Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayakkum Malaysia
Mayakkum Malaysia
Mayakkum Malaysia
Ebook129 pages49 minutes

Mayakkum Malaysia

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலேசியா... மலைய நாடு என்று கவிஞரால் வர்ணிக்கப்பட்டது. சேரநாட்டைப் போல் மலைகளும், மரங்களும், நீரருவிகளும், நீண்ட கடற்கரைகளும், காடுகளும், காட்சிகளும் நிறைந்த நாடு.

மேடும் பள்ளமுமாய் பூமிகளும் இல்லை. குண்டும் குழியுமாய் ரோடுகளும் இல்லை. காரை அணைத்துக் கொண்டு கலர்ப்படமாய் நழுவும் காட்சி. சினிமாவில் வரும் டூயட் சீன் போல... கண்ணுக்கு இதமாய், கருத்துக்குக் கனிவாய் இருக்கிறது.

மலேசியா என்னை மயக்கியதை நீங்கள் படித்து மயங்குவீர்கள்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580145207990
Mayakkum Malaysia

Read more from S. Sathyamoorthy

Related to Mayakkum Malaysia

Related ebooks

Related categories

Reviews for Mayakkum Malaysia

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayakkum Malaysia - S. Sathyamoorthy

    http://www.pustaka.co.in

    மயக்கும் மலேசியா

    Mayakkum-Malaysia

    Author :

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கோலாலம்பூர்

    பத்து மலை

    புத்தகக் கண்காட்சி

    பிரியமான பினாங்கு

    கென்டிங்கும் கெலாங்கும்

    கனடா... கனவுகளின் தாயகம்

    சிங்காரச் சீனாவுடன் (கனடா)

    இணையில்லாத ஈட்டன் சென்ட்டர் (கனடா)

    ஹான்லன்

    அமைதிப் பூங்கா கனடா

    ஒப்பில்லாத ஒட்டாவா (கனடா)

    எழிலின் எவரெஸ்ட் நயாகரா

    பாதாளலோகம் லிமா நகரம் (பெரு)

    லிஸ்பன் (போர்ச்சுகல்)

    போர்ச்சுகலில் தாஜ்மகால் ஸின்ட்ரா

    காதல் நகரம் அஸ்காபாத் (துருக்மேனிஸ்தான்)

    கம்பளம் நெய்யும் கட்டழகிகள் நகரம் (மெர்வ்)

    பைராமலி

    கோலாலம்பூர்

    "மலேசியா... மலைகளின் தொடர்கதை

    மகாதீரின் சுவர்ணபூமி

    தமிழனின் தங்கக் கிரீடம்

    தரணியின் கலங்கரை விளக்கம்."

    இங்கே ஒரு மாதம் பணி நிமித்தமாய் சென்றேன்... மலேசியா என்னை மயக்கியதை நீங்கள் படித்து மயங்குவீர்கள்.

    மலேசியா... மலைய நாடு என்று கவிஞரால் வர்ணிக்கப்பட்டது. சேரநாட்டைப் போல் மலைகளும், மரங்களும், நீரருவிகளும், நீண்ட கடற்கரைகளும், காடுகளும், காட்சிகளும் நிறைந்த நாடு. காடி (கார்களை அப்படி அழைக்கிறார்கள்)யில் போகும்போது கண்ணாடிக்கு வெளியே வாழ்த்து அட்டைகளில் வரும் காட்சிகள் எதிர்ப்புறமாய் பறக்கின்றன. மேடும் பள்ளமுமாய் பூமிகளும் இல்லை. குண்டும் குழியுமாய் ரோடுகளும் இல்லை. காரை அணைத்துக்கொண்டு கலர்ப்படமாய் நழுவும் காட்சி. சினிமாவில் வரும் டூயட் சீன் போல... கண்ணுக்கு இதமாய், கருத்துக்குக் கனிவாய் இருக்கிறது.

    மலேசியா... அதுவும் கோலாலம்பூர்... மகாதீரின் வளமான ஆட்சிக்கு நிறைவான சாட்சி. எதையுமே பிரம்மாண்டமாக நிர்மாணிக்கிறார் மகாதீர்.

