Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thadaigal Pala Thaandi...
Thadaigal Pala Thaandi...
Thadaigal Pala Thaandi...
Ebook967 pages5 hours

Thadaigal Pala Thaandi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலை எழுதுவதால் எனது எழுபது ஆண்டு காலத்துக்கும் மேலான வாழ்க்கையின் இனிய பல தருணங்களை நினைவில் மீண்டும் நான் வாழ்ந்து பார்க்க முடிகிறது. பல நினைவுகளை காலம் அவ்வப்போது இனிமையாக்குகிறது. அவற்றை அசை போடுவது மகிழ்ச்சியான அனுபவம். இருபதாம் நூற்றாண்டில் நிலைமைகள் எப்படியிருந்தன என்பதை இந்த என் சுயசரிதை வருங்கால சந்ததியினருக்குக் கொடி காட்ட உதவும். இதில் நினைவு கூரப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன சம்பவங்கள் அவர்களுக்குச் சுவையாக இருக்கலாம்.

எனவே நானும் நினைவுகளைச் சேமிக்கிறேன். 2050ம் ஆண்டுக்குப் பின்னர் இருக்கப்போகும் நமது கொள்ளுப் பேரன், பேத்திகளை நினைத்துப் பார்க்கிறேன். நமது கொள்ளுத் தாத்தாக்கள் வாழ்ந்த காலம் பற்றிய நினைவுகள் நமக்கு மிக மங்கலாகவே இருக்கின்றன.

விமரிசகர் ஈபன் அலெக்ஸாண்டர் எழுதியபடி, “இது ஒரு சுயசரிதை அல்ல. ஆசிரியரின் வாழ்வில் அவர் சந்தித்த செயல் நிறைந்த நிகழ்ச்சிகளின், சம்பவங்களின் உண்மையான நினைவுகள்”.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580143106894
Thadaigal Pala Thaandi...

Read more from Ranimaindhan

Related to Thadaigal Pala Thaandi...

Related ebooks

Reviews for Thadaigal Pala Thaandi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thadaigal Pala Thaandi... - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    தடைகள் பல தாண்டி...

    (வாழ்க்கை அனுபவங்கள்)

    Thadaigal Pala Thaandi...

    (Vazhkkai Anubavangal)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    என் வாழ்க்கைப் பயணத்தில் உறுதுணையாக இருந்து என்னை வெற்றி பெறச் செய்த என் மனைவி டாக்டர் இந்திராவிற்கு இந்நூல் காணிக்கை.

    - டாக்டர் பி. ராமமூர்த்தி

    ***

    வழியெங்கும் பாதை கடினமானதுதானா? ஆமாம், கடைசிவரை...

    பயணம் என்ன நாள் முழுவதுமா? காலை முதல் இரவு வரை, நண்பனே!

    ***

    ஏன் இந்தச் சுயசரிதை?

    இந்த நூலை எழுதுவதால் எனது எழுபது ஆண்டு காலத்துக்கும் மேலான வாழ்க்கையின் இனிய பல தருணங்களை நினைவில் மீண்டும் நான் வாழ்ந்து பார்க்க முடிகிறது. பல நினைவுகளை காலம் அவ்வப்போது இனிமையாக்குகிறது. அவற்றை அசை போடுவது மகிழ்ச்சியான அனுபவம். இருபதாம் நூற்றாண்டில் நிலைமைகள் எப்படியிருந்தன என்பதை இந்த என் சுயசரிதை வருங்கால சந்ததியினருக்குக் கொடி காட்ட உதவும். இதில் நினைவு கூரப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன சம்பவங்கள் அவர்களுக்குச் சுவையாக இருக்கலாம்.

    நார்வே நாட்டின் புகழ்பெற்ற நியூரோசர்ஜனான கிறிஸ்டியான்சென் அவர்களின் மனைவி பிரிட், நினைவுகளைச் சேமித்து வை. பணத்தை அல்ல என்று அடிக்கடி வலியுறுத்துவார். இரண்டாம் உலகப் போரில் கிறிஸ்டியான் தம்பதி அனைத்தையும் இழந்து தெருவில் திரிய வேண்டிய நிலையில் இருந்தார்கள். தங்கள் முந்தைய ஆண்டுகளின் நினைவுகளே அவர்களை வாழ வைத்துக் கொண்டிருந்தன. பின்னர் போருக்குப்பின் அவர்களின் வாழ்க்கை மீண்டும் மலர்ந்து செழித்த போதும் பிரிட்டும், கிறிஸ்டியானும் அழகிய நினைவுகளையே தொடர்ந்து சேமித்தார்களே தவிர, பணத்தை அல்ல. நல்ல நட்புகளின் மூலம் கிடைத்த நினைவுகள் அவை.

    எனவே நானும் நினைவுகளைச் சேமிக்கிறேன். 2050ம் ஆண்டுக்குப் பின்னர் இருக்கப்போகும் நமது கொள்ளுப் பேரன், பேத்திகளை நினைத்துப் பார்க்கிறேன். நமது கொள்ளுத் தாத்தாக்கள் வாழ்ந்த காலம் பற்றிய நினைவுகள் நமக்கு மிக மங்கலாகவே இருக்கின்றன.

    பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து, அப்போதைய அன்றாட வாழ்க்கை நிலை பற்றி யாராவது எழுதி வைத்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. தங்களைவிட மூத்தவர்கள் அவர்களது இளமைக் காலக் கதையைச் சொல்லும்போது அவற்றைக் கேட்க குழந்தைகள் விரும்புகிறார்கள் என்றார் கோல்ட்ஸ்மித். பேரப் பிள்ளைகளோ அல்லது அவர்களது பேரப் பிள்ளைகளோ இந்நூலின் பக்கங்களைப் புரட்டும்போது இருபதாம் நூற்றாண்டு பற்றிய பல தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்கக் கூடும்.

    மிகச் சுவையான கால கட்டத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். தொழில் நுட்பத்தில், நடவடிக்கைகளில், மதிப்பீடுகளில், அரசியலில், பொருளாதாரத்தில், விஞ்ஞானத்தில் வேகமான மாற்றங்கள் இடம் பெற்ற காலகட்டம் அது. எனவே அவற்றைப் பதிவு செய்வது பொருந்தும்.

    என் வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு தொடர்புடைய பலரை எழுத்துக்களில் வரைந்து காட்ட நான் முயன்றிருக்கிறேன். பொய் கலக்காமல், நடந்தவற்றை நடந்தபடியே சொல்லியிருக்கிறேன். அப்போதைய என் உணர்வுகளை அப்படியே வடித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு எள்ளளவும் இல்லை. அவர்களில் பலர் இப்போது மறைந்துவிட்டார்கள். பல்வேறு அமைப்புகளில் நான் செய்த பணிகளை அடக்கத்தை சற்று ஒதுக்கி விட்டு விளக்கியிருக்கிறேன். 'சுயசரிதை என்பது தன்னடக்கப் பயிற்சி அல்ல' என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஒருவித நிரந்தரத்தை (அமரத்வத்தை) உறுதி செய்துகொள்ளவும் சுயசரிதை ஒரு வழி.

    "நான் எழுப்பியிருக்கும் நினைவுச் சின்னம்

    வெண்கலத்தைவிட நீடித்திருப்பது

    பிரமிடுகளைவிட உயரமானது

    நான் முழுதுவமாக இறப்பதில்லை"-

    கி.மு. 23ல் வாழ்ந்த ரோமானியக் கவிஞர் ஹோரஸ் அவர்களின் புத்தகத்தில் வரும் சில வரிகள் இவை.

    விமரிசகர் ஈபன் அலெக்ஸாண்டர் எழுதியபடி, இது ஒரு சுயசரிதை அல்ல. ஆசிரியரின் வாழ்வில் அவர் சந்தித்த செயல் நிறைந்த நிகழ்ச்சிகளின், சம்பவங்களின் உண்மையான நினைவுகள்.

    அந்த விமரிசனம் இந்த நூலுக்கும் பொருந்தும்.

    -பி ராமமூர்த்தி

    முன்னுரை

    ஆங்கிலத்தில் 'Uphill all the way' என்ற தலைப்பில் இந்த நூல் வெளியானபின்பு இதைத் தமிழிலும் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த நண்பர்களும் விருப்பம் தெரிவித்தார்கள்.

    அந்த விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் நான் நண்பர் திரு. ராணிமைந்தன் அவர்களிடம் தமிழாக்கப் பணியை ஒப்படைத்தேன்.

    தமது பல்வேறு பணிகளுக்கிடையேயும் மிகச் செம்மையாக இந்நூலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் அவர்.

    இது ஒரு மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே எங்கேயும் ஏற்படாத வண்ணம் மிக இயல்பான நடையில் தமிழாக்கம் செய்திருக்கும் நண்பர் திரு. ராணிமைந்தனை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இப்புத்தகத்தைப் படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துகளை எனக்கு எழுதினால் பெரிதும் மகிழ்வேன்.

    பி. ராமமூர்த்தி

    ஏப்ரல் 1, 2001

    சென்னை

    உள்ளே

    1. காவிரியும் கல்யாணியும்

    2. இளமைக்கால நினைவுகள்

    3. ஒரு நூறு மருத்துவர்கள்

    4. உன்னத ஆசிரியர்கள்

    5. பழம்பெரும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி

    6. மருத்துவக் கல்லுாரியில் மறக்க முடியாத நாட்கள்

    7. வெள்ளையனே வெளியேறு

    8. படிப்பின் இறுதி ஆண்டுகள்

    9. ஹை, டாக்டர்!

    10. மன்மத அம்புகள்

    11. நல்லதொரு மனைவி

    12. ருக்மணி லட்சுமிபதி - சில நினைவுகள்

    13. என்ன, என்னை அடிக்கப் போறியா?

