Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - Apri 2019
Kanaiyazhi - Apri 2019
Kanaiyazhi - Apri 2019
Ebook206 pages1 hour

Kanaiyazhi - Apri 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

April 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109504196
Kanaiyazhi - Apri 2019

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - Apri 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - Apri 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - Apri 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஏப்ரல் 2019

    மலர்: 54 இதழ்: 01 ஏப்ரல் 2019

    Kanaiyazhi April 2019

    Malar: 54 Idhazh: 01 April 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, ஏப்ரல் 2019

    தலையங்கம் - ம.ரா.

    விட்ருங்கண்ணே.... விட்ருங்க...!

    இணைய உலகம் தொடங்கி

    எல்லா நாடுகளிலும்

    கிழிபடுகின்றன

    மனசாட்சிக் காதுகள்!

    சௌக்கிதார் அதிகாரத்தில்

    ரபேல் விமான ஆவணங்கள்

    களவு போகிறது தில்லியில்!

    எடப்பாடி அதிகாரத்தில்

    பாலியல் வன்கொடுமைப்

    புகார் கொடுத்த பெண்

    ஊடக வெளிச்சத்தில்!

    அதாகப்பட்டது கண்ணுகளா

    நிர்மலாதேவி வெளியே வர

    விட்ருங்கண்ணே… விட்ருங்க…

    பொள்ளாச்சிக் கதறல்

    ஜாமீன் கொடுக்கிறது!

    வயதுக்கு வந்தபின்

    திருமணம் வரையில்

    வீட்டுக்கு வெளியே

    தலைகாட்ட முடியாமல்

    தலைமுறை தலைமுறையாகத்

    தடுக்கப்பட்டவர்கள்

    கல்விக் கூடங்களில்

    விடுதலை உணர்வைச்

    சுவாசிக்க வந்தார்களே-

    சாதியும் பிறப்புமான

    கல்வி உரிமையைக்

    கடந்து வந்து

    கற்க நினைத்தார்களே-

    அவர்களைப்

    பாலியல் வியாபாரத்திற்குப்

    பலியாக்கி இருக்கிறார்களே!

    மெய் வாய் கண் மூக்கு செவி எனும்

    ஐம்புல அறிவின்

    பசி தீர்க்க வந்தவர்கள்

    உடல்பசி அரக்கர்களுக்கு

    உயிர் விருந்தாய் ஆனார்களே!

    பாலியல் ஈர்ப்பில்

    தடுமாறிய அப்பாவிகளைப்

    பணம் சம்பாதிக்கப்

    பயன்படுத்திக் கொண்டார்களே!

    அரசியல் தரகர்கள்

    பணம் சம்பாதிக்க

    ஆயிரம் வழிகள் இருந்தும்

    சமுதாய நம்பிக்கையை

    அம்மணமாக்கி விட்டார்களே!

    திருவள்ளுவர் சொல்கிறார்

    மலரினும் மெல்லிது காமமாம்!

    இவ்வளவுக்கு வளர்ந்தபின்பும்

    தமிழக மண்ணில்

    ஆதிமனித அராஜகமா?

    இதோ! வந்துவிட்டது தேர்தலும்!

    தேர்தல் என்பது

    ஆட்சி செய்வதற்குக்

    கட்சியைத் தேர்ந்தெடுப்பதல்ல

    இந்திய அரசமைப்புச் சட்டப்படி

    நிருவாகம் செய்வதற்கு

    ஆட்களைத் தேர்ந்தெடுப்பது!

    சட்டம் ஒழுங்கையும்

    மக்களின் உரிமைகளையும்

    வாழ்க்கையையும்

    காப்பாற்றுவீர்கள் என்று

    நம்பித்தானே வாக்களித்தார்கள்.

    கூடன் குளத்தில் மீத்தேன் எடுப்பில்

    இயற்கையை வன்முறைக்கு

    இரையாக்கலாமா?

    எல்லோரும்

    இந்நாட்டு மன்னர்கள் என்பதால்

    அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்போம்

    வாருங்கள் என்று

    வாக்களித்த மக்களின்

    வாழ்வாதாரத்தைப் பறிக்கலாமா?

    தேர்தல் திருவிழாவில்

    தொலைந்து போகாமல்

    கையில் இருக்கிற வாக்கைக்

    காப்பாற்ற நினைப்பவர்களைக்

    காசு பணம் ஊடகம்

    கண் அடைக்க விடலாமா?

    வாக்களிப்பது நம்கடமை என்று

    வாழும் தலைமுறையும்

    வளரும் தலைமுறையும்

    நம்பிக்கை பெற

    கைவிரலில் மையேற்கக்

    காத்திருக்கும் மக்களிடம்

    காசு பணம் அடியாட்கள்

    கைநீளம் காட்டலாமா?

    வாக்களிப்பது

    வாழ்வதன் பதிவு என்றும்

    காலத்திற்குச் செய்யும்

    கடமை இது என்றும்

    நம்பி வாக்களித்தவர்களைத்

    தூத்துக்குடியில்

    நடுத்தெருவில் சுடலாமா?

