Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100-வது பௌர்ணமி!
100-வது பௌர்ணமி!
100-வது பௌர்ணமி!
Ebook183 pages44 minutes

100-வது பௌர்ணமி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னை.
 போலீஸ் கமிஷனர் அலுவலகம்.
 உதவி போலீஸ் கமிஷனர் கேசவப் பெருமாள் பத்திரிகை நிருபர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் - எரிச்சல் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
 "எத்தனையோ உதவி போலீஸ் கமிஷனர்கள் இந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டுப் போய் விட்டார்கள். நீங்கள் பதவியேற்று இன்றைக்கு ஒரு வார காலமாகிறது. ஒவ்வொரு கமிஷனரும் பதவி ஏற்கும் போது 'நான் இரும்புக்கரம் கொண்டு சென்னையில் உள்ள ரௌடிஸத்தை முற்றிலும் ஒழிப்பேன்' என்று சொல்வதும் பிறகு எதுவுமே செய்யாமல் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவதும் ஏன்?"
 நிருபர் கேட்ட கேள்விக்கு கேசவப் பெருமாள் பதில் சொல்லாமல் ஒரு புன்னகை பூத்தார்.
 "இந்தப் புன்னகைக்கு என்ன ஸார் அர்த்தம்?"
 "நீங்க கேட்ட அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பலைன்னு அர்த்தம்"
 "ஏன்...?"
 "ஏன்னா... சில கேள்விகளுக்கு மௌனம்தான் நல்ல பதில்..."
 ஒரு நிருபர் இடைமறித்தார்"ஸார்...! நீங்க காக்கி யூனிஃபார்ம் போட்டிருக்கிற ஒரே காரணத்தால பதில் சொல்லாமே உங்க வாய்க்கு புன்னகை என்கிற பூட்டைப் போட்டு பூட்டிகிட்டீங்க...! நான் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லட்டுமா?"
 "சொல்லுங்க..."
 "சென்னையில் உள்ள ரௌடிஸத்தை உங்களால ஒழிக்க முடியாமே போனதுக்குக் காரணம் அதில் அரசியல்வாதிகளும் கலந்து இருப்பதுதான். நான் சொன்ன காரணம் சரியா ஸார்...?"
 "சரி..."
 "அப்படீன்னா... இந்த பதிலை நீங்க சொன்ன மாதிரி நாங்க நியூஸ் போட்டுக்கலாமா...?"
 "நான் அப்படி சொல்லலையே?"
 "நீங்கதான் 'சரி'ன்னு சொன்னீங்களே ஸார்?"
 "அது என்னோட கருத்து மட்டுமே... பதில் இல்லை."
 "இன்னொரு கேள்வி ஸார்!"
 "போதுமே...! பிரஸ் மீட்டை இன்னொரு நாள் வெச்சுக்குவோம்." கமிஷனர் கேசவப்பெருமாள் நிருபர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியில் நின்றிருந்த ஜீப்பை நோக்கிப் போனார். அதே விநாடி அவருடைய செல்போன் உயிர் பெற்றது.
 எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.
 டாக்டர் திருமலைசாமி.
 கேசவப் பெருமாளுக்கு வியப்பாய் இருந்தது. டாக்டர் திருமலைசாமி ஒரு மனநல மருத்துவர். லைன்ஸ் கிளப்பில் பழக்கமானவர். பெரிய அளவில் நட்பு இல்லையென்றாலும் மாதத்துக்கு ஒரு தடவையாவது செல்போனில் தொடர்பு கொண்டு நாட்டு நடப்புகளைப் பற்றி ஒரு பத்து நிமிடமாவது பேசி விடுபவர். இன்றைக்கும் போன் செய்து இருக்கிறார். 'தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசுவாரோ?'
 குரல் கொடுத்தார்குட் மார்னிங் டாக்டர்!"
 "குட் மார்னிங் மிஸ்டர் கேசவப் பெருமாள். எப்படியிருக்கீங்க?"
 "ஃபைன்..."
 "புது உத்யோகம் என்ன சொல்லுது?"
 "பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குன்னு சொல்லுது."
 "தட்ஸ் குட்...! ஒ.கே... நான் இப்போ உங்களுக்கு எதுக்காக போன் பண்ணினேன் தெரியுமா?"
 "சொல்லுங்க..."
 "இன்னிக்கு நீங்க எந்த நேரத்தில் ஃப்ரீயாய் இருப்பீங்க...?"
 "எனிதிங்க் இம்பார்ட்டன்ட் டாக்டர்?"
 "எஸ்... எஸ்... வெரி இம்பார்ட்டன்ட்."
 "அப்படீன்னா... நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்...! ஏன்னா நீங்க இம்பார்ட்டன்ட்ன்னு சொன்ன பிறகு நான் வேற வேலையைப் பார்க்கப் போனாலும் அதுல ஒரு முழு இன்வால்வ்மெண்ட் இருக்காது. நான் எங்கே புறப்பட்டு வரணும்... க்ளினிக்கிற்கா... இல்லை உங்க வீட்டுக்கா?"
 "வீட்டுக்கு..."
 "வீடு அண்ணாநகர் செகண்ட் பேஸ்தானே?"
 "எஸ்... எஸ்... நீங்க ஒரு தடவை என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க..."
 "ஞாபகம் இருக்கு... வந்துடறேன்..."
 "ஒரு சின்ன ரெக்வெஸ்ட் மிஸ்டர் கேசவ பெருமாள்"
 "சொல்லுங்க...நீங்க என்னைப் பார்க்க வர்றது வேற யார்க்கும் தெரிய வேண்டாம். ப்ளீஸ். இட் ஷுட் பி ஹைலி கான்ஃபிடென்ஷியல்"
 "தெரியுது... டாக்டர்..."
 "தேங்க்யூ...! அ'யாம் வெயிட்டிங் ஃபார் யூ..." சொல்லிவிட்டு செல்போனை அணைத்தார் திருமலைசாமி.
 கேசவப் பெருமாள் காக்கி யூனிஃபார்முக்குள் லேசாய் வியர்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224535637
100-வது பௌர்ணமி!