    14. கனவு நனவானது

    15. தொலைந்து போன பாஸ்போர்ட்

    16. நான் தேர்ந்தெடுத்த பாதை

    17. நிலா ஒளியும் பனித் துகள்களும்

    18. முதல் முட்டாளை உள்ளே அனுப்பு

    19. மூளையின் அணு அமைப்பு குணத்தைச் சொல்லுமா?

    20. எந்தரோ மகானுபாவுலு... அந்தரிக்கு வந்தனமு...

    21. நோயாளிகள் பகடைக் காய்கள்?

    22. பயனுள்ள பொறாமை

    23. தில்லையம்பலத்தான் திருவிளையாடல்

    24. வெளியிடங்களிலிருந்து அழைப்பு

    25. முன்னோடிகளும் உதவியவர்களும்

    26. வெற்றிகளும் வேதனைகளும்

    27. பாயும் சிங்கமா? பயணிகளா?

    28. ஆளுநரும் பிரதமரும்

    29. சாலையில் கண்மூடித்தனம்

    30. மூளை அறிவியல் மையம்

    31. இன்னொரு கனவு நனவானது

    32. நண்பர்களின் பிள்ளைகள்

    33. இந்திய மருத்துவச் சங்கம் - சில நினைவுகள்

    34. சில பிரமுகர்கள்

    35. என் வழிகாட்டிகள்

    36. அசையும் விரல் எழுதுகிறது

    37. தேவையில்லாத பகைமை

    38. மத்தியக் கிழக்கு நியூரோசர்ஜிகல் சொஸைட்டி

    39. பசுக்களுக்கு ஜின் மசாஜ்

    40. கார் ‘டிக்கி’யில் இரண்டு தலைவர்கள்

    41. ஜெர்மனியும் இங்கிலாந்தும்

    42. பாம்பு டாக்டர்

    43. கவியாரும் ஜார்ஜியன் ஒயினும்

    44. எங்களுக்குப் பகைமை வேண்டாம்

    45. இந்தியாவுக்கென ஒரு எஃப்.ஆர்.சி.எஸ்

    46. சூரியனைப் பார்த்து...

    47. அளவில்லாமல் சிற்றுண்டி

    48. பாதுகாப்புப் படைகள்

    49. ஆயுர்வேதம்

    50. பல்வேறு அமைப்புகள்

    51. அரசுப் பணியிலிருந்து ஓய்வு

    52. எனது பவள விழா

    1

    காவிரியும் கல்யாணியும்

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடைகால மாலைகளில், திருச்சியில் காவிரிக் கரை மணற்பரப்புதான் மாணவர்கள் எங்களின் மாநாட்டு மேடை. அங்கே நாங்கள் ஒன்றாகக் கூடுவோம். தத்துவம், அறிவியல், பொது அறிவு என்று அனைத்தையும் அலசுவோம்.

    வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் பற்றி கொஞ்சம் பேசுவதைத் தவிர எங்கள் விவாதங்களில் அரசியல் அதிகம் தலை காட்டாது.

    மெதுவாக சூரியன் மேற்கில் மறையும்போது, வானம் போர்த்துக்கொள்ளும் அந்த மெல்லிய சிவப்பில் நாங்கள் மெய்மறந்து போவோம். எங்களது உரையாடல்கள் குறைந்து அமைதி அங்கே ஆட்கொள்ளும். அந்த அமைதியில், ஓடும் காவிரியின் ஒய்யார சலசலப்பும், வீடு திரும்பும் பறவைகளின் விதவிதமான குரல்களும், தூரத்தே ஒரு கோயிலிலிருந்து யாரோ நாதஸ்வரத்தில் வாசிக்கும் கல்யாணி ராகமும் காதுகளில் தேனாகப் பாயும். இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகள் நெஞ்சில் நிறைகின்றன. 1935-37 காலகட்டம் அது. காலம் யாருக்காகக் காத்திருக்கும்? மக்கள் தொகை இன்று திருச்சியின் முகத்தையே நம்ப முடியாத அளவுக்கு மாற்றிவிட்டிருக்கிறது. அவற்றை யாரும் மறக்கமுடியாது. ஆனால் மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். ஆனால் மாற்றங்கள் யாவும் மகத்தானவைதானா?

    இளைஞர்களுக்கு மாற்றங்கள் ஒரு பரிசு. ஆனால் முதியவர்களுக்கு ஒரு பாரமே.

    காவிரிக் கரையில் அமர்ந்திருக்கிறது திருச்சி நகரம். தமிழின் செழிப்புக்கும். கலாசாரத்துக்கும் தாயகம். தென்னங்தோப்புகளும், பசுமையான நெல் வயல்களும் அடர்ந்திருக்கும் ஒரு பெரிய வளமான மாவட்டத்தின் தலைமையகம். சில நிலங்களில் மூன்று போகம் பயிர் விளையும். மெதுவான, ஆனால் அமைதியான வாழ்க்கை, மக்கள் தொகை குறைவு, மாசுபடாத சூழல் என்று திருச்சி ஒரு கவிதையாக இருந்த காலம். சில உயர்நிலைப் பள்ளிகளும், மூன்று கல்லூரிகளும் திருச்சியை ஒரு கல்வி கேந்திரமாகவே மாற்றியிருந்தன, சிறிய கண்டோன்மென்டில் பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பிரிவு நிறுத்தப்பட்டிருந்தது. ஈரோடிலிருந்து திருச்சிக்கு, காவிரியின் வடக்குக் கரையோரம் அகல ரயில் பாதை ஒன்றை ஆங்கில அரசு அமைத்திருந்தது.

    1922 ஜனவரி மாதம் முப்பதாம் தேதி.

    65, ஹைரோடு, எழும்பூர், சென்னை என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ஸ்ரீகாளஹஸ்தி ஐயர் அவர்களுக்கு, 'ஷீயாளி'யில் உதவி சர்ஜனாக இருந்த கேப்டன் டி.எஸ். பாலசுப்பிரமணியத்திடமிருந்து வந்த தந்தி, பாலாம்பாளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம் என்று தெரிவித்தது.

    இதுதான் இந்தக் கதையின் ஆரம்பம்.

    சீர்காழியைத்தான் ஷீயாளி என்று ஆங்கிலேயர்கள் பெயர் மாற்றி அழைத்தார்கள்.

    தஞ்சாவூருக்கு வடக்கே ஒரு சிறிய நகரம் சீர்காழி.

    சைவத் தமிழ் இலக்கியங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அது. தமிழகத்தின் இறவாப் புகழ்பெற்ற உன்னதமான நான்கு சைவ முனிவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் பிறந்து வளர்ந்த புண்ணிய பூமி.

    இரண்டாவது வயதில் தன் தந்தையால் ஆலயத் திருக்குளக் கரையில் தனித்து விடப்பட்டு பசியால் அழுதபோது வானிலிருந்து பார்வதி தாயே இறங்கி வந்து ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியதாகவும். மறுவினாடியே சிவ பார்வதியைப் போற்றி அந்தக் ஞானக்குழந்தை பாடல்கள் இயற்றியதாகவும் ஐதீகம்.

    உயர்ந்த பாரம்பரியம், சிறப்பான பக்தி உணர்வு, கவிதை, கலை, இலக்கியம், இசை, நடனம் என்று அற்புதமான கலாசாரப் பரிமாணங்களோடு தன்னை இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் தஞ்சாவூர் ஒரு பெருமைக்குரிய தமிழ் அடையாளம். பின்னாளில் நான்கூட அடிக்கடி சொல்வதுண்டு:

    சீர்காழியில் இரண்டு மகத்தான மனிதர்கள் அவதரித்தார்கள். ஒன்று திருஞான சம்பந்தர். இன்னொன்று பி. ராமமூர்த்தி.

    தற்பெருமைக்கு ஒரு அளவில்லையா!

    திருச்சிக்குத் தொன்மையான வரலாறு உண்டு. அருகே உறையூரைத் தலை நகரமாகக்கொண்ட சோழ மன்னர்களின் ஆட்சியில் கலாசாரம், மதம், கலை, இசை என்று எல்லாமே காவிரிக் கரையோரம் களைகட்டியிருந்தன. குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இந்தக் கலை வளம் அதிகமாக இருந்தது. திருச்சி கோட்டைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தென்னிந்தியாவில் சென்ற ஐந்து நூற்றாண்டுகளில் வேறு எந்தக் கோட்டையும் சந்தித்திராத எண்ணிக்கையில் முற்றுகைப் போர்களைச் சந்தித்த கோட்டை திருச்சி கோட்டை.

    தற்போது திருச்சியின் ஊடே செல்லும் தேசிய நெடுஞ்சாலை முன்னாளில் வடக்கிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் யாத்ரீகர்கள் பாதையாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். உள்ளே நுழையும் எதிரிகளின் ராணுவத்திற்கு காவிரி இயற்கையான ஒரு தடையாக இருந்தது. 250 அடி உயர மலைப் பாறை கண்காணிப்புக் கோபுரமாகச் செயல்பட்டது. திருச்சியை வெல்லாமல் தெற்கை யாரும் நெருங்க முடியாத நிலை இருந்ததால் திருச்சியே ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டது. திருச்சி கோட்டையின் அந்த நில அமைப்பின் சான்றாக இன்று பிரதான பாதுகாப்பு வாயில் (மெயின் கார்ட் கேட்) மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. இன்றும் நகரின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் இந்த வாயிலும் ஒன்று.

    தெப்பக் குளமும், மற்ற குளங்களும் முற்றுகைக் காலங்களில் கோட்டையைக் காக்கப் போராடிய வீரர்களின் தாகத்தைத் தணித்து வந்தன.

