Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sir, Post...!
Sir, Post...!
Sir, Post...!
Ebook185 pages1 hour

Sir, Post...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துக்ளக் சத்யாவின் சார், போஸ்ட்...! என்னும் இந்நூலில் சந்தனக் கடத்தல் வீரப்பன் பெயருக்கு கலைஞர் எழுதியிருந்த கடிதத்தையும் ரஜினியின் அறிக்கை பற்றி ரகசிய விவாதங்களையும் துக்ளக் வழங்கும் சமரச திட்டங்களையும் இன்னும் பல அறிய செய்திகளையும் பற்றி வாருங்கள் நாமும் வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580160109919
Sir, Post...!

Read more from Thuglak Sathya

Related to Sir, Post...!

Related ebooks

Related categories

Reviews for Sir, Post...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sir, Post...! - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சார், போஸ்ட்...!

    Sir, Post...!

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    1. முதல்வர் கோப்பை யாருக்கு?

    2. ரஜினியின் அறிக்கை பற்றி ரகசிய விவாதங்கள்

    3. அரசியல் பேரம்

    4. அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்

    5. அதிசயம் ஆனால் உண்மை

    6. புதிய பிரதமர் பராக்... பராக்...

    7. குறைந்தபட்ச பொது மன்னிப்புத் திட்டம்

    8. அரசியல் தலைவர்கள் கல்லூரி முதல்வர்களானால்...

    9. ஐக்கிய முன்னணி அரசின் அதிரடிக் கொள்கைகள்

    10. போர்... போர்... கொள்கை போர்...

    11. சிலிர்த்தெழுந்தது சிங்கக் கூட்டம்

    12. தீர்ந்தது காவிரிப் பிரச்சனை

    13. கருணாநிதியும் மூப்பனாரும் சந்தித்தால்

    14. தேவகௌடாவின் ஆட்சி பற்றி ஒரு திறனாய்வு

    16. தமிழக பட்ஜெட் தலைவர்கள் சொல்லத் தவறிய கருத்து

    17. சார்... போஸ்ட்!

    18. காங்கிரஸ் மேலிடத்தின் கடைசி அஸ்திரம்

    19. மாயாவதி அரசைக் கவிழ்க்க மாபெரும் திட்டம்!

    20. துக்ளக் வழங்கும் சமரசத் திட்டங்கள்

    21. கலைஞரின் கவலைகள்

    22. கலவரத்தை அரசியலாக்கும் கலை

    23. திருநாவுக்கரசுவை ஜெயலலிதா குறுக்கு விசாரணை செய்தால்...

    24. முதல்வரின் கனவில் வந்த முன்னாள் தலைவர்கள்!

    25. லாலுபிரசாத் யாதவை சமாதானப் படுத்துவது எப்படி?

    1. முதல்வர் கோப்பை யாருக்கு?

    ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் அரசியல் கிரிக்கெட் போட்டி, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று காங்கிரஸ் டீம் கேப்டன் நரசிம்ம ராவ் அறிவித்திருக்கிறார். அநேகமாக, சேஷன் தலைமையிலான கமிட்டித் தலைவர் குழுவும் இதை ஏற்றுக்கொண்டு, ஏப்ரல் மாதத்திலேயே போட்டிகளை நடத்த முன்வரும் என்று தெரிகிறது.

    இம்முறை பல அணிகள் தேர்தல் விளையாட்டுக் களத்தில் நிற்கின்றன. ஏற்கெனவே முதல்வர் கோப்பையைக் கைப்பற்றியுள்ள சாம்பியனான அ.இ.அ.தி.மு.க. அணி தவிர, தி.மு.க. அணி, காங்கிரஸ் அணி உட்பட பல புதிய அணிகளும் கோப்பையைக் கைப்பற்ற மும்முரமாகப் பயிற்சி செய்து வருகின்றன.

