Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolla Kolla Inikkuthada
Kolla Kolla Inikkuthada
Kolla Kolla Inikkuthada
Ebook100 pages1 hour

Kolla Kolla Inikkuthada

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466824
Kolla Kolla Inikkuthada

Read more from Rajeshkumar

Related to Kolla Kolla Inikkuthada

Related ebooks

Related categories

Reviews for Kolla Kolla Inikkuthada

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolla Kolla Inikkuthada - Rajeshkumar

    1

    திலகம் கண் விழித்தபோது சூரியன் கிழக்குத் திசையில் விடியற்கால இருட்டை ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். பக்கத்து பங்களா பவழ மரத்தில் ஏகப்பட்ட குருவிகள் குடும்பம் குடும்பமாய் கீச்சிட்டன. கோட்டைமேடு மத்தியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி அல்லா ஹ... ஹூ... அக்பர் என்றது. தெருமுனையில் இருந்த டீக்கடையில் ரேடியோ பெட்டி சிலோன் ஸ்டேஷனுக்காக சுருதி கூட்டிக் கொண்டிருந்தது.

    திலகா எழுந்தாள். ராத்திரி அவிழ்ந்துபோன பிரா கொக்கியை மாட்டிக்கொண்டாள். ஜாக்கெட் பட்டன்களை பொருத்திக்கொண்டு, சேலையை ஒழுங்காய் சுற்றிக்கொண்டு - அருகே படுத்திருக்கும் தன் கணவன் ஜெயகரைப் பார்த்தாள். இடுப்பில் கட்டியிருந்த லுங்கி நெகிழ்ந்து போயிருக்க - திலகா வெட்கம் கலந்த புன்னகையோடு போர்வையை எடுத்து அவன் மேல் போர்த்திவிட்டாள்.

    கட்டிலைவிட்டு கீழே இறங்க முற்பட்டாள்.

    அடுத்த விநாடி –

    ஜெயகரின் வலது கை ஆக்டோபஸ் டென்ட்ரிக் கிளாப் வளைந்து திலகாவின் இடுப்பை வளைத்து இழுத்தது. அவன் மேல் அப்படியே சரிந்தாள். அம்... மா!

    முழிச்சுட்டுதான் இருக்கீங்களா?

    உம்

    என்ன உம்? விடுங்க. நான் போகணும், விடிஞ்சுட்டு வருது. உங்கப்பாவும் உங்கம்மாவும் இந்நேரம் எழுந்திரிச்சிருப்பாங்க.

    மணி அஞ்சரைதானே ஆச்சு. கொஞ்ச நேரம் படுத்திட்டு போயேன், லேட்டா எழுந்திரிச்சு போற மருமகளை - இந்த மாமியார் திட்டமாட்டா.

    எனக்குத் தெரியாதா! நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் முடியப் போகுது. இந்த நூத்தி எண்பது நாள்ல ஒரு நாலாவது உங்கம்மா என்னை ஒரு கோபப் பார்வைகூட பார்த்ததில்லீங்க. இந்த காலத்துல ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷனைக் காட்டிலும் நல்ல மாமியார் தான் கிடைக்கணும். எனக்கு ரெண்டுமே நல்லபடியா அமைஞ்சிருச்சி.

    அப்போ எங்கப்பா?

    அவரை நான் மாமனாராவே நினைச்சி பார்க்கிறதில்லையே எங்கப்பா மாதிரிதானே நினைச்சிருக்கேன். எனக்கு அப்பா இல்லாத குறையை அவர் மூலமாத்தான் தீர்த்துக்கிறேன்.

    ஜெயகர் அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான். இதமான கனத்தோடு ஒரு போம் மெத்தையின் மென்மையோடு அவன் மேல் புரண்டாள். ஜெயகர் அவள் கழுத்தோரம் முகம் புதைத்தான், சொன்னான்.

    எங்க எல்லார்க்கும் ஐஸ் வெச்சு எப்படியோ கைக்குள்ளே போட்டுக்கிட்டே!

    ஐஸ் இல்லீங்க. அன்பு வெச்சேன். சரி, விடுங்க. நான் போகணும் பாத்ரூம்ல ஷவர் சத்தம் கேட்குது. அத்தை குளிச்சிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே காபி கலந்து வெக்கணும். ம்... விடுங்க...

    விட்டான் ஜெயகர்.

    எனக்கும் காப்பி.

    பல்லைத் தேய்ச்சிட்டு சமையல்கட்டு வாங்க. காப்பி டபராவிலே காத்திட்டிருக்கும்.

