Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - June 2022
Kanaiyazhi - June 2022
Kanaiyazhi - June 2022
Ebook163 pages52 minutes

Kanaiyazhi - June 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

June 2022 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580109508748
Kanaiyazhi - June 2022

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - June 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - June 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - June 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜுன் 2021

    மலர்: 57 இதழ்: 03 ஜுன் 2022

    Kanaiyazhi June 2021

    Malar: 57 Idhazh: 03 June 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    அறிய வைத்திருக்கிறார் அருந்தமிழ் ஆற்றலை

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - ஆர். வத்ஸலா

    நூல் விமர்சனம் - தேவரசிகன்

    கவிதை - கனகா பாலன்

    கவிதை - ஆனந்த குமார்

    நினைக்கப்படும் - மரன்

    கவிதை

    சிறுகதை - பா.ஆசைத்தம்பி

    கட்டுரை - வ.ந.கிரிதரன்

    சிறுகதை - கவிஜி

    கவிதை - சா.கா. பாரதி ராஜா

    நூல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்

    கவிதை - கி.சரஸ்வதி

    சிறுகதை - சுந்தர் ஜெயராஜ்

    கவிதை - அன்புத்தோழி ஜெயஸ்ரீ

    கட்டுரை - ஈசு

    கவிதை - தசாமி

    சிறுகதை - அகராதி

    கவிதை - வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

    கவிதை - செ.புனிதஜோதி

    சிறுகதை - ப. தனஞ்ஜெயன்

    கவிதை - கிரேஸ் பிரதிபா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    அறிய வைத்திருக்கிறார் அருந்தமிழ் ஆற்றலை

    இராமாயணத்தில்

    தெற்கு நோக்கிப் படையெடுத்தான்

    இராமன்

    சீதையை மீட்க!

    சிலப்பதிகார செங்குட்டுவன்

    வடக்கு நோக்கிப் படையெடுத்தான்

    அருந்தமிழ் ஆற்றலை

    அறியாதவர்க்கும் அறிய வைக்க!

    அன்று

    கல் சுமந்து வந்தார்கள்

    கண்ணகிக்குச் சிலை வடிக்க!

    இன்று

    சொல் சுமந்து வருகிறார்கள்

    கலைஞருக்கு மாலை சூட்ட!

    பெரியாருக்கும்

    அண்ணாவுக்கும் நடுவில்

    சிரித்த முகத்துடன்

    கையசைத்து

    வாழ்த்திக்கொண்டு

    சிலையாகக் கலைஞரைச்

    செதுக்கி இருக்கிறார்

    அருந்தமிழ் ஆற்றலின்

    அடையாளமான

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    கல்லுக்குள் சிலையை

    முதலில் கண்டறிபவர் சிற்பி என்றார்

    மைக்கேல்!

    தனக்குள் இருக்கும்

    சிற்பியைக் கொண்டு

    தன்னைத்தானே

    செதுக்கிக் கொள்ளும்

    முதலமைச்சர்

    முத்தமிழ் அறிஞருக்குச்

    சிலை எடுத்திருக்கிறார்!

    பசி, பிணி, மூப்பு அண்டாமல்

    கலைஞரை வாழ வைத்திருக்கிறார்!

    சிலையின் உயிர்ப்பில்

    நிமிர்ந்து நிற்கிறது தமிழ்!

    வினை இல்லாமல்

    தொடர் இல்லை

    கலைஞரின் வினைத் தொடரில்

    இனி வரும் காலத்தின் நகர்வுகள்!

    வானரப் படைகளும்

    தம்பிகளின் துரோகங்களும்

    துணை நிற்க

    இலங்கையை வென்றது இராம காதை!

    ஆரிய மன்னர்

    பலரையும்

    ஒருவனாய் நின்று

    களத்தில் வென்ற

    செங்குட்டுவனைப்

    புகழ்கிறது சிலப்பதிகார

    வஞ்சிக் காண்டம்!

    பேரறிவாளன் விடுதலை!

    இந்திக்கு இணையாகத்

    தமிழ் ஆட்சி!

    கச்சத் தீவு மீட்சி என்று

    முதல்வரின் செயல் முழக்கம்

    இந்திய ஜனநாயகத்தை

    எழுப்பி இருக்கிறது!