    ***

    அ.இ.அ.தி.மு.க. அணிக்கு பல சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழகம், இவர்களது ‘ஹோம் கிரவுண்ட்’ என்பது, இந்த அணி கேப்டனின் கருத்து. இதனால், இதர அணிகள் அந்நிய மண்ணில் விளையாடுவதுபோல் பயந்து பயந்து விளையாட வேண்டி இருக்கும் என்று உற்சாகமாகக் குறிப்பிடுகிறார் புரட்சிக் கேப்டன் ஜெயலலிதா.

    இந்த அணி வீரர்கள் ரன் எடுப்பதற்கும், ஃபீல்டிங் செய்வதற்கும் மற்ற அணி வீரர்களைப் போல அவர்களே ஓட வேண்டும் என்பதில்லை. அரசாங்க வண்டிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருக்கிறது. டீம் கேப்டனால் பவுண்டரி லைனில் நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரிகளும், ஃபீல்டிங்கில் ஈடுபடுவார்கள் என்பது ஒரு சாதகமான அம்சம்.

    ஆனால், இந்த அணி பயப்படுகிற ஒரே விஷயம் - ரஜினி தலைமையிலான அணியும் திடீரென ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்துவிடுமோ என்பதுதான். கேப்டன் ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன்னுக்குச் சமம் என்பதால், அந்த ஸ்கோரை எட்டுவது கஷ்டம் என்று அ.இ.அ.தி.மு.க. அணி அஞ்சுகிறது. ஆனால் ரஜினியோ, ‘எனக்கு ஆட்டமும் வேண்டாம், ஒரு ஸ்கோரும் வேண்டாம்’ என்று ஒதுங்கி நிற்பதுதான் தமது அணியின் பலம் என்று கேப்டன் ஜெயலலிதா கருதுகிறார்.

    பந்து வீச்சிலும் இந்த அணி அபாரத் திறமை காட்டக் கூடியது. ஸ்டம்ப்பைப் பார்த்து பந்து வீசும் பழங்கால முறையைவிட, பேட்ஸ்மேனின் தலையை ஸ்டம்ப்பாக பாவித்துச் செயல்படும் டெக்னிக்தான், நல்ல பலனை அளிக்கும் என்கிறார் அணியின் கேப்டன். இதனால், ஆட்டக்காரர்களின் கவனம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே இருக்கும்; ரன் எடுப்பதில் கவனம் செலுத்த முடியாது என்று கூறி புன்னகைக்கிறார் அவர்.

    ஜெயலலிதாவின் டீமைத் தோற்கடிக்க ஒரு பொது அணியை உருவாக்கவேண்டும் என்று முயற்சி செய்ததின் விளைவாக, எதிர் அணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டிருக்கிறது. இதுவும் அ.இ.அ.தி.மு.க. அணிக்குச் சாதகமான அம்சம்.

    கள்ள ரன்கள் எடுப்பதிலும் இந்த அணி பாரம்பரியப் பெருமைமிக்கது. ஒரு ரன் எடுத்துவிட்டு, இரண்டு வீரர்கள் கணக்கிலும் அதைச் சேர்க்க வேண்டும் என்று நடுவரிடம் முரட்டுத்தனமாக தகராறு செய்யும்போது, பாவம் நடுவர் என்ன செய்ய முடியும்? அப்படியெல்லாம் ஸ்கோரை உயர்த்த முடியாது என்று நடுவர் அடாவடி செய்தால், அதை முறியடிப்பதற்காக இந்த அணி வீரர்கள் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை மைதானத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்டோ வீரர்கள், முன்பு ‘அம்பயர்’ சேஷன் தங்கியிருந்த ஹோட்டலை அடித்து நொறுக்கிய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சி ஆட்டக்காரர்கள் பந்தை அடிக்கும்போது அது பவுண்டரி ஆகாமல் தடுப்பதற்காக, அ.இ.அ.தி.மு.க. அணியினர் தங்கள் கேப்டனின் ‘கட் - அவுட்’களால் தடுத்தும், ஃபீல்டிங் செய்துவிடுவார்கள். தவிர, பிச்சுக்கு நடுவிலும் ஜெயலலிதாவின் கட் - அவுட்டை வைப்பார்கள் என்பதால், அதைத் தாண்டிச் சென்றுதான் ரன் எடுக்க வேண்டியிருக்கும். இதனால், எதிர்க்கட்சி அணியினரின் ரன் ரேட் உயராமல் கட்டுப்படுத்த முடியும். இந்த அணிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் தலைமை வகிக்கிறார்கள். இதில் யார் கேப்டன், யார் துணை கேப்டன் என்று தெரியாத அளவுக்கு, இருவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