    ஏய் திலகா, இன்னிக்கு ஒரு நாள் பல்லைத் தேய்க்காமே காபி குடிக்கிறேனே ப்ளீஸ்... பல்லைத் தேய்க்காமே காபி குடிச்சாத்தான் ஒரு கிக்கே வருது.

    மூச்! எழுந்திரிக்கிறீங்க. பேஸ்ட்டையும், பிரிஷ்ஷையும் எடுக்கறீங்க சுத்தமா பல்லைத் தேய்க்கறீங்க. நல்ல பிள்ளையா சமையல்கட்டுக்கு வர்றீங்க. நான் தர்ற காபியை குடிக்கறீங்க... ஓ.கே?

    திலகா அறையை விட்டு வெளியே வந்தாள்.

    அதே விநாடி –

    அத்தை சம்பூர்ணம் தலைக்கு குளித்து ஈரத் தலையில் சுற்றிய டவலோடும், தாறுமாறாய் உடம்பைச் சுற்றிக்கொண்ட புடவையோடும் பாத்ரூமினின்றும் வெளிப்பட்டாள். மஞ்சள் பூசிய முகம் புன்னகையில் விரிந்தது.

    என்னம்மா திலகா, இப்பத்தான் எழுந்திரிச்சியா?

    ஆமா அத்தை.

    பால் வாங்கி வெச்சிருக்கேன். எல்லார்க்குமா காபி போட்டுடம்மா?

    இதோ, நிமிஷத்துல போட்டுடறேன் அத்தை.

    ஜெயகர் எழுந்திரிச்சிட்டானா?

    ம். காப்பிக்காக காத்திட்டிருக்கார் அத்தை.

    பல்லை விளக்காம அவனுக்கு காபி தந்துடாதே.

    தரமாட்டேன்... மாமா மாடியில இருக்காரா? வாக்கிங் போயிட்டாரா அத்தை?

    அஞ்சு மணிக்கே எழுந்திரிச்சு போயிட்டாரம்மா. வாக்கிங் முடிச்சுட்டு வர்ற நேரம்தான். அவருக்கும் சேர்த்தே காபியை கலந்துடு திலகா.

    சரி அத்தை...

    சம்பூர்ணம் பூஜை அறைக்குள் நுழைந்து கொள்ள திலகா சேலையை லேசாய் உயர்த்தி இடுப்பில் செருகிக்கொண்டு சமையலறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.

    சட்டென்று அந்த வாசம் அவள் நாசியை நெருடியது.

    மூக்கைச் சுளித்தாள். அதென்ன வாசம்? வாசத்தின் இனம் புரியாமல் சில விநாடிகள் சமையலறையைச் சுற்றிப் பார்த்தாள்.

    பிடிபடவில்லை. அடுப்பின் மேடைமேல் பாத்திரத்தில் நுரைப்பால் ததும்பியது. பில்டரில் டிகாஷன் காத்திருந்தது.

    இந்த வாசனையை கண்டுபிடிக்க இது நேரமில்லை.

    முதலில் காப்பியை கலந்தாக வேண்டும். அலமாரி மேல் இருந்த தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு காஸ் சிலிண்டரை நெருங்கி அதன் குமிழை உயர்த்திவிட்டு அடுப்பருகே குனிந்து தீக்குச்சியை ‘சரக் என்றாள்.

    கண்ணைச் சிமிட்டுகிற நேரம்தான். ஆள் உயரத்திற்கு தீ ஜ்வாலைகள் குபீரென்று எழுந்து அவளைச் சூழ்ந்துகொள்ள திலகா அதிர்ந்தாள். அந்த அதிர்ச்சியின் நொடிகளிலேயே -

    வாசத்திற்கு காரணம் மூளைக்கு சட்டென்று உறைத்தது.

    காஸ் சிலிண்டர் ராத்திரி பூராவும் கசிந்து சமையலறையை நிரப்பியிருக்கிறது. ஜன்னல் இல்லாத - சாத்தியிருந்த சமைலறை அந்த கேஸ் போன நிமிஷம் வரை அடைகாத்திருக்கிறது தீக்குச்சி உமிழ்ந்த சின்னத் தீயை காத்திருந்த கேஸ் உறிஞ்சி தீ ஜ்வாலைகளை பிரசவித்திருக்கிறது.

    திலகா விலகுவதற்குள் –

    தீ அவளை மொய்த்துக் கொண்டது.

    முதுகுச் சதையை கப்பென்று பற்றிக்கொண்டு புகைய ஆரம்பித்தது.

    "அம்… மா... ஆ...

    Enjoying the preview?
    Page 1 of 1