Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaleidoscope Kadhaigal
Kaleidoscope Kadhaigal
Kaleidoscope Kadhaigal
Ebook179 pages1 hour

Kaleidoscope Kadhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல், சமூகம், குடும்பம் பற்றிய கருத்துகளை விதவிதமான கண்ணோட்டங்களில் எனது அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. படித்துப் பாருங்கள்.

புவனா சந்திரசேகரன்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144607141
Kaleidoscope Kadhaigal

Read more from Puvana Chandrashekaran

Related to Kaleidoscope Kadhaigal

Related ebooks

Reviews for Kaleidoscope Kadhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaleidoscope Kadhaigal - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    கலைடாஸ்கோப் கதைகள்

    Kaleidoscope Kadhaigal

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குற்றம் பார்க்கின் சுற்றிலும் பார்!

    அம்மா தான் என் சொத்து

    குறிஞ்சி மலர் இவளோ!

    சாம்பல் பறவை

    சந்தேகப் பேய்

    கோணல் பார்வை

    ஜாதி மல்லிப் பூவே!

    இருளுக்குப் பின் விடியல் உண்டு

    புத்தக வாசனை

    நறுமணம் வீசுதொரு நறுமுல்லை

    மலர் வேண்டா நந்தவனம்

    நானும் ஒரு தாய்!

    அரிதாரம் பூசிய அவதாரங்கள்

    நியாயமான அநியாயம்

    மலரொன்று முள்ளானது!

    பூ மன(ண)ம் மாறுமோ?

    தாத்தாவின் தாண்டவம்

    இடுக்கண் களைவதாம் நட்பு

    குற்றம் பார்க்கின் சுற்றிலும் பார்!

    விரைந்து சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஸடன் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது. ஒரே சத்தம். எல்லோரும் எழுந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

    ஒரு இளம்பெண் காச்மூச்சென்று கத்திக் கொண்டிருந்தாள். பார்க்க நன்றாக இருந்தாள். நல்ல மாடர்ன் டிரஸ் போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு ஆடவனின் சட்டை காலரைப் பிடித்து உலுக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

    அவன் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் அவனது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய, அவன் கன்னம் பழுத்துக் கொண்டிருந்தது.

    என்னம்மா ஆச்சு? எதுக்கு அடிக்கிறே இப்படி

    கூட்டம் வினவியது.

    "எத்தனை பேர் இப்படிக் கிளம்பிருக்கீங்க.

    அக்கா, தங்கச்சி கூடப் பொறக்கலையா?

    பஸ்ஸில் வர பொம்பளை மேலேயே கை வச்சு, இப்படித்தான் மோசமா நடப்பியா? இவனை நான் சும்மா விடப் போறதில்ல. டிரைவர் சார், பஸ்ஸை நேரா பக்கத்தில் இருக்கற போலிஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க. இவன் பேரில ஈவ் டீஸிங் கேஸ் போட்டு கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன். இவனை

    மாதிரி ஆளுங்களுக்குத் தண்டனை வாங்கி தந்தாத்தான் எல்லோருக்கும் பயம் வரும்.

    நான் ஒண்ணும் அநியாயம் நடக்கறதைப்

    பாத்து கண்ணை மூடிக்கொண்டு போற

    பொண்ணு இல்லை. இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்துட்டுத் தான்

    மறுவேலை."

    கத்தி ஓய்ந்தாள் அவள்.

    உடனே கூட்டத்தில் இருந்த எல்லோரும் அந்த ஆணுக்கு ஆளுக்கு ரெண்டு தர்ம அடி போட, அவன் சட்டை கிழிந்து வாயிலிருந்து கன்னம் முகத்தில் இருந்து எல்லாம் ஒரே ரத்தக் கறை. பரிதாபமாக இருந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    அப்போது மிடுக்கான உடையுடன் ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்தாள். கீழே விழுந்த அந்தப் பையனைத் தூக்கி நிறுத்தினாள்.

    அந்தப் பெண் பக்கம் திரும்பி, அவளை ஓங்கி ஓர் அடி பளார் என்று கன்னத்தில்

    அறைந்தாள்.

    என்னடி, என் எதிரில் உன் வேலையைக் காட்டறயா? இன்னிக்கு உனக்கு இவன் தான் பலிகடாவா? என்று உறுமினாள்.

    சுத்தமாக யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

    நான் தான் ஏ ஸி பி கிரண். ஸ்பெஷல் ஆஃபிஸர்

    தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டிய பின்னர், அந்தப் பெண்ணின் கைகளில் கைவிலங்குகளை எடுத்து மாட்டினாள் மஃப்டியில் வந்த அந்தப் பெண் போலீஸ் அதிகாரி.

