Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugam Illathavan! and Nizhal Por!
Mugam Illathavan! and Nizhal Por!
Mugam Illathavan! and Nizhal Por!
Ebook262 pages1 hour

Mugam Illathavan! and Nizhal Por!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Mugam Illathavan! and Nizhal Por!

Read more from Rajeshkumar

Related to Mugam Illathavan! and Nizhal Por!

Related ebooks

Related categories

Reviews for Mugam Illathavan! and Nizhal Por!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugam Illathavan! and Nizhal Por! - Rajeshkumar

    20

    1

    ஜி.ஹெச்.

    விஸிட்டர்ஸ் அவர்ஸ் முடிந்திருந்த அந்த மத்தியான வேளை. நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்க-எல்லா வார்டுகளிலுமே நிசப்தம். விரட்டப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருந்த மர நிழல்களைப் பிடித்துக் கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தார்கள். மார்ச்சுவரி அருகே-ஆண்களும் பெண்களும் கதம்பமாய் தெரிந்த ஒரு கும்பல் அழுகையோடு நின்றிருந்தது. வெளி நோயாளிகள் மாத்திரைகளுக்காக க்யூ வரிசையில் தவம் கிடக்க, டாக்டர்களும், நர்ஸ்களும், ஷிப்ட் மாறிக் கொண்டிருந்தார்கள்.

    நர்ஸ் ஷீலா டவுன்பஸ்ஸை விட்டிறங்கி வாட்சைப் பார்த்துக்கொண்டே அவசர நடையில் ஆஸ்பத்திரிக்குள் வந்தாள். இளமை இழக்காமல் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஷீலாவுக்கு பூர்வீகம் கேரளம்.

    இரண்டொரு வெளியாட்களை உள்ளே விடுவதற்கான ‘சம்திங்’ பேரம் பேசிக் கொண்டிருந்த வாட்ச்மேன் ஷீலாவைப் பார்த்ததும் - க்ரில் கேட்டை அவளுக்கு அளவாக விலக்கித் தந்து விட்டு - மீண்டும் பேரத்தைத் தொடர்ந்தான்.

    லெட்ஜரில் கையெழுத்தைப் போட்டு விட்டு - ரிடயரிங் ரூமை அடைந்து - நர்ஸ் உடைக்கு மாறிக் கொண்டபின்-க்ரௌண்ட் ஃப்ளோரின் இடதுபக்க மூலையில் இருந்த ‘பி’ வார்டை நோக்கி நடந்தாள்.

    வழியில் கம்பவுண்டர் வாசுதேவன் தலையைச் சொறிந்து கொண்டே வழியலாய் ஒரு புன்னகையை அவளுக்கு கொடுத்தபடியே எதிர்பட்டான்.

    வாசு...

    என்னம்மா?

    அஞ்சாம் நம்பர் பெட்ல அந்த ஆஸ்துமா பேஷண்ட் நேத்திக்கு ரொம்ப ஸீரியஸா கிடந்தாரே...இப்ப எப்படி இருக்கார்?

    வாசுதேவன் சிரித்தான்.

    இந்நேரம் அன்னாரோட அஸ்தியை நொய்யலாத்துல கரைச்சு இருப்பாங்க!

    அடப்பாவமே!

    வயசாயிடுச்சில்ல!

    சொல்லிக்கொண்டே கம்பவுண்டர் வாசுதேவன் நகர்ந்து செல்ல-ஷீலா ‘பி’ வார்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பிரசவ வார்டைக் கடந்து போகிற போது ஏதோ ஒரு குழந்தை ‘நை நை’ என்று விடாமல் கத்திக் கொண்டிருக்க-குழந்தையைப் பெற்றவளை கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே கடக்க-

    வார்டுக்கு எதிரே வராந்தா திட்டில் உட்கார்ந்திருந்த அந்த கான்ஸ்டபிள் கண்ணில் பட்டார்.

    என்ன கான்ஸ்டபிள்... ஆயுள் கைதியை காவல் காக்கறதை விட்டுட்டு இப்படி ஜாலியா வராந்தா திட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்க!

