Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Pakkam
Kadaisi Pakkam
Kadaisi Pakkam
Ebook189 pages57 minutes

Kadaisi Pakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவல் என்று எடுத்துக் கொண்டு ஐம்பது அத்தியாயங்கள் எழுதினால், நிதானமாக யோசித்துப் பாத்திரங்களை உருவாக்கி வருணிக்க முடியும். ஆனால், சிறுகதை என்று நாலைந்து பக்கங்களில் எழுத வேண்டிய அவசியம் நேரும்போது, அதற்குள்ளாகவே வருணனை, குணசித்திர அமைப்பு, நிகழ்ச்சிகள், கடைசியில் ஒரு திருப்பம் - இவ்வளவையும் கொண்டுவர வேண்டி இருக்கிறது!

அழகான ஒரு கதையை, கடைசியில் ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்து ஒரே பக்கத்தில் எழுதி முடித்து விடுவார். இது ஓர் அபூர்வ சாதனைதான்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580145207991
Kadaisi Pakkam

Read more from S. Sathyamoorthy

Related to Kadaisi Pakkam

Related ebooks

Reviews for Kadaisi Pakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Pakkam - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    கடைசிப் பக்கம்

    Kadaisi Pakkam

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    பாரதீய ஜனதா கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷியை நான் பேட்டி காணப் போயிருந்த சமயம், கட்சியின் முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள அவர் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

    உங்கள் அவசரம் எனக்குத் தெரியும். ஐந்தே நிமிடங்கள்தாம் தேவை. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுங்கள், போதும்! என்றேன், நான்.

    மிஸ்டர் மணியன்! நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். அதில் நிறைய அனுபவம் வாய்ந்தவர். உங்களுக்குத் தெரியும். ஒரு நாவல் எழுதுவது சுலபம். ஆனால் ஒரு சிறுகதை எழுதுவது சிரமம்! எனக்கு ஒரு மணி நேர அவகாசம் கொடுத்துப் பேட்டி கண்டீர்களானால், நானும் சௌகரியமாக உட்கார்ந்து விவரங்களை யோசித்துச் சொல்லலாம். ஆனால், நீங்களோ ஐந்தே நிமிடங்களில் முக்கியமானவற்றைத் தேர்ந்து சுருக்கமாகச் சொல்லச் சொல்லுகிறீர்கள். இது மிகவும் சிரமமான காரியம்! என்று சிரித்துக் கொண்டே சொன்னார், ஜோஷி.

    முரளி மனோகர் ஜோஷி கூறியது முற்றிலும் உண்மை. நாவல் என்று எடுத்துக் கொண்டு ஐம்பது அத்தியாயங்கள் எழுதினால், நிதானமாக யோசித்துப் பாத்திரங்களை உருவாக்கி வருணிக்க முடியும். ஆனால், சிறுகதை என்று நாலைந்து பக்கங்களில் எழுத வேண்டிய அவசியம் நேரும்போது, அதற்குள்ளாகவே வருணனை, குணசித்திர அமைப்பு, நிகழ்ச்சிகள், கடைசியில் ஒரு திருப்பம் - இவ்வளவையும் கொண்டுவர வேண்டி இருக்கிறது!

    இதையே இன்னும் கொஞ்சம் சுருக்கிச் சின்னஞ் சிறுகதை என்று எழுத ஆரம்பித்தவர், 'சசி' என்ற எஸ் ஆர். வெங்கட்ராமன். 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் நான் அவருடன் இருந்து தொண்டாற்றியவன். அழகான ஒரு கதையை, கடைசியில் ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்து ஒரே பக்கத்தில் எழுதி முடித்து விடுவார்.

    இது ஓர் அபூர்வ சாதனைதான்.

    இதே போன்ற ஒரு சாதனையை நண்பர் சத்தியமூர்த்தி அழகாகச் செய்து வருவதை நான் பார்த்துப் படித்து வியந்துகொண்டு வந்திருக்கிறேன். அவர் நிறையப் பயணம் செய்பவர். தலைநகரான டில்லியில் ஒரு பொறுப்பான பதவியை வகிக்கும் உயர் அதிகாரி. ஆயினும் அவருடைய கண்கள் சுற்றிப் பார்த்த வண்ணம் இருக்கும், காதுகள் கேட்டு விஷயங்களைச் சேகரித்தபடி இருக்கும். அப்புறம் அதைத் தக்க சமயம் ஒன்றில் பொருத்தமாக, சுருக்கமாக, மிக அமைதியான குரலில் சொல்லுவார். இது அவருடைய தனிப் பண்பு.

