraththin Thirappu Vizha
Kuttraththin Thirappu Vizha
Ebook236 pages2 hours

Kuttraththin Thirappu Vizha

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466534
Kuttraththin Thirappu Vizha

Read more from Jdr

Related to Kuttraththin Thirappu Vizha

Related ebooks

Related categories

Reviews for Kuttraththin Thirappu Vizha

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttraththin Thirappu Vizha - JDR

    15

    1

    மிஸ்டர் சூரியன் தனது கதிர்க்கரங்களை நீட்டி வானக் கன்னியைத் தழுவ ஆரம்பித்த-- தழுவப்பட்ட பின் என்ன கன்னி? எனவே, வானத்தைத்தழுவ ஆரம்பித்த-காலை

    தாளில் மடிக்கப்பட்ட முகப் பவுடர் (4 கிராம்), இரண்டு ஜோடி ஹேர்பின்கள், மூன்று ஊக்குகள், ஒரு பாக்கெட் டிஸ்கோ ரப்பர் பாண்டு, மூன்று ஸ்டிக்கர் பொட்டு, சின்ன சீப்பு (நீளம் 10 செ.மீ), மீடிய சைஸ் சாப்பாட்டு டப்பா, இங்க் பேனா, பூப்போட்ட கர்சிப், ஆறு ரூபாய் இருபது காசு பணம் ஆகியவை அடங்கிய (நாலு வாசகியரின் பைகள் சோதனையிடப்பட்டு, சராசரி கொடுக்கப்பட்டுள்ளது) டம்பப் பைகள் ஆபீஸ் பெண்களின் தோள்களையும்; நோட்டுப் புத்தகங்கள் மாணவிகளின் மார்புகளையும் தொட்டுப் பார்க்கின்ற 9.15 முதல் 9.35 வரையிலான நேரம்,

    கலைக் கல்லூரி அருகில் அமைந்திருந்த அந்த அலுவலகம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சலசலக்க ஆரம்பித்தது. ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தார்கள்.

    நமது கதைக்கு மிக முக்கியமான நபரான மிஸ். கீதா (மிஸ்?) தனது சீட்டை ஆக்ரமித்திருந்தாள். மேசையில் தூசி தட்டினாள். தன் காதலன் தயாளனை நினைத்தாள்.

    கடிகாரங்களின் நெட்டை முள்கள் நம்பர் எட்டுக்கு ஒரு ‘இச்’ கொடுத்துவிட்டு ஒன்பதை நோக்கி முன்னேறின.

    கீதாவுக்குத் தயாளனுடன் பேசவேண்டும் போல ஆசை வர, போன் பண்ணலாமா என்று நினைத்தாள். அந்த நினைப்பை மனதுக்குள் மறுபரிசீலனை செய்து - பின் நிராகரித்தாள்.

    ‘தயாள்... ஓ... மை சுவீட் தயாள்...’

    கீதாவின் மனதுக்குள் காதலன் நினைப்பும், தமிழ் உணர்வும் நேசக்கரம் நீட்ட, கவிதை முயன்றாள்.

    ஒரு புதுக்கவிதையை எழுதி முடித்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தாள். சின்ன முள்ளும் பெரிய முள்ளும் உறவாடிக் கொண்டிருந்தன. மணி 9.50.

    தன்னைச் சின்ன முள்ளாகவும் தயாளனைப் பெரிய முள்ளாகவும் கற்பனை செய்து மகிழ்ந்தாள். தன்னையறியாமல் வாயிலிருந்து ‘ஹஹ்ஹா...,’ உதிர்ந்தது.

    என்னம்மா, தானே சிரிச்சுகிட்டிருக்கிற? என்றபடி டைப்பிஸ்ட் மல்லிகாவும், ஸ்டெனோ குமுதாவும் வர, கீதா முகத்தில் அசடு வழிந்தாள்

    கீதா அசடு வழியும் நொடி ஜீப் வந்து போர்டிகோவுக்குள் புகுந்தது. ஆபீசர் பத்மாவதி நுழைய

    ஆபீஸ் ஹவுஸ் ஃபுல்.

    க்ர்ர்ர்...

    ஆபீசர் அடித்த காலிங் பெல்லுக்கு அவரது அறைக்குள் நுழைந்த வெங்கடாசலம்.

