Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaigal
Alaigal
Alaigal
Ebook173 pages59 minutes

Alaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாட்டில் நாலு திக்கிலும் நடப்பவைகளை அறிவுபூர்வமாகவும், நளினமாகவும், நகைச்சுவையாகவும், பல உணர்வு பூர்வமான சிந்தனைகளை இந்நூலில் வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580145208007
Alaigal

Read more from S. Sathyamoorthy

Related to Alaigal

Related ebooks

Reviews for Alaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaigal - S. Sathyamoorthy

    http://www.pustaka.co.in

    அலைகள்

    Alaigal

    Author :

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிங்காரச் சென்னை!

    தபாலில் போன கோஹினூர் வைரம்!

    பிரதமரை தீர்க்க ராணி உத்தரவு!

    பிசாசுகள் சங்கம்!

    அவமானம்!

    டேட்டிங் அலவன்ஸ்

    பிளயரின் பிரஷர்!

    பள்ளி வாசல்கள்!

    மகேஷ் பயஸ் சண்டை!

    கலைஞரின் ராஜபாட்டைகள்!

    மாடர்ன் மனைவியா, மகிஷாசுரமர்த்தனியா?

    பெருக்கலும், வகுத்தலும்!

    கம்போடிய நவராத்திரி

    நூற்றாண்டு நட்சத்திரம்!

    உலக மகாக் குளியல்!

    அலங்கோல அமெரிக்கா

    இந்தியாவுக்கு தேவை ஆண்டவனல்ல...!

    நம்ம ஊரு நல்ல ஊரு...!

    தேசீய கீதம்

    விதேசி Vs சுதேசி

    பில் கேட்ஸ்கள் தேவை!

    கரை தட்டிய கப்பல்!

    இருபது சிலிர்க்கிறது!

    ஜாதிகள் இல்லையடி பாப்பா!

    தகுதி எப்போது மதிக்கப்படும்?

    கார்கில் நினைவுச்சின்னம்!

    குவா... குவா...

    கண்ணா, கறுமைநிறக் கண்ணா...!

    பக்தி கிரிக்கெட்!

    பஞ்சவர்ணக்கிளி போராட்டம்!

    தண்ணீர்... தண்ணீர்!

    அறிஞர் மையம்

    பிரதமர், பீகார், விவேகி!

    பாரத மணித் திரு(டும்) நாடு

    கிளிண்டன் (கல்கி) அவதாரம்!

    மக்களின் மிருதங்கம்!

    ஆறப் பொறுக்கவில்லையா?

    இனியவை இருபது!

    யாரைப்போல இருக்க ஆசை...

    கறுப்பு ரோஜா

    லீ பெங்கும் ஹேராமும்!

    விலை மாதர்களின் ஷேர் மார்க்கெட்!

    கௌன் பனேகா மேரேபதி!

    ‘சூப்பர்’ யோசனைகள்!

    ஐஸ் ஹவுஸ் மறையுமா? கரையுமா?

    வெப் உலகம் விசித்திரமானது!

    ரஜினி வியப்புக்குரியவர்!

    ரிஷியான நடிகை!

    ராகவா, ராகவா...!

    கால்கள்... கால்கள்... கால்கள்...

    காவடிச் சிந்து

    100 வயது தாண்டி 50,000 பேர்!

    உலகைச் சுற்றிய வாலிபன்!

    கண்ணீர் விட்ட கைதிகள்!

    அரசியல் அம்பலங்கள்

    அம்மணக் கவிஞர்கள்!

    இட்லிக்கு எதிர்காலம் பிரகாசம்!

    எமலோகத்தில் ஓவர் டைம்!

    அம்மா அடித்த ரம்

    கொஞ்சம் கொஞ்சமாக...

    அந்த நாலு பேர் யார்?

    வேலையைக் குறையுங்கள்!

    ஷாப்பிங் வேண்டாம்!

    உல்டா!

    காமராஜா? காம்ராஜா?

    ஜோசியத்திற்கு எதிர்காலமில்லை!

    ராஜதந்திரியும் ராஜநர்த்தகியும்

    புரட்சிகளின் தலைவி

    அணிந்துரை

    கடந்த இருபது ஆண்டுகளாக சத்தியமூர்த்தி ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் எழுதிவரும், ‘கடைசி பக்கம்’ வாசகர்களின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது. நளினமான நகைச்சுவையில் நாலு திக்கிலும் நடப்பவைகளை அறிவுபூர்வமாக அரங்கேற்றுவது இவருக்குக் கைவந்தகலை.

    1967ல் ஐ.ஏ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சியும், இரண்டு ஆண்டு பயிற்சியும் பெற்ற பின்னர் சென்னை, நாக்பூர், டெல்லி (இங்கே பதினைந்து ஆண்டுகள்), இங்கிலாந்து பர்மிங்காம் என பல இடங்களில் உயர் பதவி வகித்தவர்.

