Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thooralgal
Thooralgal
Thooralgal
Ebook208 pages1 hour

Thooralgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெற்றிக்கு வழி என்பது மலர்கள் நிறைந்த பாதைகள் மட்டும் அல்ல. அது முட்களும், புதர்களும் நிறைந்ததுதான் என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கவும் வைத்து கூறியுள்ளார். ஆப்பிள் மரத்தடியில் நியூட்டன் பெற்றது விஞ்ஞானம். போதி மரத்தடியில் புத்தர் பெற்றது ஞானம். தத்துவம் கூட்டுறவை வளர்க்கும். விஞ்ஞானம் போட்டியை வளர்க்கும். பிறகு போட்டியே தொழிலாகிவிடும் என்ற நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டுகிறார் தூறல்கள் என்னும் நூலில், சிறுசிறு தூறல்களாக...

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580145208005
Thooralgal

Read more from S. Sathyamoorthy

Related to Thooralgal

Related ebooks

Reviews for Thooralgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thooralgal - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    தூறல்கள்

    Thooralgal

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தூறல்கள்...

    பாரத விஜயம் திரும்பிப் பார்க்கிறேன்...

    சிவப்புச் சூறாவளி

    சரித்திர விபத்து

    பஞ்சாபி ஃபார்முலா

    சுவையான கே... ப...

    கபில்... த... டெவில்

    மரணத்திற்குப் பின்னால்...

    சிங்கின் கவலை...

    பாகிஸ்தானை எட்டிய ரோஜாவின் மணம்...

    எழுத்துத் திருவிழா!

    அநாகரிகம்

    பகுலா...

    ஈஸ்வரோ ரக்‌ஷது

    பார் கண்ணா பார்

    மின்னல்கள்!

    ஆட்டுப்பால் வைரமுத்து

    கிணற்றுத் தவளைகள் சுறாமீன்கள் ஆவதெப்போது?

    இக்கரைக்கு அக்கரை பச்சை

    300 வயதுக் காதல்!

    அமெரிக்க ஈசனுக்கு பல சிங்கப்பூரில் பிரம்படி!

    அழகே உன்னை ஆராதிக்கிறேன்

    இன்னொரு ஷாஜஹான்!

    கலப்படக் குழப்பம்!

    சின்னச் சின்ன சேஷன்கள்!

    அது அந்தக் காலம்!

    உண்மையான சாதனையாளர்!

    ஓங்கார் சிங்கின் ஓங்காரநாதம்!

    அர்த்தமுள்ள இந்துமதம்!

    இருதலைக் கொள்ளி எறும்பு

    சர்பத்தா - சுக்குக் காப்பியா?

    குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    மனம் ஒரு குரங்கு

    தாய்ப்பால்

    ஜனாதிபதிகளின் சின்ன வீடுகள்

    தலைநகரிலிருந்து...

    மூக்கு

    அண்ணா என்பார்கள் சில பேர்கள் அம்மா(மு) என்பார்கள் சில பேர்கள்

    தமிழனுக்குப் பெருமை சேர்த்தல் கஸ்தூரி ரங்கன்!

    பத்திரிகை சுதந்திரம்

    அமுல்பேபி புஷ்பேபி ரஸ்னாபேபி!

    புலி – எலி - கிலி!

    ஒரு மகனின் மனக்குறை

    யார் கில்லாடி?

    கி.வா.ஜ. பாணி சிலேடை...

    ஐம்பதுகளும் ஐந்து கேள்விகளும்

    ராஜீவ்காந்தி விழா

    நல்லதோர் வீணை

    மரணம் ஒரு முடிவல்ல

    ஜெயப்ரதாவுக்கு முன்னோடி...!

    ஒரு கலாசார யுத்தம்!

    ஹாலிவுட் கனவு

    சீமை வென்ற சீமாட்டி!

    ‘நாமாவளி’ ஸீஸன்!

    இரண்டு கிலோவில் ஒரு ஆபீஸ்!

    நவராத்திரி

    விருந்து

    ஆட்டோவுக்கு ஆயுர்வேதம்; போட்டோவுக்கு பாட்டி வைத்தியம்!

    பேசப்படும் பெண்கள்...

    நீலிக் கண்ணீரா? முதலைக் கண்ணீரா? கிளிசரின் கண்ணீரா?

    பிள்ளையார் சுழி போடலாமா?

    பெனாசிர் பாட்டி - ஒரு இந்து

    இதுதான் விதி!

    அவுரங்கசீப்பும் அத்வானியும்

    உண்மையைச் சொல்லிவிட்டால்...

