Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arasiyal Varungal Naguga!
Arasiyal Varungal Naguga!
Arasiyal Varungal Naguga!
Ebook216 pages1 hour

Arasiyal Varungal Naguga!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயலலிதாவின் நிபந்தனைகளைச் சமாளிக்க முடியாமல் வாஜ்பாய் தவித்த தவிப்பை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாத நிலைதான் அன்று இருந்தது. இந்நகைச்சுவைக் கட்டுரைகளின் பின்னணியில் எவ்வளவு சோகம் இருந்தது என்பது அன்றைய அரசியலை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவற்றையெல்லாம் மறந்தவர்களுக்கு இக்கட்டுரைகள் அன்றைய அரசியலை நினைவுபடுத்துவதை வாசித்து அறிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580160109913
Arasiyal Varungal Naguga!

Read more from Thuglak Sathya

Related to Arasiyal Varungal Naguga!

Related ebooks

Related categories

Reviews for Arasiyal Varungal Naguga!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arasiyal Varungal Naguga! - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அரசியல் வருங்கால் நகுக!

    Arasiyal Varungal Naguga!

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. குண்டு வெடிப்பு பற்றி முதல்வர் கூறத்தவறிய கருத்துகள்

    2. கருணாநிதி அரசைக் கவிழ்ப்பது எப்படி?

    3. ஜெயலலிதா எழுதாத கடிதமும் வாஜ்பாய் அளிக்காத பேட்டியும்

    4. அணுகுண்டை விட அதிர்ச்சியான கருத்து குண்டுகள்

    5. ஜெயலலிதா டெல்லி சென்றிருந்தால்...?

    6. இப்படியும் வழங்கலாம் இட ஒதுக்கீடு

    7. தூது போன துரதிர்ஷ்டசாலிகள்

    8. அமெரிக்காவில் இந்திய அரசியல்வாதிகள் நுழைந்தால்...?

    9. அரசியல் நட்சத்திரங்கள் பராக்... பராக்...!

    10. கூட்டம் பின்னே... கூட்ட விவரம் முன்னே...!

    11. வாழ்க பகுத்தறிவு... வளர்க தமாஷ்...!

    12. ஜெயலலிதா – சரத்பவார் சந்திப்பு

    13. துக்ளக் தர்பார் ஒரு வழக்கு விசாரணை

    14. அரசியல் கட்சிகளின் அந்தரங்க ஆலோசனைகள்

    15. நடக்கக் கூடாதவை... நடந்துவிட்டால்...?

    16. அரசியல் கோர்ட்

    17. சிறை நிர்வாகம் சீர்திருத்தப்படுகிறது

    18. அகில இந்திய கலாட்டா காங்கிரஸ்

    19. இதிலெல்லாம் எப்போது இட ஒதுக்கீடு?

    20. உடன்பிறப்புக்கு கலைஞர் எழுதாத கடிதம்

    21. தேர்தல் பின்னே - வெற்றி முன்னே

    22. அ.தி.மு.க. தோல்வி ஏன்?

    23. கூட்டணி எவ்வழி, கொள்கை அவ்வழி

    24. இலங்கைப் பிரச்னையும், தமிழக தலைவர்களும்!

    25. வாஜ்பாயும் ராமதாஸும் பேசியது என்ன? - ஓர் இன்வெஸ்டிகேடிவ் கற்பனை

    26. மூப்பனாரும், சோனியாவும் பேசியது என்ன? - ஓர் அதிரடி கற்பனை

    27. துக்ளக் டெலிவிஷன் வழங்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

    28. எச்சரிக்கை - இங்கே பேச்சுவார்த்தை நடக்கிறது!

    29. கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் சந்தித்தால்...?

    30. தி.மு.க. VS. கூட்டணிக் கட்சிகள்

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகரே...!

    வணக்கம். 1999 - 2000 ஆண்டுகளில் அடியேன் துக்ளக்கில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் சிலவற்றை அல்லயன்ஸ் நிறுவனம் நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது.

    நியாயமாகப் பார்த்தால், இவற்றை நகைச்சுவைக் கட்டுரைகள் என்று கூறுவது கூட சரியல்ல. மேற்படி கால கட்டத்தில் நாடு சந்தித்த இன்னல்களுக்கு நகைச்சுவை முலாம் பூசப்பட்டுள்ளது என்பதே உண்மை.

    ஜெயலலிதா ஆதரவோடு மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எப்படி படாதபாடு பட்டது என்று தெரியாதவர்கள், அன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவக்கூடும்.