    கிரிவென்ஸ் டே அட்டென்ட் பண்ண கலக்ட்டரேட் போறேன். கையெழுத்து போட வேண்டிய பைல்களை எடுத்திட்டு வாங்கோ... கையெழுத்து போட்டுட்டுப் போயிடுறேன்...

    சரிம்மா...

    வெங்கடாசலம் கொண்டு சென்ற பைல்களில் கீதாவின் பைலும் அடக்கம். முப்பத்தி ஐந்தாவது வினாடியில் காலிங் பெல் மின்சாரத்தைக் குடித்து விட்டு ஒலியைக் கொப்பளித்தது.

    வெங்கடாசலம் ஏ-ஐ கூப்பிடுங்கோ... கீதா கூப்பிடப்பட்டாள்,

    ஏம்மா நீ ஆபீஸ்ல வேலைதான் பார்க்கறியானு சந்தேகமா இருக்கு... நீ எழுதி வச்சிருக்கிற டிராப்ட்டைப்பாரு...

    எழுத்துப் பிழையா? இலக்கணப் பிழையா? என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியபடி டிராப்ட்டை ஆபீசரிடமிருந்து வாங்கினாள்.

    டிராப்ட்டின் பின்புறம் இருந்த தன் கவிதைக்கு அதிர்ந்தாள்.

    சா... சாரி மேடம்...

    வேலையில் இருக்கிறச்சே ட்டியூட்டி கான்சியஸ் இருக்கணும். புரியுதா... போ, போ. வேற டிராப்ட் எழுதிக்கொண்டு வா. கவிதை எழுத உனக்கு வேற பேப்பரே கிடைக்கலையா?

    சாரிம்மா... என்றாள் கீதா.

    அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினாள். வராண்டாவில் நடந்து செக்ஷனுக்குள் நுழைந்த அவளுக்கு ராஜேஸ்வரியின் குரல் ‘வெல்கம்’ சொன்னது.

    ஆபீசர் ஏதோ அர்ச்சனை பண்ணின மாதிரி இருக்குது? என்ன விஷயம்? என்று கேட்டதற்கு கீதா அலட்சிய ‘ப்ச்’ ஒன்றினால் பதிலினாள்.

    கவிதைனு என்னவோ காதுல விழுந்துதே... கொடேன் கவிதையைப் பார்ப்போம்...

    கொடுத்தாள்.

    நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே கீதா! காதல் கீதல் எல்லாம் அளவா வச்சுக்க. அந்த ஆளு உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டான்னா சரி, அல்லது என்ன பண்ணுவ நீ?

    தயாளன் என்னைக் கல்யாணம் பண்ணிக்குவார் மேடம்! அதில எனக்குச் சந்தேகம் இல்ல. அவங்க வீட்டுல ஓ.கே. சொல்லிட்டாங்க. எங்கம்மாவும் தடை சொல்லல. எங்க கல்யாணத்துல பிரச்சனை இல்ல...

    அது சரி, நான் அதுக்காக சொல்லலைம்மா... இப்படித்தான் நான் வேலைக்குச் சேர்ந்த புதுசுல என் கோ ஒர்க்கர் ஒரு பெண்ணு, ஒரு பேங்க் கிளார்க் கூட சுத்திகிட்டு இருந்தா. அவங்க காதல் ஊரெல்லாம் தெரியும். அப்புறம் கடசில அவன் அவளைக் கட்டிக்கமாட்டேன்னு சொல்லிட்டான். பிறகு அவளுக்கு வந்த வரன் எல்லாம் இந்தப் பழைய சமாச்சாரத்தைக் கேள்விப்பட்டுப் போயிட்டாங்க... கடைசி வரை அவளுக்குக் கல்யாணமே ஆகலை...

    ராஜேஸ்வரி சொல்ல, கீதாவின் கண்களுக்கு ஒரு தீர்க்கம் வந்தது.

    அவரு தங்கைங்க ரெண்டுபேர் கல்யாண வயசுல இருக்காங்க. அவங்க கல்யாணம் முடிஞ்சதும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தயாளன் சொல்லியிருக்கிறார். பண்ணிக்குவார். - பண்ணிக்கலைனா பண்ண வைப்பேன், நான் மத்த சராசரி பெண்கள் மாதிரி நடந்துக்க மாட்டேன் மேடம்...

    அவளது குரலில் அக்னி தெரித்தது.

    ஆபீசர் அறையில் டெலிபோனின் ஆங்கில குடி, குடி... குடி, குடி...

