Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cho Sir Peatti Alithaal
Cho Sir Peatti Alithaal
Cho Sir Peatti Alithaal
Ebook165 pages56 minutes

Cho Sir Peatti Alithaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோ அவர்கள் மறைந்த பிறகு எழுதப்பட்டவை இவை. அவர் இருந்தால், அவரது அரசியல் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று காட்டுவதற்காக அவரையே பேட்டி காண்பதுபோல ஒரு கட்டுரைகளையும் இதில் காணலாம். இது தவிர, தமிழக அரசியலுக்கு புதிய நன்கொடையாக நமக்கு கிடைத்துள்ள கமல்ஹாஸன் பற்றிய கட்டுரைகளும் உண்டு. ராகுல் வழங்கும் அரசியல் நகைச்சுவைகளும் அடங்கியுள்ளது.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580160109927
Cho Sir Peatti Alithaal

Read more from Thuglak Sathya

Related to Cho Sir Peatti Alithaal

Related ebooks

Related categories

Reviews for Cho Sir Peatti Alithaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cho Sir Peatti Alithaal - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சோ சார் பேட்டியளித்தால்

    Cho Sir Peatti Alithaal

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. திருந்துகிறது தி.மு.க.

    2. கமல்ஹாஸனின் கொள்கை விளக்கம்

    3. யாரு பிடியிலே யாரு?

    4. ராஹுல் பேசுகிறார், மோடி ஓடுகிறார்

    5. கமல்ஹாஸன் கைப்பற்றிய காவிரிப் பிரச்சனை

    6. தயாராகிறது காலா – 2

    7. கலைஞர் கற்றுத் தந்த அரசியல்

    8. உள்ளாட்சித் தேர்தல்கள் தேவையா?

    9. தீர்ப்புக்குப் பிறகும் தீராத சிக்கல்

    10. அமித் ஷா Vs அ.தி.மு.க.

    11. சோ ஸாருடன் ஒரு பேட்டி

    12. சிலை திருட்டு விவகாரத்தை ஸி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?

    13. சுதந்திரத்தால் கிடைத்த பலன்கள்

    14. அழகிரி அளிக்காத அதிரடி பேட்டி

    15. ஸ்டாலின் தராத சிறப்புப் பேட்டி

    16. தகாத உறவு பற்றி ஒரு தகாத தீர்ப்பு

    17. இடைத்தேர்தலை சமாளிப்பது எப்படி?

    18. சோ ஸார் பதில் சொன்னால்...?

    19. தலைவர்கள் வழங்காத தீபாவளி வாழ்த்துக்கள்

    20. சர்கார் Vs சர்க்கார்

    21. ஏழு பேர் மகாத்மியம்

    22. மலர்கிறது ‘மஹா கஷ்ட’ பந்தன்

    23. ஹிந்துயிஸம் என்றால் என்ன

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகர்களுக்கு,

    பணிவான வணக்கம். பொதுவாக ஒவ்வொரு புத்தகத்துக்கும் நூலாசிரியர் முன்னுரை எழுதவேண்டும் என்ற ஒரு மரபு ஏன் உருவாக்கப்பட்டது என்று யோசித்துப் பார்க்கிறேன். எழுத்தாளரின் எழுத்து லட்சணம் எப்படி இருக்கிறது என்று முன்னுரையிலேயே பார்த்துவிட்டு, மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வாசகர்களுக்கு வாய்ப்பு தரும் ஒரு முயற்சி இது என்றே நினைக்கிறேன். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அடியேன் 1980 முதல் வருடத்திற்கு சுமார் 50 கட்டுரைகள் துக்ளக்கில் எழுதி வருகிறேன். எல்லாவற்றையும் புத்தகமாக வெளியிட்டு வாசகர்களைத் துன்புறுத்தக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் கட்டுரைகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து புத்தகமாக்கி வருகிறோம். அந்த வகையில் 2018-ல் வெளியான சில கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

    சோ அவர்கள் மறைந்த பிறகு எழுதப்பட்டவை இவை. அவர் இருந்தால், அவரது அரசியல் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று காட்டுவதற்காக அவரையே பேட்டி காண்பதுபோல ஒரு கட்டுரைகளையும் இதில் காணலாம். இது தவிர, தமிழக அரசியலுக்கு புதிய நன்கொடையாக நமக்கு கிடைத்துள்ள கமல்ஹாஸன் பற்றிய கட்டுரைகளும் உண்டு. ராகுல் வழங்கும் அரசியல் நகைச்சுவைகளும் அடியேனுக்கு பெரும் உதவி புரிகின்றன. (ஹிந்துயிஸம் என்றால் என்ன?) அவர்களுக்கு நன்றி.

    ‘துக்ளக்’ சத்யா

    1. திருந்துகிறது தி.மு.க.