    ஜெயலலிதாவின் நிபந்தனைகளைச் சமாளிக்க முடியாமல் வாஜ்பாய் தவித்தத் தவிப்பை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியாத நிலைதான் அன்று இருந்தது. இந்நகைச்சுவைக் கட்டுரைகளின் பின்னணியில் எவ்வளவு சோகம் இருந்தது என்பது அன்றைய அரசியலை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவற்றையெல்லாம் மறந்தவர்களுக்கு இக்கட்டுரைகள் அன்றைய நிலையை நினைவுபடுத்தும் என்பது உறுதி.

    பா.ஜ.க. ஆதரவை கைவிட்டு பின்னர் சோனியாவை ஜெயலலிதா அவர்கள் ஆதரித்ததால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும் இந்நூல் வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    அதிலும், அ.தி.மு.க.வை ஆதரிக்க மனமில்லாத நிலையில், சோனியாவுக்காக தன் மனதை மாற்றிக்கொண்ட மூப்பனார் பட்டபாட்டையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

    ஒரு வழியாக அந்தக் கால கட்டத்தை தாண்டி வந்துவிட்டதால், இப்போது கவலையின்றி பழைய கஷ்டங்களை ரசிக்கலாம்.

    நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

    அன்புடன்,

    துக்ளக் சத்யா

    1. குண்டு வெடிப்பு பற்றி முதல்வர் கூறத்தவறிய கருத்துகள்

    கோவை வெடிகுண்டு சம்பவங்கள் பற்றி முதல்வர் கருணாநிதி கூறி வருகிற கருத்துகள், குண்டு வெடிப்பை விட அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கின்றன.

    ‘பாபர் மசூதி இடிப்பின் விளைவுதான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள்’

    ‘தி.மு.க. - த.மா.கா.வுக்கு ஆதரவான கருத்துக் கணிப்பால், ஆத்திரமடைந்தவர்களின் சதிச் செயல்தான் இது’

    ‘ஐரோப்பிய நாடுகளின் சதி’

    ‘பாரதிய ஜனதா தீவிரவாதிகள் கோவையில் இருப்பதுதான் காரணம்’

    ‘உள்ளூர் அரசியல் கட்சிகளின் உதவியோடு செய்யப்பட்ட வெளிநாட்டுச் சதி’

    ‘...அதனால்தான் பா.ஜ.க. காலூன்ற இடம் தர வேண்டாம் என்று கூறினேன்’

    ‘தஞ்சை கோவிலை இடித்தால் ஹிந்துக்களுக்கு எப்படி இருக்கும்?’

    ‘அல் - உம்மா, ஜிஹாத் இயக்கங்களை முன்பே தடை செய்திருந்தால் மட்டும் இச்சம்பவங்கள் நடந்திருக்காதா?’

    இப்படி தன் மனதுக்குத் தோன்றிய கருத்துக்களையெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளையாக தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டதால், முதல்வரின் கருத்து மழையும் நின்றுவிட்டது.

    இருந்தாலும், பிரச்சாரம் தொடர்ந்திருந்தால் முதல்வர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ என்ற ஏக்கம் கழகத் தொண்டர்கள் பலருக்கு இருக்கலாம். அவர்கள் திருப்திக்காக, முதல்வர் கூறத் தவறிய கருத்துகளை நாம் கூறுகிறோம், முதல்வரின் பாணியில்.

    ‘...இன்றைய தினம் கோவை வெடிகுண்டு சம்பவங்களுக்கு அரசின் பொறுப்பற்ற போக்குதான் காரணம் என்று, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் பேசி வருகிறார்கள்.’

    கஜினி முகமது 17 முறை படையெடுத்து வந்தபோது, 17 முறையும் அவனோடு தேவையில்லாமல் மோதி சிறுபான்மை இனத்தை ஒடுக்க நினைத்த ஹிந்து அரசர்கள் ஆரம்பித்து வைத்த வன்முறையின் எதிரொலிதான், கோவை சம்பவம். கஜினி முகமது கேட்ட கோவில் நகைகளை கொடுத்தனுப்பியிருந்தால் இப்படி நடந்திருக்குமா?

    பாகிஸ்தானைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் செய்த கூட்டுச் சதிக்கு பதில் கூற வேண்டிய பா.ஜனதாக் கட்சியினர், தி.மு.க.வை குறை கூறுவது ஏனென்றுதான் எனக்குப் புரியவில்லை.

    சதாம் ஹுஸேன்மீது கிளிண்டன் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்தேன். அதுதான் நடந்திருக்கிறது.

    கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலை அத்வானிக்கு முன்பே தெரிவித்து, அவரது விமானத்தைத் தாமதப்படுத்தியது யார்? அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் கட்சியினர்தானே அவரை எச்சரித்திருக்க முடியும்?

    சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அத்வானியுடன் வந்திருந்த வாஜ்பாய், கோவை கூட்டத்திற்கு வராமல் அத்வானியை மட்டும் தனியாக அனுப்பியது ஏன்? மற்ற இடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு, குண்டு வெடிப்புக்கள் நடக்கக்கூடிய இடமாகப் பார்த்து கூட்டம் நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்த மர்மம் என்ன? இந்த உண்மைகள் எல்லாம் விசாரணையின்போது வெளிவரத்தான் போகின்றன.

    தேர்தல் சமயத்தில் வெடிகுண்டுச் சம்பவங்கள் நடந்துவிட்டதே என்று முதன்முதலில் அதிர்ச்சி அடைந்தவனே நான்தான். பா.ஜனதா தீவிரவாதிகளும், அ.தி.மு.க. தீவிரவாதிகளும் கூட்டு வைத்ததால்தான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன. இன்னும் எத்தனை இடங்களில் நடக்கப் போகிறதோ? பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைந்தால் தீவிரவாதிகளுக்கு கோபம் வரும் என்று தெரிந்தும், பாரதிய ஜனதாவுக்கு ஏன் இடம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் என் கேள்வி.

    இன்றைய தினம் குண்டு வெடிப்பில் பலியாகாதவர்கள் கோடிக்கணக்கான பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுத்ததே இந்த அரசுதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

    தி.மு.க.வையும், த.மா.கா.வையும் பிரிக்கப் பார்த்து, அது முடியாத காரணத்தால் இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகப் போலீஸ் துறையை ஜெயலலிதா அம்மையார் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டதை நாங்கள் இப்போது சரி செய்து கொண்டிருக்கிறோம். என்றாலும், அப்போது சீரழிந்ததின் தொடர்ச்சிதான் இந்த நிகழ்ச்சி.

    அத்வானி மருத்துவமனைக்குப் போவதற்கு முன்புதான் வெடிகுண்டு வெடித்ததே தவிர, அவர் தங்கியிருக்கும்போது வெடிகுண்டு வெடிக்கவில்லை. அந்த அளவுக்கு பாதுகாப்பு தந்திருக்கிறோம்.

    முருகன் கோவிலையோ, பிள்ளையார் கோவிலையோ முஸ்லிம்கள் கடப்பாறையால் இடித்துத் தள்ளியிருந்தால் ஹிந்துக்கள் பொறுமையாக இருக்க முடியுமா? நான் வேண்டுமானால் சிறுபான்மையினர் நலன் காப்பதற்காக பெருந்தன்மையோடு அனுமதித்து விடலாம். மற்றவர்கள் அப்படி இருந்துவிட முடியுமா? பாபர் மசூதியை இடித்தது தவறு என்பதற்காகத்தான் இந்த உதாரணத்தைக் கூறுகிறேன்.

    தடா சட்டத்தின் கீழ் கைதான முஸ்லிம் தீவிரவாதிகளை, மதச்சார்பின்மை அடிப்படையில் கழக அரசு விடுதலை செய்தபோது, தேவையில்லாமல் சிலர் குறை கூறினார்கள். அப்படி குறை கூறியதுதான் இந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம். ஒவ்வொரு முறை அவர்களை விடுதலை செய்யும்போதும் பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது 60 உயிர்கள் பலியாகி விட்டன. திருப்திதானே? இப்போதாவது கழக அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை ‘தடா’ கைதிகளின் விடுதலையை எதிர்த்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    நான் கேட்கிறேன். 13 நாட்கள் பாரதிய ஜனதா ஆட்சி நடந்ததே. ஏன் அந்த அரசு காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்கவில்லை? காஷ்மீரில் சிறுபான்மை இன மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளால்தானே தமிழகத்தில் இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன? காஷ்மீர் பிரச்னையை பா.ஜ.க. அரசு தீர்த்திருந்தால் கோவை சம்பவத்திற்கு அவசியமே இருந்திருக்காது.

    அவ்வளவு ஏன்? அத்வானி - வாஜ்பாய் பேசிய கடற்கரைக் கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் கூடியிருந்தபோது வெடிகுண்டுகள் வெடிக்கவில்லையே! அதற்கு பாராட்டு தெரிவித்தார்களா? நன்றியை நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் நன்றி தெரிவிக்கவில்லை என்றுதான் கேட்கிறேன்.