    "இந்தப் பெண் ஒவ்வொரு நாளும் ஒரு பஸ்ஸில் ஏறி யாராவது அப்பாவியா ஒருத்தன் மேல் பழிபோட்டு அவனை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் வழக்கமுடையவள். பணம் பறிக்க முடியலைன்னா அவன் மேல் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விட்டுப் போய்க் கொண்டேயிருப்பாள். இந்தக் கலவரத்தில் எல்லோரும் வேடிக்கை பார்க்கும் பொழுது நிறையப் பேர் பர்ஸ்கள் மற்றைய உடைமைகள் களவு போகும்.

    அதற்காகவே ஒரு கும்பல் இவள் கூட பஸ்ஸில் ஏறிவருவார்கள்".

    உடனே எல்லோரும் தங்களது பேண்ட் மற்றும் ஷர்ட் பாக்கெட்டைப் பார்க்க அவர்களுக்குப் பகீரென்று இருந்தது.

    பர்ஸ் காணோம் என்று அங்கிருந்தவர்கள் கத்த, கூட்டத்தில் மஃப்டியில் இருந்த நான்கு போலிஸ் அதிகாரிகள் நான்கைந்து வாலிபர்களை இழுத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் பேக்கில் இருந்து பல பர்ஸ்கள் வெளியே வந்தன.

    எல்லோரும் ஸ்டேஷனில் வந்து கையெழுத்துப் போட்டு விட்டு பர்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

    கிரண் ஐ.பி.எஸ் அறிவிக்க எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    "இனிமேலாவது நீங்கள் பஸ்ஸில் ஏதாவது தகராறுன்னா உண்மை தெரியாமல்

    யாரையும் தண்டிக்க வேண்டாம். ஓர் அப்பாவி இளைஞனை இதே மாதிரி போன வாரம் எல்லோருமாக் குத்தம் சாத்த, அவனோட வீட்டில இருந்தவங்க எல்லாரும் தலைகுனிஞ்சு நின்னாங்க.

    அவன் தற்கொலை முயற்சி செஞ்சு நல்ல வேளை காப்பாத்தப்பட்டான். அந்த கேஸைப் பத்தி விசாரணை செஞ்ச நான் இந்த கும்பலைப் பத்தின விவரங்களைச் சேகரிச்சு இவங்களை வலை விரிச்சுப்பிடிச்சேன். நான் அதுக்காக தைர்யமாக எதுத்து நிக்கற பெண்கள் எல்லாருமே தவறானவங்கன்னு சொல்லலை‌. அதே மாதிரி எல்லாஆண்களும் பெண்களிடம் தவறான முறையில் நடப்ந்துக்குவாங்கன்னு சட்டுன்னு முடிவு செய்ய வேண்டாம்".

    கூட்டத்தில் இருந்த மக்கள் ஒரு புதிய பாடம்

    கற்ற திருப்தியுடன் தங்களது அடுத்த வேலையை கவனிக்கச் சென்றனர்.

    அம்மா தான் என் சொத்து

    பாரதி பள்ளியில் இருந்து திரும்ப வந்தவுடன் மாமியார் ஜானகிக்கு காஃபி போட்டுக் கொடுத்து விட்டுத் தானும் காஃபி கப்புடன் அமர்ந்தாள். காஃபி மட்டும் சூடாகக் குடித்து விட்டுத் தான் அடுத்த வேலை. புடவை மாற்றிக் கொண்டு முகம், கை, காலில் குளிர்ந்த தண்ணீரைக் கொட்டிக் கொண்டால் தான் கொஞ்சமாவது புத்துணர்ச்சி கிடைக்கிற மாதிரி இருக்கும்.

    சமையலறையில் நுழைந்தால் வேலை சரியாக இருக்கும். ராத்திரி உணவு செய்து முடித்து விட்டு முதலில் மாமியாருக்கும் குழந்தை பல்லவிக்கும் கொடுத்து விட்டுப் பின்னர் தான் பாரதியும் அவளது கணவர் ஆதித்தனும் உண்பார்கள்.

    இரவு உணவு முடிந்ததும் சமையலறையை சுத்தம் செய்து விட்டு அடுத்த நாள் காலை சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுவாள். நடுவில் பல்லவி ஸ்கூல் ஹோம்வொர்க் செய்ய உதவி செய்ய வேண்டும்.

    ஆதித்தன் தனது அம்மாவின் அருகில் அமர்ந்து அவருக்குத் தேவையான வேலைகளை கவனித்துக் கொள்வான்.

    இரண்டு பேருமே ஆசிரியர்களாக வேலை செய்வதால் சில சமயம் விடைத்தாள் திருத்தும் வேலை, வினாத்தாள் தயார் செய்யும் வேலை என்று அதுவும் இருக்கும்.

    எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் படுக்க எப்படியும் இரவு பதினோரு மணி ஆகி விடும். அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வேலை ஆரம்பித்தால் காலை உணவு, மதிய உணவு எல்லோர்க்கும் தயார் செய்து துணிகளைத்

    தோய்த்து உலர்த்தி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அரக்கப் பரக்க ஸ்கூலுக்கு ஓடத்தான் நேரம் சரியாக இருக்கும்.

