Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பதில் தா பவித்ரா..!
பதில் தா பவித்ரா..!
பதில் தா பவித்ரா..!
Ebook78 pages27 minutes

பதில் தா பவித்ரா..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அங்கே பாருடா குரு!" கூச்சல் போட்டான் தியாகு.
 விரல் காட்டிய திசையில் 'TOLET' தொங்கியது.
 "ப்ஸ, இது மாதிரி ஆயிரம் எடம் பார்த்தாச்சு. என்னால நடக்க முடியலை. விட்ரா?"
 "சலிச்சுக்கிட்டா எப்படி மச்சி? வீடு ஓணும்னா தேடித்தான் ஆவோணும்!"
 வாசல் கதவை இருமுறை ஓசையெழுப்ப –
 கதவு திறந்து ஒரு மின்னல் ஜனித்தது.
 மின்னலுக்கு வயது அதிகம் போனால், இருபதிருக்கலாம். சற்றே உயர்த்திக் கட்டிய பாலியெஸ்டர் பாவாடை, கணுக்காலை விலக்கி மேலே நின்றது மெல்ல சிணுங்கிய கொலுசு, பளீரென்று ஒளி வீச முயன்று, அவளோடு போட்டி போட முடியாமல் தோற்றுப் போனது.
 பார்வையை உயர்த்திக்கொண்டே வந்தான் குருமூர்த்தி. இடுப்பில் பாவாடை நாடா இறுக்கி, இளஞ்சிவப்பு ரேகை தோன்றியிருக்க--
 அதற்கு மேல்...
 (கழுத்து வரை, வாசகர்களுக்கு ஒரு போட்டி யூகிப்பவர்கள் அடுத்த இதழில் விடை எழுதினால், அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கலாம்)
 கண் இமைகளை படபடவென அடித்தபடி, அவர்களைப் பார்த்த அவள்.
 "அம்மா வீட்ல இல்லை!"
 அந்த 'வீட்ல' என்ற வார்த்தை கொஞ்சம் கன்னடம் கலந்து சரோஜாதேவி பேசுவது போலிருந்ததுஎங்களுக்கு அம்மா வேண்டாம். வீடுதான் வேணும்"
 தன்னைமீறி குரு சொல்லிவிட –
 நெற்றியில் கண் இல்லாமலே நெருப்பு விட்டாள்.
 அவர்களோ எதிர்பாராமல் பளீரென்று கதவை அடித்துச் சாத்தினாள்.
 "என்னடா குரு இது? வாய் வச்சுட்டு சும்மா இல்லாம, வாய்ப்பை விட்டுட்டியே! சரி வா போகலாம்!"
 குரு வருத்தத்தோடு நகர்ந்தான்.
 ஆனால் அதே வாய்ப்பு அவனை 'வா' என்று மறுநாள் காலைலே அழைக்கும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.
 காலை டிபனை, தான் தங்கியிருந்த ஹோட்டலிலே முடித்துக்கொண்டு, வெளியே வந்த போது தான், பக்கத்திலுள்ள மெடிகல் ஷாப்பில் தற்செயலாக பார்வையை போட்டவன், அவசரமாக அந்தப் பக்கமாக நடந்தான்.
 "ஆன்ட்டி... சௌக்கியமா?" திரும்பிப் பார்த்த அந்தப் பெண், "அட., குருமூர்த்தி, நீ இந்த ஊர்லேயா இருக்க?"
 "சமீபத்துல ஒரு மாசம் முன்னால, இங்கேயுள்ள எங்க பிரான்சுக்கு டிரானஸ்பர் ஆயாச்சு. நீங்களும் இந்த ஊர் தானா ஆன்ட்டி?"
 "நான் ஆறு வருஷமா இந்த ஊர்லதான் இருக்கேன் தம்பி. உங்க அங்கிள் செத்துப் போய், அவரோட வேலையும் கிடைச்சுப் போச்சு. சேமிப்புத் தொகைல, சொந்தமா ஒரு வீட்டையும் வாங்கிட்டு இதே ஊர்லதான் செட்டிலாயிட்டேன் அம்மா, அப்பா சௌக்கியமா?"
 "இருக்காங்க ஆன்ட்டி... அம்மா எப்பவும் உங்களைப்பத்தி சொல்லுவாங்க!"
 "வீடு பக்கத்துலதான் தம்பீ... வாயேன்!"
 மறுப்பு சொலலாமல், அவள் பின்னால் நடந்தான் குரு.
 அந்த- நேற்று மின்னலால் விரட்டப்பட்ட - வீட்டின் முன்னால் ஆன்ட்டி போய் நின்றபோது, அதிர்ந்தான்"ஆன்ட்டி, இதுவா உங்க வீடு?"
 "ஏன், நீ வந்திருக்கியா?"
 கதவைத் தட்டினாள்.
 "அர்ச்சனா, நான்தாண்டி!"
 கதவு திறந்து கொண்டது.
 பின்னால் இவனைப் பார்த்ததும், தீயை மிதித்தவள் போல திணறியது வேடிக்கையாக இருந்தது.
 "மம்மீ... இந்த ஆள்."
 "ஆவடில நாம இருக்கும்போது, பக்கத்து வீட்ல இருந்தாங்கலே விஜயா மாமி... அந்த மாமியோட பிள்ளை குருமூர்த்திமா. சின்னதுல நீங்க ரெண்டுபேரும் விளையாடினது நினைவில்லையா ஒனக்கு?"
 சட்டென ஓடி மறைந்தது மின்னல்.
 நேற்று வீடு தேடி வந்ததை சிரித்தபடியே சொன்னான் குருமூர்த்தி.
 "அப்படியா? இது உன் வீடு குரு. நாளைக்கே, பெட்டி, படுக்கையெல்லாம் எடுத்துட்டு வந்துரு. மாடி போர்ஷன் காலியா இருக்கு"
 "படிக்கற காலத்துலேயே மாடி போர்ஷன் அங்கே காலிதான் மம்மீ." உள்ளேயிருந்து குரல் வந்தது.
 "என்ன சொல்ற கண்ணம்மா?"
 அவள் 'களுக்' கென்று சிரிக்க, அர்த்தம் புரிந்த குரு, 'இரு, இரு, வந்த பின்னால கவனிச்சுக்கறேன்' மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
 "நாளைக்கே வந்திர்றியா?"
 "வேண்டாம் ஆன்ட்டி! இன்னிக்கே வந்திர்றன்!"
 "அதே குறும்பு. இரு காபி கொண்டு வர்றன்!"ஆன்ட்டி. உள்ளே போனாள்.
 காபியோடு மின்னல் வந்தது.
 "சின்னத்துல விளையாடினது மறந்து போச்சு. பரவால்லை, இனிமே தினமும் விளையாடலாம்!"
 முறைத்தாள், உஷ்ணமாக.
 "சங்கிலி புங்கிலி கதவைத் திற!" என்றான் கண்களைச் சிமிட்டிக்கொண்டே.
 "நான் மாட்டேன் வேங்கைப் புலி"
 தன்னையும் மீறி சொல்லிவிட்டு, வெட்கத்தோடு உள்ளே ஓடிவிட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223814245
பதில் தா பவித்ரா..!