    ‘நான் எந்த அணிக்கும் ‘கோச்’ ஆக செயல்படவில்லை. அது விஷமத்தனமான பிரச்சாரம்’ என்று இந்த அணியின் கோச் ஆர். வெங்கட்ராமன் கூறுவதாக சில பத்திரிகைகள் கருதுகின்றன.

    ***

    ‘ஜனதா’ டீமில் ஆட்டத்திற்குத் தேவையான வீரர்கள் இல்லை. கேப்டன் சுப்ரமண்யம் ஸ்வாமி, வைஸ் கேப்டன் சந்திரலேகா ஆகிய இரு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களைச் சேர்த்துக் கொண்டால், சமயத்தில் நம்மையே ரன்-அவுட் ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில், எந்த அணியும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறது. இருந்தாலும், இந்த அணியும் ஆட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறது.

    கேப்டன் ஸ்வாமி நன்றாகப் பந்து வீசக் கூடியவர். ‘மூன்றாவது ஓவரின் நாலாவது பந்தில் பேட்ஸ்மேன் காலி’ என்று சொல்லிவிட்டுத்தான் பந்து வீசத் தொடங்குவார். இது அவரிடம் உள்ள ஒரு சிறப்பம்சம். சமீபத்திய ‘மேட்ச்’சில் பேட்ஸ்மேன் ஜெயலலிதாவை அவுட் ஆக்குவதற்காக, சுமார் 188 ஓவர்கள் பந்து வீசி சாதனை படைத்தவர் இவர். ஆனால், பேட்ஸ்மேன் ஜெயலலிதா ஸ்டம்ப்புகளை ‘அம்பயர்’ வசம் கொடுத்துவிட்டதால், அவரை ஸ்வாமியால் அவுட்டாக்க இயலவில்லை. தமிழக ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.

    அதே ஆட்டத்தில் பேட்ஸ்மேன் ஸ்வாமியை அவுட் ஆக்குவதற்காக, பயங்கர ஆவேசத்தோடு பந்து வீச்சாளர் ஜெயலலிதா துரத்திக்கொண்டு ஓடியதும்; ஆட்டக்காரர் ஸ்வாமி எல்லைக்கோட்டைத் தாண்டி டெல்லிக்குச் சென்றுவிட்டதால், ‘கேச்’ ஆகாமல் தப்பியதும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். எனவே, ஸ்வாமி இப்போது களத்தில் இறங்கி எந்தப் பக்கத்திலிருந்தாவது திடீரென்று பந்து வீசி விட்டால் என்ன ஆவது என்று அஞ்சுகிறார்கள் ஜெயலலிதா அணி ஆட்டக்காரர்கள்.

    ***

    தி.மு.க. அணியில் ராமதாஸ், வாழப்பாடி ஆகிய வீரர்களும் விளையாடுவதாக இருந்தது. ஆனால், வெற்றி பெற்றால் கோப்பையை யார் வாங்குவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியதால், அவ்வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள் என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் கேப்டன் கருணாநிதி. ‘எங்களைக் கடைசி வரை பன்னிரெண்டாவது நபராகவே இருக்கச் சொன்னால், அதை எப்படி ஏற்க முடியும்?’ என்கிறார் ராமதாஸ். ‘வாழப்பாடி சிறந்த ஆட்டக்காரராக இருக்கலாம். ஆனால், இடையிடையே தங்கள் அணி கேப்டன் மீதே பந்து வீசுவதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?’ என்று குறிப்பிடுகிறார் தி.மு.க. கேப்டன்.

