Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivangal Ezhuga
Deivangal Ezhuga
Deivangal Ezhuga
Ebook211 pages54 minutes

Deivangal Ezhuga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இணையதளத்தில் ஒரு வார இதழ் ஆரம்பிப்பதாகவும் அதில் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யோசனையாக இருந்தது. வாரம் தோறும் எழுதுவது இயலுமா என்றும் சந்தேகம் இருந்தது. என்ன வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தயக்கமின்றி எழுதலாம். சுருக்கமாகவும் எழுதலாம். நீண்டதாகவும் இருக்கலாம்.

நாம் இருப்பது ஜனநாயக அமைப்பில் என்று பெயரே தவிர ஜனநாயகத்திலும் கருத்துச் சுதந்திரத்துக்கு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ அடக்குமுறைகள் உண்டு என்பதை நமது அரசு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் அச்சமின்றி நேர்மையாக வாக்களித்த சாத்தியங்களும் குறைந்துவிட்டன, அரசியல் கட்சிகள் பணபலம் கொண்டு அவற்றை நசுக்கப் பார்ப்பதால். ஜனநாயக வேர்களை ஊடுருவி சுதந்திரப் பயிரை ஆட்டம் காணவைக்கும் போக்குகளைக் கண்டு பத்திரிகைத்துறை ஒரு இயலாமையுடன் கண்டு மௌனிக்கும் காலகட்டமாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவர்களுக்கு தாங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ அவர்களின் செயல்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எவருக்கும் இல்லை என்கிற ஆணவம் நிச்சயமாக இருப்பது நாளுக்கு நாள் வெளிப்படையாகத் தெரிய வரும் போக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்த பிறகு கிடைத்த பணபலமே அவர்களது ஆணவத்துக்குக் காரணம். சுதந்திரப் போரில் பங்கு பெற்று சுதந்திரம் கிடைத்த பின் ஆட்சிக்கு வந்த தலைவர்களுக்குப் பணிவு இருந்தது. ஒரு மாபெரும் பொறுப்பு தங்கள் அனுபவமற்ற தோள்களில் இருப்பதான உணர்வும் பயமும் இருந்தது. தங்கள் கடமையை செவ்வனச் செய்ய வேண்டும், மக்களை முன்னேற்ற வேண்டும் என்கிற அர்ப்பணிப்புடன் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அவர்கள். பணத்தைப் பற்றியோ அதிகார பலத்தைப் பற்றியோ நினைத்துப் பார்த்திராத அதிசயத் தலைமுறை அது.

இன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமையே வேறு. நாம் மீண்டும் நில ஆதிக்கவாத காலத்துக்குச் சென்றுவிட்டோம். ஜனநாயக வாக்கெடுப்பும் கண்துடைப்பாக மாறிவிட்ட தமிழ்நாட்டில் ஆளும் குடும்பம், அது யாராக இருந்தாலும், அரச குடும்பமாக மாறிவிடுகிறது. அவர்களது செல்வாக்கும் செல்வமும் அதிகரிக்க அதிகரிக்க அவை ஏற்படுத்தும் ஒளி வட்டம் பாமரனுக்கு பிரமிப்பேற்படுத்துவது. கேள்வி கேட்கும் தகுதியை மக்களும் பத்திரிகைகளும் இழந்துவிட்டார்கள். அச்சுறுத்தலை சந்திப்பதைவிட மண்டியிடுவது மேல் அல்லது ஒதுங்கி இருப்பது மேல் என்று பத்திரிகையாளர்கள் சமரசத்துக்கு வந்துவிட்டார்கள். விமர்சனம் செய்தால் வெகுண்டெழுந்து தமது பத்திரிகையில் பெயர் சொல்லி எழுதுவதோடு தலைமை நிற்காது. மறைமுக அச்சுறுத்தல்கள் பல ரூபங்களில் வரும். அல்லது நீதி மன்றத்துக்கு இழுக்கப்படுவோம். நீதித்துறையும் சாமான்ய மனிதர்கள் கொண்ட வளாகம். அங்கு துணிச்சலுடன் செயல்படுகிறவர்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படிப்பட்டவர்களின் தார்மீக பலத்தை முறியடிக்கும் யத்தனத்தில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் பங்கு இருக்கும். துரித கதியில் சுழலும் வாழ்க்கையில் யாருக்கும் சிக்கல்களைச் சந்திக்க நேரமும் இல்லை, திராணியும் இல்லை. அரசின் அதிகார பலம் அசுரத்தனம் கொண்டது.

