Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Envizhi Neeyandro!
Envizhi Neeyandro!
Envizhi Neeyandro!
Ebook221 pages1 hour

Envizhi Neeyandro!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தினமும் உதிக்கும் பொழுதினை போல பிறந்து கொண்டே இருப்பவை சிந்தனை. அதற்கு வடிவம் கொடுத்தால் சிறுகதை!மேம்படுத்தும் வழிநிலை கொண்டவரால் தான் உணர்வின் இச்சைக்கு வடிகாலாய் இருக்கும் வகையில் சிறுகதைகளை படைக்க இயலும். பிரபல தமிழ் இதழ்களில் பிரசுரமான எனது 1000 சிறுகதைகளில் "என்விழி நீயன்றோ!" தொகுப்பின் 32 கதைகளும் அடக்கம். மொழியினை பலப்படுத்தி எழுதும் கதைகளின் மகத்துவம் படித்தால் புரியும்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580158809200
Envizhi Neeyandro!

Read more from V. Tamilalagan

Related to Envizhi Neeyandro!

Related ebooks

Reviews for Envizhi Neeyandro!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Envizhi Neeyandro! - V. Tamilalagan

    http://www.pustaka.co.in

    என்விழி நீயன்றோ!

    சிறுகதைகள்

    Envizhi Neeyandro!

    Sirukadhaigal

    Author :

    வெ. தமிழழகன்

    V. Tamilalagan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அறியாமல் அறம் செய்து

    2. நிஜம் சுட்டது

    3. பணமும் பண்பும்

    4. அறிவோடு உறவாடு

    5. இமைகள்

    6. தந்த மனசு

    7. நீதான் அம்மா

    8. நீயே தோழி!

    9. புதுப்பார்வை

    10. தப்பாத தண்டனை.

    11. விடியல் வானம்

    12. வாழ்கிற நிஜம்

    13. புனித பூ

    14. நிழலாக வந்தவள்

    15. வழி மாறும் தென்றல்

    16. இனிமேல் இனிமை

    17. மனசுக்கு சம்மதம்

    18. தேவதை தந்தாள்

    19. நெஞ்சின் நிழல்

    20. என் விழி நீயன்றோ!

    21. அதுவே தர்மம்

    22. பெண்ணே ,நீயும்!

    23. இனிக்கும் நெருப்பு

    24. மனித தர்மம்

    25. அழைத்த அம்மா

    26. தாத்பர்யம்

    27. நிலவு சுடுகின்றது

    28. நியதி

    29. ரத்த ஓவியம்

    30. இனிய தாகம்

    31. ஒன்றான உள்ளம்

    32. ஒரே உறவு

    1. அறியாமல் அறம் செய்து

    வரதன் வந்தான். வனஜா திடுக்கிட்டாள். அவனது திடீர் வரவை அவள் எதிர்பார்க்கவில்லை. கதவு திறந்தது. அவள் அந்தப் புத்தகங்களை அள்ளி மறைத்து வைப்பதற்குள்....

    அவன் பார்த்துவிட்டான்.

    ஏய்! என்னடி இது? என்றான் அதட்டலாக.

    ஒன்னும் இல்லைங்க! என்றாள் பயம், மிரட்சியுடன்.

    அவனாக அந்த புத்தகங்களை வலுக் கட்டாயமாக பார்த்தான். பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள்.அவற்றையும் அவளையும் மாறி மாறிபார்த்தான்.

    என்னடி இதெல்லாம் வீட்டில சும்மா தானே இருக்கேன்? கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் சேர்ந்து டிகிரி படிக்கிறேன்! என்றாள்.

    பளீர் என கன்னத்தில் அறைந்தான். நிலை தடுமாறினாள்.