    (டிரிங்... டிரிங்) வாலண்டரி ஏஜன்சி ஒன்றிற்கான பதிலை எழுதிக் கொண்டிருந்த கீதா நிமிர்ந்தாள்.

    ‘தயாளாக இருக்குமோ?’

    ஸ்டெனோ குமுதா டெலிபோனை எடுத்து ஹலோவிட்டு கீதா போன்... என்று கண்ணடித்தாள். கண்ணடித்துச் சிரித்தாள்.

    தயாளன் தான் என்பதைப் புரிந்து கொண்ட கீதா மகிழ்ச்சி ஊற்றடிக்க எழுந்தாள். போனை நெருங்கி ரிசீவர் எடுத்து ‘ஹலோ’ என்றாள்.

    கீத்து... தயாளன் பேசறேன். என்றான், குரலைப் புரிந்துகொண்ட தயாளன்.

    கீத்து தானம் தியேட்டர்ல ரெண்டு டிக்கெட் கிடைச்சது. நாளைக்கு ஈவினிங் ஷோ... சீட் நம்பர் ஜே-7, ஜே-8, பிரண்டுக்குக் கல்யாணம், முகூர்த்தத்துக்குப் போகணும்; வர லேட்டாகும்னு உங்க அம்மாகிட்ட பீலா அடிச்சுட்டு வந்திடு...

    முகூர்த்தத்துக்குப் போகணும்னு சொல்லிட்டு ராத்திரி பிந்திப் போறதா? நம்பமாட்டாங்க தயாள்...

    முகூர்த்தம் - ராத்திரி - நம்பிக்கை? - கீத்து, இதெல்லாம் சொல்லியா தெரியணும்...? சாந்தி முகூர்த்தம்னு சொல்லிச் சமாளிக்க வேண்டியது தானே...

    ச்சீய்...

    சரி, டிக்கெட்டை என்கிட்டேயிருந்து வாங்கிக்கிறியா... இன்னிக்குச் சாயங்காலம் டிக்கெட் வாங்கிக்க. நாளைக்கு என்னை எதிர்பார்க்காம, நீ ஆபிஸ்ல இருந்து நேராகவே தியேட்டருக்கு வந்திடலாம்...

    சரி, டிக்கெட்டை எங்கே வந்து வாங்கிக்கிறது தயாள்?

    நம்மோட வழக்கமான இடத்துல தான்...

    வ.உ.சி. பார்க்லயா...

    ஆமா... சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடு...

    ஓக்கே.

    பம்ப்ச். கிஸ் அடித்தான்,

    ஹக்... சிரித்துவிட்டு ரிசீவரை ‘டொக்’கினாள்.

    அவள் மனம் முழுவதும் தயாள் பரவினான்.

    தயாள்... தயாள்... என் இனிய தயாள்...

    அலுவலகங்களில் வேலை செய்து களைத்த பெண்கள் பாத்ரூம் சென்று முகம் கழுவி, முன் ஏற்பாடாய் தாளில் கொண்டு வந்த பவுடரைப் பூசிக் கொண்டு, எப்போது மணி ஐந்தரை ஆகும் என்று காத்துக் கொண்டிருக்கிற மாலை.

    அரை மணி நேர பர்மிஷனில் வெளியேறி எஸ். பி. ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடித்து நேரு ஸ்டேடியம் ஸ்டர்ப்பில் இறங்கினாள்.

    மெல்ல நடந்து வ.உ.சி. பார்க் வந்தாள்.

    வழக்கமாய் அவளும் தயாளனும் சந்தித்துக் கொள்ளும் இடமாகிய மிருகக் காட்சிசாலை வாசலோரம் காத்திருந்தாள்.

    சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஊடல் செய்துகொண்டு எதிர் எதிராக நின்றன. மணி ஆறு.

    தயாளன் வரவில்லை.

    பேல் பூரி வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த ஆசாமி ஒருவன், கீதாவை நேர்க் கோட்டில் பார்க்கக்கூடிய கோணத்தில் வண்டியை நிறுத்திக்கொண்டு மணியை டிங்டாங் செய்தான்.

    கீதா சங்கடமாய் நெளிந்தாள்.

    மணி ஆறு நாற்பது.

    பார்க்கின் நுழைவாயிலையே பார்த்துப் பார்த்து வெறுத்துப் போனாள்.

