Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavil
Vanavil
Vanavil
Ebook142 pages53 minutes

Vanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மக்கள் மதிப்பதெல்லாம் மகான்களையும் மகாத்மாக்களையும் மட்டும் தானா? வெற்றி பெற்றவர்களும், வீரநடை போடுபவர்களும், விஞ்ஞானிகளும் விளையாட்டு வீரர்களும் மட்டும்தான் சமூகத்தில் விழுதுகள்? கலைஞர்களும், கவிஞர்களும், கடவுளை விற்பவர்களும், கனவுகளை விற்பவர்களும் மட்டுமே காலத்தில் கனிகளா? வினாக்கள் விஸ்வரூபம் எடுக்கிறது? இதயம் முதல் ஆன்மீகம் வரை வானவில்லாய் வளர்ந்த வித்தகர்களின் நிஜக்கதைகளை வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580145208006
Vanavil

Read more from S. Sathyamoorthy

Related to Vanavil

Related ebooks

Reviews for Vanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavil - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    வானவில்

    Vanavil

    Author:

    எஸ். சத்தியமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சாமானியர்கள் சமூகத்தின் சக்கைகளா?

    2. லஞ்சங்களின் கதா புருஷன்!

    3. உல்லாசம் பொங்கும் தீபாவளி

    4. ராகினிகாந்த் யார்?

    5. வீரபாண்டிய கட்டபொம்மனும், விட்டில் பூச்சிகளும்

    6. இயந்திரப் பறவைகள்

    7. வெட்டரிவாளா? துப்பாக்கியா?

    8. சினிமா... சினிமா...

    9. முத்தம் உதட்டளவில்...

    10. ஒலிம்பிக் ஒரு சரித்திரம்

    11. கண்ணி வெடியே கடவுள்!

    12. சிவன் - மன்மதன் - தொப்பை செட்டியார்

    13. போஸ்னியாவின் ரோமியோ ஜுலியட்

    14. சக்கை போடு போடு ராஜா

    15. ஒரு விஞ்ஞான அதிசயம்

    16. அரை நிர்வாண ஐஸ்வர்யா ராய்!

    17. டிரேட் மார்க்

    18. ஆண் அழகிப் போட்டி!

    19. பிரதமர் பிராமணரா? யாதவரா?

    20. கட்டுப்பாட்டை மீறிய கவுடா...

    21. கதம்பச்சரம்

    22. சோனியா என் மனைவியல்ல!

    23. பிள்ளையார் வருடம்

    24. மவுனம் எனது மொழி

    25. பாபா ஆம்டே

    26. மிஸ் இந்தியா!

    27. மாடர்ன் என்றால் என்ன?

    28. டிசம்பர் சீஸன்

    29. மனைவியைக் காதலிப்பது எப்படி?

    30. காதலுக்கு ஒரு கீர்த்தனை

    31. நாளைய நிஜங்கள்

    32. நட்சத்திர மண்டலத்தில் நான்

    1. சாமானியர்கள் சமூகத்தின் சக்கைகளா?

    காஞ்சிப் பெரியவாள், காந்தியடிகள், அழகு ராணிகள், அறிவுடை நம்பிகள், மக்கள் மதிப்பதெல்லாம் மகான்களையும் மகாத்மாக்களையும் மட்டும் தானா? வெற்றி பெற்றவர்களும், வீரநடை போடுபவர்களும், விஞ்ஞானிகளும், விளையாட்டு வீரர்களும் மட்டும்தான் சமுதாயத்தின் விழுதுகளா? கலைஞர்களும், கவிஞர்களும், கடவுளை விற்பவர்களும், கனவுகளை விரிப்பவர்களும் மட்டுமே காலத்தின் கனிகளா? நடைபாதையில் கடை போடுபவனும், நடமாடவே தவிப்பவனும், சாமானியனும், சப்பாணியனும், சராசரி சிந்தனையாளனும் சமூகத்தின் சக்கைகளா? வினா விசுவரூபம் எடுத்தது. ஒரு புத்தகம் உதவிக்கு வந்தது.

