Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arasiyal Kalaiyai Arinthu Kolvom
Arasiyal Kalaiyai Arinthu Kolvom
Arasiyal Kalaiyai Arinthu Kolvom
Ebook210 pages1 hour

Arasiyal Kalaiyai Arinthu Kolvom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடிகாரன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள். அரசியல்வாதியின் பேச்சு அதைவிட விரைவாக போய்விடக் கூடிய ஆற்றல் கொண்டது என்பதற்கு இன்றைய அரசியலில் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். மாற்றி மாற்றிப் பேசுவது, எதிரிகள் திடீர் நண்பர்களாவது, நண்பர்கள் திடீர் எதிரிகளாவது, தாங்கள் எடுக்கும் நிலைதான் சரியான நிலை என்று காட்டுவதற்காக மனதில் தோன்றியபடியெல்லாம் போட்டிகள், அறிக்கைகள் தருவது, என்ற நமது நாட்டு அரசியல்வாதிகள் நாள்தோறும் அடித்து வரும் கூத்துகள்தான் அரசியல் கலை என்றால், அந்தக் கலையைப் பற்றி வாசித்து தெரிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580160109922
Arasiyal Kalaiyai Arinthu Kolvom

Read more from Thuglak Sathya

Related to Arasiyal Kalaiyai Arinthu Kolvom

Related ebooks

Related categories

Reviews for Arasiyal Kalaiyai Arinthu Kolvom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arasiyal Kalaiyai Arinthu Kolvom - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அரசியல் கலையை அறிந்து கொள்வோம்

    Arasiyal Kalaiyai Arinthu Kolvom

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    என்னுரை

    அறிமுகம்

    தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

    காய் நகர்த்துவது என்றால் என்ன?

    அரசியல் ஆதாயம் தேடுவது எப்படி?

    ஜெயலலிதா – கருணாநிதி கருத்துகள் - ஓர் அலசல்

    கட்சி நலனே மக்கள் நலன்

    ஐஸ் வைப்பதே அறிவுடைமை

    துரும்பைத் தூணாக்குவது எப்படி?

    ஜனாதிபதி யதார்த்த உரை நிகழ்த்தினால்...

    கொள்கை ஒரு விதம் கோஷங்கள் பல விதம்

    ‘ஆண்டிப்பட்டி ஏற்படுத்தக் கூடிய அரசியல் மாற்றங்கள்’

    மக்கள் பிரதிநிதிகளின் மகத்தான பணிகள்

    கருணாநிதி, டைரி எழுதினால்...

    ஜெயலலிதா டைரி எழுதினால்...

    அ.தி.மு.க.வினருக்கு அரசியல் பயிற்சி

    தி.மு.க. தலைவரின் பாராட்டைப் பெறுவது எப்படி?

    அணுகுமுறை என்பது என்ன?

    குற்றம் காணும் குணநலன்

    ஸ்டார் பேச்சாளர் ஆவது எப்படி?

    முடிவுகள் பின்னே, விளைவுகள் முன்னே!

    உரிமைக் குரல் எழுப்புவது எப்படி?

    உங்களால் அரசியலில் பிரகாசிக்க முடியுமா? ஒரு சோதனை

    என்னுரை

    குடிகாரன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள். அரசியல்வாதிகளின் பேச்சு அதைவிட விரைவாகப் போய்விடக் கூடிய ஆற்றல் கொண்டது என்பதற்கு இன்றைய அரசியலில் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். மாற்றி மாற்றிப் பேசுவது, எதிரிகள் திடீர் நண்பர்களாவது, நண்பர்கள் திடீர் எதிரிகளாவது, தாங்கள் எடுக்கும் நிலைதான் சரியான நிலை என்று காட்டுவதற்காக மனதில் தோன்றியபடியெல்லாம் பேட்டிகள், அறிக்கைகள் தருவது, என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் நாள்தோறும் அடித்து வரும் கூத்துகள்தான் அரசியல் கலை என்றால், அந்தக் கலையைத்தான் இத்தொடரில் நான் விளக்கியிருக்கிறேன்.