நாம் இருப்பது ஜனநாயகம்தானா என்கிற சோர்வு என்னை பல சமயங்களில் அலைக்கழிக்கிறது. எழுத நினைப்பதை, எழுதப்பட வேண்டியதை எழுத முடியாமல் போவது எத்தனை கொடுமை என்கிற ஆயாசம் மேற்கொள்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புள்ளது என்கிற கருத்துடன் எழுதுபவருக்கு ஏற்படும் மனச் சோர்வு இது. அத்தகைய சமயத்தில் 'தயக்கமில்லாமல் எழுதக்கூடிய வெளி இது' என்று அழைப்பு விடுக்கும்போது இது நல்ல வாய்ப்பு என்று எழுத ஆரம்பித்தேன். நாட்டு நடப்பிலும், இந்திய கலாச்சாரக் கூறுகளிலும், சமுதாய அவலங்களிலும் தீவிர ஆர்வம் கொண்ட எனக்கு சொல்லப் படவேண்டியது நிறைய இருப்பதாக உணர்கிறேன்.

வாராவாரம் என்ன எழுதுவோம் என்கிற திகைப்பு இல்லை. சொல்ல அநேகம் இருக்கிறது என்கிற துடிப்பு அதிகரிப்பதை உணர்கிறேன். புதிதாக இறக்கை முளைத்தது போல இருக்கிறது. ரிச்சர்ட் பாக் எழுதிய, அமரத்துவம் பெற்ற ஜானத் தன் லிவிங்க்ஸ்டன் என்ற கடல் பறவை போல உணர்கிறேன். ஜானத்தன் லிவிங்க்ஸ்டன் பறக்க ஆசைப்பட்டது. கற்க ஆசைப்பட்டது. அமைப்பின் விதிகளை மீறத் துணிந்தது. அதற்காக அதன் சமூகத்தால் ஒதுக்கப்பட்டது. அதை லட்சியம் செய்யாமல் அறிவின் எல்லையைத் தேடிச் சென்றது. உண்மை புலப்பட்டதும் நிலத்துக்குத் திரும்பி தன்னைப் போன்ற அறிவுத் தாகத்துடன் இருப்பவரைக் கூட்டு சேர்த்து பறக்கும் துணிவை ஏற்படுத்திற்று.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580125404670
Deivangal Ezhuga

Read more from Vaasanthi

Related to Deivangal Ezhuga

Related ebooks

Reviews for Deivangal Ezhuga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivangal Ezhuga - Vaasanthi

    http://www.pustaka.co.in

    தெய்வங்கள் எழுக

    Deivangal Ezhuga

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. காஷ்மீர் வன்முறை

    2. நீதிபதிகளா? மதகுருக்களா?

    3. எம்.எஃப். ஹுசேன்: வெறுப்பின் வேர்கள்

    4. குருதி வேட்கையும் தெய்வ முகமூடிகளும்

    5. ஒருபால் உறவு: ஏன் இந்தப் பதற்றம்?

    6. இறப்புரிமை: தர்மமும் தார்மீகமும்

    7. இதயத்தை அறைய ஒரு இசை

    8. புக்கர் பரிசு: இலக்கிய அரசியலின் இன்னொரு பக்கம்

    9. ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல்

    10. வன்முறைக்குப் பின்னே தகிக்கும் கனல்

    11. புதிய விடியல்

    12. அந்தியின் நிழல்கள்

    13. காணாமல் போன கதைசொல்லிகள்

    14. மரண வியாபாரிகள்

    15. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லீம்கள்

    16. மௌனத்தின் உறை பனி

    17. சென்னை சங்கமம்: மக்கள் கலைகளைத் தேடி

    18. நம்பிக்கையின் முனைகள்

    19. நமது எதிரியே நமது உதவியாளன்

    20. தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்

    21. தெய்வங்கள் எழுக

    22. நமக்காக இருப்பவர் யார்?

