Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhal Bullet
Mudhal Bullet
Mudhal Bullet
Ebook253 pages1 hour

Mudhal Bullet

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மென்மையான காதல் கதை. காதலர்கள் மனமொத்து கல்யாணம் செய்துகொண்டு வீட்டாரால் ஒதுக்கப்பட்டு தனித்தீவாய் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் வாழ்வில் லோக்கல் தாதாவால் ஏற்படும் சூறாவளி... அதனையொட்டி விறுவிறுப்பாக, சுவாரசியமாக செல்லும் கதை...

தாதாவின் வாழ்க்கையின் பின்னோட்டம் (flashback) கதைநாயகியின் வாழ்க்கைப் பின்னோட்டம் (flashback) என காட்சிகள் மாறிமாறி புதிய உத்தியில் சொல்லப்பட்ட சமூக நவீனம். மென்மையான காதல் கதையில் வழக்கமான தாத்தாக்களின் பிரவேசம் திடீர் திடீரென யாரும் எதிர்பாக்காத திருப்பார்கள் என புதுமையான முறையில் எழுதப்பட்ட அற்புதமான நாவல் முதல் புல்லட் வித்தியாசமாக சிந்தித்து நிறைவான புனை கதையை வழங்கியுள்ள எழுத்தாளர் தெக்கூர் அனிதா பாராட்டுக்குரியவர்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580168810133
Mudhal Bullet

Related to Mudhal Bullet

Related ebooks

Related categories

Reviews for Mudhal Bullet

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhal Bullet - Thekkur Anitha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முதல் புல்லட்

    Mudhal Bullet

    Author:

    தெக்கூர் அனிதா

    Thekkur Anitha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thekkur-anitha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 1

    என்னுரை

    கதை பிறந்த கதை!

    தினமலர் வாரமலரில் நான் முதன்முதலில் எழுதிய தொடர்கதைதான் ‘முதல் புல்லட்’. அப்போது பொறுப்பாசிரியராக இருந்த கவிஞர் குமரகுருபரன் அவர்களிடம் நான்கு ‘நாட்’கள் சொல்லி, ஓகேயான தொடர் இது. கடைசி அத்தியாயத்தில் இருந்து துவங்கி, பிறகு வரும் அத்தியாயங்களை வழக்கப்படி எழுதலாம் என்று பேசி, தொடரை எழுத ஆரம்பித்தேன்.

    ஆனால், தொடர் முழுவதுமே ரிவர்ஸ் பாணியில்( ஃப்ளாஷ் பேக் அல்ல!) எழுதினால், புதுமையாக இருக்குமே என்று தோன்ற, அதன்படி க்ளைமேக்ஸில் தொடங்கி, தொடரை முன்னோக்கி எடுத்துச் சென்றேன். அதாவது முடிவில் தொடங்கி, ஆரம்பத்தை நோக்கிச் செல்வது. இது எழுதும்போது, மிகவும் சிரமமான ஒன்றாகத்தான் இருந்தது.

    முக்கிய கதையோட்டம் வேறுவித நடையிலும், ஃப்ளாஷ்பேக் கதையோட்டம் வேறு ஒரு பாணியிலும் எழுதி, தொடரை நிறைவு செய்தேன். தொடர் பெரு வெற்றி பெற்றது. வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

    இதற்கேற்றாற்போல, ஓவிய நண்பர் ஸ்யாம் அவர்கள், தனது ஓவியங்களில் புதுமை புகுத்தினார். ஓவியங்களை வண்ணங்களில் வரைந்து, கதை நகர நகர, கறுப்பு வெள்ளைக்கு மாறி, அவரும் தன் பங்குக்கு பிரத்யேகத் திறமை காட்டினார்.

    இதுபோல, ரிவர்ஸ் பாணியில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான். ஏதோ ஒரு மொழியில் இதைப்போல, ஒரு திரைப்படம் வந்திருப்பதாக பின்னர் அறிந்தேன்.

    இந்தத் தொடருக்காக ஆறுமாதம் தமிழகத்திலுள்ள பிரபலமான ரவுடிகளின் வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆய்ந்து, உண்மைக்குமிக அருகில் இருந்து, கொஞ்சமே கொஞ்சம் கற்பனை கலந்து இத்தொடரை எழுதி இருக்கிறேன்.

    தமிழ்கூறும் நல்லுலகம் இந்நாவலுக்கு நல்ல வரவேற்பை நல்கும் என எதிர்பார்க்கிறேன். நன்றி!