    யாரை கேட்டு படிக்கிற? எனக்கு தெரியாம உன்னை யாரு திருட்டுத்தனமா படுக்கச் சொன்னா? படிப்பும்வேணாம்; மண்ணாங்கட்டியும் வேணாம். வீட்டில் ஒழுங்கு மரியாதையா, பொம்பளையா லட்சணமா இரு. இதையெல்லாம் தூக்கி அடுப்பில் போடு என்று கத்தினான்.

    கன்னத்தில் பட்ட அடியைவிட ,அவன் சொற்களால் இதயத்தில்விழுந்த அடி அவளை அதிகமாக கலங்க வைத்தது.

    வரதனுக்கு கம்பெனி ஒன்றில் வேலை. ஷிப்ட் சிஸ்டம்.பெரும்பாலும் ராத்திரி டூட்டிக்கு போய்விடுவான். நிம்மதியாக படிப்பாள்.

    கடிதப் போக்குவரத்து முழுக்க தோழியின் வீட்டு முகவரியில் வைத்துக்கொண்டு கணவனுக்கு தெரியாமல்படித்தாள்.

    இது இறுதி ஆண்டு.படிப்பு முடியும் தருவாயில் தெரிந்து விட்டது.

    மனைவி படிப்பதில் கணவனுக்கு பெருமை தானே! இவன் ஏன் மறுக்கிறான்?

    மனைவி தன்னை விட அதிகம் படிக்க கூடாது என்ற பொறாமையா? தாழ்வு மனப்பான்மையா? அப்படித்தான் இருக்கும். என நினைத்த அவள் கன்னத்தில் பதிந்த அவன் விரல்களை நிரடியபடி காபி கலந்து வந்து வைத்தாள்.

    அதை எடுத்துக்கொண்டு வராந்தாவின் நாற்காலியில் அமர்ந்தான். அருகில் வரிசையாய் குடித்தனங்கள்.

    வெளியே ஆட்டோ. அதிலிருந்து இறங்கினாள்அம்சா. அவள் பக்கத்து வீட்டுக்காரி.

    இனி நடக்கும் சண்டை வரதனுக்கு சுவாரஸ்யமான காட்சியாக அமையும். அவள் உள்ளே நுழைந்தாள்.அவள் கணவன் வரவேற்றான்.

    வாம்மா,பொண்டாட்டி!மணி என்ன?

    சாரிங்க. வேலை அதிகம். எம்.டி இருக்கச் சொன்னார். முடிச்சுட்டு வர தாமதம் ஆயிடுச்சு சோ, எ.ம்.டி என்ன சொன்னாலும் கேட்ப அப்படித்தானே ஏன் இப்படி எல்லாம் அபத்தமா பேசுறீங்க?

    நான் அபத்தமா பேசலடி. நீதான் அசிங்கமா நடந்துக்கிற. கண்டபடி திரிஞ்சிட்டு ,இஷ்டப்படி லேட்டா வர்ற. இது என்ன சத்திரமா, சாவடியா

    இத பாருங்க. இப்படி சந்தேகப்படுற வர் பொண்டாட்டிய வெளியில அனுப்பக்கூடாது. மாசமான சம்பள கவரை உங்க கிட்ட கொடுக்கனும். மாசு கற்பித்துபேசுவதையும் கேட்டுக்கணும், அப்படித்தானே? அம்சா கேட்க, அவள் கணவன் அறைந்தான்.

    அதிகம் படித்திருக்கோம், அதிகம் சம்பாதிக்கிறோம் என்ற திமிரில பேசறடி. சம்பாதிக்கரே என்பதற்காக உன் இஷ்டப்படி நடக்க நான் சம்மதிக்க மாட்டேன். மரியாதையா வேலையை ராஜினாமா பண்ணிடு என கோபத்தில் கத்தினான்.