    வார்த்தைகளை நம்பி

    வாழ்க்கையைத்

    தொலைக்கிறார்கள்!

    அன்பான முகத்திற்குள்

    அரக்க மனம் தெரியாமல்

    கூப்பிட்ட இடத்துக்கெல்லாம்

    கூட வருகிறார்கள்!

    காட்டியது அன்பு

    விதைத்து நம்பிக்கை

    விளைச்சலில் துரோகமா?

    யாரோடு கூட்டாக

    எப்போது வந்தாலும்

    ஏனென்று கேட்காமல்

    எதிர்த்தொன்றும் பேசாமல்

    நட்பென்று வருகிறார்கள்

    நம்பிக்கையைக் கெடுக்கலாமா?

    இது

    பொள்ளாச்சிக்கும் தேர்தலுக்கும்

    பொதுவான வேண்டுகோள்!

    விட்ருங்கண்ணே… விட்ருங்க…!!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - மதுரை சரவணன்

    மீரா மீனாக்‌ஷி கவிதைகள்

    கட்டுரை - ஆனந்த் அமலதாஸ் சே.ச.

    சிறுகதை - அமுதா ஆர்த்தி

    கட்டுரை - பா. செயப்பிரகாசம்

    கவிதை - வி.எஸ். முஹம்மத் அமீன்

    சிறுகதை - தேவிகா கருணாகரன்

    பகடி - திருவிளையாடல் தருமி

    கவிதை - இரா. மதிபாலா

    கட்டுரை - அகரமுதல்வன்

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    தங்கேஸ் கவிதைகள்

    கட்டுரை - முனைவர் எஸ். சாந்தினிபீ

    சிறுகதை - ஹாலாஸ்யன்

    கட்டுரை - ராம்முரளி

    கட்டுரை - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    ஏன் எழுதினேன்? - அரிசங்கர்

    கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி

    ***

    கட்டுரை - மதுரை சரவணன்

    எங்கிருந்து ஆரம்பிப்பது?

    பொள்ளாச்சி சம்பவம் குறித்துக் கேள்விபட்ட போது, வகுப்பறையில் குழந்தைகளுடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வாட்டியது. எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற சிந்தனை அதனைவிட பெரும் பாரமாகக் கனத்தது.

    11. 3. 2019 அன்று 'தி இந்து தமிழ் திசை' நாளிதழில் வந்த அப்பாவின் மனக் குமுறல் என்ற கட்டுரையை மாணவர்களிடத்தில் சத்தமாக வாசித்துக் காட்டினேன். அதன் பின் உரையாட ஆரம்பித்தேன்.

    உரையாடலை குழந்தைகளே தொடங்கினர்கள். ஒரு பெண் குழந்தை நான் அழுதுட்டேன் சார் என்றாள். எனக்கு எங்க பக்கத்து வீட்டு அக்கா ஞாபகம் வந்திடுச்சு எனத் தொடர்ந்தாள்.

    எங்க வீட்டுப் பக்கம் இப்படிதான் சார் ஒரு அக்கா இருந்தாங்க. புரோட்டா கடை வச்சிருக்கவர் புரோட்டா தர்றேன்னு கூப்பிட்டு, அவர் வீட்டில் வச்சு கெடுத்துட்டார். போலீஸ் கூட்டிட்டுப் போனாங்க, இரண்டு நாள்ல வீட்டுக்கு வந்துட்டார். அந்த அக்காவை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க.

    அடுத்து ஒரு பையன், இப்படித் தான் சார் வெளியூரில் இருந்து வந்த ஒரு வயசானவர் எங்க ஏரியாவில் இருக்கிற பாழடைந்த வீட்டில் ஒரு அக்காவைக் கூட்டிட்டுப் போய்க் கெடுத்துட்டாரு. அது வெளிய தெரிஞ்சு போச்சு. அவுங்களுக்கு இருபது வயது தான் ஆகும், அவுங்கள யாரும் கட்டிக்க மாட்டாங்கன்னு, அந்தப் பெரியவருக்கே கட்டி வச்சிட்டாங்க.

    அதற்கடுத்து ஒரு பெண். நைட் என் தங்கச்சி முட்டை வாங்கப் போச்சு, அங்க இருட்ல ஒருத்தன் முத்தம் தந்துட்டு போன்னு கூப்பிட்டிருக்காங்க. அவ நின்னுட்டா. கொஞ்சம் பயந்துட்டா. அப்ப பார்த்து ஒரு அக்கா வர அவுங்க கூடப் போய் முட்டை வாங்கிட்டு வந்துட்டா. எங்கம்மா அவளைதான் சத்தம் போட்டாங்க. நான் அவனை உண்டு இல்லைன்னு பண்ணாம தங்கச்சியை ஏன் திட்றேன்னு கேட்டேன். பேசமா இருடின்னு சத்தம் போட்டாங்க.