    பார்த்திபன் கனவு

    ‘பிளிட்ஸ்’ கடைசிப்பக்கம் கே.ஏ. அப்பாஸ் பக்கம் என்று ஆனது போல ‘இதயம் பேசுகிறது’ கடைசிப் பக்கம் ‘சத்தியமூர்த்தி பக்கம்’ என்றாகிவிட்டது.

    இந்தத் தொகுதி ‘தூறல்கள்’ என வெளிவருகிறது.

    சொல்லுவதில் சுவை மிளிரும். நாட்டு நடப்புகளை அலசுவதில் அபேதாவாதம் தோன்றும். எந்தச் செய்தியாலும் அதன் ‘அசோசியேட் ஐடியாக்களை’ப் பொருத்தி புதிய பரிணாமம் படைத்து வருபவர்.

    இவர் புத்தக அரங்கேற்றத்தில் பாராட்டியவர்கள்:

    ஔவை நடராஜன், சிவசங்கரி, இந்துமதி, திலகவதி, ஷ்யாம், பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து, சிவகாமி, கமலஹாசன், மகரம், லேனா தமிழ்வாணன், டி. ராஜேந்தர், அனுராதா ரமணன், இனியவன், கிராக்கி, பாலகுமாரன்...

    இவர் எழுதிய ‘ஆயிரம் நிலவே வா’ புத்தகத்துக்கு ஜெயகாந்தன் வழங்கிய முன்னுரையில் கற்பனையை கச்சிதத்தை கதாபாத்திரங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    உங்களுக்கு தெரியுமா? 1825 தொடங்கிய ஆக்ரா கல்லூரியில் ‘டிப்ளமா’தான் தந்தார்களாம். மோதிலால் நேரு அந்தக் கல்லூரி மாணவர்.

    பாபுராவ் படேலை பாராட்டும் பகுதியில் சத்தியமூர்த்தி சொல்லியுள்ள பதில்: வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது ஓடிப்போய் அணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அது அழைப்பு மணியை அடிக்கக் கூடாதா? விஞ்ஞான வசதியை நினைவுபடுத்துகிறார்.

    ஆப்பிள் மரத்தடியில் நியூட்டன் பெற்றது விஞ்ஞானம். போதி மரத்தடியில் புத்தர் பெற்றது ஞானம். தத்துவம் கூட்டுறவை வளர்க்கும். விஞ்ஞானம் போட்டியை வளர்க்கும். பிறகு போட்டியே தொழிலாகிவிடும் என்ற நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

    சில பக்கங்களில் காண்பது மேலே உள்ளது. இப்படித்தான் ஏராளமான தகவல்கள் எல்லா பக்கங்களிலும் ததும்புகின்றன. புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினால் முடித்தால்தான் மூடி வைக்க முடியும். இவர் எழுத்தில் துளும்பும் நகைச்சுவை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். நிறையவே சிந்திக்கவும் வைக்கும்.

    எம். நந்தன்

    தூறல்கள்...

    ‘ஆசைகளுக்காக ஆத்மாவை விற்பவன் சாம்பலுக்காக சித்திரத்தை எரிப்பவன்.’

    ‘உபசரிப்பு எதிரிக்கும் உண்டு. மரம் வெட்ட அருகில் போனால் நிழல் மறுக்கப்படுவதில்லையே?’

    ‘பிரம்மாண்ட அலைகளும் திரும்பியே செல்ல வேண்டும். காத்திரு. துன்பங்கள் தொலைந்து போகும்.’

    ‘இன்றைய வேலைகளை நேற்றைய முறைகளால் முடித்து நாளைய வெற்றிக்கு வழிவகுக்க முயல்வது முட்டாள்தனம்.’

    ‘கேட்டது மறக்கலாம். பார்த்தது மனதில் நிலைக்கலாம். செயல் வடிவங்களே நுணுக்கங்களைப் புரிய வைக்கும். ஆரம்பியுங்கள்.’

    ‘மிகப்பெரிய மரத்துக்கும் சிறிய கோடரி உண்டு. யோசி. வெற்றி உனதே.’

    ‘வெற்றிகளுக்கான ஏணிப்படிகள் எனக்குத் தெரியாது. தோல்விகளுக்கான சறுக்கு மரங்கள் எனக்குத் தெரியும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கப் பார்ப்பது... சறுக்கு மரத்தின் ஆரம்பம்.’

    ‘வாய்மை கொள்கையல்ல; வாழ்க்கை முறை.’

    ‘புத்திசாலியாக இரு. ஆனால் முட்டாளாக நடி. வெற்றிச் செல்வி உனக்காக விரதமிருப்பாள்.’

    ‘அளவான சாப்பாடு, வளமான ஓய்வு, சரியான தேகப் பயிற்சி; உனக்குள் இயல்பான சாந்தம் மலர்ந்துவிடும். நம்முடைய வைத்தியர் நமக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார்.’

