Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

NIl Sol Kol
NIl Sol Kol
NIl Sol Kol
Ebook65 pages32 minutes

NIl Sol Kol

By JDR

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466534
NIl Sol Kol

Read more from Jdr

Related to NIl Sol Kol

Related ebooks

Related categories

Reviews for NIl Sol Kol

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    NIl Sol Kol - JDR

    14

    1

    இந்த நாவலை நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கும்முன் இன்விஸிபிள் தியேட்டர் (Invisible Theatre) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    இன்விஸிபிள் தியேட்டர் என்பது மேலைநாடுகளில் தற்போது பரவி வரும் ஒரு கலை உத்தி. ஏதோ அறிவுஜீவிகள் சமாச்சாரம் போலத் தெரிகிறதா? இல்லை. இது ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம்தான்.

    பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை நான் விவரித்தால், நீங்கள் எளிதாக இந்த உத்தி பற்றி புரிந்துகொள்வீர்கள்.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ். ஒரு தத்துவ பேராசிரியரின் வீட்டில் கூடியிருந்த அந்த கலாச்சார வளர்ச்சிக் கூட்டத்தில் மொத்தம் எட்டுபேர் இருந்தார்கள்.

    எட்டு பேருமே உயர்பதவிகளில் இருப்பவர்கள். கலாச்சாரம், மனிதநேயம், உலகமக்களிடையே நல்லுறவு போன்ற விஷயங்களில் அதி ஆர்வம் கொண்டவர்கள்.

    இந்த எட்டு பேரில் ஒருவர் நீக்ரோ. தென்ஆப்ரிக்காவிலிருந்து அகதியாக வந்து பிரான்ஸில் புகலிடம் பெற்றவர். மற்றவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அவர்கள் இந்த இன்விஸிபிள் தியேட்டர் உத்தியை பாரீஸ் நகரின் ஜனசந்தடிமிக்க ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் செயலாக்க தீர்மானித்தார்கள்.

    எட்டுபேரும் சட்டை பட்டனில் பொருத்தப்படக்கூடிய மைக்ரோ வீடியோ காமெராக்களையும், ‘மைக்களையும் பொருத்திக் கொண்டார்கள். அந்த குறிப்பிட்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் உள்ள மிகப்பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் வந்தார்கள். அங்கு ஓரளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது.

    எட்டுபேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் போல அந்த கூட்டத்தினுள் ஊடுருவினார்கள்.

    நீக்ரோ ஆசாமி உணவுப்பொருட்கள் இருக்கும் பகுதிநோக்கிச் சென்றான். இரண்டு பெரிய ரொட்டித் துண்டங்களையும், ஒரு பாக்கெட் பாலையும் எடுத்துக்கொண்டு வந்தான். பணம் செலுத்தவேண்டிய இடத்திற்கு வந்ததும், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், மேடம், நான் தென் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து அகதியாக வந்து பிரான்ஸ் நாட்டில் புகலிடம் பெற்றவன். உங்களை, உங்கள் தேசத்தை, உங்கள் சமுதாயத்தை நாடி வந்த என் போன்றோரை பராமரிக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா? என்று கேட்டான்.

    அந்த பணிப்பெண்ணும் நிச்சயமாக என்றாள்.

    உடனே அவன், அடைக்கலம் நாடி வந்த என்னை உங்கள் நாடு ஏற்றுக் கொண்டாலும் கூட, எனக்கு போதுமான உணவு கிடைக்க வழிசெய்யப்படவில்லை. நான் பட்டினியால் சாகிறேன். என்னிடம் பணமும் கிடையாது. எனவே உங்களை நம்பி வந்துவிட்ட அகதியான எனக்கு இந்த ரொட்டியையும் பாலையும் நீங்கள் இலவசமாகக் கொடுக்க வேண்டும்... என்று கோர, அவள் திகைத்துவிட்டாள்.

    வினாடி நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள், என்ன முட்டாள்தனமாக பேசுகிறாய்? நான் எப்படி இதை இலவசமாகத் தரமுடியும்? பணம் கொடுத்துவிட்டு எடுத்துப்போ... என கத்தினாள்.

    அந்த நீக்ரோவோ, அகதியாக வந்த என்னை பராமரிக்க வேண்டியது உன் கடமை என்பதை இப்போதுதானே ஒப்புக்கொண்டாய்? நான் வாசனை பொருளையோ, சோப்பையோ, ஷாம்புவையோ கேட்கவில்லையே... அடிப்படை தேவையான உணவுக்காக ரொட்டியும் பாலும்தானே கேட்கிறேன்? என வாதிட்டான்.

    இதற்குள் அவர்களது உரத்த பேச்சைக் கேட்டு அங்கு ஒரு சின்ன கும்பல் கூடியது. கலாச்சார இயக்கத்தைச் சேர்ந்த மற்ற ஏழு பேரும்கூட அங்கே நெருங்கி வந்தார்கள்.

    நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் வீடியோ படமாக பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

    கலாச்சார இயக்கத்தைச் சேர்ந்த ஏழுபேரும் இரு பிரிவாக பிரிந்துகொண்டு விவாதத்தை துவக்கினர். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம்

    Enjoying the preview?
    Page 1 of 1