Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pattampoochi
Pattampoochi
Pattampoochi
Ebook160 pages54 minutes

Pattampoochi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எஸ். சத்தியமூர்த்தி பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கடைசி பக்க’த்தைத் தேடிப் படிக்கும் நேயர் விருப்பம் என்றாகி விட்டது.

கண்ணில் படுவன, காதில் விழுவன, மனதைத் தொடுவன எல்லாம் அற்புத ரசனையுடன் களிநடம் புரிகின்றன.

நம்மைச் சுற்றி எவ்வளவோ நடக்கின்றன. சத்தியமூர்த்தியின் கூரிய பார்வையால் பரிசீலனை செய்யும் நேர்த்தி இவருக்கே கைவந்த கலை.

Languageதமிழ்
Release dateMar 19, 2022
ISBN6580145207989
Pattampoochi

Read more from S. Sathyamoorthy

Related to Pattampoochi

Related ebooks

Reviews for Pattampoochi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pattampoochi - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    பட்டாம்பூச்சி

    Pattampoochi

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசை

    மலரும் நினைவுகள்

    தாய்க்குப்பின் தாரம்

    பலே ஜோசியம்

    முயல் நத்தையாகிப் போனது

    மதங்களும் மனங்களும் வேர்களும் பூக்களும்

    இன்டர்நெட்டும் ஈதமயிலும்

    பவர் கட் மோஷன்

    கோபன்ஹேகனும் கோழிச் சண்டையும்

    பம்பாய்

    காத்திருப்பாய்..

    தமிழ்ப் பத்திரிகைகளில் கேள்வி - பதில்!

    ஏழைநாடும் பணக்கார மதங்களும்!

    சமையல்

    வண்டுகளின் வயது

    அவியல் வேண்டாம்

    ராக மூலிகா

    உகாண்டா ராஜா

    ஆயிரம் கோடி டாலர் தானம்

    மண்வாசனை

    சூகீயும், கிப்ளிங்கும்

    சின்னச்சின்ன செய்திகள்

    பாலைவன சொர்க்கம்

    சிதம்பர ரகசியங்கள்

    அண்ணா சாலையில் பசு மாடுகள்

    பாவம் தாக்ரே

    சிங்கமும் சுங்கவரி

    ஷாப்பிங் போகலாமா?

    அம்மணமும் நிர்வாணமும்

    பால் அரைகுறையா ஆனந்தமயமா?

    பழமொழிகளும் பழக்கவழக்கங்களும்

    குடியாட்சியா, முடியாட்சியா?

    அம்பலத்தில் அம்மண தரிசனம்

    காஞ்சீபுரம் காக்டெயில்

    ராவுகள் பலவிதம்

    எமோஷனல் கோஷன்ட்

    ராக்பெல்லர் பணக்காரரா?

    100 வயது வாழவேண்டுமா?

    இதயம் சிறகடிக்கிறது

    ஜோடிகள்

    வாலன்டீன் தினம்

    நட்வர்லால்

    முடியாட்சி

    நைலான் என்றால் என்ன?

    தண்ணீரில் தாமரை

    டுஷார்... உஷார்

    பூரண சுதந்திரம் எப்போது?

    ஆக்ஸ்போர்டில் எம்.ஜி.ஆர்.

    அழகிப் போட்டிகள்

    ஸின்டி கிராபோர்ட்

    திவாரிகள் தேவை

    பணம் படுத்தும்பாடு

    முன்னுரை

    எஸ். சத்தியமூர்த்தி பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கடைசி பக்க’த்தைத் தேடிப் படிக்கும் நேயர் விருப்பம் என்றாகி விட்டது.

    கண்ணில் படுவன, காதில் விழுவன, மனதைத் தொடுவன எல்லாம் அற்புத ரசனையுடன் களிநடம் புரிகின்றன.

    நம்மைச் சுற்றி எவ்வளவோ நடக்கின்றன. சத்தியமூர்த்தியின் கூரிய பார்வையால் பரிசீலனை செய்யும் நேர்த்தி இவருக்கே கைவந்த கலை.