    என்றென்றும் அன்புடன்,

    தெக்கூர் அனிதா

    26

    அந்த அதிகாலையில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் எழும்பூர் ஸ்டேஷனில் ஸ்லோமோஷனில் வந்து நின்றது. முகங்களில் தூக்கமும் களைப்பும் அணிந்து ஆயிரம் ஜனங்கள் இறங்கினர்.

    இளம் பெண்கள் மற்றும் ஆண்கள், பேரிளம் பெண்கள் என்று அவ்ளோ பேரையும் விட்டுவிடலாம். அவர்களுக்கு இதில் துளியும் சம்பந்தமில்லை.

    எஸ்-7 பெட்டியைக் கவனியுங்கள், என்ன பார்க்கிறீர்கள்? பலர் இறங்குவதை.

    அந்த இரண்டு பேரைப் பாருங்கள். பார்த்தீர்கள்தானே? எந்த இரண்டு பேரை என்கிறீர்களா? ரொம்பவும் சுலபம்.

    ஒருவன் மொட்டை போட்டிருக்கிறான். அவன் பக்கத்தில் குறுந்தாடி வைத்திருந்த மற்றவன். என்ன வயசு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? முப்பத்தஞ்சு? ஆமாம். அதேதான், நல்ல உயரம், மாநிறமாய் இருந்தாலும் திருத்தமாய் இருக்கிறார்கள்தானே?

    கையில் ஆளுக்கொரு சூட்கேஸ். பாயத்தயாரான போர்ட்டர்களை விலக்கிவிட்டு கிளம்பத் தயாராகின்றனர்.

    நாம் அவர்களைப் பின்தொடரலாமா? உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே?

    வெல்.

    இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. கவனித்தீர்களா? செலுத்தப்பட்டவர்களைப் போல ஸ்டேஷனைவிட்டு வெளியேறுகின்றனர்.

    இன்னும் விடியவில்லை. அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்துச் சென்னை மிகவும் குளிராக இருக்கிறது. ராத்திரி பெய்த மழையின் ஈரத்தில், சோடியம் வேப்பர்கள் சாலையை தங்கச்சரிகையாக்கிக் கொண்டிருந்தது.

    பஸ் ஸ்டாப்பில் சற்று நேரமே காத்திருக்கிறார்கள். ஆச்சரியம்! ஐந்தே நிமிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய மாநகரப் பேருந்து.

    ‘ரெண்டு பெல்ஸ் ரோடு!’ என்று இரண்டு டிக்கெட் எடுத்தான் மொட்டை, பெயர், துரைக்கண்ணு, சுருக் துரை.

    பேருந்தில் மிகச் சொற்பமான பயணிகளே இருந்தனர். டிராபிக் இல்லை. மற்றொரு ஐந்து நிமிடம். இரண்டு பேரும் பெல்ஸ் ரோட்டில் இறங்கிக் கொண்டார்கள்.

    ஸ்டாப்பிற்கு சற்று முன்னதாக இருந்தது பிரின்ஸ் லாட்ஜ். சுமாரான லாட்ஜ். அதன் ரிசப்ஷனிஸ்ட் கொட்டாவியுடன் லெட்ஜரைத் திறந்து,

    ‘என்ன பேரு சொன்னீங்க?’

    ‘இன்னும் சொல்லவே இல்லை... ஜேம்ஸ்! திருச்சியிலேர்ந்து வர்றோம். பிசினஸ் விஷயமா வந்திருக்கோம்’ என்றான் குறுந்தாடி வைத்தவன்.

    ‘எத்தனை நாள் தங்குவீங்க?’

    ‘அஞ்சு... இல்லே ஆறு!’

    ‘டபுள்காட். முன்னூறு ரூவா! அட்வான்ஸ் ரெண்டாயிரம்...’

    துரை பணம்கட்டி ரசீது வாங்கிக்கொண்டான். ரூம்பாய் சூட்கேசுகளைக் கவர்ந்து செல்ல பின்தொடர்ந்தனர்.

    கீழ்த்தளத்திலேயே கடைசியாக இருந்தது அந்த 121. பாத்ரூம், கேபிள் டி.வி. என்று சில சவுகர்யங்கள். பெட்ஷீட்களை மாற்றினான் ரூம்பாய்.

    ‘ஏதாவது வேணுமா சார்?’

    ‘ஆமாம்ப்பா! இவனுக்கு ஆயிரம் ரூபா கடன் வேணுமாம்!’

    ‘சார்?’ என்றான் பையன் புரியாமல்.