    பழைய தவறுகளிலிருந்து தி.மு.க. வெளிவரும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். நல்லதுதான். இந்த வகையில் வெளிவராமல், நல்லபடியாக வெளியில் வந்தால் சரி!

    ஸ்டாலின்: எப்படியாவது கழகத்தைப் பழைய தவறுகளிலிருந்து வெளியே கொண்டுவர முடிவு செஞ்சிருக்கேன். அதுக்கு என்ன பண்றதுன்னுதான் தெரியலை.

    துரைமுருகன்: அதெல்லாம் ரொம்ப ரிஸ்க். கலைஞர் காட்டிய வழியிலேர்ந்து விலகிட்டோம்னு மக்கள் நினைப்பாங்க. அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டா கட்சிக்காரர்களும் சோர்வடையலாம்.

    பொன்முடி: பழைய தவறுகளை நிறுத்திட்டு, புதுசா என்ன பண்ணப்போறோம்?

    வீரமணி: தவறுகளைத் திருத்திக்கிறது திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை வித்தியாசமான முயற்சிதான். கலைஞரும் இப்படித்தான் திடீர்னு ஆபத்தான முயற்சிகளிலே இறங்கிவிடுவாரு. ஆனா, நமக்கு இதெல்லாம் சரிப்படுமான்னுதான் தெரியலை.

    அன்பழகன்: தவறுகளைத் திருத்திக்கிட்டா ஆட்சியைப் பிடிக்க முடியும்ன்றதுகூட மூடநம்பிக்கைதான். அதை கலைஞரே விரும்பமாட்டார். ஆனா, அரசியல்ரீதியா பயன் இருக்கும்னு தெரிஞ்சா, தவறுகளை ஓரளவு திருத்திக்கறதிலே தப்பு இல்லை.

    எ.வ. வேலு: மொதல்லே நாம செஞ்ச பழைய தவறுகளைப் பட்டியல் போட்டுகிட்டு, ஒவ்வொண்ணா திருத்திக்கிட்டே வரணும். ஆனா, பட்டியல் போடறது இமாலய வேலையாச்சே.

    ஸ்டாலின்: அதுக்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். எல்லாமே தவறுன்ற அடிப்படையிலே மொத்தத்தையும் மாத்திக்குவோம். அநேகமா அதுதான் சரியா இருக்கும்.

    அன்பழகன்: முக்கியமா, குடியைக் கொண்டுவந்து, சமூகத்தச் சீரழிச்சுட்டோம்ன்ற கெட்டபேர் நமக்கு இருக்குது. ஆனா, இப்ப சமூகம்தான் திருந்தணுமே தவிர, நாம திருந்தறதுக்கு ஒண்ணும் இல்லை.

    எ.வ. வேலு: ஏன் இல்லை? நாம என்ன ஆட்சியிலேயா இருக்கோம்? பூரண மதுவிலக்குதான் நம்ம கொள்கைன்னு அறிவிப்போம். எதிர்பாராதவிதமா ஆட்சியைப் பிடிச்சுட்டா, ‘ஆலோசித்து படிப்படியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’னு மாத்திக்கிட்டாப் போச்சு.

    ஸ்டாலின்: ஆட்சிக்கு வந்தாலும் மதுஎதிர்ப்புக் கொள்கையை நான் கைவிடறதா இல்லை. நம்ம கட்சிக்காரங்க யாருக்கும் ஒரு சாராய ஆலைக்கு மேலே சொந்தமா இருக்கக் கூடாது.

    துரைமுருகன்: அப்படியே, கழக எம்.எல்.ஏ.க்கள் அவங்க தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளிலே மட்டும்தான், பினாமி பேர்லே பார் வெச்சுக்கலாம்னு கட்டுப்பாடு கொண்டுவரணும். இப்படி தவறைத் திருத்திக்கிட்டே வந்தா, நாம திருந்திட்ட மாதிரி ஒரு தோற்றம் ஏற்படும்.

    ஸ்டாலின்: 50 வருஷத்துக்கு முன்னாலே, ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்கவிடாம தடுத்தது தவறுன்னு நேத்துதான் எனக்கே புரிஞ்சுது. அதுக்கும் ஏதாவது பிராயச்சித்தம் செய்யணும்.

    பொன்முடி: அந்தத் தலைமுறைக்கு இப்ப 70-75 வயசு ஆகியிருக்கும். அவங்க எல்லாம் அறிவாலயத்தில் இலவசமா ஹிந்தி கத்துக்க ஏற்பாடு செய்யலாமா? எதிர்காலத்திலே வேலை தேடிப் பிழைச்சுக்கட்டும்.

    வீரமணி: ஹிந்தியை விடுங்க. தமிழை வாழவைக்க நாம சரியாப் போராடாததுதான் தவறுன்னு நான் நினைக்கிறேன். தேர்தல் கமிஷன்கிட்டேயிருந்து வாக்காளர் பட்டியலை வாங்கி அத்தனை பேருக்கும் தமிழ் பேர் வெச்சு, திருத்திய பட்டியலை வெளியிட வற்புறுத்தலாம்.

