Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha 3 Viralgal
Antha 3 Viralgal
Antha 3 Viralgal
Ebook111 pages41 minutes

Antha 3 Viralgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Antha 3 Viralgal

Read more from Devibala

Related to Antha 3 Viralgal

Related ebooks

Reviews for Antha 3 Viralgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha 3 Viralgal - Devibala

    1

    புல்லட்டின் தொண்டைக் குழியில் சாவியை செருகிவிட்டு நேரம் பார்த்தான் திவாகர்.

    ஒன்பது ஐம்பத் தேழு.

    கொடுத்த சாவியை மறுபடியும் பூட்டி எடுத்துக்கொண்டு, நிறுத்திய வண்டியை விட்டு விலகி, சாலையோரமாக மெல்ல நடக்கத் தொடங்கினான்.

    நுரையீரல்கள் ‘பசிபசி’ என்று அலற,

    ஜர்கின் பாக்கெட்டை தட்டிப் பார்த்தான். சிகரெட் பாக்கெட் இல்லை.

    எதிர்ப்பக்கம் கவனித்தபோது ஹேண்டிகாப்டு பப்ளிக் டெலிபோனும், அதன் பக்கத்தில் பெட்டிக்கடையும் இருந்தது. காரும், பஸ்களும் அவசர கதியில் சீறிக்கொண்டிருக்க, அடம் பிடித்து, அடி வாங்கிய குழந்தைபோல அலறிக்கொண்டு சந்தில் நுழைந்து காணாமல் போகும் ஆட்டோக்கள்.

    மஞ்சள் கோட்டை ‘எனக்கு அவசரமே இல்லை’ என்பது போல கடந்து,

    பெட்டிக் கடையை அணுகி, சார்மினார் இருக்கா? (ஹைதராபாத்ல இருக்குனு சொல்லிடாதேப்பா!)

    இல்லீங்க! வில்ஸ் ஃபில்டர் தரவா?

    கறீம் பீடி இருக்கா?

    அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான். ஃபில்டர் சிகரெட்டிலி ருந்து பீடிக்கு இறங்குகிறானே என்ற பார்வை.

    இருபது ரூபாய்த் தாளை நீட்டினான்.

    சில்லறை இல்லீங்க!

    ஒரு சாத்துக்குடி ஜுஸ் போடு. இப்ப சில்லறை இருக்கா?

    அவன் சாத்துக்குடியை குறுக்கே கத்தி வைத்து சமமாகப் பிளந்து, அந்த மின்சார பிழியும் சாதனத்தில் (அதற்குப் பெயர் என்ன?) வைத்து, பிளக்கை செருகி அழுத்த, ‘பய்ங்ங்’ என்று ஒரு வினோத சப்தம் வந்ததை ரசனையோடு பார்த்தான்.

    அதை வடிகட்டி, ஐஸ் போட்டு, குவளையில் தடபுட’ வென கலக்கி ஸ்ட்ரா போட்டு நேர்த்தியாக நீட்டினான்.

    குடித்து முடித்து, கறீம் பீடியை பற்ற வைத்துக்கொண்டு நாற்றம் (சுத்தத் தமிழில் மணம் எனக் கொள்க) கமழ, டெலிபோனை அணுகினான்.

    கால் சூம்பிப் போன அந்தப் பெண் ஊன்று கோல்களை பக்கச் சுவரில் சாய்த்து வைத்திருந்தாள்.

    நம்பர் சொல்லுங்க!

    நானே டயல் பண்ணிக்கறேன், டெலிபோனை இந்தப் பக்கமா நகர்த்துங்க!

    அவள் நகர்த்தியதும்,

    டயல் செய்தான்.

    எதிர்முனை உயிர்த்ததும்,

    ஹலோ, நாந்தான்... அப்பாடீ, நீதானே? வேற யாராவது எடுத்து, பேரைச் சொல்ல வேண்டி வருமோனு கவலைப்பட்டேன்!

    ...

    இன்னிக்கு முடிச்சிரட்டுமா? ப்ரோக்ராம்ல மாற்றம் எதுவும் உண்டா? ஓ... கே. அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன். ‘பலானது’ ரெடியா?

    ...

    சரி, எத்தனை மணிக்கு? இப்பவே வா?

    ...

    சரி, சரி, வேலை முடிஞ்சதும், நான் பறந்துருவேன். மத்த விஷயங்கள், பங்கீடுகள் எல்லாம் ஏற்கனவே நாம திட்டம் போட்டு வச்ச இடத்துல தான். எ... என்னது? ஆமாமா... மூணு நாளைக்கு அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன். ஆமா... விசா கூட ரெடி... பறந்துர வேண்டியதுதான். வச்சிரட்டுமா?

    ரிஸீவரை சாத்திவிட்டு, டெலிபோனை நகர்த்திய அவன், ஐம்பது காசு நாணயத்தை எடுத்து நீட்டும் போது விரல்களைப் பார்த்தாள் அந்தப் பெண்.

    அவன்-திவாகர்-அதை கவனிக்கவில்லை. விலகி, மஞ்சள் கோட்டைக் கடந்து எதிர்சாலைக்குப் போகும் வரை பார்த்தாள் அவள்.