    * கீதா தர்மராஜன்... சாதாரணக் குடும்பத் தலைவி. நேற்று வரை ஒரு தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி. ஐம்பது வயதைத் தொட்ட அதிசயப் பிறவி. தமாஷாக ‘தமாஷா’ என்ற பத்திரிகை தொடங்கினார். யாருக்கு? சேரிப்பிள்ளைகளுக்கு! ஜாதிப் பிரச்சினை புகட்ட அல்ல; சமுதாயச் சிந்தனை வளர்க்க!

    1989-ல் டெல்லி குடிசை மாற்று வாரியம் அவருக்கு தமாஷாக ஒரு வீடு ஒதுக்கியது. ‘கதா’ (Katha) என்ற வானவில் கனவு பிறந்தது. ஏழைப்பிள்ளைகள் வேலையில்லாமல் படிக்க வர மாட்டார்கள் அல்லவா? ஆகவே, கேக் செய்யவும், கணிப்பொறி பயிலவும் வகை செய்யப்பட்டது. சேரிப்பிள்ளைகள், கதா மையத்தில் செய்யும் கேக்குகளை, ரொட்டிகளை டெல்லி தாஜ் ஓட்டல் நிறுவனம் வாங்கி விற்கிறது. அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்துக்கு வாங்கப்பட்டது. இன்று கதாவில் 1100 குழந்தைகள் பயிலுகிறார்கள். 5000 குழந்தைகள் பயிற்சி பெற்ற சிறு தொழிலதிபர்கள்!

    * கோட்டயம் மாத்யூ டெல்லியில் ஒரு குமாஸ்தா. கோட்டயம் வெண்மணி கிராமத்தில் தனியார் தர்மசாலைப் பள்ளியில் படித்தவர். சமுதாயத்தால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டவர். அவர் டெல்லிக்கு வந்தவுடன் சமுதாயத்தைத் தத்து எடுத்துக் கொண்டார். மாத்யூவும், அவரது ஆறு நண்பர்களும் 17500 ரூபாய் மூலதனத்துடன் அறிவொளி பரப்ப உறுதி பூண்டனர். தீபாலயா பிறந்தது. இருபது வருடத்தில் ஆலமரமாய்த் தழைத்தது. 20,000 குழந்தைகள் படிக்கிறார்கள். இப்போது அவர்களுடைய ஆண்டு பட்ஜெட் 3 கோடி ரூபாய். கோட்டயம் மாத்யூ வேதம் ஓதவில்லை; வேலை வாய்ப்புகளைப் பெருக்குகிறார். பழைய சரித்திரம் படிக்கவில்லை; புதிய வேதம் ஓதுகிறார்.

    * அமோத் கான்த் ஐ.பி.எஸ். 35 வயது. துடிப்பு. (அதிரடி ராஜேந்திரன் அல்ல.) தெருவோரக் குழந்தைகள் இவரது கவனம். ‘பிராயஸ்’ (PRAYAS) பிறந்தது. 2500 பிள்ளைகள் பிராயஸில் படிக்கிறார்கள். 27 பள்ளிகள், 15 வேலைவாய்ப்பு மையங்கள், 14 நூலகங்கள் என்று பிராயஸ் வளர்ந்துள்ளது. 150 உதவியாளர்களுடன் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் பிராயஸ் வீறு நடை போடுகிறது.

    * அருண்... 43 வயதான கான்வென்ட் வசந்த் வாலி (VASANT VALLEY) பள்ளி தலைமையாசிரியர். பள்ளி வேலை முடிந்ததும் திஹார் ஜெயிலை நோக்கி துள்ளி ஓடுவார். வாரத்தில் ஐந்து நாட்கள் திஹார் பள்ளி. 1600 குழந்தைக் கைதிகள் இவர் பொறுப்பு. அவர்களுக்காக ஒரு நூலகமும் நடத்துகிறார். கான்வென்ட் குழந்தைகளும், கைதிக் குழந்தைகளும் இவருக்கு இரு கண்கள்போல. அருணின் வேள்வி பதினோரு வருடங்களாகத் தொடர்கிறது.