    23. கொலைகார அரசியலும் தற்கொலைகளும்

    24. அரசியல் ஆவேசங்கள்

    25. அன்பின் சுனை

    26. வழி தவறும் ஆடுகள்

    27. நல்ல நேரமும் நமது கெட்ட காலமும்

    28. யாருக்கும் வெட்கமில்லை

    29. நூற்றாண்டின் துயரம்

    30. வாக்காளருக்கு ஜெய ஹோ!

    31. கருணாநிதி என்னும் பிதாமகர்

    32. மீள முடியுமா?

    முன்னுரை

    இணையதளத்தில் ஒரு வார இதழ் ஆரம்பிப்பதாகவும் அதில் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யோசனையாக இருந்தது. வாரம் தோறும் எழுதுவது இயலுமா என்றும் சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் மாத இதழை மிக நேர்த்தியாக வெளியிட்டு இலக்கியத்தளத்தில் அதற்கு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் லாவகத்தைக் கண்டு அவர்மேல் எனக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பின் காரணமாக எழுத ஒப்புக் கொண்டேன். அவர் இன்னொன்றும் சொன்னார். என்ன வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தயக்கமின்றி எழுதலாம். சுருக்கமாகவும் எழுதலாம். நீண்டதாகவும் இருக்கலாம்.

    அவரது இந்த வாக்கியங்களே என்னை அதிகமாக ஈர்த்தன. எனக்கு எனது உணர்வுகளை வெளிப்படுத்த தடங்கலற்ற வெளி தேவை. எழுத்தாளர்கள் தங்கள் பிறப்புரிமை என்று நினைத்துவந்த அந்த இடம் சுருங்கிக் கொண்டே வருவதான பீதி என்னைக் குழப்புகிறது. நாம் இருப்பது ஜனநாயக அமைப்பில் என்று பெயரே தவிர ஜனநாயகத்திலும் கருத்துச் சுதந்திரத்துக்கு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ அடக்குமுறைகள் உண்டு என்பதை நமது அரசு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் அச்சமின்றி நேர்மையாக வாக்களித்த சாத்தியங்களும் குறைந்துவிட்டன, அரசியல் கட்சிகள் பணபலம் கொண்டு அவற்றை நசுக்கப் பார்ப்பதால். ஜனநாயக வேர்களை ஊடுருவி சுதந்திரப் பயிரை ஆட்டம் காணவைக்கும் போக்குகளைக் கண்டு பத்திரிகைத்துறை ஒரு இயலாமையுடன் கண்டு மௌனிக்கும் காலகட்டமாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக அமைப்பில் பத்திரிகைத் துறை அதன் நான்காவது தூண் என்று பெயரே தவிர அரசியல் சட்ட சாஸனம் அதற்கு அளித்திருக்கும் நியாயமான கருத்துச் சுதந்திரம் அரசியல்வாதிகளை, முக்கியமாக ஆளும் கட்சியை உறுத்தாமல் இருக்கும் வரை அனுமதிக்கப்படும். பிரச்சினை இல்லை. ஆட்சிக்கு வந்தவர்களுக்கு தாங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ அவர்களின் செயல்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எவருக்கும் இல்லை என்கிற ஆணவம் நிச்சயமாக இருப்பது நாளுக்கு நாள் வெளிப்படையாகத் தெரிய வரும் போக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வந்த பிறகு கிடைத்த பணபலமே அவர்களது ஆணவத்துக்குக் காரணம். சுதந்திரப் போரில் பங்கு பெற்று சுதந்திரம் கிடைத்த பின் ஆட்சிக்கு வந்த தலைவர்களுக்குப் பணிவு இருந்தது. ஒரு மாபெரும் பொறுப்பு தங்கள் அனுபவமற்ற தோள்களில் இருப்பதான உணர்வும் பயமும் இருந்தது. தங்கள் கடமையை செவ்வனச் செய்ய வேண்டும், மக்களை முன்னேற்ற வேண்டும் என்கிற அர்ப்பணிப்புடன் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அவர்கள். பணத்தைப் பற்றியோ அதிகார பலத்தைப் பற்றியோ நினைத்துப் பார்த்திராத அதிசயத் தலைமுறை அது.