    ‘குழந்தைகளுக்கு அறிவுரையா? அவர்கள் கேட்க விரும்புவதைத் தெரிந்துகொண்டு, அதையே அறிவுரையாக்கிச் சொல்லுங்கள். குழந்தைகள் சொன்னதைச் செய்வார்கள்.’

    ‘முதல் பார்வையிலேயே கிடைக்க வேண்டிய சாதகமான கணிப்பு இரண்டாவது தவணையில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.’

    ‘அனுபவங்களால் விவேகம் பெறாதவன் மனிதனே அல்ல.’

    இதெல்லாம் என்ன ஜென்புத்தர் அறிவுரைகளா? சோனியாகாந்தி போன வாரம் சீனா போயிருந்தபோது கேட்டுக்கொண்டு வந்தாரா? இல்லை. இந்த வாரம் பேசப்பட்ட தாட்சரின் புத்தகத்தில் காணப்பட்ட வாக்கியங்களா? இல்லை இல்லை, மூன்றுமே இல்லை. பிரமோத் பாட்ரா, விஜய் பாட்ரா என்ற இரண்டுபேர் எழுதியுள்ள ‘நிர்வாக சிந்தனைகள்’ என்ற புத்தகத்திலிருந்து சில வரிகள். மழையைவிட தூறல் சுகமானது. புத்தகத்தைவிட சாரங்களே முக்கியம். நனைந்து பாருங்களேன். மனம் சிலிர்த்துப் போகும்.

    பாரத விஜயம் திரும்பிப் பார்க்கிறேன்...

    டிசம்பர் 93-திரும்பிப் பார்க்கிறேன். ஒரே மாதத்தில் ஒரு பாரத விஜயம். அசுவமேத குதிரையாக... ஆக்ராவில், ஷில்லாங்கில், கௌஹாட்டியில், காஜிரங்காவில், கல்கத்தாவில், ஜோத்பூரில், ஜெய்ஸால்மரில், உதய்பூரில், அகமதாபாத்தில், பம்பாயில், சென்னையில், பெங்களூரில், மதுரையில், கோழிக்கோடில் எத்தனை இடங்கள்...! எத்தனை விஷயங்கள்...! கஸ்தூரி வாசனையை கடைசிப் பக்கத்தில் அடக்கிவிட முடியுமா? முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ஆக்ராவில் ஒரு கல்லூரி. 1823-ல் நிறுவப்பட்டிருந்தது. மாதவ்ராவ் சிந்தியாவின் முன்னோர்கள் நிலம் தானமாகத் தர ஆக்ரா கல்லூரி கம்பீரமாக எழுந்துள்ளது. 1825-ல் இந்தியாவின் முதல் பட்டதாரியா? சந்தேகமாக இருந்தது. என் குடும்பத்தில் மூன்று தலைமுறையாகத்தான் பட்டதாரிகள். என் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா ஆக்ரா கல்லூரி பட்டதாரியோ? விசாரித்தேன். அப்போதெல்லாம் கல்லூரிகளில் படித்தால் வெறும் ‘டிப்ளமோ’ மட்டும்தான் தருவார்களாம். இப்போதோ, கல்லூரியில் படிக்காமலே பட்டம் கிடைக்கிறது! காலம் மாறிவிட்டது. மோதிலால் நேரு ஆக்ரா கல்லூரி மாணவராம்.

    ஆக்ராவில் ‘ராதாஸ்வாமி’ என்றொரு பக்தி இயக்கம். ஆயிரம் ஏக்கரில் ஒரு குடியிருப்பு இதில் இணைபவர்களுக்கு வீடு தருகிறார்கள். வேலை தருகிறார்கள். மின்சாரம் தருகிறார்கள். ஆனால், டெலிவிஷன் வைத்துக் கொள்ளக்கூடாது! ஒருவேளை சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பார்களோ! அந்தக் குடியிருப்பில் தினமும் காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை எல்லோரும் வயலில் வேலை செய்ய வேண்டும். மாலையில் பிரார்த்தனைக்கு சீருடையில் வரவேண்டும். இது இரண்டு மட்டுமே சமத்துவ சமுதாயம் வளர்க்க அவர்கள் கேட்கும் காணிக்கை. ராதாஸ்வாமிகள் அனைவரும் தயால்பாக் (DAYAL BAUG) என்னுமிடத்தில் ஒரு காம்பவுன்டிற்குள் வாழ்கிறார்கள். அதற்குள்ளேயே பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், தோட்டம், வயல்கள் எல்லாம் இருக்கின்றன. நிம்மதி நடனமாடுகிறது. ராதாஸ்வாமி இயக்கம் சென்னைக்கு வரலாமா என்று யோசிக்கிறதாம். ஏற்கெனவே நம்மிடம் கோபால்சாமி, சுப்பிரமணிய சுவாமி. இன்னொரு சுவாமி தேவையா?