    1866-1878ம் ஆண்டுகளுக்கு இடையே பிரதான பாதுகாப்பு வாயில் மற்றும் கிழக்கில் சில பகுதிகள் தவிர கோட்டையின் மற்ற சுவர்கள் இடிக்கப்பட்டன. கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழி மண்ணால் நிரப்பப்பட்டு, மரங்கள் அடர்ந்த கிழக்கு, மேற்கு சாலைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு மேற்கு புலிவார்ட் ரோடு என்று பெயர். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் காவற்படை குடியிருப்பு இந்தப் பகுதியில்தான் அமைந்திருந்தது. எனவே பிரதான பாதுகாப்பு வாயில் என்று அழைக்கப்பட்டது. (ஆதாரம்:1995 நவம்பர் 2ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் என். வைத்தியலிங்கம் எழுதிய ‘அட் தி கிராஸ்ரோட்ஸ் ஆஃப் ஹிஸ்டரி' என்ற கட்டுரை).

    என் தந்தை கேப்டன் டி.எஸ். பாலசுப்பிரமணியன் இந்திய மருந்துவச் சேவையில் கேப்டனாக இருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி இருந்தார். உச்சிப் பிள்ளையார் கோயில், புனித ஜோசப் தேவாலயம், தெப்பக்குளம் ஆகிய மூன்றும் அப்போது திருச்சியின் பிரதான அடையாளச் சின்னங்கள். குறிப்பாக தெப்பக்குளம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம். திருச்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘தெப்பக்குளம் தயிர் வடைகள்' என்று ஒரு செல்லப் பெயரும் இருந்தது. பதினெட்டாம் நாற்றாண்டில் திருச்சி முற்றுகையின்போது ராபர்ட் கிளைவ் கைப்பற்றியிருந்த கட்டிடத்தில்தான் புனித ஜோசப் கல்லூரியின் விடுதி இயங்கி வந்தது. ‘கிளைவ் ஹாஸ்டல்' என்றே அதற்குப் பெயர். பெரிய நந்திகேஸ்வரர் ஆலயம் இருந்த அதே தெருவில்தான் நான் படித்த ஈ.ஆர். உயர் நிலைப்பள்ளி இருந்தது.

    நகரத்தின் நடுவில் ஓங்கி உயர்ந்திருக்கும் மலைப்பாறையின் மீது உச்சிப் பிள்ளையார் ஒரு மாபெரும் சின்னமாக ஆலயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சற்றுக் கீழே தொன்மையான தாயுமானசுவாமி (மாத்ருபூதேஸ்வரர்)யும், சுகந்தி குந்தாளம்பாளும் அமைந்திருக்கிறார்கள்.

    ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும். அசுரர்களின் அரசனான விபீஷணன், ராமர் தந்த ஒரு ரங்கநாதர் விக்ரகத்தைக் கையில் ஏந்திக்கொண்டு அயோத்தியிலிருந்து இலங்கை திரும்புகிறான். இலங்கையில் ஒரு கோவிலில் அந்த விக்ரகத்தை நிறுவிட விபிஷணணுக்கு ஆசை. அந்தப் பயணத்தில் அவன் காவிரிக் கரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது அந்தி சாய்ந்தது. சந்தியா வந்தனம் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட மாலைக் கடன்களை அவன் நிறைவேற்ற வேண்டியிருந்தது. 'எங்கேயும் விக்ரகத்தைத் தரையில் வைத்துவிடாதே. அப்படித் தப்பித் தவறி வைத்துவிட்டாயோ அப்புறம் அதை மீண்டும் தரையிலிருந்து தூக்க முடியாது’ என்று எற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்ததால் கவனமாகவே அவன் இருந்தான். இருந்தாலும் கீழே அதை வைக்காமல் எப்படி பூஜை செய்ய இயலும்? சுற்று முற்றும் பார்த்தபோது ஒரு பையன் கண்ணில்பட்டான். அவனை அழைத்து ‘நான் பூஜை செய்து முடிக்கும் வரை இதைக் கையில் வைத்திரு' என்று விக்ரகத்தை அவனிடம் கொடுத்தான். ‘கீழே வைத்துவிடாதே' என்று எச்சரிக்கையும் விடுத்தான் விபீஷணன். ஆற்றங்கரையில் தன் பூஜைகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தால் ரங்கநாதர் தரையில் இருந்தார். அந்தப் பையன் சற்றுத் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கோபம் பொங்க விபீஷணன் பையனைத் துரத்தினான். பையன் காவிரி நதியின் குறுக்கே ஓடி மறுபக்கம் ஒரு உயரமான பாறையின் மீது ஏறிவிட்டான். விபீஷணன் விடவில்லை. மலைப் பாறையின் உச்சியில் அந்தப் பையனைப் பிடித்தான். பையன் தலையில் கோபத்தில் ஓங்கி ஒரு குட்டு வைத்தான். உடனே அந்தப் பையனின் உருவம் விநாயகர் சிலையாக மாறியது. தன்னிடம் இறைவன் நடத்திய திருவிளையாடலை அப்போதுதான் விபீஷணன் உணர்ந்தான். மன்னிக்க வேண்டும்' என்று உச்சிப் பிள்ளையாரிடம் உருகி வேண்டினான். இறைவன் விபீஷணன் முன் காட்சி தந்து ‘ரங்கநாதர் இங்கே - காவிரியின் இரு கிளைகளுக்கிடையே-கொலுவிருக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்ட ஒன்று' என்று விளக்கினார். அன்றிலிருந்து அந்த இடம் ஸ்ரீரங்கம் ஆயிற்று. இப்போதுகூட உச்சிப் பிள்ளையார் சிலையை உற்றுப்பார்த்தால் தலையில் ஒரு சிறிய பள்ளம் தெரியும் என்கிறார்கள். விபீஷணன் குட்டிய குட்டு!

    தாயுமானவர் கதையும் இதைப் போலவே சுவையானது.

    ஸ்ரீரங்கத்தில் காவிரிக் கரையின் எதிர்ப்புறத்தில் ஒரு சிறந்த வைசியக் குடும்பத்திற்கு சிவபக்தையான ஒரு செட்டியார் பெண் மருமகளாக வருகிறாள். தாய்மையடைகிறாள். பிரசவத்தின்போது தன் தாய் வந்து உதவியாக இருப்பாள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறாள். அந்தத் தாய் தன் மகளுக்கு உதவியாக இருப்பதற்காகக் கிளம்பி வரும்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்க, அதைக் கடந்து ஸ்ரீரங்கம் போக முடியாமல் அந்தக் கரையிலேயே தங்கிவிடுகிறாள்.

    பிரசவத் தருணம் நெருங்குகிறது. அம்மாவைக் காணவேண்டி மகளின் கண்கள் அலைபாய்கின்றன. சிவபெருமானை உள்ளமுருகி வேண்டுகிறாள் அவள். திடீரென அவள் முன் அவளது தாய் வருகிறாள். உதவுகிறாள். சுகப்பிரசவம் ஆகிறது.

    இரண்டு நாள் கழித்து வெள்ளம் வடிந்ததும் தாய் ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்டு கண்ணே, உனக்கு சமயத்தில் வந்து உதவ முடியாமல் ‘வெள்ளம் எனக்கு அணை போட்டு விட்டதடீ' என்று அழுகிறாள்.

    'என்னம்மா நீ, என்ன ஆயிற்று உனக்கு? நீதான் வந்திருந்தாயே... சமயத்தில் உதவி செய்தாயே... பத்திய உணவுகூட பரிமாறினாயே... பின் ஏன் இப்படிப் பேசுகிறாய்?' என்கிறாள் மகள் ஒன்றும் புரியாமல்.

    தாய்க்கு நம்ப முடியவில்லை. அப்போதுதான் பரிசலில் தான் வந்து சேர்ந்ததாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.

    சட்டென்று இருவருக்கும் இறைவனே தாயும் ஆன திருவிளையாடல் புரிகிறது. தாயும் மகளும் பக்திப் பரவசத்தால் ‘அய்யனே! உன் கருணைக்கு அளவுண்டோ?' என்று கதறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள். உண்மையான பக்தர்களுக்கு உதவ இறைவன் எந்த வடிவத்தையும் எடுப்பான் என்பதற்கு தாயுமானவர் கதை ஒரு சிறந்த உதாரணம். மாத்ருபூதேஸ்வரர் என்றாலும் ‘ஒருவர் தாயாகவும் ஆனவர்' என்பதுதான் பொருள்.

    2

    இளமைக்கால நினைவுகள்

    1925ம் ஆண்டு. அப்போது எனக்கு மூன்று வயது. நாங்கள் குடியிருந்த ஆண்டார் தெருவுக்கு இணைத் தெருவான பட்டர்வொர்த் தெருவில் காவிரி வெள்ளம் புகுந்துவிட்டது. ஒரே பரபரப்பு. வெள்ளத்தைப் பார்க்க எங்களையெல்லாம் அழைத்துப் போனார்கள். வெள்ளத்தைப் பார்த்த அந்த த்ரில் இன்னும் நினைவிருக்கிறது.

    என் தந்தை புகழ்பெற்ற வளமான பொது மருத்துவராகத் திகழ்ந்தவர். அப்போது திருச்சியில் நவீன மருத்துவத்தில் தேர்ந்தவர்கள் என்றால் ஒரு டஜன் பேர் தேரலாம். பாலம்மாள். டி.எஸ்.எஸ். ராஜன், பி.ஏ.எஸ். ராகவன், சாம்பவசிவம், டி.என். சுப்பிரமணியம், சுவாமிநாத சாஸ்திரி, வி. சுப்பிரமணியம் (இவர் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் எஸ். கல்யாணராமன் அவர்களின் தந்தை) போன்றவர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள்.