Read more from Rajeshkumar

Related to 100-வது பௌர்ணமி!

Related ebooks

Related categories

Reviews for 100-வது பௌர்ணமி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100-வது பௌர்ணமி! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அன்புடன் ராஜேஷ்குமார்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    கோயமுத்தூரிலிருந்து ட்ரங்க்கால்

    அன்பான வாசக நெஞ்சங்களுக்கு! வணக்கம்.

    ஒரு வழியாகத் தேர்தல் கூத்து நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் இதில் பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம் நம் தேர்தல் ஆணையத்தின் நிர்வாகத் திறமையைத்தான். இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் தேர்தலை நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்தியாவில் உள்ள மொத்த கட்சிகளின் எண்ணிக்கையைக் கேட்டால் உங்களுக்கு மயக்கம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மொத்த கட்சிகளின் எண்ணிக்கை 800க்கு மேல். இதில் தேர்வு ஆணையத்தில் முறையாய் பதிவு செய்து கொண்ட கட்சிகள் 486. பதிவு செய்யப்படாத கட்சிகளோ 400க்கும் மேல். இனிமேலும் புதிது புதிதாய் கட்சிகள் முளைக்கலாம். இவ்வளவு கட்சிகளையும் இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த ஜனநாயகம் பல கட்சி ஜனநாயகம் - அதாவது மல்டி பார்ட்டி டெமாக்கரசி என்று அழைக்கப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒரு கட்சி ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை. பல கட்சி ஜனநாயகமும் இல்லை. அதற்குப் பதிலாக இரு கட்சி அல்லது மூன்று கட்சி ஜனநாயகம் உள்ளது. அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுதான் உள்ளன. இங்கிலாந்தில் தொழிற் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி என்று மூன்று கட்சிகள் உள்ளன. அந்த நாடுகளில் கட்சிகள் குறைவாக இருப்பதால் அங்குள்ள தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் எந்த சிரமமும் இல்லை. உரித்த வாழைப்பழத்தை சாப்பிடுவது போல் தேர்தலை நடத்தி முடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி நடத்திவிட முடியாது. மூச்சை முட்டும் அளவுக்கு கட்சிகள் இருப்பதால் பிரச்னைகளும் அதிகம். 1925-ல் நம் இந்தியாவில் நான்கே நான்கு தேசீய கட்சிகள்தான் இருந்தன. 1) காங்கிரஸ், 2) கம்யூனிஸ்ட் 3) சோஷலிஸ்ட் 4) ஜனசங்கம். ஒவ்வொரு தேசீயக் கட்சியிலும் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அந்தக் கட்சிகள் இரண்டாக, மூன்றாக உடைந்தன. 1930-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜெயப்ரகாஷ் நாராயணன், கிருபளானி போன்ற தலைவர்கள் ‘பிரஜா சோஷ லிஸ்ட் கட்சி’யை ஆரம்பித்தார்கள். அதே போல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்’களாகப் பிரிந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்ட ஜனசங்கம் ‘ஜனதா கட்சி’யாக மாறி பிறகு ‘பாரதிய ஜனதா’ வாகவும், ஜனதா தள கட்சியாகவும் மாறியது. காங்கிரஸில் மேலும் பிரச்னைகள் தோன்றி இந்திரா காங்கிரஸ் பிறந்தது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தி.க.விலிருந்து தி.மு.