    ஆக்ராவில் நான் பார்த்த மூன்றாவது ப்ரிஜ்லால் (BRIJILAL) போலீஸ் டி.ஐ.ஜி. பெயருக்கேற்ப (FRIDGELAL) குளிர்ச்சியான மனிதர். இன்முகம் இவர் முகம். அவசரத்திலும், அதிர்ச்சியிலும்கூட கூலாக இருக்கிறார். நிதானம் தவறுவதில்லை. இதுவரை 50 சம்பல் கொள்ளைக்காரர்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார். மல்லா, தேஜ்பால், மல்கான் சிங், விக்ரம், பூலன், ராம்லாலா எல்லாம் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க இவரைக் கூப்பிட்டிருக்கலாம். ஆனால், நமக்கு இருப்பது ஒரே ஒரு வீரப்பன்தானே... அவனையும் பிடித்து விட்டால்...? நல்ல வேளை, தேவாரம் இன்னும் தேவாரத்தில் இறைவனைத் தேடுவது போல வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறார்... தேவாரத்தை விடுவோம். ப்ரிஜ்லாலுக்கு வருவோம். இவர் 12 வயது வரை 5 மைல் நடந்து போய் அடிப்படைக் கல்வி பெற்றாராம். பிறகு 10 மைல் நடையாம், காலில் செருப்புகூட இல்லாமல்! தாழ்த்தப்பட்ட குடிமகன் அல்லவா? கண்ணில் எனக்கு நீர் வந்தது. கம்பீரம் அவருக்கு வந்திருக்கிறது. இவருக்கு 9 வயதில் திருமணமாம். மனைவிக்கு அப்போது 4 வயதாம். கல்யாணம் நடந்து 12 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் சந்தித்தார்களாம். அவர்கள் முதலிரவு 5000 நாட்களுக்குப் பிறகு... நீண்ட முதலிரவுதான்! ப்ரிஜ்லாலின் கூற்றுப்படி ஆக்ராவில் வக்கீல்கள் எப்படி முன்னேறினார்கள்? கொள்ளை, கொலைகள்தான் காரணமாம். இந்தியாவில் பணத்திற்காக முதல் பிணைக்கைதி பிடிக்கப்பட்டது (கிட்நாப்பிங்) ஆக்ராவில்தானாம். 1947-ல் நடந்ததாம். சுதந்திரம் வந்த வருடமாயிற்றே. கொண்டாட வேண்டாமா? கொள்ளைக்காரர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்! இப்போது அரசியல் போர்வையில் கொள்ளைக்காரர்கள் அரசியல் வாதிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    சிவப்புச் சூறாவளி

    ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது நடந்த ஒரு சுவையான அனுபவம்... கோட்டு, சூட்டு போட்ட ஒருவர் தலைவரைத் தேடி வந்தார். தன்னுடைய புத்தகத்திற்கு முன்னுரை வேண்டுமென்று கேட்டார். ராஜாஜி, ‘என்ன புத்தகம்?’ என்று கேட்க, ‘கம்பராமாயணம், தமிழில் எழுதியிருக்கிறேன்’ என்றாராம் வந்தவர். ராஜாஜிக்குத் தூக்கிவாரிப் போட்டதாம். நாற்காலியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம். ‘கம்பராமாயணம் கம்பனல்லவா எழுதியது?’ என்று அமைதியாகக் கேட்டாராம்! உடனே கோட்டு சூட்டு ஆசாமி, ‘இல்லை, ‘கம்பாஸ் ராமாயணா’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறேன். முன்னுரை நீங்கள் தரவேண்டும்’ என்றாராம். ராஜாஜிக்கு ஏகப்பட்ட கோபம். ‘கம்பராமாயணத்தை படிக்க ஆசைப்படுபவர்கள் ஒரிஜினலையே படித்துக் கொள்ளலாமே? தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பிறகு தமிழுக்கு வந்ததையா படிக்க வேண்டும்?’ என்றாராம்.

    இதுபோல் எனக்கொரு அனுபவம்: ‘இதயம்’ டிசம்பர் 12 இதழைப் புரட்டினேன். ‘திண்டுக்கல்லும் சர்ச்சிலும்’ என்றொரு கட்டுரை படித்தேன். தூக்கி வாரிப் போட்டது! இது கடைசிப் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்த விஷயம்! இப்போது ‘ஏஐஊ கூடீசுலு ஆஹசூ’ என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1