    1917ல் எம்.பி.பி.எஸ் தேறியதும் என் தந்தை ராணுவத்தில் சேர்ந்தார். மெசபொட்டேமியாவில் (இராக் தேசம்) பணியாற்ற அவர் அனுப்பப்பட்டார். சமஸ்கிருதத்திலும். கணிதத்திலும் விற்பன்னராகத் திகழ்ந்த திரு. ஏ. விஸ்வநாத சாஸ்திரிகளின் மகள் பாலாம்பாளைத் திருமணம் செய்துகொண்டார். திரு. விஸ்வநாத சாஸ்திரிகள் திருச்சி, பின்னர் மதுரை மாவட்டங்களில் உதவி பள்ளி ஆய்வாளராக இருந்தவர்.

    ஆண்டார் தெருவில் எங்கள் வீட்டில் முதன் முதலில் மின்சார விளக்கு எரிந்தது, எனது இன்னொரு முக்கியமான இளவயது ஞாபகம். மதுரையில் என் தாத்தா வீட்டிலிருந்து திரும்பி எங்கள் வீட்டுக்கு வந்தபோது ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிந்தது. அடேயப்பா! வியப்பு தாங்கவில்லை. ஏதோ மாயாஜாலம் போல இருந்தது. ஐந்து வயதில் நான் அடைந்த அந்த வியப்பு எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.

    என் தந்தைவழி தாத்தா திரு. ஸ்ரீ காளஹஸ்தி அவர்கள் அரசுப் பணியில் தாசில்தாராக இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னர் தன்னை அவர் கீதானந்த யோகி என்று அழைத்துக் கொண்டார். பகவத் கீதைக்கு அவர் உரை எழுதியிருக்கிறார். அந்தக் கையெழுத்துப் பிரதியை நான் பார்த்த நினைவு இருக்கிறது. ஆனால் அது தொலைந்து போய்விட்டது மிகவும் துரதிர்ஷ்டம். அவர் ஒரு உண்மை விரும்பி. பொய் சொல்லவேமாட்டார். அதே போல் நேர்மை தவறி ஒரு காரியத்தையும் செய்யமாட்டார். இந்தக் குணங்களின் காரணமாகவே தாசில்தார் பதவிக்கு மேல் அவரால் உயர முடியவில்லை. ‘எப்போதும் உண்மை' என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது. இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வர முடியும், அதுவும் இந்திய வருவாய்த் துறையில்!

    உண்மையே பேசுவது என்பதில் அவர் காட்டிய தீவிரத்தை, இனிமையாகப் பேசுவதிலும், பிறரைத் துன்புறுத்தும் என்றால் உண்மை பேசாமல் இருப்பதிலும் காட்டவில்லை. கீதானந்த யோகி தினமும் அதிகாலையில் மூன்றரை மணிக்கு எழுந்து விடுவார். எழுந்ததும் கற்றாழை சாப்பிடுவார். அவரது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க கற்றாழை உதவியிருக்கலாம். காலைக் கடன்களை முடித்தவுடன் தன் துணிகளைத் தானே துவைத்துப் போடுவார். குளித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு சிற்றுண்டிக்குத் தயாராகி விடுவார். சின்னதாய் இரண்டு தோசைகள், மற்றும் சுண்டைக்காய்தான் அவரது காலை டிபன். காபி பழக்கம் அவருக்கு இல்லை. அவருக்குத் தேவையானவற்றை கவனிப்பதற்காகவே குடும்பத்தினரும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் துணி துவைக்கும் சப்தம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் அசௌகரியமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் விடியற்காலையில் எழுந்திருப்பது என்பது இந்தியா முழுவதும்-குறிப்பாக தென்னிந்தியாவில்-கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்கமாக இருந்ததால் என் தாத்தாவால் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தொல்லை இருந்திருக்காது என்றே நம்புகிறேன்.

    சில சமயங்களில் தாத்தாவின் அணுகுமுறையே அலாதியாக இருக்கும். யாராவது பணம் கடன் கேட்டால் தன்னிடம் பணம் இல்லையென்று பொய் சொல்லமாட்டார். கடன் கொடுக்காததற்கு வேறு சாக்கு போக்குகளும் சொல்லமாட்டார்.

    இதோ பார்! என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால் உனக்குத் தரமாட்டேன். கடன் வாங்கினால் நீ திருப்பித்தரமாட்டாய். இதனால் பின்னால் உனக்கும் எனக்கும் தகராறு வரும். அந்தத் தகராறு இப்போதே வரட்டும். என் பணமாவது என்னைவிட்டுப் போகாமல் இருக்கும் என்று நேர்முகமாகவே சொல்லி விடுவார்.

    தலைக்கு ஒரு மரக்கட்டையை வைத்துக்கொண்டு தரையில் பாய் விரித்து அதில்தான் தூங்குவார். அவருக்காக ஒரு தாமிரப் பாத்திரத்தில் குடிக்க தண்ணீர் வைத்திருப்பார்கள். அதைத் தினமும் பளிச்சென்று துலக்கி வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார். அவருக்கு ஒரு பக்கத்தில் நானும் இன்னொரு பக்கத்தில் என் தம்பியும் படுத்துக்கொள்வோம். தாத்தா ஏதாவது ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிப்பார். அது அனேகமாக ‘ஆன்ட்ரோசெலஸும் சிங்கமும்' என்ற கதையாகத்தான் இருக்கும். பாதி கதைக்கு முன்பாகவே மூன்று பேரும் தூங்கிப் போவோம். மறுநாள் இரவு கதை மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். எழுபத்து நான்கு வயது வரை வாழ்ந்த தாத்தா 1932ல் இறந்து போனார். அவரது தந்தை கணபதி ஐயர், எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நல்லிச்சேரி கிராமத்திலிருந்து காவிரிக் கரையில் திருவையாறுக்கு குடிபெயர்ந்தார். அந்தக் கிராமத்தில் யாருமே கவனிக்காமல் பாழ்பட்டுக் கிடந்த சிவன் ஆலயத்தைச் சமீபத்தில் நாங்கள் சிலர் சேர்ந்து புதுப்பித்துக் கொடுத்தோம். வேதங்களில் புலமை பெற்றிருந்ததால் திரு. கணபதி ஐயருக்கு ஜடை ஐயர் என்ற பெயரும் இருந்தது. ஒரு தமிழ் வழக்கறிஞராகவும் அவர் தொழில் செய்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள், ஒரு மகள். மகன்களில் ஒருவரான திரு. ஜி. சுப்பிரமணிய ஐயர்தான் 'தி ஹிந்து' மற்றும் 'சதேசமித்திரன்' இதழ்களைத் தோற்றுவித்தவர். பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திலும் மிகச் சிறந்த டாக்டர் பி. ராமமூர்த்தி சீர்திருத்தவாதியாகவும். தேசாபிமானியாகவும் விளங்கியவர். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தனது பத்திரிகைகள் மூலம் தளராமல் நடத்திய வீரர் அவர். பலமுறை அவரது பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டதுண்டு. அடிக்கடி அவர் சிறை சென்றார். எனினும் கொஞ்சமும் தளர்ந்து போய்விடாமல் வீரேசலிங்கம் பந்துலு போன்ற தேச பக்தி கொண்ட பெருமக்களுடன் இணைந்து, ஆங்கிலேயே ஆதிக்கத்தின் காரணமாக இந்தியா அடைந்து வந்த இன்னல்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி வந்தார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் அவரே.

    பொதுமக்களிடம் உரையாற்றும்போது உள்ளுர் மொழியில் பேசுவது அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தமிழில் பொது உரையாற்றிய முதல் பிரமுகரும் அவர்தான் என்பது பெருமைக்குரியது. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தொடக்க நாட்களில் அவரைத் தன் இல்லத்தில் தங்க வைத்து ஊக்கமளித்தவர் அவர்.

    பழைமையையும், மூடப்பழக்க வழக்கங்களையும் முழுமையாக அவர் வெறுத்தார். கணவனை இழந்து தன் மகள் இளவயதிலேயே விதவையான போது அவளுக்கு மறுமணம் செய்வித்து மகிழ்ந்த துணிச்சல்காரர். இதனால் பிராமண குலத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் அவர் சம்பாதித்துக் கொண்டார். சாதியிலிருந்தே அவரைத் தள்ளி வைத்தார்கள்.

    சாதிப் பழக்கங்களுக்கு மாறாக செயல்படுபவர்களைத் தள்ளி வைப்பது பிராமண சமூதாயத்தில் மட்டுமல்ல, எல்லாச் சாதிகளிலும் அப்போது நடைமுறையில் இருந்தது.

    இந்த எதிர்ப்புகள் கண்டு அவர் அஞ்சியதில்லை. தீண்டாமையை எதிர்த்து அவர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அவரைப் பற்றி எஸ்.ஏ. கோவிந்தராசன் அவர்கள் எழுதி இந்திய அரசு வெளியிட்ட புத்தகத்திலிருந்தும், 'தி ஹிந்து' பத்திரிகையின் நூற்றாண்டு மலரில் வெளியான கட்டுரையிலிருந்தும் திரு. கணபதி ஐயர் அவர்களைப் பற்றிய மேலும் பல விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

    தற்காலத் தலைமுறையினர் திரு. ஜி. சுப்பிரமணிய ஐயரைப் பற்றி போதுமான அளவு தெரிந்துகொள்ளாமல் இருப்பது சோகமே. 'தி ஹிந்து' நாளிதழின் தற்போதைய முதலாளிகளும் அவரை முடிந்தவரை ஒதுக்கியே வைக்கிறார்கள். இப்போதைய அரசியல்வாதிகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம். இந்தியாவுக்காகவும், தமிழுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய இந்தப் பிராமணரைப் பற்றி நினைக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ்த்தட்டில் இருப்பவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். மேல் சாதியினரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதிகள் தன் சாதியிலேயே ஏற்றத் தாழ்வை வெளிப்படையாகக் கையாள்கின்றன. இந்த மோசமான நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவதில்லை. இட ஒதுக்கீடு உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவவில்லை. எனவே ஹரிஜனங்கள் - இப்போதைய புதுப்பெயர் தலித் வெகுண்டெழுந்திருப்பதில் வியப்பில்லை.

