Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Happy Death Day
Happy Death Day
Happy Death Day
Ebook82 pages40 minutes

Happy Death Day

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Happy Death Day

Read more from Rajeshkumar

Related to Happy Death Day

Related ebooks

Related categories

Reviews for Happy Death Day

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Happy Death Day - Rajeshkumar

    12

    1

    அந்த சனிக்கிழமையின் காலை எட்டு முப்பது மணிக்கே யாஸ்மின் பிரைவேட் லிமிடெட் அலுவலக இயக்கத்தை ஆரம்பித்திருந்தது. நகரின் முக்கிய சாலை ஒன்றில் பரந்த இடத்தைப் பிடித்து வைத்திருந்தது. வெண்ணிற சூப்பர் செம் டிஸ்டெம்பர் ஒரு பளிச் கோட்டிங்கைக் கட்டிடத்தின் மேல் அடித்திருந்தது.

    அந்த அலுவலக கட்டிடத்துக்குள் நாம் இப்போது போக வேண்டிய இடம் கம்ப்யூட்டர் ரூம்.

    சந்திக்க வேண்டிய நபர் சங்கீதா.

    கட்டிடம் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டு ஒரு பக்கம் டெக்னிக்கல் பேப்ப்ஸ் மூவ் ஆகிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கம் ‘நான் டெக்னிக்கல்’ இயங்கிக் கொண்டிருந்தது.

    டெக்னிக்கல் சைடில் ஒரு தனி அறையாய்க் கம்ப்யூட்டர் ரூம் அதை உபயோகிக்கிற ஒரே நபர் சங்கீதா.

    அந்த நிமிஷம்தான் அறைக்குள் வந்தாள். இளம் பச்சை பட்டுப் புடவையை உடலுக்குள் கொடுத்து இருந்தாள். தலைக்குக் குளித்திருந்ததில் அவளின் தாராளமான கூந்தல் பிரதேசம் பளபளவெனப் பிரிந்து சிலும்பிக் கிடந்தது. தூக்கலான ‘பளீர் நிறம். ட்ரிம் செய்த மாதிரி நேர்த்தியான அளவுகளுடன் ட்ரிம் செய்யப்படாத இயல்பான புருவங்கள். கீழே இருந்த விஸ்தார விழிகளில் மின்னல் தனமான பிரகாசம் புதைந்திருந்தது. ரோஜா மொட்டு நிறத்தில் ஈரப்பட்ட உதடுகள் உதடுகளுக்குள்ளே ஃப்ளாஷ் வெளிச்சமாய் பதுங்கியிருந்தது பொடிசு பொடிசான பல்வரிசை.

    ஹேண்ட் பேக்கை அலமாரிக்குக் கொடுத்துவிட்டு - உள்ளிருந்து எடுத்த அந்தப் பெட்டியோடு திரும்பினாள். பின் மெட்டீரியலால் ஆன அந்தப் பெட்டியின் மேற்புறத்தில் இரண்டு குழந்தைகள் புஷ்பம் மலர்ந்த மாதிரி சிரித்துக் கொண்டிருந்தன.

    ஆட்டோமேடிக் டோர் க்ளோசரை எதிர்த்து கதவைத்திறந்தாள். வெளியேறினதும் - கதவு தானாக மூடிக் கொண்டது.

    வராந்தாவில் நடந்தாள்.

    பனிகட்டி மேல் நடக்கிற உணர்வை ஏற்படுத்தின தரையில் பதித்திருந்த மார்பில் ஸ்டோன்கள். குட்மார்னிங் சங்கீதா... குரல் கேட்டு நிமிர்ந்தாள். டெக்னிகல் அசிஸ்டெண்ட் கார்த்திகா. குட்மார்னிங் கார்த்திகா.

    சங்கீதாவின் பதில் குட்மார்னிங்கைப் பெற்றுக் கொண்ட கார்த்திகா முதல் பார்வைக்கு கோவை சரளமாவை ஞாபகப்படுத்தினாள். நீளம் கம்மியான தனது பின்னலுக்காக தினம் ஒரு தடவை வருத்தப்படுவாள் கார்த்திகா என்றதுமே அவளின் காது இரண்டிலும் ஆடும் ஜிமிக்கி நிறைய பேருக்கு ஞாபகத்துக்கு வரும். ரொம்ப வருஷமாய் அதை அணிந்திருக்கிறாள். கண்களைக் கவ்வியிருக்கிற கண்ணாடி அவள் முகத்துக்குப் பொருத்தமாய் இருந்த்து.

    என்ன சங்கீதா பட்டுப் புடவையும் அதுவுமா அமர்க்களப்படுத்தறே. என்ன விஷயம்?

    சங்கீதா புன்னகைத்தாள்.

    கையிலிருந்த பெட்டியைத் திறந்து –

    கார்த்திகாவுக்கு எதிரே நீட்டினாள்.

    பெட்டிக்குள் பார்வையைப் போட்ட கார்த்திகா புருவம் சுருக்கினாள்.

    சாக்லெட் எதுக்கு?

    எனக்கு இன்னிக்கு பர்த் டே... இருபத்தியொரு வருஷத்தை நிறைவு செய்யறேன்...

    கார்த்திகா சாக்லெட்டைத் தொட்டு எடுத்தாள்.

    வாய் நிறைய புன்னகையை அதக்கினாள்.

    ஹேப்பி பர்த் டே டு யூ

    தாங்க்ஸ்...

    நகரப் போனவளை நிறுத்தினாள்.

    ஒரு நிமிஷம்.

    நிற்க வைத்த கார்த்திகாவைப் புரியாத்தனத்தோடு பார்த்தாள். சங்கீதா.

    என்ன?

    யார் கேட்டாலும் பர்த் டேன்னு மட்டும் சொல்லு. பிராந்து மாதிரி வயசைச் சொல்லாதே, ஏன்னா பதினாறு வயசுக்காரி மாதிரி இருக்கியே! அவள் கன்னத்தை தட்டி சொன்னாள்.

    சங்கீதா முகத்தில் குங்குமம் கொட்டினது

    அதே விநாடி

    எனக்கு இல்லையா சாக்லெட்?

    சங்கீதா, கார்த்திகா இரண்டு பேருமே திரும்பிப் பார்த்தார்கள்.

    சீப் அக்கவுண்டன்ட் சேதுமாதவன் பல்வரிசை காட்டிப் புன்னகைத்தபடி நின்றிருந்தான். வெள்ளை நிற சர்ட்டை அதே நிற. டைட்ஸுக்குள் இன் செய்திருந்தான். தலைப் பிரதேசம் ஆப்ரிக்கத்தனமாய் சுருள் வாங்கியிருந்தது. தாடி, மீசைப் பகுதிகள் ப்ரின்ஸ் பிளேடின் உபயோகத்தால் படு சுத்தமாயிருந்தது.

    சங்கீதா புன்னகையோடு அவனிடம் சாக்லெட் பாக்சை நீட்டினாள்.

    எடுத்துக்குங்க.

    என்ன விசேஷம்?

    இன்னிக்கு என்னோட பிறந்த நாள்.

    சாக்லெட் ஒன்றை எடுத்துக் கொண்டப்படியே வாழ்த்தினான்.

    ‘ஐ விஷ் யு மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த

    Enjoying the preview?
    Page 1 of 1