    மெகா சைஸில் தொப்பையை வளர்த்து வைத்திருந்த அந்த கான்ஸ்டபிள் தன் வெற்றிலைக்கறை படர்ந்த பற்கள் தெரியச் சிரித்தார்.

    எத்தனை நேரம் தான் அவன் மூஞ்சியையே நானும், என்மூஞ்சியை அவனும் பார்த்துக்கிட்டிருக்கறதும்மா! அதான் அப்படியே காத்தாட இங்கே வந்து உக்காந்தேன். டீ கொண்டு வர்ற பொடியன் கிட்டே வெத்திலை பாக்கு வாங்கிட்டு வரச் சொல்லி அனுப்பிச்சேன். பையன் இன்னும் வந்த பாட்டைக் காணோம்.

    ஷீலா சிரித்துக் கொண்டே வார்டுக்குள் நுழைந்தாள்.

    விஸ்தாரமான வார்டு இரண்டு பக்கமும் வரிசையாய் நெடுகத்துக்கு கட்டில்கள். ஒவ்வொரு கட்டிலுக்கும் இடையில் ஸ்க்ரீன் தடுப்புகள். சில பேஷண்ட்டுகள் பக்கத்து பெட் ஆசாமியுடன் அரட்டை அடிக்க வசதியாக ஸ்க்ரீன் தடுப்பை விலக்கி வைத்து இருந்தார்கள்.

    ஷீலாக்கா...

    எட்டாவது பெட்டில் அட்மிட் ஆகியிருக்கும் பதினோரு வயது அஜய் ஓடி வந்தான். ஆஸ்பத்திரி கொடுத்திருந்த தொள தொள வெள்ளை ட்ரஸ் காற்றில் பறந்தது.

    நந்தினி எங்கேடா...?

    அந்த அக்காவை பார்க்கத்தான் நானும் வந்தேன்... டாக்டர் ரூமுக்கு போயிருந்தாலும் போயிருப்பாங்க!

    கப்போர்டைத் திறந்து பார்த்த ஷீலா அங்கே நந்தினியின் சாப்பாட்டுக்கேரியர் கூடை இல்லாததைக் கவனித்து விட்டுச் சென்றாள்.

    அவ டாக்டர் ரூமுக்குப் போகல சாப்பிட போயிருக்கா. தினமும் இவளோட இதே அக்கப்போர்! நான் வந்த பின்னாடி என்கிட்டே சார்ஜ்ஜை ஒப்படைச்சுட்டு அப்புறமா போய் சாப்பிட வேண்டியது தானே! ஷிப்ட் முடியறதுக்குள்ளே சாப்பிடறதுக்கு அப்படியென்ன அவசரமோ?

    அக்கா! அஜய் கூப்பிட்டான்.

    என்னடா

    கொஞ்சம் பாத்ரூம் வரைக்கும் வாயேன்!

    எல்லார் கிட்டேயும் வளவளன்னு வாயடிக்கத் தெரியும். தனியா பாத்ரூம் போகத் தெரியாது...?

    பயமா இருக்குக்கா...

    பட்டப்பகல்ல உனக்கென்னடா பயம்...?

    கேட்டுக்கொண்டே அஜய்யின் கையைப் பிடித்துக் கொண்டு வார்டின் கோடியிலிருந்த பாத்ரூமை நோக்கிப் போனாள்.

    எப்ப பார்த்தாலும் லொக் லொக்குன்னு இருமி கிட்டே இருப்பாரே... இருதயராஜ் மாமா... அவர் தான் என்கிட்டே சொன்னார்... அந்தப் பாத்ரூம்ல பிசாசு இருக்காம். நான் தனியாப் போனா என்னைப் பிடிச்சுக்குமாம். பிடிச்சு ரத்தத்தைப் பூராவும் குடிச்சிடுமாம்.

    அந்த ஆளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது. சின்னப் பசங்க கிட்டே கண்டதையெல்லாம் பேசி பயமுறுத்தறதே தொழிலாப் போச்சு...!