    அரசியல்வாதிகளின் கோமாளித்தனமான செயல்களை புதிய கோணத்தில் சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கமே தவிர, வேண்டாத விஷயங்களை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. உண்மையில், அரசியலில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதை, அரசியலில் இருப்பவர்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உணர்த்துவதுதான் தொடரின் நோக்கம்.

    ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கும் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்கள் ஒருமுறை டெல்லி சென்றிருந்தபோது, ஒரு எம்.பி. அவரிடம், ஸார், துக்ளக்கில் வரும் ‘அரசியல் கலையை அறிந்து கொள்வோம்’ தொடரை நான் படிக்கிறேன். நல்ல அறிவுரைகளைக் கூறி வருகிறீர்கள். அதன்படிதான் நான் நடந்து கொள்கிறேன் என்று சீரியஸாகக் கூறினாராம்.

    எப்படி இருக்கிறது பாருங்கள். கட்டுரையை கிண்டல், நகைச்சுவை என்று புரிந்து கொள்ளக் கூட அந்த எம்.பி.யால் முடியவில்லை. எங்கேபோய் முட்டிக் கொள்வது?

    இப்புத்தகத்தைப் படிக்கும் அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களாக உருவாகவும், எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்று தெரிந்து கொள்ளவும் இது ஓரளவாவது பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

    இப்படி நான் சொல்வதால், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் முற்றிலும் நிராகரிக்கத் தக்கவர்கள் என்று நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களது சிறப்பான பக்கங்களும் நிச்சயமாக உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றையும் விளக்குவேன். எடுத்துக் கொண்ட விஷயத்தையொட்டி, நகைச்சுவை நோக்கோடு, விமர்சனத்துக்கு உரியவற்றை மட்டும் அலசியிருக்கிறேன். அவ்வளவுதான்.

    அன்புடன்,

    சத்யா

    அறிமுகம்

    டாக்டர் தொழிலுக்குப் படிப்பது, வக்கீல் தொழிலுக்குப் படிப்பது போன்று, அரசியல் தொழிலுக்குப் படிப்பதும், வாழ்க்கையில் முன்னேற விரும்புகிற இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மற்ற தொழில்களில் தேர்ச்சி அடைவதற்காவது குறிப்பிட்ட கல்வித் தகுதி தேவை. அரசியலில் உயர் பதவி அடைய விரும்புகிறவர்களுக்கு அப்படிப்பட்ட நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. எந்தத் தகுதியும் இல்லாமலேயே அரசியலில் நுழையலாம் என்பது அரசியலின் சிறப்பம்சம்.

    யார் வேண்டுமானாலும் அரசியலில் நுழைந்து ஆறே மாதத்தில் அமைச்சராகி, அடுத்த தேர்தலிலேயே முதல்வராகி விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு திறமையுடன் நீங்கள் அரசியலைக் கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் அது.

    பெரியாரின் பாசறையிலும், அண்ணாவின் பள்ளியிலும் பயின்றவர்கள் நாங்கள், என்று கருணாநிதியே கூட பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அப்படி ஒரு ‘பயிற்சி’ இக்கால இளைஞர்களுக்கு கிடைக்காமல் போவது நியாயமல்ல என்று என் மனச்சாட்சி என்னை உறுத்தியது.

    கலைஞரிடம் பாடம் கற்றவர்கள், புரட்சித் தலைவியால் பாடம் கற்பிக்கப்பட்டவர்கள், என்று இன்றைய சமுதாயத்தினர் எதிர்காலத்தில் பெருமிதத்துடன் தங்கள் தலைவர்களை நினைவுகூரும் வகையில், அவர்கள் சார்பில் அரசியல் பாடங்களை கற்றுக் கொடுப்பது என்று முடிவெடுத்தேன்.