    அவள் லேட்டாக வருவதும், அவர்களுக்குள் சண்டை நடப்பதும் வரதன் அடிக்கடி கேட்கிற ஒன்று. எழுந்து உள்ளே போனான்.வனஜா உர்ரென இருந்தாள். பக்கத்து வீட்டு பிரச்சினை காதில் விழுந்ததா ?அம்சா அவபுருஷனைவிட அதிகம் படித்தா. அதிகம் சம்பாதித்தா. வீட்டில் நிம்மதி இருக்கா, பார்த்தியா

    நீ கம்மியா படிச்சிருக்கன்னுதான் உன்னை கல்யாணமே பண்ணிக்கிட்டேன். நீ இன்னும் படிக்கிறது எனக்கு பிடிக்கலை. படிச்சு தான் என்னபண்ணபோற? இனி அதையே மறந்து விடு.என்றபடி காலி டம்ளரை நீட்டினான்.

    அதை அமைதியுடன் வாங்கிக் கொண்டாள் வனஜா. காலம் கரைந்தது, வேகமாய். அந்தப்பகுதி பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தாள் வனஜா. வரதன் அதற்கு ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை.

    அதுவரையில் மகிழ்ந்தாள். படிக்கிற காலத்தில் வகுப்பில் முதலாய் வருவாள். அவளை பிடித்து... படிப்பு என்றாலே வெறுக்கும் இவனுக்கு மனம் செய்து வைத்துவிட்டனர்.

    டியூசன் எடுப்பதில் ஏதோ மனதிருப்தி.

    இந்த சமயத்தில்தான்...

    வரதனின் கம்பெனியில் திடீர் வேலைநிறுத்தம் துவங்கியது. முடிவிற்கு வராமல் நீண்டுகொண்டே போனது. இவனும் அதற்கு.காரணமாக பாவித்து டிஸ்மிஸ் செய்தது...

    எனவே, பலர் போராட்டத்தில் குதித்தனர். துப்பாக்கி சூடு நடந்தது. வரதனுக்கு கால் போயிற்று. கம்பெனி நிரந்தரமாக மூடப்பட்டது.அவனது வருவாய் நின்றது. நிலைகுலைந்து போனான்.

    எதிர்காலம் பற்றிய கவலை அவனை பயமுறுத்தியது.வெறுமை சூழ்ந்தது. விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான். பல நாட்கள் இப்படியே திகைத்து, வழிதெரியாமல் அவன் தவித்தான்...

    அன்று அவனுக்கு காபி தந்துவிட்டு ஆறுதலாகபேச ஆரம்பித்தாள் வனஜா.

    வேலை இல்லையே ,வருமானம் இல்லையே. மனைவியை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று கவலைப் படாதீங்க! உங்க கண்டிப்பையும் மீறி உங்களுக்கு தெரியாம டிகிரி முடித்தேன். படிக்கும் ஆர்வம் தணியவில்லை. பி. எட்.டும் அஞ்சல் வழியில் படிச்சேன். பஸ்ட் கிளாஸ்ல பாஸ்.ஒரு பள்ளிக்கு விண்ணப்பம் போட்டு இருந்தேன். டீச்சர் வேலை கிடைத்திருக்கு. சேரப் போறேன். கடைசிவரை உங்களை கண் கலங்காம காப்பாத்துறது என்னோட கடமை. தெரியாம படிச்சதுக்கு மன்னிச்சிடுங்க. வேலையில் சேரப் போறேன் என்னை வாழ்த்துங்கள்!

    வனஜா பேசி நிறுத்த...அவன் நெகிழ்ந்தான்.கண்ணீர் வழிந்தது. அவள் துடைத்துவட்டாள். இனி என்றும் அவனை அழவிட மாட்டாள்.

    2. நிஜம் சுட்டது

    விமானத்தை விட்டு இறங்கினான் விவேகன். வரவேற்பறைக்கு

    வந்தான். உடன் ஒரு பெண் இருந்தாள்.உறவினர் காத்திருந்தனர்.

    மிக எளிமையான கசங்கிய ஆடைகளை அணிந்திருந்தான்.அதைக்

    கண்ட அவர்கள் முகம் சுளித்தனர்.

