Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - February 2023
Kanaiyazhi - February 2023
Kanaiyazhi - February 2023
Ebook179 pages58 minutes

Kanaiyazhi - February 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

February 2023 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580109509627
Kanaiyazhi - February 2023

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - February 2023

Related ebooks

Reviews for Kanaiyazhi - February 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - February 2023 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி பிப்ரவரி 2023

    மலர்: 57 இதழ்: 11 பிப்ரவரி 2023

    Kanaiyazhi February 2023

    Malar: 57 Idhazh: 11 February 2023

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நாடகம் - கல்கி

    கவிதை - ப.காளிமுத்து

    கட்டுரை - வாசுதேவன் அருணாசலம்

    சிறுகதை - இலக்கியா நடராஜன்

    கவிதை - முத்தமிழ்க் குமார்

    கட்டுரை - நா. சந்திரசேகரன், ஜேஎன்யு.

    தகுதி - சந்துரு மாணிக்கவாசகம்

    கவிதை - வலங்கைமான் நூர்தீன்

    கவிதை - அய்யனார் ஈடாடி

    கட்டுரை ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - ராம்பிரசாத்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    மதப்பேய் ஆட்சி செய்தால் மானுடம் என்ன செய்யும்?

    மதம் எதிரி இல்லை

    மதவெறிதான் எதிரி என்று

    தமிழக முதல்வர்

    தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    வெறியாகிற மதத்தை

    மதமான பேய் என்கிறார் வள்ளலார்!

    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.

    ஆனால்

    பிடித்திருக்கும் பேயை என்ன செய்வது?

    விரட்ட வேண்டும்!

    எப்படி?

    வேப்பிலைகளில்

    வெருண்டு ஓடிய பேய்,

    இலைகளை எல்லாம் இப்போது

    ஆட்டிப் படைக்கிறது!

    உடுக்குச் சத்தம் கேட்டு

    ஓடிய பேய்கள்

    ஊடக உடுக்குகளின்

    தீவட்டி வெளிச்சத்தில்

    காசி, இராமேசுவரம், கங்கை என்று

    வீதி உலா வருகின்றன.

    தமிழுக்குப் பேயும் புதியதில்லை

    பேய் ஓட்டுவதும் புதிதில்லை.

    கலிங்கத்துப் பரணியில்

    போர்க்களக் காட்சியைக்

    காளிக்குக் கூளி எனும் பேய்,

    காட்சியுரையாகக் காட்டுகிறது.

    ஓடுகிறது இரத்த ஆறு!

    ஆடை இழந்தவர்கள் சிலர்

    தலைமுடியைப் பிய்த்தெறிந்து]

    சமணர் நாங்கள் என்றும்

    வில்லின் நாணைப் பூணூலாக்கி

    கன்னத்தில் அடித்துக்கொண்டு சிலர்

    கங்கையாட வந்தோம் என்றும்

    இரத்தம் படிந்த ஆடைகளைக்

    காவியுடையாக்கிக் கொண்டு சிலர்

    துறவிகள் நாங்கள் என்றும்

    யானையின் கழுத்து மணிகளில்

    தாளம் போட்டுச் சிலர்

    பாணர்கள் நாங்கள் என்றும்

    உயிரைக் காப்பாற்றிக் கொள்ள

    ஓடித் தப்புகிறார்கள்!

    இன்னொரு பக்கம்

    இறந்து கிடக்கும் யானைகளின்

    தந்தங்களை ஒடித்துப்

    பல்விளக்கும் பேய்கள்!

    விலா எலும்புகளை ஒடித்து

    நாக்கு வழிக்கும் பேய்கள்!

    தலையும் காலும் துண்டான

    யானைகளைப் பானைகளாக்கி

    இறந்தவர்களின் உடல்களை

    இரத்தத்திலும் கொழுப்பிலும்

    கொதிக்க வைத்து

    குதிரையின் பற்களைப் பூண்டுகளாகவும்

    நகங்களை உப்புகளாகவும் போட்டு

    பிணங்களின் கைகளை

    அகப்பைகளாக்கிக்

    கூழ் காய்ச்சும் பேய்கள்!

    மண்டை ஓட்டுப் பாத்திரம் ஏந்தி

    பசியில் கூழுக்குப் பந்தியில் நிற்கும்

    மதப் பேய்கள்!

    பகவதி, பிட்சாந்தி என்று

    சுலோகம் சொல்லும் பார்ப்பனப் பேய்கள்!