    ஆறே மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம், தெலுங்கு கற்கலாம் என்னும் போது அப்படி அரசியலையும் கற்றுக் கொடுக்க முடியாதா என்ன? அதனால்தான் உருப்படியான எந்த வேலையும் தேடிக்கொள்ள முடியாத இளைஞர்களுக்கு, அரசியல் கலையை அக்குவேறு ஆணி வேறாகக் கற்றுக் கொடுத்து, அவர்களைக் கடைத்தேற்றுவது என்ற உயர்ந்த லட்சியத்துடன், இந்த கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறேன்.

    முதல் பாடத்தை ஆரம்பிப்போமா?

    பாடம் - 1

    தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

    அரசியலில் தோல்வியையோ, செய்த தவறையோ, ஒப்புக்கொள்வதைப் போன்ற ஒரு மட்டமான குணம் எதுவுமில்லை. அத்தகைய குணம் கொண்டவர்கள் இப்போதே அரசியல் கற்பதை நிறுத்திக் கொள்ளலாம். இதோ, இப்போது உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. வெற்றி பெறும் கட்சிக்கு பிரச்னையில்லை. ‘மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம்’ என்று கூறிவிடலாம். ஆனால், தோல்வியை அப்படி ஏற்றுக்கொள்கிற கட்சிகள் அடுத்த தேர்தலில் மீண்டும் படுதோல்வி அடைந்து, பிறகு எந்தக் கூட்டணியிலும் இடம் கிடைக்காமல், ‘அரசியல் அநாதை’ என்று பரிகசிக்கப்படும் நிலைக்கு ஆளாகிவிடும்.

    தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் தோல்வியை எப்படிச் சமாளிக்கும் என்று தெரிந்து கொள்வது, உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு உதவக் கூடிய முக்கியமான பாடம்.

    ***

    தேர்தல் தோல்வி பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி எப்படி பதிலளிப்பார் என்று இப்போது பார்ப்போம்.

    கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே...?

    கருணாநிதி: அவர்களே ஓட்டு போட்டு, அவர்களே எண்ணி, அவர்களே அறிவித்துக் கொண்ட முடிவு வேறு எப்படி இருக்கும்? அ.தி.மு.க. வெற்றி பெற்றச் செய்தியை வெளியிடும் ஏடுகள், அக்கட்சி நடத்திய அராஜகச் செயல்களையும் வெளியிட வேண்டியதுதானே? அம்மையாரிடம் அவ்வளவு பயம் அந்த ஏடுகளுக்கு.

    கேள்வி: தி.மு.க. பெருமளவு தோல்வி அடைந்திருக்கிறதே...?

    கருணாநிதி: தமிழனின் சிந்திக்கும் திறன் தொடர்ந்து இப்படி மழுங்கிய நிலையிலேயே இருந்து விடாது. தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும். தமிழனின் மூளைச் செயல்பாட்டில் ஒரு புரட்சி ஏற்படும்.

    கேள்வி: தமிழகத்தில் கொலை, கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறதே?

    கருணாநிதி: தி.மு.க.வைத் தோற்கடித்த மக்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

    ***

    அ.தி.மு.க.வின் தோல்வியை, அக்கட்சித் தலைமை சமாளிக்கிற பாங்கையும் தெரிந்து கொள்வோம்.

    கேள்வி: பல இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்துள்ளதே...?

    ஜெயலலிதா: அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் போட்ட ஓட்டுக்கள் எல்லாம் எங்கே போயிற்று என்பதை, தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் டெலிவிஷனில் பேசியதைக் கேட்ட லட்சக்கணக்கான மக்கள், எனக்குத்தானே ஓட்டு போட்டிருப்பார்கள்? அந்த ஓட்டுக்கள் எங்கே?

    கேள்வி: தி.மு.க. வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ஜெயலலிதா: நான் ஆட்சியில் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு, கருணாநிதியும் சன் டி.வி. ஊழியர்களும் தங்களுடைய ஓட்டுக்களைப் போட்டு விட்டார்கள். உதய சூரியன் சின்னத்திற்கு விழுந்த ஓட்டுக்களைக் கூட தேர்தல் அதிகாரிகள் எண்ணி விட்டனர். அதனால்தான் தேர்தல் முடிவு மாறிவிட்டது.