    படிப்பை முடித்து நன்கு பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் வெளிநாடு

    போயிருந்தான். ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. ஓரளவு சம்பாதித்ததும் நாடு திரும்பி விட்டான். உறவினர்கள் அவனை வரவேற்க காத்திருந்தனர்.

    ஆனால் அவனது கசங்கிய உடை எளிமையான தோற்றம் இவற்றை கண்டு முகம் சுளித்து, பாராமுகமாய் நின்றிருந்தனர். உடன் வந்த பெண் அவர்களின் செய்கையினை கண்டு வியப்படைந்தாள்.

    மிகவும் நாகரீகமற்று நடந்து கொள்கிறார்களே விவேக் வெட்கப்பட வேண்டிய விஷயம்! என்றாள்.

    கொஞ்சம் பொறு டார்லிங்! இவர்களின் செய்கையை...என்றவன் அருகில் இருந்த அறைக்குள் சென்று நல்ல உடை உடுத்தி வந்தான். சென்ட் அடித்துக் கொண்டான். இப்போது அவனை பார்க்க ஒரு சீமைத் துறையை போலவே இருந்தது.

    அவனது கம்பீரமான தோற்றம் கண்டு பலரது முகமும் மாறியது. அது எதையும் அறியாதவன் போல தன் பெட்டியைத் திறந்தான்.அதில் இருந்து ஒரு பேழையை எடுத்தான். அதில் ஒரு மோதிரம் இருந்தது. அது விலை உயர்ந்தது.

    நவரத்தின கற்கள் பதித்த அதை பேழையில் இருந்து எடுத்தான். எல்லோரும் அதை பார்க்கும் படி தன் விரல்களில் அணிந்துகொண்டான்.

    அதைக் கண்ட உறவினர்களின் முகம் தாமரை போல மலர்ந்தது. பலரும் அவனை கண்டு புன்னகை பூத்தனர்.அவனை முதலில் பார்த்தவர்கள் இந்த வெறும் பயலையா நாம் வரவேற்க வந்தோம்? என நினைத்தனர்.

    இப்போது அவனது உடை, நவரத்தின மோதிரம், அவனது பெட்டியில் இருந்த பணம்... அனைத்தையும் பார்த்து, எனக்கு அப்போதே தெரியும்! விவேகன் பெரிய பணக்காரனாக மாறுவான் என்று. நான் நினைத்தது எதுவும் வீண் போகவில்லை என கூறினர்.

    இன்னொரு உறவினன், அமெரிக்காவிலிருந்து மிகவும் எளிய தோற்றத்தில் வந்து இறங்கிய போதே நினைத்தேன் விவேக், உனக்கு தன்னடக்கம் அதிகம் என்றார்.

    தேனை சுற்றிவரும் வண்டுகளை போல அவனை உறவினர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவராய் அவனது கையைப் பற்றிக் குலுக்கி நலம் விசாரித்தனர். அன்பையும் பகிர்ந்து கொண்டனர். உற்சாகத்தை வெளிப்படுத்தி, விவேகன் !தாங்கள் எனது இல்லம் வரவேண்டும். தங்களுக்கு இன்று தடபுடலான விருந்து தர முடிவு செய்து இருக்கிறோம் என்று உற்சாகமாக கூறினர்.

    பார்த்தீர்களா! மனிதருக்கு இல்லாத மதிப்பு ரத்தினகற்களுக்கும், கரன்சி கட்டுகளுக்கும் தான் இருக்கிறது. அது தான் மனதை மயக்கும் மந்திரமா? எனக்கேட்டாள். விவேகநுடன் வந்த அமெரிக்கப் பெண்.

    இல்லை டார்லிங்! இது பணம் உலகம். இதில் மன உலகம் என்பது மிக குறுகியது.