    துரைமுருகன்: அந்தக் காலத்திலே அரசியல்சட்ட எரிப்பு, போராட்டம் முடிஞ்சதும், ‘துண்டுக் காகிதத்தை எரித்தோம்’னு கோர்ட்லே சொன்னது பெரிய தவறு. மறுபடியும் ஒரு சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தி, ‘பெரிய காகிதத்தைத்தான் கொளுத்தினோம்’னு வீரமா ஒத்துக்கலாம்.

    ஸ்டாலின்: அதெல்லாம் வேண்டாம். ஹைகோர்ட்டுக்கு தமிழ் கோர்ட்டுன்னு பேர் வைக்கணும், வங்கக்கடலை தமிழ் கடல்னு மாத்தணும்னு வற்புறுத்தி போராட்டம் நடத்தலாம். தவறைத்திருத்த அதுதான் வழி.

    எ.வ. வேலு: கடவுள் எதிர்ப்பாளர்கள்ன்ற அவப்பெயர்லேர்ந்து நாம வெளியே வரணும். நம்ம குடும்பத்துப் பெண்கள் கோவிலுக்குப் போகும்போது, கோவில் வாசல் வரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வரலாம். பெரியார் கொள்கையிலேர்ந்து விலகாம, ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தறோம்.

    வீரமணி: மதச்சார்பின்மைக் கொள்கையை மறந்துட்டீங்களா? கோவில் வாசல் வரைக்கும் போறதுக்கு பதிலா, சர்ச் வாசல் வரைக்குமோ மசூதி வாசல் வரைக்குமோ போகலாமே.

    ஸ்டாலின்: நம்ம வீட்டுப் பெண்கள் கோவிலுக்குப் போறதைத் தடுத்தா தப்பாப் போயிடும். பெரியார் கொள்கையை மக்கள் மேலே திணிக்கலாம்; குடும்பத்திலே திணிக்கக்கூடாது. அவங்க கொடுக்கிற பிரசாதத்தை சாப்பிடலாம். விபூதி குங்குமம் பூசத் தேவையில்லை.

    அன்பழகன்: கழக ஆட்சி நடந்த சமயத்திலே நம்ம ஆளுங்க நிறையப் பேர், நில அபகரிப்பு வழக்குகளிலே மாட்டிக்கிட்டாங்க. இனிமே இப்படி தவறு நடக்கக்கூடாது. அடுத்தமுறை யாரும் மாட்டிக்காம, கட்சி இமேஜைக் காப்பாத்தணும்.

    துரைமுருகன்: இனிமே அந்தத் தவறு நடக்காது. நாம மறுபடியும் ஆட்சிக்கு வந்தா வேறே எந்தத் தொழில் வேணாலும் செய்யலாம். நில அபகரிப்பு தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம். மாட்டிக்காம செய்யறது ரொம்பக் கஷ்டம்.

    பொன்முடி: நம்ம கட்சியிலே சிலர் திரைத்துறையிலே ஈடுபட்டதாலே திரையுலகமே நமக்கு எதிராத் திரும்பிடுச்சு. அடுத்தமுறை அந்த தவறு நடக்கக்கூடாது. அதுக்கு பதிலா அவங்க காலேஜ், ஹோட்டல்னு வேறே தொழிலை ஆக்கிரமிக்கட்டும்.

    எ.வ. வேலு: அதுலேயும் கெட்ட பேர் வந்தா, அதுக்கடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கும்போது அந்தத் தொழிலையும் மாத்திக்கணும். டக்டக்குன்னு பழைய தவறை மாத்தி, புதுசுக்கு மாறிக்கணும்.

    ஸ்டாலின்: பா.ஜ.க. காங்கிரஸ் வி.பி. சிங் தேவகௌடா, குஜ்ரால்னு ஒரு ஆட்சி விடாம எல்லா மத்திய ஆட்சியிலேயும் கழகம் இடம் பெற்றது பெரிய தவறு. ஏதாவது ஒரு ஆட்சியிலேயாவது இடம் பெறாம இருந்திருந்தா, இந்த அளவுக்கு கேலிக்கு ஆளாகியிருக்க மாட்டோம்.

    துரைமுருகன்: கரெக்ட். இனிமே தேவகௌடா, குஜ்ரால் மாதிரி சின்ன ஆளுங்க ஆட்சியைப் பிடிச்சா, வெளியிலேர்ந்து ஆதரிச்சாப் போதும். மந்திரி பதவிக்கு பதில், அதுக்கு சமமா வேறே ஏதாவது கேட்டு வாங்கிக்கணுமே தவிர, கொள்கையைவிடக்கூடாது.

    அன்பழகன்: நமக்குப் பெரிய அளவிலே கெட்டபேர்

    Enjoying the preview?
    Page 1 of 1