    கேள்வி: இந்தத் தேர்தல் முடிவை ஏற்கிறீர்களா?

    ஜெயலலிதா: மாட்டேன். ஏற்க மாட்டேன். கருணாநிதி, ஸ்டாலின், மாறன் ஆகியோரை கைது செய்துவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம்.

    கருணாநிதியும், ஜெயலலிதாவும் மேற்கூறிய பாணிகளில் தேர்தல் தோல்வியைச் சந்திக்கும் போது, மற்றகட்சித் தலைவர்கள் தேர்தல் தோல்விக்கு எத்தகைய காரணங்களைக் கூறுவார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    ***

    ம.தி.மு.க. தலைவர் வை.கோ வெளியிடுகிற உருக்கமான அறிக்கை, ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் அவரது கட்சித் தொண்டர்களை, மேலும் சோகத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்தது.

    ம.தி.மு.க. கரங்களை இழந்திருக்கிறதே தவிர, களத்தை இழந்து விடவில்லை. கட்சியின் மூச்சு நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அதன் உயிர் போய்விடவில்லை. நான் தி.மு.க.வைத் திட்டியதால் அ.தி.மு.க. வும், அ.தி.மு.க.வைத் திட்டியதால், தி.மு.க.வும் ஓட்டுக்களைப் பெற்று விட்டன. அதனால்தான் ம.தி. மு.க.வுக்கு ஓட்டு கிடைக்காமல் போய்விட்டது. கட்சி தோல்வி அடைந்திருக்கிறதே தவிர, தோற்றுவிடவில்லை என்ற வகையில் வை.கோ அறிக்கை வெளியிடுவார். ம.தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் பிரகாசிக்க விரும்பும் இளைஞர்கள், கட்சித் தலைமையின் இந்தக் கருத்தையொட்டி தங்கள் செயல்பாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    ***

    பா.ம.க. தலைவர் ராமதாஸ் தேர்தல் தோல்வியை எப்படிச் சமாளிப்பார் என்று தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிறதல்லவா? அதையும் கற்றுக் கொள்வோம்.

    தேர்தல் முடிவு வெளிவந்த ஓரிரு நாட்கள் ராமதாஸ் அமைதியாக இருப்பார். அப்போதே அவரது கூட்டணிக்கட்சித் தலைவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும். பிறகு, பா.ம.க.வுக்கு எதிராக தி.மு.க.வினர் பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியதை, கருணாநிதி தடுக்கவில்லை. பா.ம.க.வை ஒழிப்பதுதான் அவர் எண்ணம். முதுகில் குத்துவது அவர் வழக்கம்தான். கருணாநிதி திருந்தியிருப்பார் என்று நினைத்து ஏமாந்து விட்டேன். சேரக்கூடாத கூட்டணியில் சேர்ந்ததால் பா.ம.க. தோற்றுவிட்டது என்று ராமதாஸிடமிருந்து அறிக்கை வெளியாகும். பா.ம.க.வில் சேர்ந்து அரசியல் வளர்ச்சி அடைய விரும்பும் இளைஞர்கள், தலைவரின் இந்த அணுகுமுறையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    ***

    இதேபோல, சிதம்பரத்திடமிருந்து, மூன்றாவது அணி வெற்றி பெற வேண்டும் என்று கூறினேனே தவிர வெற்றி பெறும் என்று நான் எப்போதுமே கூறவில்லை. இது நான் எதிர்பார்த்த முடிவுதான். ஓட்டு போடாத மக்கள் எல்லோரும் மூன்றாவது அணிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மூன்றாவது அணிதான் வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று கா.ஜ.பே.வை ஆதரித்திருந்தால், கா.ஜ.பே.வின் சக்தி அக்கட்சிகளுக்குப் புரிந்திருக்கும். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு தலைவரைத் தேடும் மக்கள், என் அருகே வந்து தேடினால் நிச்சயம் ஒரு தலைவர் கிடைப்பார் என்று அறிக்கை வெளிவரும்.

    Enjoying the preview?
    Page 1 of 1