    கோலாலம்பூர் விமான நிலையமே நம்மை மூச்சடைக்க வைக்கிறது. உலகிலேயே மிகப் பெரும் விமான நிலையங்களில் அதுவும் ஒன்று. நான் துபாய், சிங்கப்பூர், ஜெர்மனி, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், இலண்டன், பாரீஸ், பெரு, சிகாகோ, பாங்காங், டோரான்டோ, லிஸ்பன், வியன்னா போன்ற விமான நிலையங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் கோலாலம்பூர் விமான நிலையம் வியப்படைய வைக்கிறது.

    கோலாலம்பூர் நகரிலிருந்து 60 கி.மீ. விமான நிலையம். ஆனால் 45 நிமிடங்களில் அடைந்துவிடலாம். ரோடுகள் அவ்வளவு நேர்த்தியானவை. ஆறு வழிச் சாலை. கார்கள் எதிரும் புதிருமாய் பறக்கின்றன. கற்பனை செய்து பாருங்கள். சென்னை அண்ணா விமான நிலையம் காஞ்சீபுரத்தில் இருந்திருந்தால்...! கோலாலம்பூர் விமான நிலையம் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலத்தில். விமான தளத்திலிருந்து, விமான நிலையத்திற்கு வர வழுக்கு ரயில்கள் உள்ளன. ஏதோ கண்ணாடிக்குள் லிப்டை படுக்க வைப்பது போல வைத்திருக்கிறார்கள். ரயில்கள் ஸ்லெட்ஜ் வண்டிபோல நழுவுகின்றன. ரயிலிலிருந்து இறங்கி, கஸ்டம்ஸை கடந்து, லக்கேஜ் பெல்டுக்கு வந்தால்... அட...! நமது பெட்டிகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

    இந்தியாவில் உள்நாட்டு விமான நிலையங்களில் அரை மைல் தூரத்தைக் கடப்பதற்குப் பெட்டிகளுக்கு அரைமணி நேரம் தேவைப்படுகிறது. அங்கே ஐந்து கி.மீ. கடப்பதற்கு ஐந்து நிமிடம்! மலேசியாவில் பெட்டிகள் கூட மிக சுறுசுறுப்பு. சரி... பெட்டிகளை எடுத்துக் கொண்டு பிரம்மாண்டமான முகப்பிற்கு வந்தால் தூரத்தில் மலைகள்... வானில் வரைந்த சித்திரமாய்! முகப்பின் இருபுறமும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வரவேற்பு வளைவுகளாக. நகருக்குப்போக, நம்மை அழைத்துக் கொண்டு செல்ல நளினமான கார்கள்! ஏறிக் கொள்வோமா?

    இத்தனை விரிவாக எதற்குச் சொல்கிறேன். மலேசியா விடுதலை பெற்றது 1957. அங்கேயும் காலனி ஆட்சியின் கடுமையான சுவடுகள். பிறகு சில வருடங்களுக்கு ஜப்பானிய ஆதிக்கம். இரண்டாம் உலகப் போரின் கறைகள். சீனர்கள், இந்தியர்கள், மலாயாகாரர்கள் என மக்கள் தொகை. அவர்களுக்குள் இனச் சண்டைகள். இப்போதும் மகாதீருக்கு அமெரிக்க எதிர்ப்பு. இத்தனையும் இந்தியாவைப் போல. சமகாலத்தில் விடுதலையான நாடுகள். விடுதலையான பின் ஒரே மாதிரியான எதிர்ப்புகளைச் சந்தித்த நாட்கள் ஆனால், மலேசியா எப்படி முன்னேறியது? நாம் ஏன் முன்னேற முடியவில்லை. அடிக்கடி கலைஞரும், மாறனும், மற்ற மத்திய அரசியல்வாதிகளும் மலேசியா, சிங்கப்பூர் போகிறார்களே...? அவர்களுக்குச் சென்னையை கோலாலம்பூர் மாதிரி மாற்ற வேண்டுமென்று ஏன் இந்த 30 ஆண்டுகளாகத் தோன்றவில்லை. இரண்டுமே சமதட்டில் இருந்த நகரங்கள்தானே.

