Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ange Naan Nalama?
Ange Naan Nalama?
Ange Naan Nalama?
Ebook106 pages40 minutes

Ange Naan Nalama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் எழுதிய நாவல்களில் நூறு சதவிகித முழுமையுள்ள படைப்பு இது என்று கூறுவேன். ஒரே மூச்சில் இதைப் படிப்பவர்கள் கொஞ்சம் இளகிய உள்ளம் படைத்தவர்களாக இருந்தால் - நிச்சயம் கதையின் முடிவில் கண்ணீர் விடுவார்கள்.
தெளிந்த நீரோடை போல எழுத்தோட்டம் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதில் அது இருக்கும். சினிமா துறை பற்றி கதையில் சொல்லப்படுவதால் அந்தத் துறை சார்ந்த 'ஜிகினா' வேலைகளை இதில் கொஞ்சம் சேர்த்தேன்.
எனக்கு எப்போதுமே விறுவிறுப்பு மிக முக்கியம். கூடவே சிந்திக்க வைப்பதும் மிகப் பிடித்த விஷயம். இக்கதைக்குள் சித்தர் பாத்திரம் ஒன்று, அந்த சிந்தனையை மிகவே தூண்டியுள்ளது.
இது ஒரு குடும்பக் காவியம் - காதல் கதை - கொஞ்சம் மர்மக் கதையும்கூட...!
இந்த மூன்றின் கலவையாக இதை எழுதி முடித்த நிலையில், தலைப்புக்காக கொஞ்சம் தவித்தேன். இறுதியாக 'அங்கே நான் நலமா?' என்று கொஞ்சம் கவிதை - கொஞ்சம் விடுகதையாக இந்த தலைப்பை தேர்வு செய்தேன். உங்களுக்கும் நிச்சயம் பிடித்திருக்கும். கதைக்குள் நுழையுங்கள்... என் 'ஹீரோ' உங்களை உருகி அழ வைக்க தயாராக இருக்கிறான்!
நேசமுடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580100705930
Ange Naan Nalama?

Read more from Indira Soundarajan

Related to Ange Naan Nalama?

Related ebooks

Reviews for Ange Naan Nalama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ange Naan Nalama? - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    அங்கே நான் நலமா?

    Ange Naan Nalama?

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    என்னுரை

    நான் எழுதிய நாவல்களில் நூறு சதவிகித முழுமையுள்ள படைப்பு இது என்று கூறுவேன். ஒரே மூச்சில் இதைப் படிப்பவர்கள் கொஞ்சம் இளகிய உள்ளம் படைத்தவர்களாக இருந்தால் - நிச்சயம் கதையின் முடிவில் கண்ணீர் விடுவார்கள்.

    தெளிந்த நீரோடை போல எழுத்தோட்டம் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதில் அது இருக்கும். சினிமா துறை பற்றி கதையில் சொல்லப்படுவதால் அந்தத் துறை சார்ந்த 'ஜிகினா' வேலைகளை இதில் கொஞ்சம் சேர்த்தேன்.

    எனக்கு எப்போதுமே விறுவிறுப்பு மிக முக்கியம். கூடவே சிந்திக்க வைப்பதும் மிகப் பிடித்த விஷயம். இக்கதைக்குள் சித்தர் பாத்திரம் ஒன்று, அந்த சிந்தனையை மிகவே தூண்டியுள்ளது.

    இது ஒரு குடும்பக் காவியம் - காதல் கதை - கொஞ்சம் மர்மக் கதையும்கூட...!

    இந்த மூன்றின் கலவையாக இதை எழுதி முடித்த நிலையில், தலைப்புக்காக கொஞ்சம் தவித்தேன். இறுதியாக 'அங்கே நான் நலமா?' என்று கொஞ்சம் கவிதை - கொஞ்சம் விடுகதையாக இந்த தலைப்பை தேர்வு செய்தேன். உங்களுக்கும் நிச்சயம் பிடித்திருக்கும். கதைக்குள் நுழையுங்கள்... என் 'ஹீரோ' உங்களை உருகி அழ வைக்க தயாராக இருக்கிறான்!

    நேசமுடன்,

    இந்திரா சௌந்தர்ராஜன்.

    1

    அந்த மனிதரைப் பார்த்தபோது ஒரு பிச்சைக்காரன் மாதிரிதான் தெரிந்தது. ஆனால், அதற்கேற்றபடி நாற்றமில்லை. மாறாக உடம்பில் இருந்து சந்தனமும், பன்னீரும் கலந்த மாதிரி ஒரு வாசம் வீசியது.

    நந்தகுமாரை அந்த விஷயம் ஆச்சரியப்படுத்தியது. அவன் பார்த்துக்கொண்டே இருக்கும்போது பெரியவர் ஒருவர் காரில் வந்து இறங்கி ஓடிச்சென்று அவரது காலில் விழுந்தார்.

    அவரோ அலட்சியமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

    நீ உருப்பட மாட்டேடா... கொஞ்சம்கூட உருப்படமாட்டே... என்று திட்டவும் செய்தார். அதைக்கேட்ட அந்தப் பெரியவர் முகத்தில் ஒரே சந்தோஷம்.