    சுந்தர காண்டத்தில்

    எரியூட்டுப் படலம்.

    தலையிலும் முடியிலும் தீ!

    அரண்மனையில் தீ!

    நெருப்புத் தின்று

    வெந்தது இலங்கை!

    ஆட்சியாளர்

    போன திக்கு அறிகிலார் என்பது

    கம்பன் பாட்டு!

    எரிகிறது இலங்கை மீணடும்!

    இராமாயணக் காலம் தொட்டு

    எரிவது இலங்கைக்குப் புதிதில்லை!

    ஆனால்

    சொந்த நாட்டு மக்களே

    சாதி மதம் மொழி கடந்து

    அணிதிரண்டு ஆட்சியாளரை

    வறுத்தெடுப்பது புதிது!

    எரிகிற வீட்டில் எடுப்பது இலாபம் என்று

    வல்லரசுகளின் வாய்திறத்தலில்

    சிக்கிக் கொண்டு தவிக்கிறது

    இலங்கை!

    இராமாயண காலத்தில்

    சண்டை போட தேவைப்பட்டிருக்கலாம்

    பாலமும் அணையும்!

    பாலம் என்றும்

    பழைய வழிபாட்டிடம் என்றும்

    மக்களை மடைமாற்றம் செய்யாமலும்

    மக்களுக்குத் தடுமாற்றம் தராமலும்

    சிங்களத் தீவினுக்குப்

    பசியைப் போக்கிடக்

    கப்பல் அனுப்பியிருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    சாதி, மதம், மொழி,

    நாடு மட்டுமின்றிக்

    கனிம வளத்துக்காகவும்

    கச்சா வளத்துக்காகவும்

    தளவாட விற்பனைக்காகவும்

    போர் தொடரவும்

    போர் நிறுத்தவுமான

    புகை மூட்டத்தில்

    இப்போது உலகம்!

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்

    முன்பே

    யாதும் ஊரே

    யாவரும் கேளிர் என்று

    உலக நேயம் பாராட்டியிருக்கிறது

    தமிழ்!

    யாதும் ஊரே என்றால்

    ஆயுதங்களால் கைப்பற்றி

    ஆக்கிரமித்துக் கொள்வது இல்லை

    யாவரும் கேளிர் என்று

    அன்பு காட்டிச்

    சொந்தம் கொண்டாடுவது

    சொந்தம்

    உரிமை உடையது

    அப்படியானால்

    உலகத்தை

    அனைவருக்குமான

    உரிமை உடையதாக

    மாற்றுவது!

    உயிரை எடுக்க

    சண்டை போடப்

    பாலம் போட்ட கதை உண்டு

    உயிர்களைக் காத்து

    மானுட நேயம் வளர்க்கப்

    பாலம் போடும்

    அருந்தமிழ் ஆற்றலின்

    அடையாளமாக முத்தமிழ் அறிஞர் சிலை!

    கலைஞர் சிலை திறப்பின் வழியாக

    இப்பொது மீண்டும்

    தமிழக முதல்வர்

    அறிய வைத்திருக்கிறார்

    அருந்தமிழ் ஆற்றலை!!

    ***

    கட்டுரை - மு. இராமசுவாமி

    ‘வாய்தா’- திரைப்பட அனுபவமும்,

    திரைப்படம் பேசுகிற அரசியலும்!