    முனகிக் கொண்டே-ஒதுக்குப்புறமாக இருந்த பாத்ரூமின் வாசலருகில் கொண்டு போய் அவனை விட்டாள்.

    நான் இங்கே கதவுக்குப் பக்கத்திலேயே நிற்கறேன். நீ உள்ளே போயிட்டு வா

    மூக்கைப் பொத்திக் கொண்டு ஷீலா அங்கே நின்று கொள்ள ஈரத்தரையும் கசகசப்புமாய் இருந்த அந்த பாத்ரூமுக்குள் அஜய் நுழைந்தான்.

    உள்ளே போனவன்-

    போன வேகத்திலேயே வீறிட்டுக் கொண்டு ஓடி வந்தான்.

    எ...என்னடா?

    ஷீ...ஷீ...லா...க்...கா...அ...அ...ங்..கே..அ...ங்கே.. நடுங்கும் உடம்போடு அவளுடைய இடுப்பைக் கட்டிக் கொண்ட அஜய்யைக் குழப்பத்தோடு பார்த்தாள். அவன் முகம் பூராவும் திகில்.

    ஏண்டா பிசாசை நினைச்சு பயந்துட்டியா...?

    அ...ங்...கே...ந...ந்தினியக்கா...

    நந்தினியா? அவ...உள்ளே இருக்காளா? கேட்டுக் கொண்டே பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்தாள் ஷீலா. அடுத்த விநாடி-

    உடம்பு குப்பென்று அதிர்ச்சிக்குப் போயிற்று.

    டாய்லெட்டின் ஈரத்தரையில்-

    நந்தினி-சீலிங்கை வெறித்துக் கொண்டு மல்லாந்து விழுந்து இறந்திருந்தாள்.

    2

    ‘பளிச், பளிச்’சென்று போலீஸ் காமிரா மின்னிக் கொண்டிருக்க நந்தினியின் நர்ஸ் யூனிபார்ம் பாத்ரூமின் தரை ஈரத்தில் நனைந்து சொதசொதப்பாகி, வாஷ் பேஸினுக்கு சொற்பம் தள்ளி விழுந்திருந்தாள். கழுத்திலிருந்த மெல்லிய தங்கச் செயின் கழுத்துக்கும், தரைக்கும் இடையே நூலேணி போல நெளிந்து கிடந்தது.

    விஷயம் பரவி வேடிக்கை பார்ப்பதற்காக திபுதிபுவென்று வார்டுக்குள் கூடிய கூட்டத்தை விரட்டியடித்தார்கள் கான்ஸ்டபிள்கள். யாரும் உள்ளே நுழைந்து விடாமல் உள்ளே-இருப்பவர்கள் வெளியே போய்விடாமல் பார்த்துக் கொள்வதற்காக வார்டு வாசலிலேயே இரண்டு கான்ஸ்டபிள்கள் நிறுத்தப்பட்டார்கள்.

    தலைமை டாக்டர் மேகநாதன் மூக்குக் கண்ணாடி பிரேமால் தன்னுடைய சுருக்கம் விழுந்த நெற்றியைத் தேய்த்துக் கொண்டு-கவலையாய் நின்றிருந்தார். அவருக்கு அருகில் வார்ட் டாக்டர் முகுந்தன் கைகளைக் கோட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு இறுகிய முகமாய் நின்றிருந்தார்.

    பயத்தில் நடுங்குகிற அஜய்யோடு ஷீலா அந்த ஜன்னல் ஓரமாய் நின்றிருக்க - அவளுக்கு எதிரே இன்ஸ்பெக்டர் லட்சுமணன்.

    சலவை விறைப்போடு இருந்த காக்கி யூனிபார்முக்குக் கொஞ்சமும் பிசிறடிக்காத கச்சிதமான உடலமைப்பு. குளிர் கண்ணாடியை மேல் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்தார்.

    நந்தினியோட பாடியை நீங்கதான் மொதல்ல பார்த்தீங்களா?