    எம். நந்தன்

    ஆசை

    பம்பாயில் ஓர் அற்புதமான திட்டம். அது சென்னையிலும் செல்லுபடியாகும். நமது நகரின் நெடுநாளைய சாபம் நீங்கும். குடிசைகளைத்தான் சொல்கிறேன். பம்பாய் திட்டப்படி குடிசைகள் அமைந்துள்ள புறம்போக்கு நிலங்களை கட்டடம் கட்டும் கான்டிராக்டர்களுக்கு தந்துவிட வேண்டும். அந்த இடங்களில் ஆறடுக்கு மாளிகைகள் கட்ட வேண்டியது அவர்கள் பொறுப்பு. ஒரு குடிசை இருந்த நிலத்தில் ஆறு வீடுகள் வரக்கூடுமாதலால் ஆறில் ஐந்து பங்கு நிலம் உபரியாகிவிடும். அதை விற்று வரும் பணத்தில் அவர்கள் குடிசைவாசிகளுக்கு இனாமாக வீடு கட்டித் தரவேண்டும். எப்படி இந்தத் திட்டம்? அரசாங்கம் பணம் இல்லையே என்று கையைப் பிசைய வேண்டாம். ஏழைகள் கிட்டத்தட்ட வாழ்ந்து பழகிய இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். சமூகம் பிளேக் போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம். தீ விபத்துகள் குறையலாம். மழை, வெள்ளம் இவற்றிலிருந்து ஏழைகளைக் காப்பாற்றலாம்.

    இங்கிலாந்தில் ஓர் ஆதர்ச தம்பதிகள். ஆனால் இருவரும் ஆண் பிள்ளைகள். 39 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அக்டோபர் 10 இவர்களது திருமண நாள். இதில் வார்டுக்கு (WARD) ஜார்ஜ் இல்லாவிட்டால் பொழுதே போகாதாம். ‘நல்ல வேளை, சரியான சமயத்தில் ஜார்ஜை சந்தித்தேன். இல்லாவிட்டால் என்னுடைய கேர்ல் பிரண்டை கல்யாணம் செய்து கொண்டு அவளை திருப்திபடுத்த முடியாமல் தவித்திருப்பேன்’ என்கிறார் வார்டு. ஜார்ஜ் ரொம்ப கூச்ச சுபாவமுள்ளவர். அதிகம் பேச மாட்டார். அடக்க ஒடுக்கம் அதிகம். இருவரும் இவர்கள் போன்ற தம்பதிகளுக்காக வெளியாகும் ‘தோஸ்த்’ (பம்பாய்) என்ற பத்திரிகையின் விருந்தாளியாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். சென்னைக்கும் வரப்போகிறார்கள். தலைதீபாவளிக்கா என்று தெரியாது. ‘தாம்பத்தியத்தில் செக்ஸ் மட்டும் முக்கியமல்ல... நட்புறவு, இணைபிரியாமை, கூட்டு முயற்சி, ஒருமித்த கருத்துகள் என்று எல்லாமே தேவை. அது எங்களிடம் இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். இனி ஆந்தையாரைப் படித்துவிட்டு கத்திப்பாரா ஜங்ஷனுக்கு ஓடத் தேவையில்லை. போய்ப்பாருங்கள். அறிவார்த்தமாக பேசுகிறார்கள்.

    திருமணங்கள் எங்கே நிச்சயமாகின்றன?

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன; திடீர் மின்னல்களும், இடியும், மழையும் கூட சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன... திருமணமும் இடியும், மழையும்தானே!

    1. கல்யாணத்திற்கு முன்னால் கண்ணை அகலத் திறந்து வைத்துக்கொள். அதற்குப் பின் அரைத்தூக்கம் அவசியம்.

    2. பெண் கல்யாணத்திற்கு முன்பு புரியாத புதிர். கல்யாணத்திற்குப் பின் பிடிபடாத ரகசியம்.

    3. கன்னத்தில் மச்சம் கவர்ச்சியாக இருக்கிறது. அதற்காக பெண்ணையே மொத்தமாகக் குத்தகை எடுக்க வேண்டுமா?

    4. திருமண வாழ்க்கை கசந்து விட்டதா? கவலைப்படாதீர்கள். எத்தனையோ பேர் இடிந்தே போயிருக்கிறார்கள்.

    5. கல்யாணம் ஒரு டைட்டான டிரஸ், அணிவது எளிது அவிழ்ப்பது கடினம்.

    6. ஆபீசிலிருந்து திரும்பி வரும் போது அவள் சினிமாவுக்கு போயிருக்கிறாளா...? தேனிலவு முடிந்து விட்டது.

    7. பாதிரிக்கு முன்னால் சில உச்சாடனங்கள்... கல்யாணம் உறுதிப்படும். பாதித் தூக்கத்தில் சில உளறங்கள்... கல்யாணம் உடைந்துவிடும்.

    8. பக்கத்து வீட்டுக்காரன் உன் மனைவியைத் தள்ளிக்கொண்டு போய் விட்டானா? கலங்காதே. அவனுக்கு சரியான தண்டனை உன் மனைவி அவனோடு இருப்பதுதான்.