    * 2025 வருடத்தில் இந்தியாவில் 17 கோடி இளைஞர்கள். இல்லை இல்லை... குடு குடு கிழவர்கள் இருப்பார்கள். இதில் 90 சதவிகிதத்தினருக்கு ஓய்வூதியமோ, வைப்பு நிதியோ இருக்காது. ஆனால் அவர்களுக்கு ‘ஹெல்ப் ஏஜ்’ இருக்கும். 800 வயோதிகர் மையங்கள் இருக்கும். 1978-ல் ஆரம்பிக்கப்பட்ட ஹெல்ப் ஏஜ் இன்று 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஓடுகிறது. 57,000 காடராக்ட் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. வேண்டாத கிழங்கள், வீடில்லாத கிழவிகள், வேலையில்லாத கிழவர்கள் அனைவருக்கும் ஹெல்ப் ஏஜ் அடைக்கலம் தருகிறது. ஆனால் அன்பு தரவேண்டிய பிள்ளைகளும், பெண்களும், உறவினர்களும் கேட்டுக்கு வெளியே. மனிதாபிமானத்திற்கு அப்பால்.

    * அஞ்சனா ராஜகோபால் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் ஸ்டெனோ. 46 வயது நங்கை. அலுவலகம் போகும்போது ஏழு வயதுப் பையன் ஒருவனை டீக்கடை முதலாளி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார். நெருங்கிப் பார்த்த போது, பையன் ஊமை என்று தெரிந்தது. அழுத பையனை அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அன்று அஞ்சனா ஆபீசுக்கு லீவு. மறுநாள், தினசரியில் பையனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டார். உறவு சொல்லி யாரும் வரவில்லை. பையனுக்கு ரஜத் என்று பெயர் வைத்தார். அவனையே முதலீடாகக் கருதி, ‘சாய் கிருபா’ என்ற மையம் தொடங்கினார். வருடம் 1990. இன்று சாய் கிருபாவில் 25 பிள்ளைகள். ஒளிமயமான எதிர்காலம் இல்லாவிட்டாலும், கிலியில்லாத எதிர்காலம் கேட்கிறார்கள். ஸ்டெனோ டைபிஸ்ட் கைகள் படபடக்கின்றன.

    * ‘ஸ்னோவொயிட்டும் ஏழு குள்ளர்களும்’ கதை என் பிள்ளைக்குப் பிடித்த கதை. அப்படி ஏழு குள்ளர்கள் தலைக்கு ஏழு ரூபாய் முதலீடு செய்து CRY குழுமம் தொடங்கினார்கள். அப்போது ரிப்பன் கபூருக்கு வயது 25. ரிப்பன் கபூர்: திறப்பு விழா நாயகன் அல்ல. அதற்குத்தான் மந்திரிகள் இருக்கிறார்களே. அவர் ‘அழுகை நாயகன்’ CRY ஆரம்பித்தார். இன்று CRY, ஏழு லட்சம் குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகிறது. CRY வாழ்த்து அட்டைகள் உலகப் பிரசித்தம். அதை உருவாக்க, 144 ஓவியர்கள் 180 ஓவியங்களைத் தானமாகத் தந்தார்கள். ஏழைக் குழந்தைகளைக் கேலிச் சித்திரமாக்கவில்லை. கேள்விச் சித்திரமாக்கவில்லை. கேவல் சித்திரமாக்கவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் வண்ணத்துப் பாட்டு சேர்த்திருக்கிறார்கள். ரிப்பன் கபூரோடு மூன்று முடிச்சு போட்டிருக்கிறார்கள்.

    * மீரா மகாதேவன்: 1969... காந்தி நூற்றாண்டு விழா கமிட்டியில் மீரா மகாதேவன் உறுப்பினர். அவருடைய கண்களில் கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள் தென்பட்டன. மாளாத வேலையிலிருந்து மீளாத கூலிகள் குழந்தைகளை எப்படிக் கவனிப்பார்கள்? மீரா, ‘மொபைல் கிரச்’ தொடங்கினார். மொபைல் கிரச் கட்டடம் கட்டப்படும் இடங்களுக்கு குழந்தைகளைத் தேடி ஓடியது. இன்று டெல்லியில் 23 கிரச்கள். பம்பாயில்

    Enjoying the preview?
    Page 1 of 1