    பாபர் மசூதியை இடிக்காமல் இருந்திருந்தால் இன்றைய தினம் 60 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், கருணாநிதிக்கு கெட்ட பெயர் உண்டாக்கி கழக அரசைக் கவிழ்த்து விடலாம் என்ற திட்டத்தோடு, அன்றே கரசேவைக்கு ஆள் அனுப்பியவர்தான் ஜெயலலிதா.

    "கோவை வெடிகுண்டுச் சம்பவம் பற்றி விசாரணை நடக்கத்தான் போகிறது. இதில் அத்வானி, வாஜ்பாய், ஜெயலலிதா ஆகியோருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பது பற்றியெல்லாம் இப்போது நான் கூறக்கூடாது. விசாரணையில் வெளி வரவிருக்கும் உண்மைகளை முன்னதாகச் சொல்லி விடுவது பண்பாடல்ல.

    முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இச்சம்பவங்களுக்குக் காரணம் என்று அவசரப்பட்டு பழிபோட நான் தயாராக இல்லை. எல்லா தரப்பினரிடமும் விசாரணை நடத்திவிட்டு தேவைப்பட்டால் கடைசியாக அவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களையும் விசாரிக்கக் கூடியவன்தான் நான் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

    கழக ஆட்சியில், குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றால், தம்பி ரஜினி கழக அரசைக் கண்டித்து கருத்துக் கூறுவார். அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று நினைத்து சில அரசியல் துரோகிகள் இந்த வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள், தம்பி ரஜினியிடம் ஏமாறத்தான் போகிறார்கள்.

    கழக அரசுக்கு எதிராக சேற்றை வாரி இறைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற சில பார்ப்பன ஏடுகளின் அதிபர்கள் தங்கள் இனப் பற்றைக் காட்டிக் கொள்வதற்காக இந்த விபரீதத்திற்கு துணை போயிருக்கிறார்கள்.

    இறுதியாக ஒன்று கூறுகிறேன்.

    வன்முறையை முற்றிலும் ஒழிப்பதுதான் என் லட்சியம். அதற்கு நூறு ஆண்டுகளோ, இருநூறு ஆண்டுகளோ ஆகலாம். அதற்குப் பிறகு, ரஜினி சொன்னதுபோல பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுப் போய் விடுவேன் என்பதை மாத்திரம் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

    துக்ளக்’ 4.3.98

    2. கருணாநிதி அரசைக் கவிழ்ப்பது எப்படி?

    மத்திய அமைச்சர்கள் ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி போன்றவர்கள் திடீர் திடீரென தமிழகத்திற்கு வந்து, கருணாநிதிக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களைக் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் இப்படித் தனித்தனியாக வந்து பயமுறுத்துவதை விட கூட்டமாக வந்து முயற்சி செய்தால், ஜெயலலிதாவிடமிருந்து கூடுதல் பாராட்டு கிடைக்கும் என்பது நமது கருத்து. அமைச்சர்களுக்கு முன்னதாக, துக்ளக் சோதனை முயற்சி செய்கிறது.

    (மத்திய அமைச்சர்கள் ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, சேடப்பட்டி முத்தையா, தம்பித்துரை ஆகியோர் விமானத்திலிருந்து இறங்கியவுடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். இதோ... அமைச்சர்களின் ஆவேசப் பேட்டி...)

    கேள்வி: என்ன ஸார்? திடீர்னு நாலு மந்திரிகளும் ஒண்ணா வந்திருக்கீங்களே?

    ரங்கராஜன்: டெல்லியிலே வேலையே ஓடலை. அதான் கருணாநிதியைக் கண்டிச்சுட்டுப் போலாம்னு வந்தோம்.

    சேடப்பட்டி: இல்லேன்னா புரட்சித் தலைவி மனசு புண்படும்.

    வாழப்பாடி: வாங்கற சம்பளத்துக்கு புரட்சித் தலைவிக்கு எதையாவது செய்யணும் இல்லே? கருணாநிதியை பதவியிலேர்ந்து இறக்கற வரைக்கும் எங்களுக்கு ஓய்வு ஒழிச்சலே கிடையாது.

    தம்பிதுரை: இப்ப கூட, அவரை பதவியிலேர்ந்து இறக்கறதுக்காகத்தான் வந்திருக்கோம். அவரா இறங்கிட்டா தன்மையா விட்டுருவோம். இல்லே நாங்களா இறக்கிட்டுத்தான் மறுவேலை.

    கேள்வி: நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1