Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Ponnu Vendaam
Antha Ponnu Vendaam
Antha Ponnu Vendaam
Ebook149 pages57 minutes

Antha Ponnu Vendaam

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Short Stories Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466640
Antha Ponnu Vendaam

Read more from Jdr

Related to Antha Ponnu Vendaam

Related ebooks

Reviews for Antha Ponnu Vendaam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Ponnu Vendaam - JDR

    13

    காகிதக் கோட்டை

    நடந்த சம்பவத்தைத் தழுவியது :

    வேணி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளது உடல் படுக்கையில் அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தது. நெஞ்சு முழுவதும் ஆர்வம் கலந்த எதிர் பார்ப்பு கம்பளிப் பூச்சியாய் ஊர்ந்து வந்தது.

    வேணி நாளைக்கு மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு எழுதப் போகிறாள். சின்ன வயதிலேயே விதையாக நெஞ்சில் விழுந்து, இன்று ராட்சச விருட்சமாய்க் கிளை பரப்பி நிற்கின்ற அவளது லட்சியக் கனவு நனவாகப் போகின்ற முதல் படி அது.

    நுழைவுத் தேர்வுக்கு வேணி முழுத் தயார் நிலையில் இருந்தாள்.

    பாடங்களைக் கரைத்துக் குடித்தாகி விட்டது. லைப்ரரியில் சென்று தலையணை தடிமனுக்கு புத்தகங்களைப் புரட்டிப் படித்தாகி விட்டது.

    டி.என்.ஏ.யின் வடிவத்தைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானியின் பெயர் என்ன என்பது போன்ற நொய்யல் கேள்விகளுக்கு விடை தெரிந்து கொண்டாகி விட்டது.

    என்றாலும் உள்ளம் முழுவதும் கம்பளி ஊரல்! இருபது வருட லட்சியக் கனவிற்கு அவளைத் தூக்கிச் செல்லப் போகின்ற ராக்கெட் அல்லவா இந்த நுழைவுத் தேர்வு!

    அரசியல்வாதிக்குப் பதவி மேல் இருக்கின்ற மோகம் போல வேணிக்கு டாக்டர் தொழில் மேல் அப்படி ஒரு பாசப் பிடிப்பு.

    சின்ன வயதில் அவளது தோழிகள் எல்லாம் செப்புச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு, சோறு சமைத்து விளையாட, வேணி மட்டும் அண்ணனின் சட்டையைக் கோட்டாக அணிந்து கொண்டு, ஓர் ஈர்க்குச்சியை எடுத்துக் கொண்டு ஊசி போட அலைவாள்.

    கற்களைத் தோழிகளுக்கு மாத்திரையாகத் தருவாள்.

    கையைப் பிடித்து நாடி பார்ப்பாள். கயிற்றை ஸ்டெதாஸ்கோப்பாக்கி இதயத் துடிப்பை அறிய முனைவாள்.

    இந்த டாக்டர் தொழில் மோகம் வேணியின் மனதைப் பிடித்துப் பேயாட்டம் ஆட்டுவதற்கு ஒரு பின்னணி விவகாரமும் உண்டு.

    வேணியின் அப்பா ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்தார். வேணிக்கு நான்கு வயதாகும் போது, ஒரு நாள், மிஸ்டர் எமன் அவரிடம் வந்து அவரது நெஞ்சில் நின்று ‘ஹலோ’ சொல்ல, அவர் நெஞ்சு வலிக்கிறதே என்று துடித்தார். மயங்கி விழுந்தார்.

    குய்யோ, முறையோ என்று அம்மா கூப்பாடு போட, அண்ணன் அவசரமாய் டாக்டர் வீட்டிற்கு விரைய-

    வீடு களேபரமானது. விவரம் புரியாத வேணியும், அம்மா அழுவதைப் பார்த்து அவள் அருகில் இருந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

    டாக்டர் தோரணையாய் வந்தார். அவரது காரை ஓட்ட ஓர் ஆள் கூடவே பெட்டியைத் தூக்கி வர, இன்னோர் ஆள் என்று ஏக பந்தா!

    டாக்டரைக் கண்ட அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

    டாக்டர், அவரை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்... எனக்கு தாலிப் பிச்சை கொடுங்க...

    டாக்டர் அப்பாவை நெருங்கினார், கை பிடித்துப் பார்த்தார். ஸ்டெதாஸ்கோப்பால் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தார்.