Read more from Devibala

Related to பதில் தா பவித்ரா..!

Related ebooks

Related categories

Reviews for பதில் தா பவித்ரா..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பதில் தா பவித்ரா..! - Devibala

    1

    உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்ட விஷ்ணுவுக்கு வியர்த்தது. யாரோ துரத்திக்கொண்டு வருவது போல உணர்வு. கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டு நிதானமாக சுவாசித்தான். சற்று நேரம் போல அங்கேயே நின்றான். சுவர் கடிகாரம் திடீரென, அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு டங்... டங் என்று பதினொரு முறை அடித்து ஓய்ந்தது.

    மெல்ல கட்டிலை நோக்கி நடந்தான்.

    ‘சல்... சல்...’

    இவனது ஒவ்வொரு அடிக்கும், பின் தொடர்ந்து வரும் கொலுசுக் கால்கள்.

    மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டு புலன்களை கூர்மையாக்கியபடி கவனித்தான் விஷ்ணு.

    அவன் நின்றபோது, அதுவும் நின்றது.

    திரும்பவும் வியர்வை பொங்க, கட்டிலை எட்டிப் பிடித்தவன் அதன் மேல் சரிந்தான். பக்கவாட்டில் கை நீட்டி, மேஜை விளக்கை மட்டும் அமைத்துக் கொண்டு, மற்ற விளக்குகளை அணைத்தான். உட்கார்ந்திருந்த இவனது நிழல், குறுக்கு வாட்டில் நீண்டு, பூதாகாரமாக நெளிந்தது.

    நடுங்கும் கைகளால், தலையணையை உயர்த்தி, அதனடியில் இருந்த சிகரெட் டப்பாவை எடுத்தான். ஒன்றை எடுத்து, உதட்டில் பொருத்தி, லைட்டரைத் தட்ட நீலக்கண் திறந்து, நிக்கோடின் முனையை காதலுடன் தழுவிக் கொள்ள -

    ஒரு முறை இழுத்து நிரப்பிக்கொண்டு, மெல்ல புகை வளையங்களை உற்பத்தி செய்ய -

    மெலிதாக விசும்பும் ஒலி கேட்டது...