    அப்படி அவர் திட்டினாலும் அது ஆசீர்வாதமாம்!

    மிக உற்சாகமான மனநிலையில் இருந்தான் நந்தகுமார். இன்றைக்கு அவனுக்கு 'ஸ்கிரீன் டெஸ்ட்', மணிரத்னம் போல ஓர் இயக்குநர் அவனை 'ஹீரோ'வாகப் போட்டு ஒரு படம் எடுக்கப்போகிறார். அவர் கதாநாயகன் தேர்வுக்காக எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டார். ஒருவர் கூடத் தேறவில்லை. இறுதியாக தேறியவன்தான் நந்து என்கிற நந்தகுமார்.

    இவனுக்கு பெரிய விஷயம் உடம்புதான். ஒரு நாளைக்கு மூணு வேளை குளியல், அப்புறம் வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல். இது போதாது என்று தினசரி ‘ஜாக்கிங்', ‘ஜிம்'மில் உடற்பயிற்சி என்று மாய்ந்து போகிறவன்.

    ஒரு சாதாரண ஜலதோஷத்துக்குக் கூட உடனே ‘ஸ்பெஷலிஸ்ட்'டிடம் போய்விடுவான். அப்படியொரு உடம்புப் பைத்தியம். கல்லூரி நாட்களிலேயே அவனது உடம்புக் காதல் மிகவும் பேமஸ். சாதாரண வெயில் கூட மேலே படக்கூடாது. சில வாத்தியராம்மாக்கள் போல குடை பிடித்துக்கொண்டுதான் வெளியே போவான். மழைக்கும் இது பொருந்தும். சாதாரணத் தூறலில் நனைவது கூட காய்ச்சலில் கொண்டு விட்டுவிடும் என்று கற்பனை செய்து கொள்கிறவன்.

    மொத்தத்தில் உடம்புதான் அவன் உலகம்.

    அதற்குப் பரிசு போலத்தான் 'ஹீரோ' வாய்ப்பு வந்துள்ளது. அவனது உடம்பையும், கட்டுறுதியையும் பார்த்த மாத்திரத்தில் நீதான் ஹீரோ என்று கூறிவிட்டார் டைரக்டர். சொன்ன கையோடு அஞ்சு லட்சம் சம்பளம் பேசி ஐம்பதாயிரம் முன்பணமும் கொடுத்துவிட்டார்.

    நந்துவுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதல் காரியமாக நங்கநல்லூரில் இருக்கும் ஆஞ்சநேயரைப் போய் கும்பிட்டுவிட்டு வந்தான். அடுத்தது மாங்காடு காமாட்சி, பிறகு மயிலாப்பூர் கபாலீசுவரர் என்று சந்நிதி சந்நிதியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் 'ஹீரோ'வாகிவிட்டது தெரிந்து ஓடி வந்தாள் நளினி. முதல் காரியமாக எல்லா சாமி பிரசாத விபூதிகளையும் நெற்றியில் இட்டு முடித்தாள். கிட்டத்தட்ட அதிலேயே பாதி பண்டாரமாகிவிட்டான்.

    அப்படியே திருஷ்டி கழித்தவள், என் நந்து இனிமே 'ஹீரோ...’ என்றாள் புன்னகையுடன்.

    இனிமே இல்லை... நான் எப்பவும் ‘ஹீரோ'தான்... என்றான் நந்து.

    ஆமா, பெரிய 'ஹீரோ...’ எங்க என்கூட ஒரு கி.மீ. வெயில்ல நடந்து வாங்க பார்ப்போம்?

    எதுக்கு... தேவையில்லாம உடம்பைக் கருக்க வெச்சுக்கணும் நளினி?

    ஒரு கிலோமீட்டர் நடந்தாலெல்லாம் கருக்காது 'ஹீரோ' சார்...

    ஆளை விடு... நான் இப்படி பார்த்துப் பார்த்து உடம்பை வெச்சுக்கிட்டு இருக்கறதாலதான் டைரக்டர் என்னை 'ஹீரோ' ஆக்கி இருக்கார். அதை நீ ஞாபகம் வெச்சுக்கோ... என்றவன், 'ஹாரன்' சப்தம் கேட்டு வாசல் பக்கம் பார்த்தான்.

    பட கம்பெனியின் கார் வந்திருந்தது.

    வண்டி வந்துடிச்சு. நான் புறப்படுறேன் - என்றபடி நடந்தவன்... நேராக தாய் சாந்தலட்சுமி, அப்பா அனந்தகிருஷ்ணன் காலில் விழுந்து எழுந்தான். அவர்களும் ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர். மிடுக்காகப் போய் காரில் அமரவும்... காரும் புறப்பட்டது. நளினி 'டாட்டா' காட்டி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.

    அத்தை... மாமா... என்றபடியே சாந்தலட்சுமியையும் அனந்தகிருஷ்ணனையும் நெருங்கினாள்.

    நளினி... ஒரு நல்ல காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடேன்... என்றபடி அன்றைய நாளிதழைக்

    Enjoying the preview?
    Page 1 of 1