    சத்தியமூர்த்தி டெல்லியில் முன்னூறு உதவியாளர்களுடன் விஞ்ஞான ஆராய்ச்சித்துறையை ஆய்வு செய்து விசேஷ ரிப்போர்ட் தயாரித்தவர். வளரும் நாடுகள் பல இதனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவது நிர்வாகத் திறமைக்கு பெற்ற அங்கீகாரமாகும்.

    பள்ளி நாட்களில் கவிஞர் கண்ணதாசனின் ‘தென்றல்’ இதழில் இவர் எழுதிய கவிதைதான் இலக்கிய உலாவின் உதயகாலம். சென்னை தொலைக்காட்சியில் இருபத்திஐந்து தடவை க்விஸ் புரோகிராம் நடத்தியிருக்கிறார். வானொலியில் நிறைய தலைப்புகளில் பேசியிருக்கிறார். பேட்டியும் கண்டதுண்டு.

    இனிய சுபாவம், இளம் புன்னகை, மென்மையான பேச்சு, முதல் சந்திப்பில் நட்புக்கு கைகுலுக்கும் போது நிரந்தர சொந்தமாவது இவருடைய அன்பின் வசீகரம். சென்னையில் இரு மகன்களுடன் வாசம். இவர் மனைவி திருமதி. ஹேமாசத்தியமூர்த்தி டெல்லி வானொலியில் செய்தி வாசிப்பவராக இருக்கிறார்.

    இவர் எழுதியுள்ள நூல்கள், மூன்று நாடுகளில் முன்னூறு நாட்கள் / கடைசிப்பக்கம் / கண் சிமிட்டல்கள் / சின்னச் சின்ன பூக்கள் / பட்டாம்பூச்சி / முத்துக்கள் / கதம்பச்சரம் / கிளிஞ்சல்கள் / தூறல்கள் / மின்னல்கள்.

    மா. நந்தன்

    சிங்காரச் சென்னை!

    சிங்காரச் சென்னை 48 வயதான ஸ்டாலினின் கனவு நகரம். ஐந்தாறு மேம்பாலங்களினால் சென்னையைச் சிங்காரித்துவிட முடியாது. சென்னையில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கெல்லாம் சிங்காரம் அல்லது சிங்காரி என்று பெயர் வைப்பதால் மட்டுமே சிங்காரச் சென்னையைப் பிறப்பிக்க முடியாது. கல்கத்தா, மும்பை, டெல்லியோடு சென்னையை ஒப்பிட்டால் சென்னை சிறிய நகரம்தான். ஆனால் முதிய நகரம். முகத்தில் ஏகப்பட்ட வடுக்கள்... நெற்றியில் சுருக்கங்கள், தெருவெல்லாம் சிறியவை. கட்டடங்கள் அழகுக்கோ, ஆர்கிடெக்சருக்கோ பெயர் போனவை அல்ல. வெறும் உபயோகத்திற்காக மட்டுமே கட்டப்பட்டவை. ஊரெல்லாம் புழுதி. புழுதிக்கு அழகு செய்ய கூளங்கள். பழத்தோல்கள்.

    உலகின் பல நாடுகளில் குப்பையை அப்புறப்படுத்த இரவு நேரம் சரி என்கிறார்கள். டெல்லியில் கூட. ஆனால் சென்னையில் பகல் 11 மணிக்குத்தான் வேலையே ஆரம்பமாகிறது. இத்தனைக்கும் ஆங்கிலேயர் காலத்திலேயே நகரை தாம்பரம் வரை நீட்டித்து மின்சார ரயில் விட்டார்கள். பிறகு அம்பத்தூர், பாடி என்று நகரம் விரிந்தது. அதற்குப் பிறகுதான் நகரின் வளர்ச்சி தடைப்பட்டுப் போனது. தஞ்சாவூர், திருவாரூரிலிருந்து வந்த நடைபாதை வாசிகள் நகரவாசிகளானார்கள். மாருதி வந்தது. குடும்பக் கட்டுப்பாடு இல்லாத மாருதியால் நகரம் வெலவெலத்துப் போனது. நகரின் நாகரிகமே ரங்கநாதன் தெருவானது.

    சென்னையைச் சிங்காரிக்க மாமல்லபுரமே மருந்து. அகமதாபாத்தில் காந்திநகர் கட்டி மாநிலத் தலை நகராக்கியதுபோல், டெல்லியில் சஞ்சய் காந்தி நேரு பிளேஸ் கட்டி டெல்லியை விஸ்தரித்தது போல மாமல்லபுரத்தில் அத்தனை அரசாங்க அலுவலகங்களையும் மாற்றி, அலுவலர்களுக்குக் குடியிருப்பு ஏற்படுத்தினால் சென்னையில் நெரிசல் குறையும். மத்தியப் பிரதேசத்தில் நீதிமன்றம், மின்சார வாரியம் முதலியன வெவ்வேறு மாவட்டங்களில்தான். உத்திரப் பிரதேசத்திலும் அப்படியே! நாமும் மதுரை, திருச்சி, கோவை என்று அலுவலகங்களை அப்புறப்படுத்தலாம். திருச்சியில் மாநில மின்சாரவாரியம், மதுரையில் மாநில நீதிமன்றம், கோவையில் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனமாற்றலாம்.