    தலையை ஒருமுறை அவசரமாகத் திருப்பி, பரபரவென பார்த்தான்.

    இப்போதும் விசும்பும் ஒலி, வெகு துல்லியமாகக் கேட்டது.

    சட்டென எழுந்தான்.

    அடுத்த அடியை எடுத்து வைத்ததும், விசும்பும் ஒலி மெல்லப் பெரிதாகி, அழுகையுடன் விளிம்பில் வந்து நிற்க, அதிர்ந்தான். ஐந்தே நிமிடங்களில், அழுகை சீராக பெரிதாகிக்கொண்டே வந்து, ஒரு பெண் தேம்பித் தேம்பி அழுவது தெளிவாக ஒரு ஸ்ட்டீரியோ போனிக் ஒலியில், அந்த அறை முழுக்க மோதி, மோதி எதிரொலிக்க –

    விஷ்ணுவால் உட்கார முடியவில்லை அங்கே.

    அவசரப் பாய்ச்சலில் கதவை நெருங்கியவன் சரக்கென தாழ்ப்பாளை உருவித் திறந்தான்.

    கதவை முழுவதுமாகத் திறந்ததும், செமத்தியான அதிர்ச்சி, உடம்பு முழுக்க அலையலையாக பாய்ந்தது.

    எதரே அவள்...

    நீ... நீ... வாய் குழறி, சிகரெட் கீழே விழுந்து, அந்த இருட்டில், முனை ஜொலிக்க, உருண்டது.

    நாந்தான் விஷ்ணு! நானே தான்!

    கலகலவென சிரித்தாள்.

    நீ... நீ... இன்னும்... இன்னுமா?

    என்கூட வர்றியா விஷ்ணு...?

    நோ... என்னை எதுவும் செஞ்சிடாதே. தயவுசெஞ்சு என்னை விட்ரு?

    இப்படித்தானே விஷ்ணு, அன்னிக்கு நான் கெஞ்சினேன்! என்னை விட்டு வச்சியா? உனக்கொரு நியாயம்... எனக்கொரு நியாயமா? வா விஷ்ணு... வாயேன்!

    சட்டென அவள் திரும்பி நடக்க –

    செலுத்தப்பட்டவன் போல அவளைத் தொடர்ந்து நடந்தான் விஷ்ணு.

    ஹாலைக் கடந்து, ஸீட் அவுட்டில் கால் பதித்து, வாசலுக்கு இறங்கி, கேட் தாண்டிய, சாலையில் சரசரவென அவள் நடக்க, விஷ்ணுவும், மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல முறையான இடைவெளிவிட்டு அவளைத் தொடர்ந்தான்.

    எதுவும் கேட்க அவனுக்குத் தோன்றவில்லை.

    கயிற்றால் கட்டி இழுக்கப்பட்ட வாகனம்போல, எதிர்ப்பில்லாமல் நடந்தான்.

    சாலையில், அந்த நேரத்திலும் அங்கங்கே வெளிச்சப் புள்ளிகள்... டீ பாய்லரின் முணுக் முணுக் நெருப்புத் திவலைகள். விட்டு விட்டு எரியும் மெர்குரி வெளிச்சங்கள். அத்தனையும் கடந்து அவள் நடக்க -

    விஷ்ணுவும் சலிப்பில்லாமல், கடந்த நாற்பது நிமிடங்களாக அவளைத் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தான்.

    அது ஒரு ஹைவேஸ் சாலை... விரைவுப் போக்குவரத்துக்கள் மின்னல் வினாடிகளில் சரக், சரக்கென சாலையை விழுங்கியது.

    சாலையோரமாக இருந்த அந்த தியேட்டரிலிருந்து இரவுக் காட்சி முடிந்து, மிதமான கூட்டம் சட்டென சாலைக்கு வந்து கலக்க, வாகனங்களின் இரைச்சல், சைக்கிள் மணி, ரஜினியின் க்ளைமாக்ஸ் சண்டை என்று இரைச்சலான ஒலிகளோடு கூட்டம் கலைந்து போனது.

    எதையும் பொருட்படுத்தாமல் அவள் நடக்க, விஷ்ணுவும் தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தான்.

    பரங்கி மலை கடந்து, ஏர்ப்போர்ட் விளக்குகளை விலக்கி, ஏறத்தாழ குரோம்பேட்டை பகுதியில் அவன் நடக்கும் சமயம் -

    சாலையில் ஆள் அரவமே

    Enjoying the preview?
    Page 1 of 1