    இதை உணர்ந்து, நான் அவரை 'இதயம் பேசுகிறது' பத்திரிகையில், கடைசிப் பக்கத்துக்கு வாரம் ஒரு சிறு கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டேன். அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார்.

    சின்னச் சின்ன விஷயங்கள்தாம் - ஆனால் அவை நம்மைச் சிந்திக்க வைக்கக் கூடியவை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஏன் சில சமயம் தலையில் உள்ள குல்லாயை எடுத்து விடுகிறார்? இந்தச் சின்ன விஷயத்துக்கு ஓர் அபூர்வமான விளக்கம் கொடுத்தார் சத்தியமூர்த்தி! அப்புறம் பல நாட்களுக்கு நண்பர்கள் பலரும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

    சிந்தனையில், எழுத்தில், சுருங்கச் சொல்லி விளக்கும் அபூர்வக் கலையில் அன்று 'சசி' என்ற எழுத்தாளர் என்னுடைய மதிப்புக்கு ஆளாகி இருந்ததைப் போல, இன்று சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்று சொன்னால், அது மிகையாகாது.

    அவரது எழுத்துப்பணி மேன்மேலும் வளம் அடைந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    மணியன்

    பொருளடக்கம்

    சிந்தனைக்கு- கடைசிப் பக்கம்

    கறுப்புப் பணம் சம்பாதிப்பது எப்படி?

    எழுபதிலும் பல் போகவில்லை!

    தண்ணீர்ப் பிரச்சினை ஏன்?

    நேரு மறந்தது

    ஸ்ரீதேவி பேசும் ஆங்கிலம்

    மின்சாரச் சாமியார்

    மேல்நாட்டுக் கண்ணகி!

    ரேகா யாரைப் பின்பற்றுகிறார்?

    இராம ராஜ்ஜியம் எப்போது?

    தமிழர்

    இன்னும் மூன்று மேத்தாக்கள்!

    அம்பானியின் பத்து வருடச் சாதனை

    குறை தீர்ந்தது

    லஞ்சம் ஒழியுமா?

    ரீகன் செய்தது சரியா?

    ராணுவ வீரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

    காந்திஜிக்குப் பிறகு...

    கடவுளின் கன்னிகள்!

    வயதானவர்களை ஏற்றுமதி செய்கிறார்கள்...

    விமானம் முக்கியமா? பயணிகள் முக்கியமா?

    8 மணி நேரத்தில் 3069 முத்தங்கள்

    நேரு ஜனநாயகவாதியா?

    80 வயதில் இளமை

    சர்க்கஸ் கூடாரமல்ல...

    அமிதாப் மந்திரி ஆகலாம்!

    டைம் ஷேரிங்

    குன்றிலிட்ட குத்துவிளக்கு

    என் மனைவியென்ன நடிகையா?

    எந்தக் கணவன் வேண்டும்?

    வடக்கே இருந்து வரும் செய்தி

    வி.பி. சிங்கின் பேச்சும் நடவடிக்கையும்

    11 மாதத்தில் 3 நிமிடச் சாதனை!

    பாரதி

    ரஷ்யாவில் லஞ்சம்

    சீனாவும் ஜப்பானும் ஒன்று சேரும்!

    ரஷ்யாவில் பிளவு ஏன்?

    பிரமிப்புக்குரிய பிரதமர்!

    இந்தியாவின் ஷேக்ஸ்பியர்

    மிஸ்டர் வருத்தம்!

    வித்தியாசமான விஞ்ஞானி!

    முத்துச் சிரிப்பு

    எம்.ஜி. ஆரின் புகழ்

    பிள்ளையார் யார் பிள்ளை?

    நீதியை விற்கிறார்கள்!

    கமல் மறந்து விட்டார்...

    மாற்றுக் குறைந்து விட்டது!

    காலை எழுந்ததும் ஓட்டம்

    மாறன் நினைவுபடுத்திய கதை

    எது தன்னம்பிக்கை?

    டெலிவிஷனால் விடுதலை!

    ஜியா!

    ராம் வளர்க்கும் 40 நாய்கள்

    தூக்குத் தண்டனை கொடுத்த நாட்டுக்கு உதவி!

    அமெரிக்க ஆச்சரியம்

    சிறைக் கைதிகளைப் போல் அமைச்சர்கள்

    விபரீத விபத்து!

    காடு

    விநோத ஒற்றுமை!

    குக்கருக்கும் வந்தாச்சு - கம்ப்யூட்டர்!