    ‘நீ போப்பா! தேவைப்பட்டா பெல் அடிக்கிறோம்!’

    அவன் வெளியேறினான்.

    இருவரும் பேன்ட் சட்டைக்கு விடைகொடுத்து லுங்கிக்கு மாறினர்.

    செல்போன் சிணுங்கல். துரை எடுத்து, டிஸ்ப்ளேயில் நம்பர் பார்த்து, ‘குட்மார்னிங் சார்!’ என்றான். சல்யூட் அடிக்காத குறையாக.

    ‘குட்மார்னிங்! ரெண்டு பேரும் லாட்ஜுக்கு போயிட்டீங்களா?’

    ‘யெஸ் சார்!’

    ‘உங்க ரெண்டு பேரையும் மெரினா ஸ்டேஷன்ல எஸ்.ஐ.யா போஸ்ட் போட்டிருக்கேன். ஆனா இந்த விஷயம் கமிஷனரையும், என்னையும்தவிர வேற யாருக்கும் தெரியாது. நம்ப டிபார்ட்மெண்ட்ல அவனுக்கு வேண்டிய அதிகாரிங்க நெறைய பேர் இருக்காங்க. இந்த ‘ஸீ வாட்டர் ஆபரேஷன்’ முடியற வரைக்கும் யாருக்குமே நீங்க யாருன்னு காட்டிக்கக் கூடாது

    எனக்கு ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட பத்து போட்டோஸ் குடுத்தனுப்பறேன். அதுல அவனும், அவன் கூட்டாளிகளும் இருப்பாங்க. நல்லா பார்த்து வச்சுக்குங்க. நாளைக்குக் காலையில அவங்க பீச்சில வாக்கிங் போறப்ப நீங்களும் ‘வாக்’ போங்க. வாட்ச் பண்ணுங்க. சரியான சந்தர்ப்பம் அமைஞ்சதும் துப்பாக்கியை உபயோகப்படுத்துங்க. வாழ்த்துகள்!’

    தொடர்பு அறுந்தது.

    ***

    அடுத்த நாள், அதிகாலை.

    இரண்டு பேரும் சாதாரண சட்டை அணிந்து லுங்கி கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். பாரதி சாலையில் திரும்பி, காமராஜர் சாலையை அடைந்தனர்.

    ராத்திரி நேரத்து காமராஜர் சாலை மிகஅருமையாக இருந்தது. இரண்டு பக்கமும் வரிசையாக சோடியம் விளக்குகள் அணிவகுக்க... மிக ரம்யமாக இருந்தது. பிளாட்பாரத்தில் தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் பலர் ஓடிக்கொண்டிருக்க, இவர்கள் காந்தி சிலை, கலங்கரை விளக்கமெல்லாம் கடந்து கடற்கரையோரமாக நடக்கத் துவங்கினர்.

    அடிவானில் ஆரஞ்சும், சிவப்பும் குழைத்த சூரியன் இன்னும் முளைக்கவில்லை. விடியலுக்கான ஆரம்ப அறிகுறிகள் புலப்பட்டன.

    அலைகளின் தொடர்ந்த ஆரவாரம்... தூரத்தில் வெளிச்சப் புள்ளிகளோடு சில கப்பல்கள் காத்திருந்தன...

    வீசிய காற்றில் அபரிமிதமான மீன் வாடை...

    அப்போதுதான் அவர்களைப் பார்த்தனர்.

    புகைப்படங்களில் பார்த்த அதே நபர்கள்... நடுவில் அவன். சென்னை நகரத்தையே குலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் பிரபல தாத... பலரை நடுரோட்டில் ஓடஓட வெட்டிக் கொன்றவன்... முகிலன்!

    கழுத்தில் பிரிபிரியாய் தங்கச் செயின்கள் அணிந்திருந்தான். கையில் கனத்த பிரேஸ்லெட். காதுகளில் வளையம் போல ஏதோ ஒன்று. பெர்முடாவும் பனியனும் அணிந்து மிகவும் பருமனாக இருந்தான். பருத்த அவன் உடம்பும், தடித்த அவன் உதடுகளும் பார்ப்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும்.

    இவர்கள் ரொம்ப சாதாரணமாக அவர்களைப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றனர்.

    அவர்களும் இவர்களைப் பார்த்தனர். வாக்கிங் வந்தவர்களாய் இருக்கக்கூடும் என்றுதான் அவர்கள் நினைத்தனர். உயிரைக் காவு வாங்க வந்தவர்களாய் நினைக்கவில்லை.