    9. கன்னத்தில் குழியா... கல்யாணம் என்று சொல்லி அதற்குள், தலைகுப்புற விழுந்துவிடாதே.

    10. மனைவியைப் பிடிக்கவில்லையா... அவள் மாறமாட்டாள். மனைவியை மாற்றினாலும் வருபவளும் அதே திருகுவலிதான்.

    11. எல்லா ஆண்களும் குணத்தில் ஒன்றுதான், முகம் மட்டும்தான் வேறு. இல்லையேல் உன் புருஷனை எப்படிக் கண்டுபிடிப்பாய்?

    12. டி.வி., ப்ரிட்ஜ், குக்கர், வாஷிங்மெஷின், வாக்குவம் க்ளீனர் எல்லாம் வாங்கிவிட்டார் அப்பா... வரன் தேடுகிறார். இன்றுவரை மக்கர் செய்யாத மலிவான இயந்திரம் கணவன் மட்டும்தானே!

    13. கல்யாணம் செய்துகொள். குடும்பஸ்தன் ஆவாய். இல்லையேல் கட்டாயம் ஞானியாவாய்.

    மலரும் நினைவுகள்

    தம்பீ 1977-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தம்பி மாதவன் அகில உலகத் தொழிலாளர் நலக் கழகத்தின் சீரான முடிவுகளுக்கு சரியாக வழிவகுத்து விட்டு சென்னை திரும்பியிருந்த நாள். நடந்து ‘கொண்டிருந்த சட்டமன்றத் தொடருக்கு மதிப்பளித்து விமான நிலையத்திலிருந்தே விரைந்திருந்தார். மன்றம் அரக்கோணம் எஃகுத் தொழிற்சாலை கதவடைப்பு பற்றிய விவாதத்தில் மூழ்கியிருந்தது. என்றுமே விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்கும் இளவல், அன்று வேலைப்பளுவாலும் விமானப் பயணக் களைப்பாலும் அங்கத்தினர்களின் சொல்லம்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இடுக்கண் களைவதே தலைமையல்லவா? அண்ணா காட்டியவழி அதுதானே! எத்தனை முறை எங்களுக்காக எதிரிகள் வீசிய எஃகு ஈட்டிகளை அவருடைய இதயம் ஏந்தியிருக்கிறது. ஆகவே பதிலுரைக்க நான் எழுந்தேன். அப்போதுதான் மூத்த உறுப்பினர் ஜோதி வெங்கடாசலம் மூச்சிரைக்க பேசி முடித்திருந்தார். கேள்விக் கணைகளுக்கு ஈடான பதில்களைத் தந்துவிட்டு, முத்தாய்ப்பாக, அம்மையாரின் வினாக்களும், விவரங்களும், விவாதங்களும் எங்களை சிந்திக்க வைக்கின்றன. ஆனால் அவர் அடிக்கடி அரக்கோணத்தை அறுக்கோணும் அறுக்கோணும் என்று சித்தரித்தது சீர்திருத்தவாதிகளான எங்களை கலங்க வைத்தது" என்றேன். சட்டசபை சிரிப்பலைகளில் மூழ்கி எழுந்தது.

    ***

    மற்றொரு முறை... உலகத் தமிழ் மாநாடு பற்றிய சூடான விவாதம். கடல் கடந்து வந்து தமிழ் மணம் பரப்பிய கால்டுவெல்லுக்கும் இத்தாலிய வித்தகன் வீரமாமுனிவரின் தன்னேரிலாத் தமிழ்ப் பணிக்கும் தலை வணங்கும் வகையில் தலைநகரில் சிலை வைப்பதைப் பற்றிய விவாதம். அருமைச் சகோதரி அனந்தநாயகி அவர்கள் தமிழ்ப்பாட்டி ஔவையாருக்கு ‘சிலையெழுப்பும்போது தமிழ்த்தாத்தா சாமிநாதையருக்கு சிலையெழுப்பத் தமிழரசு தயங்குவதேன்? ஒரு வேளை, நீதி கிடைக்க, சுட்ட பழமோ சுடாத பழமோ ஏதாவதொன்று இந்த அரசுக்கு காணிக்கையாகத் தரவேண்டுமோ?’ என்ற இடக்காகக் கேட்டார். ஆட்சியில் வீற்றிருந்த கட்சியை அடிவயிற்றில் குத்திய கேள்வி அது. விஷயம் கை மீறுவதை உணர்ந்தேன். தம்பிகளுக்கு தென்றலாகவும் அம்மையாருக்கு புயலாகவும் பதில் சொல்ல வேண்டிய கட்டம். ஆனாலும் அண்ணா பூட்டிய கடமை

    Enjoying the preview?
    Page 1 of 1