    ‘வேலை முடிஞ்சதும்...’

    ‘பங்கீடுகள்...’

    ‘மூணு நாளைக்கு நகர மாட்டேன்!’

    ‘விசா ரெடி! பறந்துர வேண்டியதுதான்!’

    துண்டு துண்டான வார்த்தைகளை ஒன்று சேர்த்தபோது, ‘பகீ’ ரென்றது. விபரீதமான அர்த்தங்கள் ஏராளமாக மனதின் மேல் மட்டத்தில் மிதந்தன.

    ஓ... ஒரு குற்றம் நிகழப் போகிறது... எங்கே என்று தெரியவில்லை. ஏதோ ஒரு சமூகக் குற்றம் சகுதியில் நடக்கப் போகிறது. அதன் நாயகன் இவன் தான்!’

    ‘தடுத்து விட வேண்டும்!’

    ‘எப்படி... எப்படீ?’

    அவன் எதிர் சாரியில் நடந்து, புல்லட்டைத் தொட்டு, சாவியை மாட்டி, ஸ்டாண்டை விடுவித்தான்.

    இவளைப் பார்த்துக்கொண்டு வண்டி நின்றதால், அதன் நம்பர் சற்று பக்கவாட்டில் விலகி, தெளிவாகத் தெரியாமல் இருந்தது.

    அவனது லேசான உதையில், ரோஷப்பட்டு அது சீற, ‘சட்’டென திரும்பி ஒரு ‘U’ டர்ன் அடித்து தன் பின் பக்கத்தைக் காட்டியதும், அவசரமாகப் பார்த்தாள்.

    TM... 72 என்று ஏதோ தெளிவில்லாமல் தெரிய, புல்லட் தூரத்தில் புள்ளியானது.

    முழு எண்களும் தெரியவில்லை. இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? இந்தக் குற்றத்தைத் தடுப்பது சாத்தியமா?

    அவசரமாக எண்களைச் சுழற்றினாள். டயல்டோன் வரவில்லை.

    மறுபடியும் முயன்றாள். இருக்கும் ஓசையும் செத்து, சுத்தமாக டெலிபோன் ஊடல் செய்ய,

    ஆத்திரமாக ரிஸீவரை சாத்தினாள் அடித்து.

    ‘இந்த ஊனத்தோடு எங்கே போவது? நமக்கென்ன என்று இருந்துவிடலாமா? அது குற்றம் தானா? அல்லது என் பிரமையா?’

    டெலிபோன் பண்ணிக்கலாமா?

    நிமிர்ந்து பார்த்தாள்.

    ‘வழக்கமாக போன் செய்ய வரும் ஆள். பேர் கூட சந்திர சேகரனோ என்னவோ?’

    ‘இவரிடம் சொல்லிப் பார்த்தால்?’

    சார் டெலிபோன் டெட்!

    இந்த ஏரியால பிரச்சனையா? இதோட நாலு கடைகள் கேட்டாச்சு நான்! அவர் விலக,

    சார் ஒரு நிமிஷம்!

    என்னம்மா?

    ஒரு உதவி செய்ய முடியுமா உங்களால?

    சொல்லுங்க!

    சொன்னாள்.

    தான் கேட்டது, பார்த்தது, தன் சந்தேகம் சகலத்தையும் சொன்னாள்.

    தயவு பண்ணி நீங்களாவது இதுக்கு ஆக்ஷன் எடுங்க சார். போலீஸுக்குப் புகார் கொடுங்க உடனே.

    தகவல்கள் மொட்டையா இருக்கேம்மா... இத வச்சு எப்படி இறங்கறது? சரி, நான் முயற்சி பண்றேன்!

    அவளிடம் சொல்லி விட்டு, தன் லூனாவில் உட்கார்ந்த அந்த சந்திரசேகரன் போலீஸ் ஸ்டேஷன் பக்கமாக செலுத்தினார். ஸ்டேஷன் வாசலில் நிறுத்தி விட்டு, உள்ளே எட்டிப் பார்த்தார்.

    என்ன சார்? விரட்டுவது போலக் கேட்டான் ஒரு காக்கிச் சட்டை (கான்ஸ்டபிளோ?).

    இன்ஸ்பெக்டர் இல்லையா?

    நீங்க யாரு?

    அது இப்ப முக்கியமில்லை. இன்ஸ்பெக்டர்கிட்டே ஒரு விஷயமா பேசணும்!

    என்னா, தப்பு தண்டா பண்ணிட்டு, மால் வெட்ட வந்துட்டியா கண்ணு... சும்மா நம்ம கையில சொல்லு!

    ஒரு தப்பு நடக்கப் போவுது... அதை உடனே தடுத்தாகணும்! இன்ஸ்பெக்டர் எங்கே?

    காலைல போயிட்டாரு. என்னண்டை சொல்லு!

    சொன்னார்.

    "அட போய்யா. பேஜார் புடிச்ச ஆளாகீறியே. குத்தம் நடக்கப் போவுதுனு தண்டோரா போட்டுட்டு தெருத்தெருவா போவச் சொல்றியா? குடிச்சிட்டு வந்துட்டியா

    Enjoying the preview?
    Page 1 of 1