    சென்னை என்றாலே வெயில் என்றொரு வெறுப்பு. அதை எதிர்கொள்ள நாம் இரவில் அலுவலகங்களை வைத்துக் கொள்ளலாமே? அமெரிக்கா விழித்திருக்கும் போது, நாமும் விழித்திருப்போம். இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் என்பது உண்மையாகும். சென்னையை இரவினில் சிங்காரித்துக் கொள்ளலாம். மெரீனாகூட சமூக விரோதிகளிடமிருந்து மீட்கப்படும். ஸ்டாலின் அப்போது சிங்கார சென்னை என்று பகல் கனவு காணவேண்டியதில்லை. பகலில் தூங்கினால்கூட!

    தபாலில் போன கோஹினூர் வைரம்!

    சில வாரங்களுக்கு முன்னால் இதயத்தில் வைரங்களைப் பற்றி படித்தேன். இப்போது ஹைதராபாத் நிஜாமின் நகைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரூ.2500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மும்பை ரிசர்வ் வங்கியில் பரிசீலனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கோஹினூர் வைரம் தற்போது 90 காரட் என்றால் நிஜாமின் ஜேகப் வைரம் 185 காரட். உலகிலேயே இழைக்கப்படாத ஒரிஜினல் வைரங்களில் இதுதான் மிகப் பெரியது.

    இதைத் தவிர பெரிய பெரிய கோமேதகங்கள், பச்சை, வைரம், நீலம், கெம்பு, பவழம், முத்து என்று மாலைகள், மோதிரங்கள், கிரீடங்கள், பெல்ட்டுகள். இதைப் பற்றி பிறகு ஒரு தனிக் கட்டுரையே எழுதுகிறேன். நகைகளைப் பரிசீலனை செய்ய ஒரு கமிட்டி. அதில் சோலேரே என்றொரு நிபுணர். மும்பை வாசி அற்புதமான மனிதர் காஷ்மீர், மைசூர், ஜெய்ப்பூர் ராஜவம்ச நகைகளைப் பார்த்தவர். முன்பு இந்தியாவில் இருந்த நகைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட இப்போது இங்கு இல்லையாம். எல்லாம் வெளிநாடுகளில் ராஜாக்களாலும், மற்றவர்களாலும் விற்கப்பட்டு விட்டனவாம். சோலேரே இந்திய சரித்திரத்தை நகைகள் சரித்திரமாகவே விவரிக்கிறார்.

    பாபர் இந்தியாவைக் கைப்பற்றப் புறப்பட்டபோது அவரோடு 16 வீரர்களே இருந்தனராம். இந்தியாவைச் சூறையாடலாம் என்றதும் பல ஆப்கானிய துருக்கிய வீரர்கள் சேர்ந்து கொண்டனராம். சோம்நாத் கோயில் சூறையாட்டம் அவர்கள் நினைவில் இருந்ததே. 101 ஒட்டகங்களில் அல்லவா நகை மூட்டைகள் சோம்நாத்திலிருந்து ஏறிப் போயின. அதில் சில ஒட்டக நகைகள் வழிப்பறிக்குப் பலியாக, ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர் என்று புதிய ராஜ வம்சங்கள் தோன்றின. நகைகள் இருந்ததால் புதிய ராஜ பரம்பரைகள் தோன்றின. அதேபோல் சிவாஜியின் நகைகள் சூறையாடப்பட்ட பின், பீஜப்பூர், கோல்கொண்டா. மைசூர் ராஜபரம்பரைகள் தோன்றின. முகலாய டில்லியும், இந்தியாவும் சூறையாடப்பட்டபின் இங்கிலாந்து தோன்றியது என்கிறார் சோலேரே.

    இந்திய கோஹினூர் இங்கிலாந்திற்கு எப்படிப் போனது என்றால் அதை வெறும் ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பினார்களாம். இன்ஷூரன்ஸ் கூட செய்ய வில்லையாம். நமது தபால் துறையில் அப்போது அவ்வளவு நாணயம். இப்போது இப்படி முடியுமா...?

    பிரதமரை தீர்க்க ராணி உத்தரவு!

    பெர்லினில் ஒரு பெரிய சந்திப்பு. கிளிண்டனும், ஷீரோடரும். ஷீரோடர் தடுமாறும் ஜெர்மானிய அதிபர்.

    Enjoying the preview?
    Page 1 of 1