க உற்பத்தியாகி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதற்குப் பிறகு அதிலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க பிரிந்து தனித்தனி கட்சிகளாகிவிட்டன. இது தவிர பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நீதிக்கட்சி, தே.மு.தி.க. - என்றும், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிரஜா ராஜ்யம், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கணபரிஷத், மேற்கு வங்காளத்தில் த்ரிணாமுல் காங்கிரஸ், உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பீகாரில் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், கர்நாடகத்தில் ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒரிஸாவில் பிஜு ஜனதா தளம், சமதா கட்சி, மஹாராஷ்ட்ராவில் தேசீயவாத காங்கிரஸ் கட்சி... என்று விடிய விடிய லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி வண்டி வண்டியாய் கட்சிகள் இந்தியாவில் இருப்பதால் சிறப்பான ஒரு ஆட்சி மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஜனநாயகம் என்பது சிறப்பான ஒரு ஆட்சி முறை. இது சர்வாதிகாரத்திற்கு மாற்றாகக் கண்டறியப்பட்ட ஆட்சி முறை. ஆனால் ஜனநாயகத்தின் முழுப் பலனையும் நாம் பெற வேண்டுமானால் தேசம் சார்ந்த தேசீயக் கட்சிகள்தான் அனுமதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாநிலம் சார்ந்த, மதம் சார்ந்த, ஜாதி சார்ந்த கட்சிகள் பெருகி வருகின்றன. இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ள அமெரிக்காவில் கடந்த 200 ஆண்டுகளாக ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஏனெனில் அமெரிக்க ஜனநாயகம் தனது அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவைத் தேர்ந்தெடுக்க உதவியுள்ளது. இதே போல் இங்கிலாந்து ஜனநாயகமும் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால் நம் இந்தியாவில் புற்றீசல்கள் போல் கட்சிகள் இருப்பதால் உலக நாடுகள் மத்தியில் இந்திய ஜனநாயகம் ஒரு கேலிக்குரிய விஷயமாக மாறிவிட்டது. நம் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டுமானால் நாம் சில விஷயங்களை யோசித்துப் பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் முதல் விஷயம் நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளுக்கும் தேசீயக் கட்சிகள் மட்டுமே போட்டியிடலாம் என்ற விதிமுறை வகுக்கப்பட வேண்டும். தேசியக் கட்சியின் தகுதி என்ன என்பதையும் நிர்ணயம் செய்யலாம். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 5 மாநிலங்களிலாவது ஒரு கட்சி செயல் பட வேண்டும். குறைந்தபட்சம் 50 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால் தேர்தல் ஆணையம் அக்கட்சியை தேசீயக் கட்சியாக அங்கீகரிக்கலாம். எந்தக் கட்சிக்கும் தனிக்கொடி அனுமதிக்கக் கூடாது. தேசீயக் கொடி ஒன்றுதான் நாட்டில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்கோ, குடியரசுக் கட்சிக்கோ தனிக்கொடிகள் இல்லை. அமெரிக்க தேசீயக்கொடி ஒன்றுதான் அங்குள்ளது. இதுபோலத்தான் இங்கிலாந்து நாட்டிலும் இருக்கிறது. இந்தியாவில் குட்டி கட்சிகள் மட்டுமில்லை, ஜாதி சங்கங்கள் கூட தனிக்கொடிகளோடு செயல்படுகின்றன. முதலில் இந்தக் கொடிகளுக்குத் தடை விதித்து இந்தியாவில் கொடி என்றால் அது தேசீயக் கொடிதான் என்ற உணர்வை

    Enjoying the preview?
    Page 1 of 1