Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - January 2022
Kanaiyazhi - January 2022
Kanaiyazhi - January 2022
Ebook176 pages52 minutes

Kanaiyazhi - January 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580109508008
Kanaiyazhi - January 2022

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - January 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - January 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - January 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜனவரி 2022

    மலர்: 56 இதழ்: 10 ஜனவரி 2022

    Kanaiyazhi January 2022

    Malar: 56 Idhazh: 10 January 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எழுந்து நிற்போம்!

    புத்தாண்டு -

    பொங்கல் நல் வாழ்த்துகள்!

    கை குலுக்கிக் கைகுலுக்கிக்

    கடந்த ஆண்டுகளைக்

    கடந்து வந்திருக்கிறோம்!

    இதோ புத்தாண்டுப் பிறக்கிறது

    கை கூப்பி வரவேற்போம்!

    தமது பிம்பம் என்று தெரியாமல்

    கண்ணாடிப் பிம்பத்தைக்

    கொத்திக் கொத்தி மோதி

    மூக்குடையும் குருவிகளாய்க்

    காலம் சிதைகிறது!

    தனது பிம்பம் என்று தெரியாமல்

    கண்ணாடி உருவத்தைக்

    கடித்துக் குதறத் துடிக்கின்ற

    நாய்களாய்க்

    காலம் கத்திக் கொண்டிருக்கிறது!

    பயன்படாத பழையன கழிக்கவும்

    தேவையான புதியன ஏற்கவும்

    கற்றுக் கொள்ளக் கிடைத்த

    இன்னுமொரு வாய்ப்பு!

    கரோனா, ஓமைக்ரான்

    கைகளைப் பிடித்துக் கொண்டே

    மழை வெள்ளப் பெருக்கில்

    புத்தாண்டுப் பிறக்கிறது!

    ஆண்டு என்பது

    வெறுமனே நாட்களின் கணக்கில்

    நடப்பதில் இல்லை;

    அது

    இரவுக்கும் பகலுக்குமான

    போராட்டம்!

    அவரவர் நிலைக்கு ஏற்ப

    சோதனைகளைக் கடக்கும்

    தீமிதி!

    கட்டுப்பாடு இல்லாமல் திரிந்த

    காலத்தையும் ஒரு

    கணக்கில் கட்டிப் போட்டுப்

    பிறக்கவும் மறையவும்

    செய்திருக்கிறது மனித குலம்.

    போட்டியாக

    நிகழ்வுகளின் கட்டுக்குள்

    காலம் மனித குலத்தைக்

    கட்டிப் போடுகிறது!

    கூடவே

    நினைவுக் கயிறைப்

    பற்றிக் கொண்டு

    காலத்தை வென்று

    கரை சேர

    அவ்வப்போது ஒருவரை

    மக்களுக்கும்

    அடையாளம் காட்டுகிறது!

    அவரின்

    கைப்பிடியில்

    காலத்தின் பயணம் தொடர்கிறது!

    காலத்தின் கைப்பிடிக்குள்

    இல்லாமல்

    காலத்தைக்

    கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    புதுப்புது அவதாரத்தில் கரோனா!

    முன் தயாரிப்பு இல்லாத போதே

    வென்றடக்கிய கரோனா

    ஓமைக்ரானாய் உருமாறி வருகிறது!

    முன் அனுபவக் கொட்டடியில்

    முடக்கிப் போடும் தயாரிப்பில்

    காலத்தின் லகானைக்

    காலில் வைத்திருக்கிறார் தமிழக முதல்வர்!

    உயிரோடு இருப்பதே

    போராட்டமாகிவிட்ட காலம் இது

    மக்கள் உயிரைக் காப்பதே

    அரசின் சாதனையாகிவிட்ட காலம்!

    சூரியனின் பயணம்

    திசைமாறும் முன்பே

    தமிழகத்தில் ஆட்சி மாறி இருக்கிறது!