    நினைத்திருந்தால்... அங்கேயே வெட்டி சமாதி கட்டியிருப்பார்கள். ஆனால், இப்போது எல்லாரும் அருகம்புல் சாறு குடித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

    ‘பாட்ஷா, இன்னிக்கு ராத்திரி கொழும்பு பார்ட்டி நடுக்கடல்லே காத்திருப்பாங்க! சரக்கு கொண்டு போகணும்!’

    ‘போட் ரெடியா இருக்கு, தலைவா! பன்னெண்டு மணிக்குக் கெளம்பிடலாம்!’

    ‘ஜாக்கிரதை எல்லாரும் மறக்காம ‘சாமான்’ எடுத்துட்டு வாங்கடா. போலீஸ் மோப்பம் புடிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்... எச்சரிக்கையா இருக்கச் சொல்லி ‘நம்மாளுக’ தகவல் அனுப்பியிருக்காங்க!’

    ‘போலீஸ்ல உங்களுக்குத் தெரியாத ஆபீசருங்களா தலைவா?’

    ‘அதில்லேடா, இப்ப வந்திருக்கிற கமிஷனருக்கு என்னை சுத்தமா புடிக்கலைடா. அப்புறம்... ஏசி ஒருத்தன் என்னைப் போட்டுத் தள்ளணும்னு துப்பாக்கியும் கையுமா அலையுறான்டா... வடக்கேயிருந்து இங்க வந்திருக்கிற டிசி ஒருத்தன்... அதான்ட... எப்பவும் பான்பராக் போட்டு குதப்பிக்கிட்டே இருப்பானே... அவனுக்கு எம் பேரைச் சொன்னாலே வேப்பங்காய கடிச்சமாதிரி மூஞ்சிய சுறுக்குறானாம்...’

    ‘அவ்ளோ பேரையும் போட்ரலாமா தலைவா?’

    ‘நீ வேற! சிட்டில இருக்கற மொத்த போலீசும் துப்பாக்கிய தூக்கிருவானுங்க... இந்த டாபிக்க விடுறா. எனக்கே புடிக்கல... எல்லாருக்கும் நம்ப மேல பயம் இருக்கறவரைக்கும் தான்டா நாம ரவுடி. நாமளே பயந்துக்கிட்டிருந்தா... நடக்கறது நடக்கட்டும்... கெளம்புங்களடா... போகலாம்!’

    ***

    நான்கு நாட்கள் சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை, ஐந்தாம் நாள்.

    பெரிய சண்டியர்போல முகிலன் முன்னே வர, அவன் கூட்டாளிகள் கணிசமான இடைவெளிவிட்டு பின்னே வர...

    அந்த அஜாக்கிரதையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான் துரை, கண் சிமிட்டும் விநாடிதான். லுங்கியில் செருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, க்ளோஸ் ரேஞ்சில் சுட்டான்.

    இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. என்ன ஏது என்று நினைப்பதற்குள் தோட்டா முகிலனின் நெஞ்சைத் துளைத்தது.

    சென்னையையே கிடுகிடுக்க வைத்த அந்த ரவுடி, அலறிக்கொண்டே மண்ணில் சரிந்தான்.

    அவன் கூட்டாளிகள் அதிர்ந்தனர். திகைத்தனர்.

    ‘ஏய், ஏய்!’

    அவர்கள் சுதாரித்துக்கொண்டு ஓடிவர, துரையும் ஜேம்சும் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டமெடுத்தனர்.

    கூட்டாளிகளில் சிலர் முகிலனை நெருங்கியதும் நின்றுவிட, சிலர் மட்டும் துரத்தினர்.

    இந்த சந்தர்ப்பத்திற்காகவே ஜீப் காத்திருந்தது. இருவரும் ஜீப்பில் தொற்றினார்கள்.

    ஜீப் பறந்தது.

    சுட்டது போலீஸ் ஆசாமிகள் என்பதைக் கண்டுபிடிக்க, முகிலனின் கூட்டாளிகளுக்கு ஐந்து மணி நேரம் பிடித்தது.

    கடற்கரையில் சடலமானான் முகிலன்.

    25

    மீடியாக்காரர்கள் இரண்டு இடங்களிலும் ‘சுடச்சுட’ செய்தி தருவதற்கு அலைந்து கொண்டிருந்தனர்.

    அதென்ன இரண்டு?

    இராயப்பேட்டை ஆஸ்பத்திரியும், முகிலனின் வீடும்தான்.

    இராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் என்னவாம்?