    மாமியார் கொஞ்சம் உடல் தளரந்து போய் விட்டார். வயதானதால் தான். வேறு ஒன்றும் பெரிய கோளாறு எல்லாம் இல்லை. முழங்கால் முட்டி தேய்ந்து போய் விட்டதால் கொஞ்சம் நடக்கக் கஷ்டப் படுவார்.மற்றபடி வீட்டில் தனியாக இருந்து கொள்வார்.

    மதிய நேரம் வீட்டு வேலை செய்யும் லக்ஷ்மி வந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாமியார் ஜானகிக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டுக் கொஞ்ச நேரம் பேச்சுத் துணைக்கு இருந்து விட்டுப் போவாள்.

    பாரதி வேலை பார்க்கும் ஸ்கூலும் வீட்டுக்குப் பக்கத்தில் என்பதால் மாலை ஸ்கூல் முடிந்த உடனே வீட்டுக்கு வந்து விடுவாள். கணவன்,மனைவி இருவருமே மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இருவரும் வேறு வேறு பள்ளியில் வேலை பார்க்கிறார்கள்.

    ஆதித்தன் வேலை செய்யும் பள்ளி கொஞ்சம் தள்ளி இருக்கிறது. பாரதியின் பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து

    குடியேறினார்கள். சில உறவினர்களும் அருகில் இருப்பதால் தேவைப் படும் போது

    வந்து ஜானகியுடன் ஆற அமர்ந்து பேசி விட்டுப் போவார்கள்.

    ஆதித்தனுடன் கூடப் பிறந்த அக்காக்கள் மூவர். மும்பை, சென்னை, கோயம்புத்தூர் என்று வேறு வேறு இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    கணவர் இறந்த பின் அவர்கள் வீட்டுக்குத்

    தனியாக செல்வதை ஜானகி அவ்வளவு விரும்புவதில்லை. ஆதித்தன் கூடவே இருப்பதைத் தான் விரும்புவாள்.

    பெண்கள் வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் போக மாட்டாள். அவர்களுக்கும் அது வருத்தம் தான். இப்போது ஜானகிக்கு உடம்பும் ஆய்ந்து ஓய்ந்து வருகிறது.

    பாரதி வேலை முடிந்ததா? இங்கே வா. முக்கியமான விஷயம் பேச வேண்டும்

    என்னங்க? என்ன ஆச்சு? அப்படி என்ன முக்கியமான விஷயம்?

    "என் கூட வேலை செய்யற டீச்சர் கண்ணன் ஒரு விஷயம் சொன்னார். இப்பல்லாம் வெளிநாட்டில் ஆசிரியர்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்காம். அதுவும் உன்னை மாதிரி ஸயன்ஸ் டீச்சர் அப்புறம் என்னை மாதிரி மேத்ஸ் டீச்சருக்கும் அப்ளை செஞ்சா உடனே நல்ல இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமாம். நாம ரெண்டு பேருக்குமே நல்ல கல்வித் தகுதியும் நல்ல எக்ஸ்பீரியன்ஸும் இருக்கு. நாலு அல்லது அஞ்சு வருஷங்கள் வேலை பாத்துப்

    பணம் சேத்துக்கிட்டுத் திரும்பி வந்தா

    நாம் சொந்த வீடு, பேங்க் பேலன்ஸுடன் நிம்மதியாக வாழ்க்கைமில ஸெட்டில் ஆயிடலாம். குழந்தை பல்லவியும் இப்ப சின்ன க்ளாஸ்ங்கறதுனால அவளோட படிப்புக்கும் எந்த இடையூறும் இருக்காது. நீ என்ன நினைக்கிறே இதைப் பத்தி?"

    எப்படிங்க நாம போக முடியும்? அம்மா என்ன செய்வாங்க? தனியாக விட்டுட்டும் போக முடியாது. கூட்டிக்கிட்டும் போக முடியாது.

    "அக்கா யார் கிட்டயாவது பேசிப் பாக்கலாம்.

    மூணு பேர் கூடயும் அம்மா மாறி மாறி இருந்தா, நாம திரும்பி வந்ததும் கூட்டிட்டு வந்துடலாம்"

    இல்லைங்க. அம்மாவுக்கு மனசுக்குப் பிடிக்காது. எத்தனையோ தடவை அவங்க கூப்பிட்டும் அம்மா போக மறுத்துட்டாங்க

    "அப்படின்னா கோயம்புத்தூர் பக்கம் ஒரு நல்ல முதியோர் இல்லம் இருக்கு. பணம்

    கட்டிட்டா நல்லாப் பாத்துக்கிறாங்களாம்."

    அய்யய்யோ என்னங்க இது? நம்ப அம்மாவைப் போய் முதியோர் இல்லத்தில் விடலாம் என்று எப்படி உங்களால யோசிக்க முடியுது? எனக்குப் பிடிக்கவேயில்லை.

    "வேற என்ன தான் செய்யறது? நல்ல வாய்ப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1