    திருவையாறுக்கு அடுத்திருக்கும் திருப்பயணம் என்ற கிராமத்தில் என் பாட்டி ஜானகியம்மாள் பிறந்தார். அவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். பாசமுள்ள குடும்பம் அது. அவர்களின் குழந்தைகளோடு பல மணி நேரங்களை நாங்கள் விளையாடிக் கழித்திருக்கிறோம். ‘உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றை கடைப்பிடியேன்' என்று தீர்மானமாக இருந்த என் தாத்தாவுடன் குடும்பம் நடத்தியது பாவம், என் பாட்டிக்குப் பெரிய சோதனையாகத்தான் இருந்திருக்கும். ‘உண்மை' சம்பாதித்துத் தந்த சொற்ப வருமானத்தில் அவள் குடும்பம் நடத்தினாள். ஆய்வாளராக அவர் கிராமங்களுக்குப் போகும்போது யார் பரிசுப்பொருள் எதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டார். மற்ற ஆய்வாளர்களோ வீடு திரும்பும்போது மளிகைக் சாமான்களும். காய்கறிகளும் மலை மலையாகச் கூடவே வரும். என் தாத்தாவோ ஒரு அவுன்ஸ் அரிசியைக்கூட முறை தவறி பெற்றதில்லை. இந்த நேர்மையால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். எனினும் வீட்டில் பணக் கஷ்டம் மிகுதியாகவே இருந்தது. அப்போதெல்லாம் ஒரு கிராமத்துக்கு தாசில்தார் வருகிறார் என்றால் அந்தக் கிராம நாவிதர் அவருக்கு இலவசமாக முகச்சவரம் செய்து விடுவார். இது வழக்கம்.

    தனக்குச் செய்யப்பட்ட முகச்சவரத்துக்காக தான் தந்த அரையணாவை நாவிதர் வாங்க மறுத்தபோது என் தாத்தா பயங்கரமாகக் கோபம்கொண்டு அந்த அரையணாவை அவரது கையில் திணித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார். அப்படிப்பட்ட நேர்மையாளர்.

    இன்று வாழ்க்கையில் எல்லா மட்டங்களிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோமே, இந்த ஊழல் ரொம்ப காலமாகவே நமது நாட்டில் ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்ததாகத் தெரிகிறது. திருச்சியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே சொல்கிறேன்.

    கல்யாண விஷயமாக பெண் வீட்டாரிடம் புரோக்கர் பேசிக் கொண்டிருந்தார். மாப்பிள்ளையின் அருமை பெருமைகளைத் தனக்கே உரிய பாணியில் விளக்கிக் கொண்டிருந்தார். மாப்பிள்ளை ரெவின்யூ அதிகாரியாக வேலை பார்க்கிறார். கிட்டத்தட்ட மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் வருகிறது, தெரியுமா? என்றார். ஐம்பது ரூபாய் என்பது, அப்போது பெரிய சம்பளம். புரோக்கர் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது பெண்ணின் தகப்பனார் இடை மறித்துக் கேட்டார்: அதை விடுமய்யா! சம்பளம் என்னையா பெரிசு? கிம்பளம் ஏதாவது வருமா, அதைச் சொல்லும்! கிம்பளம் நிறைய வரும் என்று புரோக்கர் உறுதியாகச் சொன்ன பிறகே கல்யாணம் பேசி முடிக்கப்பட்டது. இந்தக் கொள்கையை நமது பொது அதிகாரிகளில் பலர் இன்னும்கூட தீவிரமாகக் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.

    என் தந்தையின் இளமைப் பருவம் ஆடம்பரத்தைக் கண்டதில்லை. அவரது தந்தை கடப்பா மாவட்டத்தில் இருந்தார். என் தந்தையோ சென்னை திருவல்லிக்கேணியில் திரு.ஜி. சுப்பிரமணிய ஐயருடன் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதினார். புத்திசாலி மாணவனாக விளங்கியபோதும் என் தந்தை கணக்குப் பாடத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டு முறை தோல்வி கண்டார். மற்ற பாடங்களில் எழுபது மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தபோதும் கணக்கு மட்டும் அவர் காலை வாரிவிட்டது. மூன்றாவது முறைதான் அவர் மெட்ரிகுலேஷன் தேறினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லுாரியில் எஃப். ஏ. முடித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தென்னிந்தியா முழுமைக்கும் அப்போது ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான் இருந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும், வகுப்பு பிரதிநிதியாகவும் பாலசுப்பிரமணியம் இருந்தார். டாக்டர் ஆர்.வி. ராஜம் அவருக்கு ஒரு வருடம் ஜூனியர். டாக்டர். பி.வி. செரியன், டாக்டர் அழகப்பன் (பின்னாளில் மேஜர் ஜெனரல்) ஆகியோர் அவரது வகுப்புத் தோழர்கள். சென்னை மருத்துவக் கல்லுரியில் ஆங்கிலேயப் பேராசிரியர்கள் அவரை 'வக்கீல்' என்று செல்லமாக அழைத்தார்கள். வகுப்பு நடக்கும்போது எப்போது சந்தேகம் வந்தாலும் அப்போதே எழுந்து நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்டு தன் சந்தேகத்தைத் தீர்த்துகொள்வார். ‘வக்கீல்' என்பது அதனால் வந்த காரணப் பெயர். தலையில் அழகாக குடுமி வைத்திருப்பார். அதை மறைக்க ஒரு தொப்பியும் அணிந்திருப்பார். தனது மருத்துவ வாழ்க்கை முழுவதும் அப்படியே காட்சியளித்தார். ‘மிட்வொய்ஃபரி' எனப்படும் பேறு கால மருத்துவப் படிப்பில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். எம்.பி.பி.எஸ் முடித்ததும் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். அங்கு கிடைக்கும் நிறைய சம்பளத்தில் குடும்பத்தை முன்னேற்றலாம் என்பதே அவரது ஆசைக்குக் காரணம். அப்படியே அவர் ராணுவத்தில் சேர்ந்தார். ஒவ்வொரு மாதம் ஒரு தங்கச் சவரனை அவர் என் அம்மாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், அவற்றையெல்லாம் பாதுகாத்து பின்னாளில் நகைகள் செய்ததாகவும் சின்ன வயதில் எங்களுக்குச் சொல்வார்கள்.

    என் தந்தைவழி பாட்டிக்கு ஒரு மகன். ஒரு மகள். மகளின் மீது பாட்டிக்குக் கொள்ளைப் பிரியம். என் தந்தை சம்பாதித்ததில் நாற்பது சதவீதத்துக்கும் மேல் அவரது சகோதரிக்கே செலவிடப்பட்டது. ஏதாவது ஒரு வகையில் தன் பிள்ளையின் பணத்தை தன் பெண்ணுக்கு அனுப்பிவிடுவாள் பாட்டி. இந்த உதவி பல வருடங்கள் தொடர்ந்தது. அத்தையின் ஒரே மகளுக்குத் திருமணம் நடந்தபோது கல்யாணச் செலவின் பெரும் பகுதியை என் தந்தையே ஏற்றுக்கொண்டார். அப்புறம் கூட சின்னச் சின்ன சடங்கு என்றாலும் ஆன்டர் தெருவில் எங்கள் வீட்டிலிருந்து வண்டி வண்டியாகப் பரிசுப் பொருட்கள் போகும்.

    உண்மையில் கார் காராக என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பழைய வாடகை ஃபோர்டு காரில்தான் அவை திருச்சிக்கு மேற்கே பதினெட்டு மைலில் காவிரியின் தென் கரையில் அமைந்திருந்த சுண்டைக்காய் வேலூர் கிராமத்துக்குக் கொண்டு போகப்பட்டன.

    இது பற்றி என் தந்தை எப்போதும் முணுமுணுத்ததில்லை. பிறருக்கு உதவக்கூடிய செழிப்பான நிலையில் அவர் இருந்தார். அது மட்டுமல்லாமல் தன் தாயிடம் அபார பாசம் கொண்டவர் அவர். தன்னை நன்றாக வளர்த்துப் படிக்க வைக்க அவர் செய்த தியாகங்களை என்றும் நன்றியுடன் நினைத்தவர். தன் அக்காவிடமும் அவருக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. மிகவும் கண்டிப்பான தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு பாதுகாப்பு அரண்போல அக்கா இருந்ததால் பாசம் அதிகம்.

    என் தந்தை பிரபல மருத்துவராக இருந்தார். அவரால் முட்டாள்தனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. பொறுமை இழந்து விடுவார். எங்கள் முன்னோர்களின் முன்கோபம் அவருக்கும் நிறையவே இருந்தது. எங்களது முன்னோர்கள் வரிசையில் மேல் நோக்கி ஏழாவது தலைமுறையைச் சார்ந்த திரு. ஐயா ஐயர் என்பவரை கருத்த ஐயா என்றே அழைத்தார்கள். பின்னர் எங்கள் தலைமுறைக்கேகூட ‘கருத்தையா தலைமுறை' என்ற பெயர் வழங்கியது.

    ராணுவ மருத்துச் சேவையில் காப்டனாகப் பணியாற்றியபின் அதைவிட்டு விலகியதும் என் தந்தை சென்னை மாநில அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரு உதவி சர்ஜனாக சீர்காழியில் தன் அரசுப் பணியை அவர் தொடங்கினார். சீர்காழியில்தான் நான் பிறந்தேன். என் தம்பி கிருஷ்ணமூர்த்தி பிறந்த ராமநாதபுரத்திலும் அவர் பணியாற்றி இருக்கிறார்.

