Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Chinna Missdeath
Oru Chinna Missdeath
Oru Chinna Missdeath
Ebook89 pages41 minutes

Oru Chinna Missdeath

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Oru Chinna Missdeath

Read more from Rajeshkumar

Related to Oru Chinna Missdeath

Related ebooks

Related categories

Reviews for Oru Chinna Missdeath

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Chinna Missdeath - Rajeshkumar

    1

    காப்பி கேட்டு நேரம் எத்தனை ஆகுது...?

    வீட்டுக்குள் பார்த்துக் கத்தினார் கோவிந்தராஜ். இன்னும் இரண்டே வருஷங்களில் வயதில் அரை செஞ்சுரியை அடிக்கப் போகிறவர். தலைப் பிரதேசத்தில் சொற்பமாய் வழுக்கை. சிலம்புச் செல்வரின், மீசை, பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்தின் உத்திரத் தூண்.

    சும்மா கத்தினா ஆச்சா...? பால் வந்துதானே வைக்க முடியும்...!

    சமையலறையிலிருந்து பாக்யலட்சுமி பதிலுக்கு சத்தம் போட்டாள். துண்டை உதறினார் கோவிந்தராஜ். நாற்காலியை சப்தித்து எழுந்தார்.

    நீயே போட்டு நீயே குடிச்சுக்...

    அவசரமாய் சமையலறைக்குள்ளிருந்து ஓடிவந்தாள் பாக்யலட்சுமி. ஐந்து வருஷங்களுக்கு முன்னால்வரை அழகாய் இருந்திருந்திப்பாள் போல் தெரிந்தது. நூல் புடைவைக்குள் நுழைந்திருந்தாள். கழுத்தில் கனமான தங்க சமாச்சாரம் மினுக்கடித்தது. காதில் கட்டி கட்டியாய் தொங்கட்டான்கள்.

    காலங்கார்த்தால என்ன அவசரம் உங்களுக்கு...?

    வெளியே போகணும்...

    பால் வந்ததும் காப்பியை குடிச்சிட்டு... அப்புறம் நிதானமா போறது...?

    நிதானமா போக முடியாது...

    அப்படியென்ன தலைபோகிற காரியம்... காப்பியைக் குடிச்சிட்டுப் போங்க...

    ஆம்பிளைக்கு ஆயிரம் வேலை இருக்கும். சும்மா தொண தொணன்னு கத்தாதே!

    இரைந்தபடியே வெளியேறினார்.

    காலை ஏழு மணி வெளிச்சம் பளீரென்று சுற்றுப்புறத்தில் பரவியிருந்தது. கப்பி ரோட்டில் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டே நடந்தார் கோவிந்தராஜ். தட்டுப்படுகிறவர்களின் அண்ணே... வணக்கண்ணேக்குப் பதிலாகக் கையசைத்துக்கொண்டே போனார்.

    அரை கிலோமீட்டர் தூரம் நடந்ததும் –

    சட்டென புருவத்தைச் சுருக்கி நின்றார்.

    சாராயக்கடை!

    போர்டில்லாமல் - சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. போன மாதத்தின் ஒருநாள் வந்து ஆர்ப்பாட்டமாய்க் குதித்த அரசு ஆய்வாளரின் கையில் கடைக்காரர் எதையோ பலமாய் அழுத்தியிருக்க-அந்த நன்றி விசுவாசத்தில் இன்னும் கடை ஓடிக்கொண்டிருக்கிறது.

    கோவிந்தராஜின் புருவச்சுருக்கத்துக்கான காரணகர்த்தா - சாராயக் கடையின் உட்பக்கம் தரையில் மடங்கி விழுந்து கிடந்தார்.

    அவசர அவசரமான நடையில் கோவிந்தராஜ் சாராயக்கடைக்குள் நுழைந்தார். கீழே விழுந்து கிடந்த ஆசாமியை நெருங்கினார்.

    வெங்கடேசன்!

    அவருடைய தம்பி. உடுத்தியிருந்த கதர் சர்ட்டும்- வேஷ்டியும் சாராய ஈரத்தில் நனைந்திருக்க-மல்லாந்த நிலையில் கிடந்தார். பிரிந்திருந்த வலது கையினின்றும் உருண்ட பாட்டில் ஒரு அடி தள்ளி விழுந்திருந்தது.

    எழுந்து திரும்பினவரின் பார்வையில் - சாராயக்கடை முனியப்பன் தெரிந்தான்.

    டேய் முனியப்பா...

    அவன் திரும்பினான்.

    சாராயக் கடைக்குள் கோவிந்தராஜின் பிரவேசத்தைப் பார்த்து அதிசயத்தில் ஒரு நிமிஷம் நீந்தியவன்- கீழே கிடக்கிற வெங்கடேசனையும்

    குடும்ப மானத்தையே கெடுக்கிறான்...

    - என்கிற கோவிந்தராஜின் முணுமுணுப்பையும் கிரகித்து - முன்னால் ஓடி வந்தான்

    அண்ணே, என்ன கேட்டீங்க?

    கொஞ்சம் தண்ணி குடுடா....

    முனியப்பன் சட்டென்று மேஜைக்குக் கீழே இருந்த மண் கூஜாவிலிருந்து ஒரு தம்ளர் நீரை எடுத்துத் தந்தான். கோவிந்தராஜ் தம்ளரை வாங்கிக்கொண்டு வெங்கடேசனிடம் குனிந்தார்.

    "சலீர்... சலீர்...’’ நீரை ஷவர் மாதிரி அவர் முகத்தில் தெளித்தார்.

    புருவத்தைச்சுருக்கி - முகத்தைச் சுளித்தார் வெங்கடேசன். கொஞ்சமாய் தரையில் புரண்டு - ‘ழாழா...’ என்று எதையோ குழறினார்.

    டேய்... வெங்கடேசா...!

    கண்ணை இடுக்கினார் வெங்கடேசன்.

    யார்ரா... எம் பேரைச் சொல்றவன்...?

    கோவிந்தராஜ் மறுபடியும் ஒரு கொத்து தண்ணீரை வெங்டேசனின் முகத்தை நோக்கி அடிக்க -

    வெங்டேசன் வந்திருக்கிற அண்ணனை உணர்ந்தார்.

    சட்டென எழ முயன்றார்.

    பாதி எழுந்து ‘பொத்’ தெனத் தரையில் சரிந்தார்.

    எந்திர்ரா. மேல... குடிச்சு குடுச்சு குடும்ப மானத்தை வாங்கவா பொறந்தே?

    கையைப் பிடித்து வெங்கடேசனை எழுப்பி நிறுத்தினார். சடலம் மாதிரி நிற்க முடியாமல் அவர் மேலேயே சரிந்தார் வெங்கடேசன். சிரம மூச்சுக்களோடு அவரைத் தாங்கி நிறுத்தி - தோளில் கையைத் தாங்கலாய்ப் போட்டுக்கொண்டு கடையினின்றும் வெளியே நகர்த்திப் போனார்.

    சாலைக்கு வந்ததும் –

    இரண்டு பக்கமும் பார்வையை விரட்டினார். அந்த வில் வண்டி

    Enjoying the preview?
    Page 1 of 1