    அஜய் பார்த்து என்கிட்டே சொன்னான். அப்புறம் நான் எட்டிப் பார்த்தேன்

    இவன்தானா அந்த அஜய்...?

    ஆமா. இங்கே இவனும் ஒரு பேஷண்ட்

    என்ன இவன் உடம்புக்கு...?

    முதலில் தயங்கினாள் ஷீலா.

    பிறகு அஜய்க்குப் புரியக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.

    இவனுக்கு இருதயத்தில் ஓட்டை இன்ஸ்பெக்டர். இன்னும் மூன்று மாதங்கள் தான் இவனுக்கு ஆயுள்

    ஸாரி

    சொல்லிவிட்டு லட்சுமணன் அடுத்த கேள்விக்குத் தாவினார்.

    நந்தினியோடு உங்களுக்கு நல்ல பழக்கம் இருக்கா?

    ஓரளவுக்கு

    அவ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்னு நினைக்கிறீங்களா?

    அவ தற்கொலை செய்து கொள்ளக் காரணம் ஏதும் எனக்குப் படலை இன்ஸ்பெக்டர்...

    நந்தினியோட குடும்பத்தோடு உங்களுக்குப் பழக்கமிருக்கா...?

    பழக்கமில்லை. ஆனா... தன்னோட குடும்பம் பத்தி அவ என்கிட்டே பேசியிருக்கா...

    குடும்பத்தில் ஏதாவது பிரச்னைகள் இருக்கா?

    அவளுடையது பிரச்னை இல்லாத குடும்பம் இன்ஸ்பெக்டர்

    நந்தினிக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைக்கிறேன்

    ஆகலை...

    அவ ஃபேமிலில யார் யார் இருக்காங்க?

    அம்மா, அப்பா... தவிர அவளோட தம்பி ஒருத்தன்! நாலே பேர் தான்

    வீட்டுக்கு தகவல் அனுப்பியிருக்கா?

    அனுப்பியிருக்கு!

    நந்தினிக்கு இங்கே ஏதாவது பிரச்னைகள் இருந்ததா?

    நந்தினி இயற்கையாகவே கொஞ்சம் சிடுசிடுப்பான சுபாவக்காரி...! பேஷண்ட்கிட்டே பொறுமையா நடந்துக்க மாட்டா. இதனால பேஷண்ட்களுக்கும் அவளுக்கும் சில சமயங்கள்ல சச்சரவு வரும்

    நந்தினிக்கு காதல் விவகாரம் உண்டா?

    எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அப்படி எதுவும் இல்லை...

    கடைசியா நீங்க நந்தினியை எப்ப பார்த்தீங்க?

    நா இப்பதான் ட்யூட்டிக்கு வர்றேன் இன்ஸ்பெக்டர்...

    அவர்கள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த அஜய் வாயைத் திறந்தான்.

    அங்கிள்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு அந்த அக்கா ஒரு காப்ஸ்யூல் கொடுத்துட்டுப் போனாங்க!

    லட்சுமணன் அவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு தலைமை டாக்டர் மேகநாதனும், முகுந்தனும் நின்றிருந்த இடத்துக்கு வந்தார்.

    டாக்டர்...இந்த மரணத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க

    பாடியைப் பார்த்தேன்! நந்தினி பாய்ஸன் சாப்பிட்டு இறந்திருக்கா! அவ குடிக்கறதுக்காக பாட்டில்ல வெச்சிருந்த வாட்டரில் பாய்ஸன் இன்க்லூஸன் ஆகியிருக்கு

    "இதை கொலைன்னு நினைக்கறீங்களா... தற்கொலைன்னு நினைக்கறீங்களா?’

    கொலையாக இருந்தா...நந்தினியை பாத்ரூம் பக்கம் அழைச்சுட்டுப் போய் பாய்ஸனை கட்டாயப்படுத்திக் கொடுத்திருக்கணும்...! ஆனா நந்தினி மேல ஃபோர்ஸ் பண்ணினதுக்கான தடயங்கள் எதுவுமில்லை...

    "ஃபோர்ஸ் பண்ணித்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1