    இன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமையே வேறு. நாம் மீண்டும் நில ஆதிக்கவாத காலத்துக்குச் சென்றுவிட்டோம். ஜனநாயக வாக்கெடுப்பும் கண்துடைப்பாக மாறிவிட்ட தமிழ்நாட்டில் ஆளும் குடும்பம், அது யாராக இருந்தாலும், அரச குடும்பமாக மாறிவிடுகிறது. அவர்களது செல்வாக்கும் செல்வமும் அதிகரிக்க அதிகரிக்க அவை ஏற்படுத்தும் ஒளி வட்டம் பாமரனுக்கு பிரமிப்பேற்படுத்துவது. கேள்வி கேட்கும் தகுதியை மக்களும் பத்திரிகைகளும் இழந்துவிட்டார்கள். அச்சுறுத்தலை சந்திப்பதைவிட மண்டியிடுவது மேல் அல்லது ஒதுங்கி இருப்பது மேல் என்று பத்திரிகையாளர்கள் சமரசத்துக்கு வந்துவிட்டார்கள். விமர்சனம் செய்தால் வெகுண்டெழுந்து தமது பத்திரிகையில் பெயர் சொல்லி எழுதுவதோடு தலைமை நிற்காது. மறைமுக அச்சுறுத்தல்கள் பல ரூபங்களில் வரும். அல்லது நீதி மன்றத்துக்கு இழுக்கப்படுவோம். நீதித்துறையும் சாமான்ய மனிதர்கள் கொண்ட வளாகம். அங்கு துணிச்சலுடன் செயல்படுகிறவர்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படிப்பட்டவர்களின் தார்மீக பலத்தை முறியடிக்கும் யத்தனத்தில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் பங்கு இருக்கும். துரித கதியில் சுழலும் வாழ்க்கையில் யாருக்கும் சிக்கல்களைச் சந்திக்க நேரமும் இல்லை, திராணியும் இல்லை. அரசின் அதிகார பலம் அசுரத்தனம் கொண்டது.

    நாம் இருப்பது ஜனநாயகம்தானா என்கிற சோர்வு என்னை பல சமயங்களில் அலைக்கழிக்கிறது. எழுத நினைப்பதை, எழுதப்பட வேண்டியதை எழுத முடியாமல் போவது எத்தனை கொடுமை என்கிற ஆயாசம் மேற்கொள்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புள்ளது என்கிற கருத்துடன் எழுதுபவருக்கு ஏற்படும் மனச் சோர்வு இது. அத்தகைய சமயத்தில் 'தயக்கமில்லாமல் எழுதக்கூடிய வெளி இது' என்று அழைப்பு விடுக்கும்போது இது நல்ல வாய்ப்பு என்று எழுத ஆரம்பித்தேன். நாட்டு நடப்பிலும், இந்திய கலாச்சாரக் கூறுகளிலும், சமுதாய அவலங்களிலும் தீவிர ஆர்வம் கொண்ட எனக்கு சொல்லப் படவேண்டியது நிறைய இருப்பதாக உணர்கிறேன்.

    கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து சொற்களைத் தட்ட ஆரம்பித்ததும் எனது ஆதங்கங்கள், கோபங்கள், பரவசங்கள், எல்லாவற்றிற்கும் வடிகால் கிடைத்தது போன்று, தடங்கலில்லாமல், தயக்கமில்லாமல் வாக்கியங்கள் வெளிவருகின்றன, நண்பனிடம் தயக்கம் ஏற்படாதது போல. யார் எனது வாசகர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் உலகத்தின் எந்த மூலையிலோ இருக்கும் ஒரு தமிழன் படிப்பான். உண்மையில் எழுதும் போது வாசகனின் பிம்பமே எனக்குத் தெரிவதில்லை. கம்ப்யூட்டர் திரையே எனது நண்பன். யாரிடமும் சொல்ல முடியாததை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்கிற எனது ஏக்கத்தைப் புரிந்துகொள்ளும் நண்பன்.

    வாராவாரம் என்ன எழுதுவோம் என்கிற திகைப்பு இல்லை. சொல்ல அநேகம் இருக்கிறது என்கிற துடிப்பு அதிகரிப்பதை உணர்கிறேன். புதிதாக இறக்கை முளைத்தது போல இருக்கிறது. ரிச்சர்ட் பாக் எழுதிய, அமரத்துவம் பெற்ற ஜானத் தன் லிவிங்க்ஸ்டன் என்ற கடல் பறவை போல உணர்கிறேன். ஜானத்தன் லிவிங்க்ஸ்டன் பறக்க ஆசைப்பட்டது. கற்க ஆசைப்பட்டது. அமைப்பின் விதிகளை மீறத் துணிந்தது. அதற்காக அதன் சமூகத்தால் ஒதுக்கப்பட்டது. அதை லட்சியம் செய்யாமல் அறிவின் எல்லையைத் தேடிச் சென்றது. உண்மை புலப்பட்டதும் நிலத்துக்குத் திரும்பி தன்னைப் போன்ற அறிவுத் தாகத்துடன் இருப்பவரைக் கூட்டு சேர்த்து பறக்கும் துணிவை ஏற்படுத்திற்று.

    வாஸந்தி

    1. காஷ்மீர் வன்முறை

    மாநில அமைச்சர்கள் அமரிக்கையாக ஒன்பது மணிக்கு வகுப்புக்கு வந்தார்கள். எல்லோர் முகத்திலும் நரைத்த/ பாதி நரைத்த நரை முளைக்க ஆரம்பித்த மீசையின் மீது பதற்றத்தில் வியர்வை அரும்பிற்று. இருக்கையில் ஒழுங்காக அமர்ந்தபின், ஆசிரியர்கள், நேற்று மாலைவரை அமைச்சர்களுக்கு சலாம் போட்ட 'அதிகாரிகள்', பாடம் எடுக்கத் துவங்கினார்கள். ஆசிரியர்கள் இந்த வேஷ மாற்றத்தைப் பெரிதும் ரசித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. தலைமை மாணவர் செல்வாக்கு மிக்கவர். ஏழு நிமிஷங்களில் ஏழு கருத்துகளை ஆசிரியர்கள் முன்வைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். ஆசிரியர்கள் பழம் தின்று கொட்டை உமிழ்ந்தவர்கள் என்பதால் செய்து முடித்தார்கள். கரும் பலகை இல்லை சாக்கட்டி இல்லை. வெறும் சொற்பொழிவு. 'மாணவர்கள்’ முகத்தில் நிச்சயமற்ற குழப்பம் தெரிந்தது. ஆனால் ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்து, ஆசிரியர்கள் புன்னகையுடன் வெளியே வந்து வகுப்பு நன்றாக நடந்தது, யாரும் எந்த சந்தேகத்திற்கும் கை தூக்கவில்லை என்றார்கள். மாணவர்களின் தரம் எப்படி என்று மட்டும் வெளியில் தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்தார்கள். வீட்டுப் பாடம் உண்டா? 'நிறைய' என்றார்கள் ஆசிரியர்கள். ஐயோ பாவம், மாணவர்கள் அசடுவழிந்தார்கள்.

