Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனிதமும் அறியாமையும்
மனிதமும் அறியாமையும்
மனிதமும் அறியாமையும்
Ebook133 pages58 minutes

மனிதமும் அறியாமையும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனக்குத் தோன்றிய அறிவியல் கற்பனைகளுக்கு விடை தேடிய ஒரு அனுபவமே இந்தப் புத்தகம். இக்கதையை ஒரு பெண், அவளுடைய வாழ்க்கை அனுபவத்தை கூறுவதுபோல் வடிவமைத்துள்ளேன். எப்போதும் பெண் பிள்ளைகள் அவர்களுடைய அப்பாவிடம், குறும்புத்தனமாக கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது மிகவும் கடினமாக இருக்கும். இக்கதையின் நாயகி அவளுடைய அப்பா, அம்மாவிடம் குறும்புத்தனமான கேள்விகளை கேட்கிறார். அவர்களும், அவளுடைய வயதுக்கு ஏற்ப பக்குவமாக பதில்களை சொல்கிறார்கள். இக்கதையை அனைவருக்கும் புரிவது போல் எழுத முயற்சித்து உள்ளேன்.

Languageதமிழ்
PublisherPencil
Release dateFeb 8, 2021
ISBN9789354384806
மனிதமும் அறியாமையும்

Related to மனிதமும் அறியாமையும்

Related ebooks

Reviews for மனிதமும் அறியாமையும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனிதமும் அறியாமையும் - ச.மணிவாசகம்

    மனிதமும் அறியாமையும்

    BY

    ச.மணிவாசகம்


    pencil-logo

    ISBN 9789354384806

    © ச.மணிவாசகம் 2020

    Published in India 2020 by Pencil

    A brand of

    One Point Six Technologies Pvt. Ltd.

    123, Building J2, Shram Seva Premises,

    Wadala Truck Terminal, Wadala (E)

    Mumbai 400037, Maharashtra, INDIA

    E connect@thepencilapp.com

    W www.thepencilapp.com

    All rights reserved worldwide

    No part of this publication may be reproduced, stored in or introduced into a retrieval system, or transmitted, in any form, or by any means (electronic, mechanical, photocopying, recording or otherwise), without the prior written permission of the Publisher. Any person who commits an unauthorized act in relation to this publication can be liable to criminal prosecution and civil claims for damages.

    DISCLAIMER: The opinions expressed in this book are those of the authors and do not purport to reflect the views of the Publisher.

    ஆசிரியர் வாழ்க்கை வரலாறு

    My name is Manivasagam S. I am a ship engineer. I was born in 1990 in Kandachimangalam village. This book is the answer to the questions that occurred to me.  This book is the answer to adding to the things I know.

    என்

    பெயர் மணிவாசகம். நான் ஒரு கப்பல் இன்ஜினியர். நான் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் 1990 இல் பிறந்தேன். இந்த புத்தகம் எனக்கு தோன்றிய கேள்விகளுக்கான விடை. எனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சேர்ப்பதற்கான பதில் தான் இந்த புத்தகம்.

    பொருளடக்கம்

    மனிதமும் அறியாமையும்

    மனிதமும் அறியாமையும்

    நமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் மருத்துவர் வழக்கறிஞர் காவலர் பொறியாளர் போதகர் தேவைப்படுவார்கள். ஆனால் நம் வாழ்க்கையில் தினமும் மூன்று வேளை விவசாயிதான் தேவைப்படுகிறார்.

    முட்டாள்தனத்தின் உச்சம் தான் அறிவியல்

    மூட நம்பிக்கையின் உச்சம் தான் பக்தி.

    Copy Rights @ Manivasagam S

    Email Id: best.manivasagam@gmail.com

     நிபந்தனைகள்

    இக்கதையில் வரும் கதாபாத்திரம் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய கற்பனைகளே. யாரையும் எதையும் குறிப்பிட்டு எழுதவில்லை. இதற்காக யாரும் நீதிமன்றம் செல்ல வேண்டாம். ஆள் வைத்து மிரட்ட வேண்டாம். நடு இரவில் தொலைபேசியில் அழைத்து திட்ட வேண்டாம். என்னுடைய கற்பனைகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறேன். வேறு எதையும் இக்கதையில் குறிப்பிடவில்லை. நான் ஒரு சாதாரண கப்பல் பொறியாளர். என்னுடைய கற்பனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கதையாக வடிவமைத்து இருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

    அறிமுகவுரை

    எனக்குத் தோன்றிய அறிவியல் கற்பனைகளுக்கு விடை தேடிய ஒரு அனுபவமே இந்தப் புத்தகம். இக்கதையை ஒரு பெண், அவளுடைய வாழ்க்கை அனுபவத்தை கூறுவதுபோல் வடிவமைத்துள்ளேன். எப்போதும் பெண் பிள்ளைகள் அவர்களுடைய அப்பாவிடம், குறும்புத்தனமாக கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது மிகவும் கடினமாக இருக்கும். இக்கதையின் நாயகி அவளுடைய அப்பா, அம்மாவிடம் குறும்புத்தனமான கேள்விகளை கேட்கிறார். அவர்களும், அவளுடைய வயதுக்கு ஏற்ப பக்குவமாக பதில்களை சொல்கிறார்கள். இக்கதையை அனைவருக்கும் புரிவது போல் எழுத முயற்சித்து உள்ளேன். இக்கதையில் வரும் அப்பா தன்னுடைய மகளுக்கு வாழ்க்கையைப் பற்றிய, பொதுவான அறிவை தெளிவுபடுத்துகிறார்.