    ராமநாதபுரத்தில் இருந்தபோது தன் மேலதிகாரியாக இருந்த ஒரு மாவட்ட மருத்துவ அதிகாரியுடன் என் தந்தையால் ஒத்துப் போக முடியவில்லை. தன் கீழ் வேலை செய்யும் ஒரு டாக்டருக்குப் பேரும் புகழும் சேருவதை அந்த அதிகாரியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    தரம் ஏதோ தகராறு முற்றிய நிலையில் அந்த அதிகாரியை என் அப்பா அடித்துவிட்டு உடனே தன் வேலையை ‘ராஜினாமா செய்துவிட்டார். மருத்துவக் கல்லூரியில் அவரது ஆசிரியரும், சர்ஜன் ஜெனரலுமான கர்னல் நிப்லாக் அவரைக் கூப்பிட்டனுப்பினார். ராஜினாமா செய்யாதே. இனிமேல் கவனமாக இரு' என்று அப்பாவுக்கு அறிவுரை சொன்னார். ஆனால் அதற்குள்ளாக அப்பாவுக்கு அரசுப் பணியில் ஒரு சலிப்பு வந்துவிட்டது என நினைக்கிறேன். வேலையை விட்டுவிட்டு திருச்சியில் சொந்தமாகப் பிராக்டீஸ் தொடங்கினார்.

    பார்ப்பதற்குக் கடுமையாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் கருணை மிக்கவராகவும் தனது நோயாளிகளின் உடல் நலத்தில் அக்கறை கொண்டவராகவும் அவர் இருந்தார். எவ்வளவோ ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக அவர் சிகிச்சையளித்திருக்கிறார். அக்கம் பக்க கிராமங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது இருமுறை போய் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து உதவினார். தன்னிடம் இருந்த மாட்டு வண்டியில்தான் அவர் வெளியே போய் நோயாளிகளைக் கவனிப்பார்.

    ஒல்ட்ஸ் மொபைல் என்ற மோட்டார் கார் போல தன் மாட்டு வண்டியை ‘ஆக்ஸ் மொபைல்' என்று வர்ணிப்பார். (ox = எருது) அந்த மாட்டு வண்டிக்கு டெயில் ஸ்டார்ட்டர் (Tail Starter) என்று இன்னொரு பெயர் வைத்தார். அதாவது வாலை முறுக்கினால்தான் வண்டி ஓடும்.

    முன் கோபக்காரராக இருந்தாலும் அனைவரும் அவரை விரும்பினார்கள். அவர் எவ்வளவு பிரபலமாக இருந்தார் என்பதை நான் அவரது மரணத்தின் போதுதான் உணர்ந்தேன். அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஊரே திரண்டு வந்தது. அப்புறம்கூட பல நாட்கள் என்னையும், என் சகோதரரையும் யார் பார்த்தாலும் நிறுத்தி அப்பாவின் குணநலன்களைச் சொல்லிச் சொல்லி ‘அப்படிப்பட்டவர் போய் விட்டாரே' என்று குமைந்து போனார்கள். எப்படியெல்லாம் அவர் ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்தார் என்பதைச் சொல்லி மாய்ந்து போனார்கள்.

    அப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு ஏராளம். அதேபோல யாரையும் இயல்பாகக் கிண்டல் செய்வார். வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்ந்தவர் அவர். மாலை வேலைகளில் வேலை செய்வதில்லை என்று சிறிய வயதிலேயே முடிவெடுத்து அந்நேரத்தில் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார். பின்னாளில் ‘பிரிட்ஜ்' ஆட்டத்தில் ஆர்வம் காட்டினார். (வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்வதிலும், குறிப்பாக பிரிட்ஜ் ஆடுவதிலும் என் பிள்ளைகள் அப்படியே தாத்தாவைப் பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்). பிரிட்ஜ் விளையாட 'சிட்டி கிளப்’பிற்குப் போவதற்கு முன்னால் வெகுதூரம் நடந்து பயிற்சி செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அவர் சொன்ன ஒரு ஜோக்: பெயர்ப்பலகை பெரிதாக இருந்தாலும் ஒரு டாக்டருக்கு பிராக்டீஸே இல்லை. நோயாளிகள் அவர் பக்கம் வருவதே இல்லை. ‘இன்று எப்படியும் ஒரு நோயாளியையாவது நம் படி ஏறி வரும்படி செய்யவேண்டும்' என்று முடிவு செய்தார். ஒரு வாழைப்பழத் தோலை தன் வீட்டு எதிரில் போட்டு வைத்தார். எவனாவது அதன் மீது கால் வைத்து தடுக்கி விழாமலா போவான்? உடனே பெயர்ப்பலகையைப் பார்த்து தன்னைத் தேடி வராமலா போவான்? என்பது அவர் எதிர்பார்ப்பு. அவரது எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. ஒருவன் வந்தான். தோல் மீது கால் வைத்தான். வழுக்கி விழுந்தான். நிமிர்ந்து பார்த்தான். டாக்டர் பெயர்ப்பலகை தெரிந்தது. அதுவரையில் சரி. ஆனால் அவன் கண்ணில்பட்டது எதிர்வீட்டில் இருந்த இன்னொரு டாக்டரின் பெயர்ப்பலகை! அங்கே போய் சிகிச்சை பெற்றுக் கொண்டான்.

    ஒரு முறை நான், என் மனைவி, என் பெற்றோர்கள் அனைவரும் அலகாபாத் போயிருந்தபோது திரிவேணி சங்கமத்தில் முழுக்கு போட்டோம். அங்கே இருந்த புரோகிதர்கள் 'தட்சணை' தரவேண்டுமென்று நச்சரித்தார்கள். நிறைய கொடுத்த பிறகும் அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார்கள். 'ஐயா, நாங்களெல்லாம் புனித கங்கையின் புத்திரர்கள். எனவே நீங்கள் தட்சிணை தந்தாக வேண்டும்' என்றார் ஒரு புரோகிதர். அப்பா உடனே சொன்னார்: ரொம்ப நல்லது. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நானோ மிகப் புனிதமான காவிரியின் புத்திரர். எனவே நீங்கள்தான் இருமடங்கு தட்சிணை தரவேண்டும். அந்தப் புரோகிதர் கப்சிப். பிறகு வாயைத் திறக்கவில்லை.

    என் தந்தைக்கு நீண்டகால நண்பர்கள் பல பேர் இருந்தார்கள். அதே தெருவில் வசித்து வந்த எம்.வி. ஜெகதீச ஐயர் எங்களது குடும்ப வக்கீல். எளிமையான, சிக்கனமான வாழ்க்கை அவருடையது. அவரது மனைவி அற்புதமாக கீரை மசியல் செய்வார். சாதமும், வத்தக் குழம்பும்தான் அந்நாளைய கீழ் மத்தியதர பிராமணக் குடும்பத்தின் தினசரி உணவு. கூட மோரும் சுட்ட அப்பளமும் இருக்கும். எப்போதாவது கீரை, கூடுதல் அயிட்டமாக இடம்பெறும். இந்த உணவைச் சாப்பிட்டே அவர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்தார்கள். அன்றைய வழக்கறிஞர்கள் கீழ் மத்திய தர வகுப்பைச் சார்ந்தவர்கள்தாம். அதிலும் ஏழ்மையானவர்கள் சிலர் இருந்தார்கள். கொஞ்சம் வசதியுடைவர்கள் ஜட்கா வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதில் கோர்ட்டுக்குப் போகும்போது இவர்கள் அதில் ஓசியில் ஒட்டிக்கொள்வார்கள். ஜெகதீச ஐயர் அப்படிப் போவார். அப்படி ஓசியில் போகும்போது வழியில் தன் நண்பர்கள் யாரையாவது பார்த்தால் அவர்களையும் ஜட்காவில் ஏறிக் கொள்ளச் சொல்வார். அப்படி ஏறிக்கொள்பவர்களைப் பார்த்து நாங்கள் ஓசிக்கு ஒசி' என்று கிண்டலடிப்போம்.

    எம்.வி. நடராஜ ஐயர் என்றொரு ஆடிட்டர் இருந்தார். எங்கள் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளி அவர் வீடு. அப்பா, ஜெகதீச ஐயர், நடராஜ ஐயர் மூன்று பேரும் மாலை வேலைகளில் பொன்மலை வரை வாக்கிங் போய் வருவார்கள்.

    இன்னொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் என். ராமசாமி ஐயர். புகழ்பெற்ற கிரிமினல் லாயர். நல்ல வசதி. காவிரியின் வட கரையில் திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவலின் தொன்மைவாய்ந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரியின் பக்தர்கள் ராமசாமி ஐயரும், அவர் மனைவி சீதாலட்சுமியும். திருச்சியில் பெண்கள் கல்விக்கு உதவ வேண்டும் என்று ராமசாமி ஐயர் முடிவு செய்தார். என் பெற்றோர்கள் தங்கள் நல்லாசிகளை அவருக்கு மனமுவந்து தந்தார்கள். அவர் அன்று தொடங்கிய ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளிதான் பின்னர் பிரம்மாண்டமான சீதாலட்சுமி ராமசாமி ஐயர் கல்வி வளாகமாக வளர்ந்தது. ராமசாமி ஐயர் மிக அருமையாகப் பேசக் கூடியவர். தன் நாவன்மையால் யாரையும் கவர்ந்து விடுவார். தன் கல்லூரிக்காகப் பலரிடமிருந்து பெருந்தொகைளை அவர் நன்கொடையாகப் பெற்றார். அந்த உன்னதமான கல்விப் பணியை - பாரம்பரியத்தை - அவரது மகன்கள் தொடர்ந்தார்கள்.

    பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளையும், எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த கல்யாணசுந்தர முதலியாரும் என் தந்தையின் நெருங்கிய நண்பர்கள்.