    ‘தயாள் ஏன் வரவில்லை? கடைசி நேரத்தில், புறப்படும் போது அந்தச் சிடுமூஞ்சி மானேஜர் ஏதாவது வேலை கொடுத்துத் தொலைத்து விட்டதோ?’

    சிகரெட் ஊதியபடி நடந்து சென்ற இரு இளைஞர்கள் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்,

    கீதா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் மெல்ல எழுந்து ‘பூட் ஹவுஸ்’ நோக்கி நடந்தாள்.

    கூட்டம் குறைய ஆரம்பித்திருந்தது.

    வானம் சூரியனின் மறைவுக்காகக் கறுப்பு அணிந்து கொண்டது. மணி ஆறு ஐம்பத்தாறு.

    ‘ஒரு வேளை ஏதாவது வேலை வந்து ஆபீசிலேயே இருப்பாரோ... போன் செய்து பார்த்தால் என்ன?’ யோசித்தாள்.

    அந்த யோசனையை அமலாக்கிச் செயல்படுத்தினாள்.

    நேரு அரங்கம் தாண்டி ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தை நாடி போனாள். எதிர் முனையை வாட்ச்மேன் எடுத்தார்.

    ஹலோ... யார் பேசறது...?

    மிஸ்டர் தயாளன் இருக்காரா...?

    தயாளன் சார் சாயங்காலம் மூணு மூணரைக்கே போயிட்டாரம்மா... அவரு பிரண்ட் யாரோ வந்தாங்கன்னு பெர்மிசன் போட்டுட்டுப் போனாரும்மா.

    கீதாவுக்கு எரிச்சல் வந்தது. மூன்று மணிக்கே பிரண்ட்கூட ஓடுகிறவர், ஒரு போனடித்து, ‘கீத்து... நான் வர முடியாது; அவசரமா பிரண்ட்கூட ஓர் இடத்துக்குப் போக வேண்டியிருக்குன்னு’ சொல்லித் தொலைச்சா என்ன?

    ஹலோ... நீங்க யாருங்க... தயாளன் சார் கிட்ட ஏதும் சொல்லணுமா?

    வேணாங்க.... நான் அவரைப் பார்த்துக்கறேன். ரொம்ப தேங்க்ஸ், என்று ரிசீவரை வைத்தாள்.

    தயாளனைப் பற்றி நினைத்தாள்.

    தான் அவனைக் காதலிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் ‘கீத்து கீத்து’ என்று அவன் சுற்றிச்சுற்றி வந்ததற்கும் இப்போது கீத்து என்று பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறதோ என்று கொஞ்சம் சந்தேகப்பட்டாள். சந்திப்பிற்காக எங்காவது வரச்சொல்லிவிட்டு, தன்னால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் முன்பெல்லாம் எத்தனை தடவை போன் செய்து சொல்லுவான்! எத்தனை ‘சாரி கீத்து’ சொல்லுவான்!

    ஆனால் –

    இப்போது. -

    அவளுக்குள் ஆயிரம் ‘?’கள் தோன்றி இதயத்தில் கொக்கி போட்டு இழுத்தன.

    இப்போது அந்த அளவுக்கு என் மீது தயாளனிடம் அக்கறை இல்லையே... ஆபீசில் ராஜேஸ்வரி சொன்னது போல தயாளன் வெறுப்படைந்து என் விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறாரோ... ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது உண்மைதானோ?

    எல்லாரும் வந்து போகின்ற பார்க்கில் இத்தனை நேரம் காத்திருக்க வைத்து விட்டாரே... நாளைக்குக் காலையிலேயே தயாளனுக்குப் போன் செய்து ‘டோஸ்’ விட வேண்டும்...

    மனதுக்குள் கொந்தளித்தாள். வீட்டிற்குப் பஸ் ஏறினாள்.

    மறு நாள் -

    ஆபிஸ் வந்த கீதா, தயாளனை எப்படி எல்லாம் திட்டலாம் எனக் கற்பனை செய்து பார்த்தாள்

    9.50 க்கு போனை அணுகி டயல் செய்தாள்.

    மிஸ்டர் தயாளன் வந்திட்டாரா?

    ஏனுங்க உங்களுக்கு விஷயம் தெரியாதா?

    விஷயம்...? என்ன விஷயம்?

    வந்து... நீங்க யாருங்க...?

    அவரோட ரிலேட்டிவ்...