    சார் எங்க வீட்டுப் பக்கம் அப்பளக் கம்பெனி வச்சிருக்கவரு.. +2 அக்காவுக்கு முத்தம் கொடுத்துட்டார்.. அதைப் பார்த்த அவுங்க அண்ணன்மார்கள் செமைய்யா அடிச்சு அவர் உதட்டை வீங்க வச்சிட்டாங்க. அந்த அக்காவை மத்தவங்க அசிங்கமா நினைக்கிறாங்கன்னு குடும்பத்தோட வேற ஊருக்கு காலி பண்ணிப் போயிட்டாங்க.

    இப்படி ஒவ்வொருவரிடமும் பல கதைகள். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

    பாலியல் சார்ந்த விழிப்புணர்வின் அடிப்படை விசயமாக மூன்றாம் வகுப்பில் இருந்து 'குட் டச், பேட் டச்' சொல்லிக் கொடுத்திருந்தாலும், இச்சம்பவங்கள் அனைத்தும் காவல் நிலையத்திற்குச் சென்றோ, செல்லாமலே கட்டபஞ்சாயத்து பேசி மூடப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சியில் மட்டுமல்ல. ஒவ்வொரு தெருவிலும் இதுமாதிரியான பாலியல் ரீதியில் தொந்தரவுகள் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன; நடந்து கொண்டு தான் உள்ளன என்பதை குழந்தைகளின் உரையாடல்கள் உணர்த்துகின்றன.

    அதற்குப் பின் வந்த நாட்களில், நாளிதழ்களில் வெளி வந்த கட்டுரைகளையும் வாசித்துக் காட்டினேன். சூரியாவின் கடிதத்தையும் வாசித்துக் காட்டினேன். ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் ஒவ்வொரு விதமான உரையாடல். அப்படி உரையாடிய போது, 'வீட்டில் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் வளர்ப்பதில் குடும்பத்தினர் காட்டும் பாகுபாடு' குறித்த உரையாடலை முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன். இது மாதிரியான பாலியல் வக்கிரங்களின் ஆணி வேர் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என்பதை புரிந்து கொள்ள அது உதவியது.

    குழந்தைகளின் உரையாடல்களில் இருந்து சில முக்கியமான விசயங்களைக் கீழே காண்போம்.

    என் தம்பி, உடலில் எந்த வித ஆடையும் அணியாமல் வீட்டினுள் திரியலாம். அதுவே, பொம்பள பிள்ள கொஞ்சம் பாவடையை ஏத்திக் கட்டியிருந்தால், என்ன பாவாடையைக் கட்டியிருக்க என அதட்டுவாங்க.. எங்க அம்மா ரொம்ப பேசுவாங்க

    "பொம்பள பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். வெளியே எங்கேயும் போகக் கூடாது. தம்பி வீட்டில் இருந்தா, ஏண்டா பொட்ட புள்ள மாதிரி வீட்டில் முடங்கிக் கிடக்க.. வெளியே போய் விளையாண்டு

    வாஞ்ன்னு சொல்றாங்க"

    பாய்ஸ்ன்னா தனியா எங்க வேணாலும் போகலாம்.. அதே கேள்ஸ்ன்னா தனியா போகக்கூடாதுன்னு கட்டுப்பாடு. கேள்ஸ் கேள்ஸ்ஸோடு சேர்ந்து போகக் கூடக் கட்டுப்பாடு

    பொம்பள புள்ள மட்டும் தான் தண்ணி எடுக்கணும், பாத்திரம் கழுவணும், சமைக்கணும். ஆம்பள பிள்ளைகளுக்கு அந்த வேலை எல்லாம் கிடையாது

    கேள்ஸ்ன்னா முடி வளர்க்கணும். பாய்ஸ்ன்னா ஹேர் கட் பண்ணிக்கணும். நாங்க பாய் கட் பண்ணாத் தப்புன்னு சொல்றாங்க..

    பசங்கன்னா சம்பாதிச்சு கொடுக்கணும், பொம்பளை பிள்ளைகன்னா சமைச்சு போடணும்

    இவைதான் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் குடும்பத்தினர் காட்டும் நடைமுறையாகப் பரவலாக உள்ளது. இந்த நடைமுறை மிகவும் பிற்போக்கானது என்றாலும், அதனையே கடைப்பிடிக்கின்றோம். பெண்கள் வீட்டில் இருந்தே ஒடுக்கப்படுகின்றனர். பெண்களுக்கான நடத்தை வரையறைகள் அதாவது, அடக்கு முறைகள் வீட்டில் இருந்துதான் தொடங்குகின்றன. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற வரையறையின் உச்சம் தான் பெள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்படவரின் தாய்,

    என் பிள்ளை எந்தத் தவறும் செய்யவில்லை என்ற கதறலாக உள்ளது என்பதை உணர்கின்றேன்.

    பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 'பெண்ணைக் சரியாக வளர்க்கவில்லை' என்று சமூகம் பலி சுமத்திவிடும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1