    என்னிடம் உள்ள இந்த மோதிரத்தில் இருந்தே...என்னிடம் வசதி

    இருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டனர். பணம்தான் இவர்களின் இஸ்ட தெய்வம்! என்றான். அதற்கு அந்த பெண்ணான விவேகநின் அமெரிக்க மனைவி சொன்னாள்,

    ஆமாம், டியர்! பணத்தை கடவுளாக மதித்து நினைப்பவர்களிடம் பண்போ பகுத்தறிவு இருப்பதில்லை. சொர்க்கத்திற்கு பணத்தை மட்டுமே சேர்ப்பவர்கள் வாழ்க்கையின் முடிவில் நரகத்தை அடைவார்கள் என்றாள்.

    அவள் சொன்ன கருத்தை தமிழில் சொன்னால் விவேகன். அங்கு நின்ற அனைவரையும் அவள் சொன்ன வார்த்தையில் இருந்த நிஜம் சுட்டது. அனைவரும் தலை குனிந்தநர். நிமிர்ந்து வாழ முடிவுசெய்தனர். அங்கிருந்து புறப்பட்டனர்...

    3. பணமும் பண்பும்

    ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.அதற்குள் டிக்கெட் வாங்கி விட வேண்டும்! பணம் எடுக்க கையை வைத்தான் பாபு. பகீரென்றது.வைத்த இடத்தில் பணம் இல்லை...

    எங்கே போயிருக்கும்? என்ன ஆகியிருக்கும்?;

    நடந்ததை எல்லாம் ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். நள்ளிரவு. ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. பாபு மட்டும்தான் விழித்திருந்தான். காரணம் அவன் ஒரு திட்டம் வைத்திருந்தான்...

    ஓசை வராமல் எழுந்தான். எஜமானனின் அறையை எட்டிப் பார்த்தான். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.துணிச்சலுடன் கட்டிலை நெருங்கினான். குறட்டைச் சத்தம் இப்போது அதிகமாக கேட்டது. தலையணையின் அடியில் கையை விட்டான்.கொத்து சாவி இருந்தது. அலுங்காமல் எடுத்துக்கொண்டான். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் இருக்குமிடம் அவனுக்கு தெரியும்.

    அந்த வீட்டில் அவன் பத்து ஆண்டுகளாக வேலை பார்க்கிறான். எனவே எல்லாஇடமும் பழக்கப்பட்ட இடமாக இருந்தது. இரும்பு லாக்கரின் பூட்டுக்குள்ளே சாவியை நுழைத்தான். சிரமமின்றி திறந்துகொண்டது.

    விடி விளக்கின் வெளிச்சத்தில் கட்டுக்கட்டாய் பணம் இருந்தது.புத்தம் புது நோட்டு கட்டுகள். அனைத்தும் வாசனையாய் இருந்தது. 500 ரூபாய் கட்டுகளில் இரண்டை எடுத்துக் கொண்டான். கதவை மூட போனவன், கையை விட்டான்.

    விலையுயர்ந்த பட்டாடைகள் இருந்தன. எஜமான் அணியும் ஆடைகள் அவை. தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக்கொண்டான். அழுக்கான சட்டை.வெளுக்காத வேட்டி. என்ன அவலமான உடை இது,!

    நாமும்தான் நல்ல ஆடை அணிந்து பார்க்கலாமே? என்ற நப்பாசை

    தோன்றியது. பளபளக்கும் ஆடையில் ஒன்றை எடுத்துக்கொண்டான். கதவை பூட்டிவிட்டு நடந்தான். வெளியே வந்தான். எங்கும் இருட்டு.எட்டிய தூரம் வரை ஆளரவம் ஏதும் இல்லை. வேகமாக நடந்தால் தன் ஊருக்குப் போகும் ரயிலை பிடித்து விடலாம். உழைத்து கிடைக்கும் பணத்தைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பணம்தான் நம்மை குபேரனாக்கும்! என

    Enjoying the preview?
    Page 1 of 1