    ஆனால் ஒரு தலைமுறைக்கு இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நழுவிய காலம், நகர்ந்துபோன வாழ்க்கை இனி நமக்கு வராது. வஞ்சிக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். நெஞ்சு கொதிக்கலாம். ஆனால் வளமையான வாழ்க்கை, இளைய காலத்தில் இனி வராது.

    மவுண்ட் ரோட்டில் கார் நிறுத்த வசதி செய்து தரமாட்டார்கள்... ஆனால், மத்திய - மாநில உறவு பற்றி ஓயாமல் பேசுவார்கள். அனைவருக்கும் வேலை, அதற்காகத் துரிதமான திட்டங்கள் என்று சலிக்காமல் உழைக்க மாட்டார்கள். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் பற்றி காதைத் துளைப்பார்கள். துளைத்த காதுகளுக்குத் துளை போடுவதில் வல்லவர்கள்! நமது அரசியல்வாதிகள். கூடிக்கூடி பேசுவதிலும், தர்மம் போதிப்பதிலும், தார்மீகம் பேசுவதிலும் நமக்கு இணை நாமே. ஆனால் செயல்பாட்டில்...?

    மலேசியாவில் இம்மாதிரி விவாதங்கள் பத்திரிக்கைகளில் வெளிவருவதே இல்லை. மக்களுக்கு உடனடித் தேவைகள் எதுவோ அதுவே செய்திகள். அப்போதுதானே மந்திரிகள் கவனம் அங்கே போகும். கொள்கைகளும், சித்தாந்தங்களும், விவாதங்களும், விமர்சனங்களும் பல்கலைக் கழகங்களில், பார்லிமென்டுகளில் மட்டுமே. பத்திரிக்கைச் செய்திகள் பாடநூல்கள் அல்ல... மக்கள் தேவையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்று அறிந்த மக்கள், மந்திரிகள்.

    ‘இங்கே தேவைகளைச் சுருக்கு...’ என்று மலேசிய மந்திரிகள் மக்களுக்குப் போதிப்பதில்லை. அது அரசியல்வாதியின் வேலையல்ல. தத்துவஞானியின் வேலை. வாரியார் வேலையைக் கலைஞர்கள் செய்யலாமா?!

    டெல்லிகனோட் பிளேசில் கார் நிறுத்த முடியவில்லையா...? காரில் போகாதீர்கள் என்கிறார்கள் இந்திய மந்திரிகள்.

    மும்பையில் திருடு தவிர்க்க முடியவில்லையா... நகை வாங்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறது சிவசேனை.

    கல்லூரியில் இடமில்லையா... ஐடிஐக்குச் செல்லுங்கள்... என்பார் லல்லு.

    உணவுப் பஞ்சமா... ஒருநாள் விரதமிருங்கள் என்கிறார் ஒரிஸாவில் பட்நாயக்.

    இது மலேசியாவில் இல்லை. குறைகளை மூடி மறைக்காமல் களைய முயற்சிக்கிறார்கள். குப்பையை ரத்தினக் கம்பளத்தின் கீழே தள்ளுவதில்லை. இப்படி அடிப்படைச் சிந்தனையை மாற்றினால் மட்டுமே நமது அரசியல்வாதிகள் வெற்றி பெறப் போகிறார்கள்.

    இந்த உள்ளக் கொதிப்பை நண்பர் நந்தாவிடம் பகிர்ந்து கொண்டேன். என்ன சார் இது... வரப்புயர நீர் உயரும் என்பது போல, மக்கள் உயர்ந்தால்தானே நாடு உயரும். நம்ம ஊர்லே அரசாங்கம் மக்களுக்கு எதிரி சார். ‘நீ எப்படி பணக்காரன் ஆயிடுவே? அப்படின்னு அரசாங்கம் முஷ்டியை மடக்கிட்டு வருது. ஏகப்பட்ட வரி போடுகிறார்கள். எப்படி வீடு கட்டிடுவே பார்க்கலாம். எப்படி மின்சார இணைப்பை வாங்கிடுவே பார்த்துடுவோம்’னு எம்.ஜி.ஆர். - நம்பியார் பாணிலே இந்தியாவில் அதிகாரிகள் ஆட்சிதான் நடக்குது சார். எனக்கு எதிர்காலத்துலே நம்பிக்கையே கிடையாது சார் என்றார் அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1