     கருத்து சுதந்திரம்

    நம் வீட்டில் என்ன வகையான மின்சாரம் உபயோகிக்கிறோம் என்று ஆரம்பித்து, நெருப்பு எரிவதற்கு என்னென்ன தேவை, அவற்றை எப்படி அணைப்பது? டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, அயன் பாக்ஸ், வாட்டர் மோட்டார் பம்ப், இண்டக்ஷன் அடுப்பு மற்றும் கேஸ் அடுப்பு போன்ற அனைத்தும் எதன் அடிப்படையில் இயங்குகிறது? எப்படி இயங்குகிறது? அதனுடைய வேலைப்பாடுகள் என்ன என்று யோசித்து தேடுங்கள். குழந்தைகளை விளம்பரப் படம் பார்க்க அனுமதிக்காதீர்கள். கப்பல் எப்படி மிதக்கிறது? விமானம் எப்படி பறக்கிறது? பஸ் எப்படி எதனால் ஓடுகிறது? வீட்டில் உபயோகிக்கும் பேட்டரியுடன் எதற்காக இன்வெர்ட்டர் வைத்திருக்கிறார்கள்? டிவி ரிமோட் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது? எதற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். படிப்பறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமா? வெஸ்டன் டாய்லெட் எப்படி உபயோகிப்பது என்பதை கற்றுக் கொடுங்கள். கடவுள், பேய் மற்றும் நோய் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் என்ன என்று யோசியுங்கள்?

     A FOR APPLE (ஏ ஃபார் ஆப்ப்ள்) என்று ஆங்கிலம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கு கவனித்தீர்களா? APPLE (ஆப்ப்ள்) என்ற வார்த்தையில் A உடைய உச்சரிப்பு என்று உச்சரிக்காமல் என்று உச்சரிக்கிறது. எதற்காக ஏப்ப்ள் என்று சொல்லித் தராமல் ஆப்ப்ள் என்று சொல்லித் தருகிறார்கள்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடிப் பாருங்கள்.

    மனிதமும்                         அறியாமையும்

     வணக்கம் என் பெயர் நிவெகா வாநீ. என் வாழ்க்கையில் அம்மாவுடைய பாசமும் அப்பாவுடைய பாதுகாப்பும், ஒரு சேர கிடைத்தது. என்னுடைய அப்பா எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியவில்லை. சிறுவயதில் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம், நமக்காக உன்னுடைய அப்பா காலத்தை கடந்து வந்திருக்கிறார் என்பார்கள். ஆனால் கல்லூரி முடித்து ஒரு ஆண்டிற்கு பிறகு தான், அப்பா யார் என்று, எங்கிருந்து வந்தார் என்றும் கூறினார்கள் அம்மா.

    அப்பா ஒரு சிறந்த விவசாயி. இயற்கையை அதிகமாக ரசிப்பார். எங்கள் குடும்பத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே, அவர் விளைவிப்பார். ஒரு சில சமயங்களில் மட்டும் பழங்காலத்து மனிதர் போல் பேசுவார். ஆனால் நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொண்டு, காலத்திற்கு தகுந்தார்போல் வாழ்ந்தார். அவர் வயலில் வேலை செய்யும் நேரம் தவிர மீதமுள்ள நேரத்தை எங்களுடனே கழிப்பார். என்னையும் அம்மாவையும் தவிர வேறு யாரிடமும் அதிகம் பேச மாட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தன் குடும்பம், தன் வேலை என்று இருப்பார். எனக்கு இரவில் தூக்கம் வராத நாட்களில், கதை சொல்லித் தூங்க வைப்பார். நான் எந்த கேள்வி கேட்டாலும் அப்பாவிடம் பதில் இருக்கும். ஆனால் ஒரு கேள்வியை தவிர.

    ஒரு நாள் அப்பாவிடம், எனக்குத் தோன்றிய வித்தியாசமான கேள்வி ஒன்றை கேட்டேன். அப்பா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் நினைத்தது போன்று மரணம் அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்களுடைய மரணம் எப்படி அமைய வேண்டும் என்று நினைத்து இருக்கிறீர்களா? நான் இப்படி ஒரு கேள்வி கேட்பேன் என்று சற்றும் எதிர்பாராத அப்பா, என்னைப் பார்த்து சிறிது யோசித்தார். பிறகு அம்மாவை பார்த்து பதில் கூற ஆரம்பித்தார். ஒரு பெண் ஆபத்தில் இருக்கும் போது அவர்களை காப்பாற்றும் முயற்சியில் நான் மரணிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நிவெகா வாநீ, என்று கூறியதும் அம்மாவின் முகம் வருத்தமாக மாறியது. பிறகு அங்கிருந்து அம்மா வேகமாக கிளம்பியதும், அப்பாவும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று விட்டார். இவர்கள் இருவரும் வேகமாக கிளம்பியதும் நான் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றேன். எதற்காக அப்பா, அம்மாவை பார்த்து இப்படி ஒரு பதிலை கூறினார்?.. அப்பா கூறியதைக் கேட்டதும், ஏன் அம்மா வருத்தமாக கிளம்பிச் சென்றார்கள்?.. என்று யோசித்துக் கொண்டே நானும் அங்கிருந்து கிளம்பி சென்றேன்.

    ஒரு நாள் அப்பா வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் வேகமாகவும் பதட்டத்துடனும் வந்தார், அப்பாவிடம் கைபேசியை கேட்டார். யாரிடமோ பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இதை கவனித்துக் கொண்டிருந்த நான் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அப்பாவை பார்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1