    1989-ஆம் ஆண்டு சாம்பியன் கருணாநிதி, விடுதலைப்புலி டீம்முடன் பேரம் நடத்திய ரகசியம் அம்பலமானதை அடுத்து, அவரிடமிருந்து ஆட்சிக் கோப்பை பறிக்கப்பட்டது. பின்னர் நடந்த மேட்ச்சில் அவர் மட்டும் ஒரே ஒரு ரன் எடுத்து ‘நாட்-அவுட்’ பேட்ஸ்மேனாக நின்ற போதிலும், தி.மு.க. அணி 233 ரன் வித்தியாசத்தில் ‘இன்னிங்ஸ் தோல்வி’யைத் தழுவியது. இப்போது மீண்டும் முதல்வர் கோப்பையைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் களத்தில் நுழைகிறார் கருணாநிதி.

    ‘எங்கள் அணி ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி, நான் மைதானத்தைவிட்டு வெளியேறவேமாட்டேன். ரன் எடுப்பவர்களின் காலைச் சுற்றிச் சுற்றியே வருவேன். ரசிகர்களுக்கு சுண்டல், முறுக்கு வாங்கி வருவேன்’ என்று கண்கலங்கக் கூறும் கேப்டன் கருணாநிதி, ‘ரசிகர்கள் என்னைத்தான் ஜெயிக்க வைக்கப் போகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை’ என்று கிண்டலாகவும் குறிப்பிடுகிறார்.

    ஆட்டத்தில் ஜெயித்து கோப்பையைப் பெறுவதைவிட, பெவிலியன் சிம்மாசனத்தில் தனக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்று சோகத்தோடு குறிப்பிட்டாலும், பேட், பந்து செலவுக்காக ரசிகர்களிடம் நிதி வசூலிப்பதில் கவனமாகவே இருந்து வருகிறார், தி.மு.க. கேப்டன்.

    ***

    ம.தி.மு.க. அணி இந்த ஆண்டுதான் புதிதாகக் களத்தில் இறங்குகிறது. அணியின் இளம் கேப்டன் கோபால்சாமி, ஒவ்வொருமுறை பந்து வீசும் போதும் இலங்கை வரை சென்று, பிறகு அங்கேயிருந்து வேகமாக ஓடி வந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்த அணியினர் ‘பேட்’ செய்யும்போது, மைதானத்தில் ஆங்காங்கே கண்ணிவெடி வைத்து அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், மற்ற அணி வீரர்கள் அச்சத்துடனேயே ஃபீல்டிங் செய்ய வேண்டியிருக்கும். இது இந்த அணிக்குச் சாதகமான அம்சம்.

    ***

    காங்கிரஸ் அணி வீரர்கள், கேப்டன் பொறுப்பை ரஜினி ஏற்றுக்கொள்வார் என்று நம்பி, ஆட்டத்திற்கான பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, அவரை ஆட்டத்திற்கு இழுக்கும் பயிற்சியை மட்டுமே செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் அணிக்கு இருக்கும் முக்கியமான சங்கடம், எதிர் அணி வீரர் பந்தை வீசும்போது, பந்தை எந்த திசையில் அடிக்கவேண்டும் என்று நரசிம்ம ராவுக்கு ஃபோன் செய்து தெரிந்துகொண்டுதான் பேட்டைக் கையில் எடுக்கவேண்டும். அதற்குள் அந்தப் பந்து தங்கபாலுவின் கையில் கிடைத்துவிட்டால், ஆட்டக்காரர் ‘ஸ்டம்ப்ட்’ ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

    களத்தில் குமரி அனந்தனும், தங்கபாலுவும் எதிர் எதிர் முனையில் நின்று ‘பேட்’ செய்யும்போது, திடுக்கிடும் திருப்பம் நிகழும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1