    தவணை கேட்பது அல்லது தவணை கொடுப்பதற்குப் பெயர் ‘வாய்தா’ என்கிறார்கள். நீதிமன்றங்களால் மக்கள் வழக்குக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தினமும் அடிபட்டுக் கிடக்கிற இந்த ‘வாய்தா’ என்கிற சொல், ‘கெடுவைத் தள்ளிவைத்தல்’ அல்லது ‘விசாரணையைத் தள்ளிவைத்தல்’ என்பதை விளக்க, அரபுலிருந்து உருதுவிற்கு மருவி, உருதுவிலிருந்து தமிழுக்கு இறங்கித் தமிழ்ச் சொல்லாக நம்மிடம் புழங்கிப் போயிருக்கிற ஒரு கலைச்சொல்! ‘வாய்தா’ திரைப்படத்திற்கு முதலில் வைக்கப் பட்டிருந்த பெயர் ‘ஏகாலி’! ‘எதுவும் சுத்தமில்லை’ (Nothing is Clean) என்கிற உட்தலைப்பின் விளக்கம், வெள்ளாவி வைத்துத் துணியைச் சுத்தம் செய்கிற ஒடுக்கப்பட்ட ‘ஏகாலி’யின் பார்வையில், மனுவின் கெடுவினை மீதான ஓர் அறச்சீற்றமாகும். ஆயின், ‘ஏகாலி’ என்ற பெயரைவிடவும், ‘வாய்தா’ என்கிற பெயர் மிகவும் பாந்தமாய் இந்தப் படத்திற்குப் பொருந்தி வந்திருக்கிறது. இப்பொழுது இதன் அறக்கீறல் கூற்று, ‘தாமதமான நீதி’ (The Next Hearing) என்பதாய் அதை விளக்குகிறது. தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியேதான்! மறுக்கப்பட்ட நீதி என்பது அநீதியாகும்! உண்மையை உரசிப் பார்த்தால், இது நீதியே அல்ல; வெறும் தீர்ப்பு மட்டுமே என்பது புரிய வரும்! ‘நீதி’ என்பது வெறும் ‘தீர்ப்பு’ என்பதாகவே பொருள் சுருங்கி, இன்றைய உலகில், பொருள் பேதலித்துக் கிடக்கிறது. 2019 மே 7-ஆம் தேதியிலிருந்து, தருமபுரிக்கு அருகிலுள்ள ‘செம்மண ஹள்ளி’ கிராமத்தில் 27 நாட்களும், பின் சென்னை எம்ஜிஆர் திரைப்பட நகரத்தில் 10 நாட்களுமாக, 37 நாட்களில், ‘ஏகாலி’ என்கிற பெயரில் படமாக்கப்பட்டு, 2019-இல், அதே பெயரில் தணிக்கைச் சான்றிதழுக்குப் படத்தைக் கொண்டுபோன இடத்தில், ‘ஏகாலி’ என்பது ‘வண்ணார்’ சமூகத்தைக் குறிக்கின்ற ஒரு பெயர் என்று, படத் தலைப்பிற்கு அவர்கள் கத்திரிக்கோல்போட (சின்னக் கவுண்டர், கவுண்டர் மாப்ளே, கவுண்டர் வீட்டுப் பொண்ணு, தேவர் வீட்டுப் பொண்ணு, தேவர் மகன் என்று வெளிவந்திருக்கிற சாதியப் பெயர்ப் படங்கள் நம் நினைவிற்கு வந்தால், நாம் ஒன்றுமே செய்வதற்கில்லை), படத்தின் தலைப்பை மாற்றி, பின், 24-02-2020-இல் ‘வாய்தா’ என்பதாய்த் தணிக்கைச் சான்றிதழ் பெற்று, அதைத் தொடர்ந்த கொரோனா, ஒமிக்ரான் சிக்கல்களைத் தாண்டி, திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்கிற சங்கற்பங்களுடன், ‘வாய்தா’ திரைப்படமும் பல தவணைகளைத் தள்ளிப்போட்டே, மே 6 என்று அறிவித்து, திரையரங்குகள் சரிவரக் கிடைக்காமல், மீண்டும் தள்ளிப்போடப்பட்டு, இப்பொழுது, 2022 மே 27-இல் திரைக்கு வந்திருக்கிறது. இன்னொன்று, ’வாய்தா வாய்தா வாய்தா- இது நீதிக்குப் பிடிச்ச நோய்தான்’ என்றொரு பாடல் வரி வருகிறது. இதில்வரும், ‘நீதி’ என்பதைத் தணிக்கைக் குழு ஆட்சேபிக்க, அந்த இடத்தில், அதற் கிணையாக, ‘நேர்மை’ என்கிற சொல்லைப் போட, தணிக்கைக் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்பதைக் கேள்விப்படுகையில், ‘நீதி-நேர்மை’த் தாத்பரியங்கள் நமக்குப் புரிய மறுக்கின்றன. நாமுமே, சாட்சிகளை

    Enjoying the preview?
    Page 1 of 1