    தலை முடி ஒவ்வாமை என்பதால்

    கொழுப்பால் வடிகட்டிய

    கூழை வேண்டுகிற

    உயிரைக் கொல்லாத நோன்புடைய

    சமணப் பேய்கள்!

    மொட்டைத் தலையுடன்

    தோளை மறைத்து நிற்கும்

    புத்தப் பேய்கள்!

    பார்வையற்ற, பேச இயலாத

    மாற்றுத் திறனாளிப் பேய்கள்!

    கூத்தாடும் பேய்கள், சோதிடப் பேய்கள்

    சூல்கொண்ட பேய்கள் என்று

    நீளுகிறது பேய்களின் பட்டியல்.

    புறக்கடை வழியே உள்ளே வர

    வடநாட்டுப் பேய் ஒன்று

    கோயில் நாயகப் பேயிடம்

    கும்பிட்டு நிற்கிறது!

    வந்த வடநாட்டுப் பேய்

    காட்டத் தொடங்குகிறது!

    இந்திர ஜால வித்தையை!

    மாயப் பாவியே!

    வித்தையை நிறுத்து என்றதும்

    இமயமலையில் எழுதப்பட்டிருப்பதாய்த்

    தமிழர் வரலாற்றைத்

    தமிழர்களுக்கே சொல்லத் தொடங்குகிறது!

    நம்ப முடிகிறதா?

    கலிங்கத்துப் பரணியில்

    காளிக்குக் கூளி கூறியது.

    ஆனால் இப்போது

    பிபிசி மக்களுக்குச் சொல்கிறது நம்புங்கள்!

    பொதுமக்கள் பார்த்துவிடக் கூடாதென்று

    இணைய ஊடகங்களுக்கும்

    ஏகப்பட்ட தடைகள்!

    இருந்தாலும் அதன் சாராம்சத்தை

    ஃபிரண்ட்லைன் வெளியிட்டிருக்கிறது!

    இந்தியா - மோடி மீதான கேள்விகள்

    பி.பி.சி. ஆவணப் படத்தில்

    பிப்ரவரி, மார்ச் 2002 இல் நடந்த

    குஜராத் கோத்ரா கலவரம் முதல்

    இந்தியக் குடியுரிமைச் சட்டம்-

    ஆகஸ்ட் 22 இல் நடந்த

    காஷ்மீர் விவகாரம் -

    இந்தியா - இந்துக்களின் நாடு வரை

    ஆதிமனித மிருகத்தனம்

    மதப் பேயின் அதிகார அத்துமீறல்கள்!

    இரண்டாயிரம் பேருக்கு மேல் கொலை

    பாலியல் கொடூரம்

    1,38.000 பேருக்குமேல்

    உள்நாட்டில் அகதிகள்

    "கொல்லுங்கள் அவர்களை

    இல்லையேல் கொல்லப்படுவீர்கள்" என்ற

    மதப் பேயின் நவீன முழக்கம்!

    முப்பதுக்கும் மேற்பட்டோர்

    கருத்து கூற அச்சம்!

    "பேய்க்கணங்கள் சூழப்

    பித்தாடும் வேடமிட்டால்

    வாய்க்கும் சுடலையிலே

    வளரும் பொருள் எதுவோ?" என்றாரே புதுமைப்பித்தன்.

    "பேய் அரசு செய்தால்

    பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்றாரே பாரதியார்!

    அப்படியானால்

    மதப்பேய் ஆட்சி செய்தால்

    மானுடம் என்ன செய்யும்?

    ***

    நாடகம் - கல்கி

    சாம்பசிவ சாஸ்திரிகள்

    ஜாதி, மதம், தீண்டாமை இரு தலைமுறைகளுக்கு முன்னர் நம் தேசத்தை அலைக்கழித்த சமூகத் தீமைகள். இன்னும் கூட சில இடங்களில் இவை தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அப்போது அவற்றை எதிர்த்த அமரர் கல்கியின் இந்தப் புரட்சிகரமான நாடகம், ஆனந்த விகடனின் (16.11.1929, 15.12.1929) இரு இதழ்களில் தொடர்ந்து பிரசுரமாயிற்று. மீள் பிரசுரமாக 2௦௦5 கல்கி திபாவளி மலரில் வெளியானது. இப்போதும் அதே உத்வேகத்துடன் தான் எதிர்க்கிறது எதிர்ப்பையும் தூண்டுகிறது.