    தன் பெட்டியைத் திறந்து ஊசியை எடுத்து, மருந்து இழுத்து, அப்பாவின் இடப் புஜத்தில் குத்தினார். சிறிது நேரம் கழித்து அப்பா கண்விழித்தார். அப்புறம் டாக்டருக்கு ஏக தடபுடலான கவனிப்பு.

    *டாக்டர்! நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி... சரியான நேரத்துல வந்து அவரோட உயிரைக் காப்பாத்திட்டீங்க ரொம்ப நன்றி சார்..." அம்மா டாக்டரின் காலில் விழாத குறையாய் நன்றி கூறினாள்.

    அண்ணன் ஏதோ ஒரு பெரிய மகாமனிதரைக் கவனிப்பது போல டாக்டரைக் கவனித்தான்.

    அப்பா மயங்கி விழுந்ததும் ஏற்பட்ட இறுக்கமான நிலை மாறி சகஜத்திற்கு வந்தது.

    வேணிக்கு அந்தப் பிஞ்சு வயதில் இவையெல்லாம் பிரமிப்பாகப் பதிந்து போயின.

    டாக்டர் எவ்வளவு பெரிய மனிதர்? அவருக்குக் கிடைக்கின்ற மதிப்பும், மரியாதையும் எவ்வளவு? சாமியிடம் போக இருந்த அப்பாவை, திரும்ப நமக்கே கொண்டு வந்து தந்துவிட்டாரே!

    டாக்டர் தொழில் மீது ஒரு தெய்வீக பக்தி தோன்றியது.

    நாமும் டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பிஞ்சு மனத்தில் விழுந்து வளர்ந்து படர்ந்தது.

    இந்த எண்ணம் ரத்தத்தோடு ஊறிப் போய் விட்டது. அதுவே அவளது பேச்சில், நடவடிக்கைகளில் மற்றும் விளையாட்டில் வெளிப்பட்டது.

    டாக்டர் கனவுகளோடு வேணி இருந்தாள்... டாக்டர் கனவுகளோடு வேணி வளர்ந்தாள். டாக்டர் கனவுகளோடு வேணி வாழ்ந்தாள்.

    இதோ--நாளை அவளது லட்சியப் பயணத்திற்கான முதல் படிக்கட்டு.

    பல உணர்ச்சிகள் மனத்திற்குள் பொங்கிச் சிதறின பரீட்சை எப்படி இருக்கும்? என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? எப்படி எழுதப் போகிறேன்?

    படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள் வேணி.

    ஆயிற்று. நுழைவுத் தேர்வு எழுதியாயிற்று. ரொம்ப எளிதான கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன.

    நிறையப் படித்து நன்கு தயார் செய்திருந்ததால், ஓரளவு நன்றாகவே எழுதி விட்டாள்.

    எக்ஸாம் நல்லா பண்ணிருக்கேன் அண்ணா... நிச்சயம் ஸீட் கிடைக்கும்... வேணி உற்சாகமாய்ச் சொன்னாள்.

    அம்மா, அப்பா, அண்ணன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    நாள்கள் நகர்ந்தன. அது ஒரு திங்கட்கிழமையின் இரவு. வேணி படுத்திருந்தாள். பக்கத்தில் தங்கைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்

    ஹாலில் அம்மா, அண்ணன், அப்பா மூவரும் உட்கார்ந்திருந்தார்கள். படுத்ததுமே தூங்கிப் போகும் வேணிக்கு அன்று தூக்கம் பிடிக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியாகிவிடும். அவள் நன்றாகத் தேர்வு எழுதியிருக்கிறாள். நிச்சயம் வெற்றி பெறுவாள். அப்புறம்- வேணி ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவள் ஒரு டாக்டர், நினைக்கும்போதே, கழுகு உயரத்திற்குப் பறக்கும் புறாவைப்போல் உணர்ந்தாள்.

    வேணி டாக்டராகப் போகிறாள் - வைத்தியம் செய்யப் போகிறாள், உயிர்களைக் காப்பாற்றப் போகிறாள்.

    டாக்டரம்மா. என் புருசனுக்கு நீங்கதான் உயிர்ப் பிச்சை குடுத்தீங்க. டாக்டரம்மா, நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி.