    சென்னையெனும் ஞானபூமி

    பைத்தியத்திற்கு ஒரு சர்டிபிகேட்!

    லஞ்சமாக 1,50,000 பிளாஸ்குகள்

    பிரமிக்க வைக்கும் டி.வி. நெட்வொர்க்!

    மணிசங்கர ஐயர் மயிலாடுதுறைக்குத் தேவையா?

    மக்களும் பத்திரிகைகளும்

    மலைக்கு மை பூசுகிறார்

    வடக்கும் தெற்கும் வெவ்வேறு

    ஸ்கட்டாம் ஹுசேன்

    கபாடிவாலா

    சிந்தனைக்கு- கடைசிப் பக்கம்

    வசந்தம் வந்துவிட்டது. குளிர் குறைந்துவிட்டது. இங்குள்ளவர்கள் வசந்தத்தை எப்படி வரவேற்கிறார்கள், தெரியுமா? வசந்தபஞ்சமியன்று சரஸ்வதி தேவிக்குப்பூஜை. வியப்பாக இல்லையா? நம்முடைய சரஸ்வதி பூஜை புரட்டாசி மாதம். இவர்களுடையது மாசி மாதம்!

    ***

    இலட்சக்கணக்கான புத்தகங்கள்! ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள். நூற்றுக்கணக்கான வெளியீட்டாளர்கள்! மைல் கணக்கில் புத்தக அடுக்குகள்! ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், உருது, பாரசீகம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில்... 7-வது அகில உலகப் புத்தகக் கண்காட்சி டெல்லியில் பத்து நாட்கள் மலர்ந்து மணம் வீசியது. தமிழ்ப் புத்தகங்களைத் தேடினேன். இரண்டே கடைகள்தாம்! தரணியெங்கும் தமிழ் முழக்கம் செய்யக் கனவு கண்டான் பாரதி. தமிழ் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் அரியதோர் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்.

    ***

    இளைய தலைமுறையினரின் ஆட்சியில் மூத்த அதிகாரிகளுக்கும் நிர்வாகப் பயிற்சி தரப்படுகிறது. இந்தியாவிலேயே நெம்பர் ஒன் அதிகாரியான பி.கே. கவுல் என்ற மந்திரிசபைக் காரியதரிசிக்குப் புனாவில் ஒரு வாரம் பயிற்சி. மூலவரே புறப்பட்டு விட்டார். உறங்கிக் கிடந்த உற்சவர்கள் கிளம்பி விடுவார்கள். திரு. சிதம்பரத்தின் உபயம்!

    ***

    மந்திரிகளைப்பற்றி வானொலி ஜோக் ஒன்று... திரு. பன்ஸிலால் இலாகா இல்லாத மந்திரியாக (மினிஸ்டர்வித் அவுட் போர்ட்ஃபோலியோ) நியமனம் செய்யப்பட்ட போது பொறுப்பில்லாத மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வானொலி ஒலிபரப்பியது. வாழ்க டெல்லித்தமிழ்!

    கறுப்புப் பணம் சம்பாதிப்பது எப்படி?

    பல கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்குத் துணையாகப் போக வேண்டிவரும். போன இடத்தில் போரடிக்கலாம். அவர்களுக்கு ஒரு 'டிப்...'

    எலிஸபெத் மகாராணியார் கைப்பையினுள் என்ன எடுத்துச் செல்கிறார் என்று ஒரு சந்தேகம். ஏனெனில், அவர் 'ஷாப்பிங்' போவதில்லை. போனாலும், கூட வருபவர் பணம், செக் தந்துவிடுவார். மகாராணியார் எப்போதும் பையைத் திறந்ததே இல்லை! பிறகு...? ரொம்ப நாட்களுக்குப் பிறகு தெரிந்ததாம்... மகாராணியார் பையை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றினால், 'பேசுபவர் போரடிக்கிறார். கிளம்பலாமா?' என்று மற்றவர்களுக்கு சமிக்ஞை. பிலிப்ஸ் இளவரசர் உடனே கிளம்பி விடுவார். நம்மூர் இளவரசர்களும் பின்பற்றலாமே!

    ***

    பு(து)த்தகம் வந்தாலும் வந்தது, புத்தகத்திற்காக ஏக தாகங்கள்! எதைப் பற்றி வேண்டுமானாலும் புத்தகம்... லேட்டஸ்ட்டாக ஒரு புத்தகம் ‘கறுப்புப் பணம் சம்பாதிப்பது எப்படி?' என்று. எழுதியுள்ளவர் பிரவீண்

    Enjoying the preview?
    Page 1 of 1