    கல்வியின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த என் தந்தை திருச்சி நேஷனல் கல்லூரியின் கவுன்சிலில் அங்கம் வகித்தார். அந்தப் பதவியில் இருந்த சமயம் கல்லூரியின் கொள்கைகள் குறித்து முடிவெடுக்கும் போது என் தந்தைக்கும், செல்வாக்கு மிகுந்த உள்ளுர் அரசியல்வாதியான திரு. ரத்தினவேல் தேவருக்கும் அடிக்கடி கருத்து மோதல் வரும். சுவையான மோதலாகவே அது இருக்கும். கல்லூரியின் மருத்துவ அதிகாரியாகவும் என் தந்தை இருந்தார். மேலும் முதல்வர் திரு. சாரநாதன் மற்றும் தத்துவப் பேராசிரியர் திரு. சீனிவாச சர்மா ஆகியோரின் உற்ற நண்பர். 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதியன்று திருச்சி நேஷனல் கல்லூரியில், அப்பாவின் திருவுருவப் படத்தை மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் திறந்து வைத்தார். அப்போது வாசிக்கப்பட்ட அப்பாவைப் பற்றிய பாராட்டு வரிகள் பின்வருமாறு:

    சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து வருட காலகட்டத்தில் கேப்டன் டி.எஸ். பாலசுப்பிரமணிய ஐயர் பிறந்தார். 'தி ஹிந்து' மற்றும் ‘சுதேசமித்திரன்' புகழ் அமரர் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரின் தம்பி மகன். தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிறந்தார். மருத்துவப் பட்டம் பெற்ற பின்பு சிறிது காலம் ராணுவ மருத்துவப் பிரிவில் முதல் உலகப் போரின்போது பணியாற்றி கேப்டன் பதவி வரை உயர்ந்தார். போருக்குப் பின் அவர் திருச்சியில் சொந்தமாக பிராக்டீஸில் ஈடுபட்டார். அவர் கை பட்டாலே நோய்கள் பறந்தோடின. சில வியக்கத்தக்க பலன்களை அவர் நோயாளிகளுக்கு அளித்தார். தன் பார்வையில், அணுகுமுறையில் அவர் ஒரு பழைமைவாதியாகவே திகழ்ந்தார். பொது நல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். திருச்சி மாவட்ட மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்தார். சாலை ரோடில் சங்கத்தின் புகழ்பெற்ற சொந்தக் கட்டிடத்திற்குக் காரணகர்த்தா அவர்தான். ‘சௌத் மெட்ராஸ் எலெக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷன் லிமிடெட்'டின் இயக்குனராகவும், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். 1942-45ல் தமது கல்வி நிலையத்தின் சோதனையான கால கட்டங்களில் உதவிச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். மருத்துவத்தில் தான் காட்டிய திறமையைப் போலவே தான் ஏற்றுக்கொண்ட அத்தனைப் பொதுப் பதவிகளிலும் அவர் திறமை காட்டி சிறந்து விளங்கினார். யாரும் அவரை முட்டாளாக்கி விடமுடியாது. முட்டாள்தனத்தை அவராலும் சகித்துக்கொள்ள இயலாது. நீண்ட நிறைவாழ்வு வாழ்ந்த அவர் புகழின் உச்சியில் இருந்தபோது மறைந்தார். அவரது மூத்த மகன் டாக்டர் பி. ராமமூர்த்தி சர்வதேசப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அவரது இளைய மகன் இந்தியன் அலுமினியம் கம்பெனியில் பிரபலமான உலோகவியல் நிபுணர்.

    என் தந்தை இந்திய மருத்துவச் சங்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். அதன் மத்திய மாநிலக் கவுன்சிலில் இடம் பெற்றிருந்தார். அச்சங்கத்தின் திருச்சிப் பிரிவை நிறுவியர்களில் அவரும் ஒருவர். அவரோடு இப்பணியில் டாக்டர் பாலாம்மாள், சாம்பசிவம், பி.ஏ.எஸ். ராகவன், டி.எஸ்.எஸ். ராஜன் மற்றும் பலர் ஈடுபட்டார்கள். இந்தக் குழுவினரைவிட மிகவும் இளையவர் டாக்டர் ஜி. விஸ்வநாதன். அவர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி கிடைக்க வழி செய்வதில் ஆர்வம் காட்டினார். ஒருதரம் உள்ளுர் சங்கர மடத்தைச் சேர்ந்த ஒரு பிராமணச் சிறுவன் காது வலியால் அவதிப்பட்டபோது அவனுக்கு டாக்டர் ஜி.வி. சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். அச்சிறுவன் பிறகு சங்கர மடத்தின் தலைவரானார். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்தான் அச்சிறுவன்!

    1920களின் கடைசியில் அன்றைய திருச்சி டாக்டர்கள் மாதாமாதம் திருச்சியில் ‘காரனேஷன் கார்டன்ஸ்' எனப்படும் பூங்காவில் கூடுவார்கள். அந்தக் கூட்டத்துக்காக நானும் என் தம்பியும் ஆவலாகக் காத்திருப்போம். நாங்களும் அப்பாவுடன் போவோம். காசில்லாமல் நிறைய சாப்பிடலாம். ஐஸ்க்ரீம் கிடைக்கும்.

    'காரனேஷன் கார்டன்ஸ்' பற்றி ஒரு குறிப்பு:

    ‘1898ம் ஆண்டு நகர வாழை வியாபாரிகளின் நன்கொடையாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு அளிக்கப்பட்டது. பூங்காவுக்குள் இருக்கும் விக்டோரியா மகாராணியின் உருவச் சிலையை 1903ல் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தாலும் அந்த ஓங்கி வளர்ந்த உயர் மரங்கள் பலருக்கு நிழல் தந்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் பறவைகளுக்குப் பாதுகாப்பான வசிக்குமிடங்களாக அந்த மரங்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.’ (நன்றி: ரிப்போர்ட்ர்ஸ் டைரி, ‘தி ஹிந்து', 19-5-1997)

    திருச்சி கோட்டை ரெயில்வே நிலையத்தை அடுத்து ரெயில்வே மேம்பாலத்துக்குப் பின்னால் திருச்சி இந்திய மருத்துவக் கழகத்துக்காகச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிலம் வாங்கியதிலும், கட்டுமான வேலைகள் நடைபெற்ற போதும் என் தந்தை உதவினார். அவரது மறைவிற்குப் பின்னர் அவரது திருவுருவப் படத்தை மருத்துவ உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் டாக்டர் ஆர்.வி. ராஜம் அவர்கள் திறந்து வைத்தார். டாக்டர் ராஜம் அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் அப்பாவுக்கு ஒரு வருடம் ஜூனியர்.

    என் தாயாரைப் பற்றி எனக்கு அவ்வளவாக நினைவு இல்லை. பலர் சொல்லக் கேட்டதிலிருந்து அவர் ஒரு அழகான, இனிமையான பெண்மணி என்று தெரிகிறது. தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்தவர். எங்கள் குடும்பத்தில் ஆளாளுக்கு ஒரு கொள்கை. கிட்டத்தட்ட எல்லோருமே முன்கோபக்காரர்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் தன்னை இணைத்துக்கொள்ள என் தாயார் சிரமப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. என் தாய்வழி தாத்தா திரு. விஸ்வநாத சாஸ்திரிகள் சமஸ்கிருதம், கணிதம் ஆகியவற்றில் மேதை. இந்த இரண்டு துறைகளிலும் எனக்கிருக்கும் பேரார்வம் அவரிடமிருந்து எனக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரது ஒரே மகன், என் மாமா திரு. டி.வி. சுப்பிரமணியம் அதி புத்திசாலி. நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர். அவர் நீதித் துறையில் நுழைந்து புகழ் பெற்றார். அவரது தீர்ப்புகள் பெரிதும் வரவேற்கப்பட்டன.

    1927 நவம்பரில் என் தாயார் காலமானார். அப்போது எனக்கு ஐந்தரை வயது. கொஞ்ச நாள் அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஒருவித வயிற்றுப் போக்கு நோய் இருந்ததாகச் சொன்னார்கள். இப்போதாக இருந்தால் லிவர் எக்ஸ்ராக்ட் அல்லது பி12 ஊசி போட்டுக் குணப்படுத்திவிட முடியும். அப்போது இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

    ஒரு விஷயம் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. புத்திசாலியான என் அப்பா, அதிலும் ஒரு புகழ்பெற்ற டாக்டர், பதினான்கு மாதங்களுக்கு ஒரு முறை தந்தையாகிக் கொண்டிருந்ததை நினைத்தால் எனக்கு வியப்பு மேலிடுகிறது. இரு குழந்தைகளுக்கிடையே இடைவெளி, குடும்பக் கட்டுப்பாடு முறைகள் ஏதும் அப்போது தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். என் சகோதரிக்கும் எனக்கும், எனக்கும் என் தம்பிக்கும் என்று பார்த்தால் சரியாக பதினான்கு மாதங்கள் தான் இடைவெளி. என் சகோதரி லீலாவதி 1920 டிசம்பரில் பிறந்தார். நான் பிறந்ததோ 1922 ஜனவரி. என் தம்பி கிருஷ்ணமூர்த்தி 1923 மார்ச்.

    சத்தியமூர்த்தி, நாகரத்தினம் என்று இன்னும் இரண்டு குழந்தைகளையும் என் தாயார் பிரசவித்தார். ஆனால் அவர்கள் இளமையிலேயே இறந்துவிட்டார்கள். அம்மாவுக்குக் காசக்குடல் நோய் இருந்திருக்கலாம் என்று மற்றவர்கள் சொன்னாலும் அதை நான் நம்பவில்லை. அது வயிற்றுப் போக்காக (Spruwe) இருந்திருக்கலாம். ஏனெனில் எங்கள் யாருக்கும் காசநோயின் அடையாளங்கள் இல்லை. தனது 27வது வயதில் - ஐந்து குழந்தைகளை அதற்குள் பெற்று - என் தாயார் கண் மூடினார்.