    முகிலனிடம் விசாரணைக்காகத்தான் துரையும் ஜேம்சும் போனார்களாம். ‘என்னிடமே விசாரணையா?’ எகிறிக் குதித்த முகிலன், இருவரையும் அரிவாளால் வெட்டிக்கொல்ல முயற்சித்தானாம். தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே, முகிலனை துரை சுட வேண்டியதாயிற்றாம்.

    தலை, கை, கால், உடம்பு என்று பற்பல இடங்களிலும் பெரிசாய் பாண்டேஜ் கட்டுபோட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த துரையும் ஜேம்சும் மீடியாவிடம் இவ்வாறுதான் கதை சொன்னார்கள்.

    கமிஷனர் தனது பரிவாரங்களோடும் பூங்கொத்தோடும் வந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, மீடியா கண்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் போனார்.

    ஆக, ஒரு ரவுடியின் கதையை ஒரே ஒரு புல்லட் செலவழித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது போலீஸ்.

    ***

    முகிலனின் வீடு.

    இரண்டு மனைவிகளும், போலீஸ் பொட்டலம் கட்டிக்கொடுத்த பிணத்தின்மேல் விழுந்து கண்ணீர் மல்கினார்கள்.

    ‘எங்கள இப்படி அனாதையா தவிக்கவிட்டுப் போயிட்டியே? நீ திருந்தி வாழுறப்ப இப்படி பண்ணிட்டாங்களே?’

    திருந்தியா வாழ்ந்தான் அவன்?

    சில நாட்கள் முன் செல்வோமா?

    ***

    பதினைந்து நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்தது அந்தப் படகு. அதைப் படகு என்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. ஏறக்குறைய ஸ்ரீமர் படகு போல்தான் இருந்தது.

    முகிலனைச் சுற்றிலும் அவன் சகாக்கள். அவன் சொல்லப்போகும் விஷயத்திற்காக எல்லாரும் ஆவலாகக் காத்திருந்தனர்.

    நீண்ட மவுனத்தை கலைத்தான் முகிலன்.

    இன்னிக்கு கார்த்தால இன்ஸ்பெக்டர் சந்திரன் எங்கிட்ட பேசினாரு. நேரா வரலை, செல்போன்லதான் பேசினாரு. கமிஷனர் ஆபிஸ்ல என்கவுண்டர் லிஸ்ட் தயார் பண்ணியிருக்காங்களாம். முக்கியமான ரவுடிகளை எல்லாம் சுட்டுக் கொல்லணுங்கிறது மேலிடத்து உத்தரவாம். அதுப்படி அந்த லிஸ்ட் தயாராகி இருக்கா...

    முகிலன் இடைவெளிவிட்டான். கடலை வெறித்தான். தூரத்தில் சில மீன்பிடி படகுகள். இன்னும் தூரத்தில் ஒன்றிரண்டு கப்பல்கள்.

    அந்த சூழலே மிக அமைதியாக இருந்தது. நாலா பக்கத்திலும் நீர்தான். அலைகளின் ஆர்ப்பரிப்பில்லாமல் மிக அமைதியாக இருந்தது கடல். அடிவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். தண்ணீரில் அதன் பிரத்யேகப் பிரதிபலிப்பு.

    அந்த லிஸ்ட்லே என்னோட பேருதான் முதலாவதா இருக்காம்!

    தல? குரல்கள் அலறின.

    அதனால கொஞ்ச நாளைக்கு ஆள் கடத்தல். கட்டப்பஞ்சாயத்து, கூலிக்குக் கொலை, மாமூல் எல்லாத்தையும் நிறுத்திட்டு அமைதியா இருங்கன்னு சந்திரன் சொன்னாரு.

    சகாக்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு சகா முகிலனைத் தைரியமாக ஏறிட்டான்.

    அதுக்காக...? இதெல்லாம் பண்ணாமே நாங்க பூவாவுக்கு என்ன பண்றது தல? தெனமும் தண்ணி இல்லாம, பொம்பளை இல்லாம எங்க எல்லாருக்கும் தூக்கமே வராதே...! அதுக்கெல்லாம் பணம் வேணுமே?

    இருடா... என்னை முழுசாப் பேசவுடு. அதனாலதான் நா ரொம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துருக்கேன்!

    என்ன தல,

    "நம்ம தோஸ்த் ஒருத்தர் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்காரு... அதப் பண்ணா நமக்கு வேண்டிய அளவுக்கு பணம் கிடைக்கும்... ஒப்பியம், பிரவுன்சுகர் கிலோ கணக்குல

    Enjoying the preview?
    Page 1 of 1