    தலைமை மாணவர், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு உதித்த அற்புத ஐடியா அது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் அவர்களுக்கு அரசாளுமை பற்றிப் பாடம் புகட்டுவார்கள். அமைப்பில் இருக்கும் ஓட்டை களையும் தங்களது மாற்றுக் கருத்துகளையும் 'அச்சமின்றி' 'கூச்சமின்றி' எடுத்துச் சொல்லுவார்கள். பல்வேறு துறைகளின் செயலர்கள் தங்களது துறைகளில் இருக்கும் குறைகளைத் தலைமைச் செயலருக்கு மின் அஞ்சல் மூலம் முன் கூட்டித் தெரிவிப்பார்கள். இதன் மூலம் தேக்க நிலையில் இருக்கும் பல பணிகள் விரைவில் முடிக்கப்படும், மாற்றுக் கருத்தை அமைச்சர்கள் அறிய சிறந்த ஜனநாயக முறை இது என்று எடியூரப்பா அகமகிழ்ந்து போகிறார். எல்லாம் சரிதான் - அரசியல் அரங்கில் அவர்கள் எடுக்கும் ஆபத்தான முடிவுகளைப்பற்றி ஏதேனும் வீட்டுப்பாடம் கிடைக்க வழியுண்டா? ஹொகேனக்கல் குடிநீர் விஷயத்தில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொல்லி கன்னட தமிழர் பிளவை ஏற்படுத்தி வருகிறாரே அது நியாயமற்றது, சட்டத்துக்குப் புறம்பானது என்று எந்தச் செயலர் உணர்த்திப் பாடம் எடுக்கப் போகிறார்? பாடம் எடுத்தால் என்ன நடக்கும் என்று செயலருக்குத் தெரியும். மறு விநாடி ஒரு அத்துவானக் காட்டுக்கு மாற்றல் கிடைக்கும். கருத்துச் சுதந்திரமா? ஜனநாயகமா? வாக்கு வங்கி அதைவிட முக்கியம் என்று கூடத் தெரியாத ஒரு முட்டாள் அதிகாரி எதற்கு? காவிரிப் பிரச்சினையும் ஹொகேனக்கல் பிரச்சினையும் தீர்ந்துபோனால் எதை வைத்து அரசியல் செய்வது? இது அரசாண்மையின் கீழ் வராது. அது கட்சி அரசியல் சார்ந்தது. அது அதிகாரிகளுக்கு சம்பந்தமில்லாதது. மக்கள்? மக்களுக்கு நீர் கொடுக்கிறோமோ இல்லையோ நெருப்புப் பற்ற வைக்கக் கிடைக்கும்.

    நமது புண்ய பாரத மணித்திருநாட்டில் மஹேசனைவிட அந்தப் பூடகமான வாக்கு வங்கி சர்வ வல்லமை படைத்தது. நமது அரசியல் கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு தங்கள் தலையைக் காப்பாற்றுவதாக நினைத்து நாட்டின் தலையை அதற்காக அடகு வைப்பார்கள். படித்தவர்களையும் பீதி கொள்ளச் செய்யும் அமானுஷ்ய உருவகம் பெற்ற வங்கி அது.

    ஜம்மு - காஷ்மீர் இன்று பற்றி எரிவதற்கு அதுவே காரணம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாக்குவங்கியை நினைவில் வைத்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை இந்த விவகாரம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. ராமர் சேது விஷயத்தில் முகத்தை இழந்த காங்கிரஸ் பெரும்பான்மையான சமூகத்தின் உணர்வுகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் நான்கு வட இந்திய மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் தன்னை இந்து விரோத கட்சியாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. காஷ்மீரில் முன்னாள் மாநில ஆளுனரும் அமர்நாத் கோவில் நிர்வாக போர்டின் தலைவருமான எஸ்.கே சின்ஹா தலைமையிலான குழு கொண்டுவந்த தீர்மானத்தின்படி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக மே 26-தேதி 100 ஏக்கர் நிலத்தை அன்றைய முதலமைச்சர் குலாம் நபி

    Enjoying the preview?
    Page 1 of 1