    டாக்டர், சரியான நேரத்துல வந்து சிகிச்சை கொடுத்திங்க... நீங்க மட்டும் வரலேன்னா என் பிள்ளை செத்துப் போயிருக்கும். தெய்வமா வந்து காப்பாத்திட்டிங்க வேணியின் கனவுகள் விரிந்தன. ஹாலில் அம்மா முதலில் பேசினாள்.

    என்னங்க, வேணிக்கு டாக்டர் கோர்ஸ்ல இடம் கிடைச்சிட்டுதுனா, எப்படியும் ஒரு பத்தாயிரம் ரூபா கையிலே வேணுமே... அவளது குரலில் கவலை ஓர் இழையோட்டமாய் ஓடியது.

    படுத்துத் தூக்கம் பிடிக்காமல் கற்பனையில் மிதந்து கொண்டிருந்த வேணியின் காதுகளிலும் இந்த வார்த்தை விழுந்தது.

    திடுக்...

    என்ன இது. பணத்தேவை பற்றிப் பேசுகிறார்கள். ஒரு வேளை... ஒரு வேளை... பணம் கிடைக்காவிட்டால் - மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மாட்டார்களோ?

    நினைத்தபோதே ‘கப்’ என்று எதுவோ தொண்டையை அடைத்தது.

    அடுத்து அண்ணன் பேசினான்.

    எங்க ஆபீஸ்ல ஒரு லோன் போட்டிருக்கேன். அஞ்சாயிரம் வரும். ஏற்கெனவே என் கணக்குல மூவாயிரம் ரூபாய் போட்டு வச்சிருக்கேன். அப்பா ரெண்டாயிரம் குடுத்தா சரியாப் போயிடும்.

    வேணியின் நுரையீரல் நிம்மதியாக ஒரு பெருமூச்சை சுவாசித்தது.

    அண்ணன் என்றால் அண்ணன்தான்.

    தன் குடும்பத்தின் நிதிநிலைமை வேணி அறிந்ததுதான். வேணியின் அப்பா குமாஸ்தாவாக இருந்தவர். இப்போது தலைமைக் குமாஸ்தாவாகி நாலு இலக்க சம்பளம் வாங்குபவர்.

    அம்மா தொடக்கப்பள்ளி ஆசிரியை, அண்ணன் ஒரு தனியார் கம்பெனியில் ரெப்ரசென்டேட்டிவாகப் பணி புரிகிறான்.

    அம்மா, அப்பா, அண்ணன், வேணி தவிர தங்கைகள் வாணி, தாரணி என்று ஆறுபேர் கொண்ட குடும்பம் அது.

    வயதுக்கு வந்த இரண்டு பெண்கள் இருப்பதால் வரவுக்கும், செலவுக்கும் சரியாய் இருந்தது.

    அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று வேணி ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பணம் பிரச்சினை இல்லடா, என்னோட பி.எஃப். பணத்துலகூட ஓர் இருபதாயிரம் எடுக்கலாம். ஆனா...

    அப்பா சொன்ன ‘ஆனால்’ அவளைக் கலக்கியது.

    என்னப்பா... அண்ணன் கேட்டான்.

    உங்க தஞ்சாவூர் மாமா லெட்டர் போட்டிருக்கார். வேணியை அவரோட மூத்த பையன் ரகுவுக்கு கட்டலாம்னு ஓர் எண்ணம்.

    அவ இன்னும் படிக்கணும்கிறாளேப்பா...

    அதைத்தான் நானும் யோசிக்கிறேன்... இப்பவே இவளுக்கு இருபத்தோரு வயசாச்சு. வாணிக்கு பதினெட்டு. இவ இன்னும் ஓர் அஞ்சாறு வருஷம் படிச்சா இருபத்தேழு வயசாயிடும். வாணிக்கும் இருபத்து நாலு வயசு வந்திடும். இவ கல்யாணத்தை முடிச்சு நாம ஒரு வழியா செட்டில் ஆகி, வாணி கல்யாணத்தை யோசிக்கும்போது, வாணி அரைக் கிழவியாயிடுவா. அவளுக்கு அப்புறம் தாரணி இருக்கிறா.

    மவுனம்.

    நான் என்ன யோசிக்கிறேன்னா, இந்த வருஷமோ அடுத்த வருஷமோ ரகுவுக்கும் வேணிக்கும் ஒரு முடிச்சைப் போட்டு வச்சிடலாமேனு நினைக்கிறேன்.

    படிப்பு?

    "படிப்பு என்னடா படிப்பு.

    Enjoying the preview?
    Page 1 of 1