    தண்ணீர்த் தீவில் மக்கள்

    நள்ளிரவிலும் போய்

    பய வெள்ளத்திலிருந்து

    மக்களை மீட்கிற

    முதலமைச்சராகக்

    காலா காலத்திற்கும்

    முன்மாதிரியைக்

    காலத்திற்குக் காட்டி நிற்கிறார்!

    சோதனைகளால் காலம் இவரை

    அடையாளம் காட்டி இருக்கிறது!

    சாதனைகளால் காலத்தின் அடையாளமாக

    இவர் நிற்கிறார்!

    காலத்திற்கும் அடையாளம் தேவை.

    கடந்த ஆண்டிற்குச் சிறந்த அடையாளம்

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு

    எழுந்து நின்று வணங்க

    வந்திருக்கும் அரசாணை!

    தமிழ்த் தாயை

    எழுந்து நின்று வாழ்த்தச் சொல்லி

    ஆணையிட்டிருக்கிறார்.

    அது

    தாய் மொழி வாழ்த்து இல்லை;

    தமிழ்த் தாய் வாழ்த்து.

    தமிழ்மொழியைத்

    தாய் மொழியாக இல்லதவர்களும்

    வணங்க வேண்டும் என்பதால்

    தமிழ்த்தாய் வாழ்த்து!

    மனோன்மணீயம் சொன்னதைப் போலத்

    தமிழ்த் தெய்வ வணக்கம்

    என்று சொல்லவில்லை

    ஒவ்வொருவருக்கும்

    வெவ்வேறு தெய்வங்கள் இருக்கலாம்

    அதனால்

    தமிழைத் தெய்வமாகச் சொல்லாமல்

    தாய் என்று சொல்கிறோம்.

    தாய் என்றால் வளர்ப்பவர்

    தமிழ் நாட்டில் உள்ளவர்களை

    வளர்ப்பதால்

    தமிழ் எல்லோருக்கும் தாய்

    அதனால்

    தமிழ்த்தாய் வாழ்த்து!

    எத்திசையும் புகழ் மணக்க

    இருந்த பெரும் தமிழணங்கைப்

    பெருமிதத்தில்

    எத்திசையும் புகழ் மணக்க

    எழுந்த பெரும் தமிழணங்காய்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பார்க்க வைத்திருக்கிறார்!

    எழுந்து நிற்போம்

    வணக்கம் சொல்லவும்

    வாழ்த்து சொல்லவும்

    சோதனைகளை நோக்கிய

    வரும் காலத்தை எதிர்கொள்ளவும்

    விடியல் வெளிச்சத்தை

    வாழ்த்திடும்

    புத்தாண்டு- பொங்கலில்

    எழுந்து நிற்போம்!

    ***

    உள்ளடக்கம்

    கவிதை - ஆர். வத்ஸலா

    குறுங்கவிதைகள் - ரகுநாத் வ

    கட்டுரை - பேராசிரியர் த.நா.சந்திரசேகர்

    சிறுகதை - வி.கே.லக்ஷ்மிநாராயணன்

    கவிதை / ந.சிவநேசன்

    கவிதை - கவிதைக்காரன் இளங்கோ

    கட்டுரை - வ.ந.கிரிதரன்

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    சிறுகதை – அகராதி

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - கலை

    கவிதை - நரேன்

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - கி.சரஸ்வதி

    கவிதை - செ. நாகநந்தினி

    சிறுகதை - குமரகுரு

    கவிதை - ப்ரியா பாஸ்கரன்

    கவிதை - அன்றிலன்

    கவிதை - சசிகலா திருமால்

    கவிதை - இளையவன் சிவா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கவிதை - ஆர். வத்ஸலா

    வத்ஸலா.jpg

    பாடிப் பற

    கிளம்புகிறது குஞ்சு

    உடைந்த முட்டைக்குள்

    உட்கார முடியுமா

    குட்டிக் குஞ்சால்?

    சிலிர்த்த சிறகுகளுக்கு போதுமா கூடு?