    நேத்து சாயங்காலம் கூட போன் பண்ணினீங்களே... நீங்கதானே அது?

    ஆமா... ஏன் என்ன விஷயம்?

    நீங்க அவரு வீட்டுக்குப் போகலையா?

    போகலை... என்னங்க சுத்தி வளைச்சுப் பேசறீங்க? தயாளன் வரலையா?

    அவரு இனிமே வரமாட்டாரும்மா... எதிர்முனை கம்மியது.

    வரமாட்டாரா? ஏன்? பதறினாள்.

    வந்து... தயாளன் சார் செத்துப் போயிட்டாரு... ஆபீஸ்ல எல்லாரும் மாலை வாங்கிகிட்டு அவரு வீட்டுக்குப் போயிருக்காங்க...

    கீதாவின் மூளையின் பத்துகோடி நியூட்ரான்களையும் அதிர்ச்சி அறைந்தது. அவன் பேசப் பேச அவள் துகள் துகளாய் நொறுங்கிப் போனாள்.

    அவளது நெஞ்சுக்குள் இடி, மின்னல், பூகம்பம் அத்தனையும் ஒரே சமயத்தில் வெடித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க முடியாமல் கீதா அப்படியே உறைந்து போனாள்.

    அவள் உடல் நடுங்கியது.

    எ... எ... என்ன சொல்றீங்க?

    தயாளன் சார் இறந்துட்டாங்க... ஹார்ட் அட்டாக்... காலைல தான் தகவல் தெரிஞ்சுது...

    எதிர் முனை சொல்லிக்கொண்டிருக்க அவள் மூளையில் எதுவும் உறைக்கவில்லை.

    இதயம் ‘தடார் படார்’ என்று எகிறியடிக்க ஆரம்பித்தது.

    கண்கள் பார்வைக்குக் கறுப்புப் பெயிண்ட் அடித்துக் கொண்டது. கீதாவின் உடல் தொய்ந்தது. கால்களுக்குக் கீழே பூமி நழுவியது. கையிலிருந்த ரிசீவர் பிடி தளர்ந்து தொங்கியது.

    கீதா அப்படியே சரிந்தாள். அவளது நாற்பத்து இரண்டு கிலோ உடம்பு கீழே படார் என்று விழ -

    அந்தச் சத்தத்தால் கவரப்பட்டுக் குமுதா பதறிக் கொண்டு ஓடிவந்தாள்.

    கீதா... கீதா...

    ஆபீசின் மகளிர் எல்லாரும் ஓடிவந்து கீதாவை எழுப்பினார்கள். கீதாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

    கீதா விழித்தாள். மலங்க மலங்கப் பார்த்தாள்.

    தயாள்... தயாள்... என்றவள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

    கீதா... தயாளுக்கு என்ன இப்போ? உன்னை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்ட்டாரா?

    இ... இல்ல மேடம், தயாள்... தயாள் செ... செத்துப் போயிட்டாராம்...

    ச்சே... அப்படியெல்லாம் இ... இருக்காது. யார் சொன்னது?

    அவங்க ஆபீஸ்ல...

    யாராவது சும்மா கலாட்டா பண்றதுக்காக அப்படிச் சொல்லியிருப்பாங்க... அதுக்காக இப்படியா மயங்கி விழுந்து, அழுது ஆர்ப்பாட்டம் பண்றது?

    இல்லைங்க... எனக்குப் பயமா இருக்கு... தயாள்... தயாளுக்கு என்னவோ ஆயிட்டுது. தயாள்... என் தயாள்...

    கீதா மீண்டும் பதற ஆரம்பித்தாள்.

    கீதாவை எல்லாரும் சேர்ந்து ஆசுவாசப்படுத்தினார்கள் : நாற்காலியில் உட்கார வைத்தார்கள்.

    கீதா... இரு. நான் தயாளன் ஆபிசுக்குப் போன் பண்ணிக் கேட்கிறேன்... தயாளன் ஆபீஸ் போன் நம்பர் என்ன?

    அந்த போன் நம்பரைக் கீதா சொன்னாள்.

    பத்மா டயல் செய்தாள்.

    எதிர் முனை எடுக்கப்பட்டதும் விசாரித்தாள்.

    ஹலோ, தயாளன் இருக்காரா?

    "தயாளன் இறந்துட்டாரும்மா... இப்பதான் ஆபீஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1