    ***

    முன்னுரை

    நாடகம் என்னும் என் கட்டுரையைப் படித்த ஒரு நண்பர், நீங்கள் சொல்லும் குறைகளுக்கிடமின்றி நடிக்க ஒரு நாடகம் எழுதுங்கள், பார்க்கலாம் என்றார். உடனே விகடன் மீது பாரத்தைப் போட்டு எழுதத் தொடங்கினேன். நல்ல வேளையாக, முதல் நாடகம் பாங்கர் விநாயகராவ் வேறோர் மதுவிலக்கு மாதப்  பத்திரிகைக்குப் போய்விட்டது. இரண்டாவது எழுதியது இந்த நாடகம்.

    இந்த நாடகத்தைப் படிப்பவர்களில் பலருக்கு என்மீது பலமான கோபம் பிறக்கலாம். ‘கலப்பை சகோதரர்கள்’ வாய் மூலமாக நாஸூக்கின்றி உள்ளது உள்ளபடி உண்மை சொல்லுவதின் பொருட்டுச் சிலர் கோபத்துக் கொள்ளலாம். இவர்களிடம் "அடியேன் குற்றவாளி என்று ஒப்புக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. மற்றவர் இந்த நாடகப் பாத்திரங்கள் பேசும் ஸம்ஸ்கிருத வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் பல்லுடையும் போது என்னை சபிப்பார்கள். அவர்களிடமும் நான் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    வேறொரு சாரார், இதென்ன நாடகம்? ஸ்தி்ரி பார்ட் இல்லையே? என்று கோபிப்பார்கள். நல்லவேளையாய், இவர்களுக்கு நான் தக்க சமாதானம் சொல்ல முடியும். அது என்னவென்றால், அவசரப்பட வேண்டாம்; நாடகத்தின், பிற்பகுதியில் ஸ்திரீ பார்ட் உண்டு. அடுத்த மாத விகடன் வெளிவரும் தேதியை ஆவலுடன் எதிர்பாருங்கள் என்பதே.

    ***

    முதற்காட்சி

    இடம்: வேதபுரி குளத்தங்கரை

    காலம்: மாலை 6 மணி.

    பாத்திரங்கள்: சாம்பசிவனும் அவன் தோழன் ஹரிஹரனும்.

    சாம்பசிவன்: நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது.

    ஹரிஹரன்: அது எந்த தெய்வம்? ‘தெய்வம் மனுஷ்ய ரூபணே அல்லவா?’

    சாம்ப: விதண்டாவாதம் பேசாதே. ஏற்கெனவே என் மனம் புண்ணாயிருக்கிறது.

    ஹரி: அந்தப் புண்ணை ஆற்றவே முயற்சிக்கிறேன். உன்னுடைய பழமொழி தவறு, தான் நினைப்பதுபோலவே –நம்மையும் நினைக்கச் செய்ய தெய்வத்துக்குச் சக்தியில்லையா ?

    சாம்ப: நீ ஒத்துழையாமை செய்துவிட்டு ஊருக்கு வந்தபோது நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்? என்னவெல்லாம் எண்ணினேன்? நீசப் படிப்பை விட்டுத் தொலைந்து வந்தாயென்றும், நமது புராதன தர்மத்தை நிலைநாட்ட உழைப்பாய் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பாழாயிற்று. நமது தர்மத்துக்கே நீ உலை வைக்க முயல்கிறாய். இனி உன் முகத்திலும் நான் விழிக்கப் போவதில்லை.

    ஹரி: நமது நெடுநாள் சிநேகமும் கசந்து போகும் வண்ணம் அப்படிப்பட்ட பாவம் நான் என்ன செய்துவிட்டேன்?

    சாம்ப: பிராமணனாய்ப் பிறந்த நீ, எப்படி ஏர் பிடித்து உழலாம்? தர்ம விருத்தமான இந்த ஒரு காரியத்தினால் உன்னுடைய நற் கர்மமெல்லாம் விருதாவாய்ப் போயிற்றே!

    ஹரி: இன்றுதான் உண்மையில் நான் தர்ம மார்க்கத்தில் இறங்கினேன். இதுவரையில் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தேன். சமூக நிந்தனைக்குத் துணிந்து நான் எப்பொழுது கையில் மேழி பிடித்தேனோ, அப்பொழுதே என் ஆத்மாவைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது.

    சாம்ப: அஞ்ஞானத்தை ஞானமென்று மருள்கிறாய். தர்மத் துரோகம் செய்துவிட்டு ஆத்மஞானம் அடைந்து விட்டதாய் நினைக்கிறாய். மாயையின் வலிமை இப்போதுதான் நன்கு எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1