    விரல் சூப்பும் பருவத்தில்

    என் தொப்பையை

    தலையணையாக்கிய மழலை

    என் மடியில் கண்ட சுகத்தை

    வேறு யார் மடியிலும் காணா குழந்தை

    பள்ளியிலிருந்து வந்தது முதல் நான் பெற்றது

    அலுவலகத்திலிருந்து

    வரும் வரை

    நொடிக்கு ஒருமுறை

    அம்மா எப்ப வருவா என்று பிடுங்கும் குட்டி

    பால்கனியில் இருந்து

    எட்டிப் பார்க்காதே என்றால்

    மறுகணம் எட்டிப் பார்ப்பாள்

    பிடித்த டீச்சரின் பாடத்தில்

    முழு மதிப்பெண்

    இல்லையெனில்

    பெற்றவள்

    தலைமை ஆசிரியை அலுவலகத்தில்

    தலைகுனிந்து

    கூடவே

    அம்மாவுக்கான

    குற்ற உணர்வுடன்

    இதுவும்

    பதினாறு வயதிலும்

    எங்கு கண்டாலும்

    கைகளை விரித்து

    பாட்டி என்று

    கட்டிக்கொள்ள ஓடிவரும்

    அழகு

    ஆதார் அட்டை வந்தாலும்

    ஓட்டு போட்டாலும்

    என் குஞ்சாகவே

    என் மனதில்

    கிளம்புகிறாள் இன்று

    கண்காணா ஊருக்கு விடுதியில் தங்கி படிக்க

    கட்டி அணைத்து

    டாட்டா சொல்லி

    குதூகலமாய்

    நட்புகளுடன் சேரும் ஆசை

    கண்களில் ததும்ப

    குஞ்சு பறக்கிறது

    ஆகாயம் அளக்க

    vatsala06@gmail.com

    ***

    C:\Users\INTEL\3D Objects\picture\Kanaiyazhi\3.JPG

    ***

    குறுங்கவிதைகள் - ரகுநாத் வ

    ரகுநாத் வ.jpg

    கவிழ்த்திய

    குவளையிலிருந்து

    கடலாய் வெளியேறுகிறது

    வெறுமை.

    *

    வந்த

    அலையை

    மிதித்துவிட்டு

    வராத அலையை

    ‘அதோ’

    கடலென்கிறோம்.

    *

    நிசப்த

    பள்ளியின்

    மைதானங்களை

    ‘எளிதாக கடக்கின்றன'

    எறும்புகள்.

    *

    மக்கிவிடுவோம்

    என்ற நம்பிக்கையில்தான்

    உதிர்கின்றன

    சருகுகள்.

    *

    ஒய்வெடுக்க

    தலை சாய்கிறேன்

    மேலே

    ‘சுற்றுகிறது’

    காத்தாடி.

    *

    மிதிபடும்

    மனச்

    செருப்பின்

    கீழ்

    ‘முள்ளும்’

    குத்தியிருக்கிறது.

    *

    பனித்துளியின்

    கர்ப்பம்

    நீர்.

    *

    தையலின்

    பாதம் பிளவுபட

    இணைகின்றன

    துணிகளின்

    கைகள்.

    *

    பிடிக்காதவரின்

    காலரைப் பிடித்துச்

    சூடு போடுகிறார்

    இஸ்திரிக்காரர்.

    raghunath3784@gmail.com

    ***

    கட்டுரை - பேராசிரியர் த.நா.சந்திரசேகர்

    த நா சந்திர.jpg

    யுவால் நோவா ஹராரியின்

    21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

    சேபியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் என்ற இரு நூல்களின் வழி அடைந்த, உலக அளவில் பரவலான வாசிப்பு வெற்றிக்குப் பின், பேராசிரியர் யுவால் நோவா ஹராரி மற்றொரு நூலைத் தருவித்துள்ளார். இந்நூல் அவரது முந்தைய இரண்டு நூல்களைப்போல மிகப்பரந்த காலகட்டத்திற்கானது அல்ல, 21 ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமாக இந்நூலைக் கொணர்ந்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் என்ற இந்த நூல் இணைய உலகின் தகவல்களில் சிக்கிக்

    Enjoying the preview?
    Page 1 of 1