    அவரைப் பற்றிய நினைவுகள் என்கு மிக மிக மங்கலாகவே இருப்பதால் அவரது மரணம் பற்றி நினைத்தால்கூட எனக்கு அழுகை வரமாட்டேனென்கிறது. எப்படியோ அவரது அத்தியாயம் முடிந்து போனது.

    பின்னர் ஒரு அலங்காரச் சாரட்டு வண்டியில் அப்பாவுடன் கல்யாண ஊர்வலம் ஒன்றில் போனது எனக்கு நினைவிருக்கிறது. அப்பாவின் இரண்டாம் கல்யாணம் அது. புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. வைத்தியநாத சாஸ்திரிகளின் மகள் சாவித்திரியை அவர் மறுமணம் செய்து கொண்டார். என் குடும்பத்தில் நடைபெற்ற மிக நல்ல, அதிர்ஷ்டம் நிறைந்த நிகழ்ச்சியாகவே நான் அந்த மறுமணத்தைக் கருதுகிறேன். சித்தி சாவித்திரிக்கு என் தாத்தா சின்னம்மா என்றே பெயர் சூட்டினார். அன்று முதல் என் குடும்பத்தில் அனைவருக்குமே அவர் சின்னம்மாதான். அழகான, களையான சின்னம்மா. பணமோ, படிப்போ அவ்வளவாக இல்லாதவர்தான். இருந்தாலும் அவரது குண நலன்களை விவரிக்க வேண்டுமானால் ஒரு முழு அத்தியாயம் போதாது. அவரது தந்தை திரு. வைத்தியநாத சாஸ்திரிகள் மிக மென்மையான மனிதர். திருச்சிக்கு வரும்போதெல்லாம் எங்களுக்கு இனிப்புகள் வாங்கி வருவார். ஆனால் ஒரு நாளைக்கு மேல் தங்கமாட்டார்.

    கருணை, மென்மையான அணுகுமுறை, தத்துவக் கண்ணோட்டம் இவையெல்லாம் சின்னம்மாவின் அருங்குணங்கள். பலருக்கு இவை வாய்ப்பது அரிது. இந்து கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு பெண்மணிக்கு இணையற்ற உதாரணமாக அவரைச் சுட்டிக்காட்டலாம். இயல்பாக வாய்த்த குணங்கள் அவை. தனக்குக் குழந்தை இல்லாததை அவர் என்றுமே பெரிதுபடுத்தியதில்லை. மாறாக எங்கள் மூன்று பேரையும் அவர் சீராட்டி வளர்த்தார். பாசத்தைப் பொழிந்தார். ‘சித்தி சித்திதான். பையன்களைக் கொடுமைப்படுத்துவாள்' என்று என் பாட்டிக்கு சின்னம்மாமீது ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் சின்னம்மாவோ அந்தச் சந்தேகத்தைப் பொய்யாக்கினார். சின்னம்மா, ‘சித்தி சிந்தாந்தத்திற்கு' ஒரு விதி விலக்கு என்பதை உணரவே பாட்டிக்குப் பல காலம் பிடித்தது.

    அப்பா இறந்த பிறகும் எங்கள் ஆண்டார் தெரு வீட்டிலேயே சின்னம்மா வசித்து வந்தார். சொத்து விவகாரங்களை அவர் கவனித்துக் கொண்டார். கடைசியில் அவையெல்லாம் விற்கப்பட்டுவிட்டன. ஆண்டார் தெரு இல்லத்தை ஒரு நினைவுச் சின்னமாகப் பாதுகாக்க நான் நினைத்தேன். எனவே அதை விற்க வேண்டாம் என்றேன். ஆனால் ‘இந்த வீட்டின் மீது, அதுவும் பழைய வீட்டின் மீது எந்தப் பிள்ளைக்கும் எதிர்காலத்தில் ஆர்வம் இருக்கப் போவதில்லை. எனவே விற்பதே நல்லது' என்றார் சின்னம்மா. காலப் போக்கில் அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. நானும் என் தம்பியும் அந்த வீட்டை விற்ற பிறகு சென்னை சி.ஐ.டி. காலனியில் எங்கள் வீட்டிலேயே சின்னம்மா வந்து தங்கினார். என் மனைவி இந்திரா, சின்னம்மாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டாள். இந்திரா போல ஒரு மருமகளைப் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று வருவோர் போவோரிடமெல்லாம் சின்னம்மா தன் மருமகள் புகழ் பாடிக் கொண்டிருப்பார். சின்னம்மாவுக்கும், அவர் குடும்பத்திற்கும் வேண்டிய உதவிகளை மனமுவந்து செய்தாள் என் மனைவி. ‘விருப்பப்படி செலவு செய்யுங்கள், சின்னம்மா' என்று நாங்கள் பலமுறை சொல்வோம். ஆனால் அவரோ எங்கள் பணத்திலிருந்து ஒரு காசுகூட அவரது உறவினர்களுக்குக் கொடுத்ததில்லை. எங்கள் சொத்தை ஏதோ ஒரு அறக்கட்டளையைப் போலக் கருதி கவனமாக அவர் பாதுகாத்தார்.

    சின்னம்மா தன் மரணத்தின் போதுகூட சிரமப்படவில்லை. 1994 ஏப்ரலில் ஒரு நாள். புதுக்கோட்டையில் தன் சகோதரர் இல்லத்தில் இருந்தபோது ஓய்வெடுக்கப் படுத்து கண்ணை மூடியவர்தான். திறக்கவே இல்லை. முக்கல் இல்லை, முனகல் இல்லை. தன் வாழ்நாளில் யாரையும் துன்புறுத்தாத அந்த நல்லவரின் இதயத் துடிப்பைத் துன்புறுத்தாமலேயே இறைவன் நிறுத்திவிட்டான். எத்தனை பேருக்கு இப்படியொரு அமைதியான மரணம் வாய்க்கும்?

    அவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் ஒரு குறையுமின்றி நிறைவேற்றப்பட்டன. எல்லாம் எங்கள் சி.ஐ.டி. காலனி இல்லத்தில்தான் நடந்தன. அனைத்து ஏற்பாடுகளையும் என் மனைவி இந்திராதான் முன்னின்று செய்தாள்.

    என்ன செய்தாலும் சின்னம்மாவுக்குத் தகும்.

    3

    ஒரு நூறு மருத்துவர்கள்

    தன் பாரம்பரியம் பற்றியும், மரபு வழி பற்றியும் ஒருவர் நியாயமாகப் பெருமைப்பட வேண்டும். ஏனெனில் நமது திறமைகள், தன்மைகள் எல்லாமே முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றதுதான். கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு எங்கள் தொன்மையான மரபு வழி பற்றிய விவரங்களை நான் இங்கே தர விரும்புகிறேன். எதிர்கால சந்ததியினருக்கு இந்த விவரங்கள் பயன்படக்கூடும்.

    மூத்தோரை இளையோர் வணங்கி தங்களின் 'ப்ரவர'த்தை ஒப்புவிப்பதன் மூலம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது என்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை. அக்கால ரிஷிகளில் முன்னோர்களின் பூர்வீகத்தைத் தேடுவதில் தொடங்கி, ஒருவரின் குலம், கோத்திரம், எந்தச் சடங்குகளைப் பின்பற்றுகிறார் என்ற சூத்திரம், படிக்கும் வேதம், அவரின் அதிகாரபூர்வமான வேதப் பெயர் என்று சகல விவரங்களையும் ஒப்புவிப்பதுதான் ‘ப்ரவரம்'. மூத்தவர்களின் காலடி தொட்டு வணங்கி 'அபிவாதயே' என்று சொல்லும் வார்த்தையில் இந்த அறிமுகம் தொடங்குகிறது. முடிக்கும் போது 'அஸ்மிபோ:' என்ற வார்த்தையைச் சொல்ல வேண்டும். அதற்கு ‘நான் இன்னார் ஐயா' என்று பொருள். என் குடும்பத்தின், என் முன்னோர்களின் ப்ரவரம் பின்வருமாறு:

    "அபிவாதயே, ஆங்கிரஸ், பவுருஹுத்ஸ, த்ராசதஸ்ய, த்ரயார்ஷெய, ப்ரவரன்விதாஹ… அதாவது, ஆங்கிரஸ், புருஹஸ்த, த்ரசத ஆகிய மூன்று உன்னத ரிஷிகளிலிருந்து என்று பொருள்.

    சடமர்ஷண கோத்ரஹா... சடமர்ஷண கோத்திரத்தைச் சேர்ந்த: போதாயன சூத்ரஹா... போதாயன ரிஷி வகுத்த சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிற:

    யஜுஸ் சாகா அத்யாயி: யஜுர் வேதம் படிக்கிற:

    ராமமூர்த்தி சர்மா நாமா அகம் ஆஸ்மிபோ

    என் பெயர் ராமமூர்த்தியாகும், மதிப்பிற்குரிய ஐயா:

    பொதுவாக முன்னோர் மரபு அங்கிரஸ், பவுருஹுத்ஸ, த்ரசத ஆகிய உன்னத ரிஷிகள் மூவரிலிருந்து தொடங்கும். சப்தரிஷிகளில் எழாவது ரிஷி அங்கிரஸ் முனிவர். ஆத்ரி, ப்ருஹீ, குத்ஸா, வசிஷ்டா, கௌதமா, கஷ்யபா ஆகியோர் மற்ற ரிஷிகள். உலகைப் படைக்க பிரம்மன் எண்ணியபோது அவனுள் உதித்தவர்கள் இந்த ரிஷிகள்.

    சடமர்ஷண கோத்ர பிரபாவம் என்ற நூல் விலாங்குப்பம் ரங்கநாத தாத்தாச்சாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டு, மஹா தேசிகனால் 1977 ஜூன் 6ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நூல் திரு. பி.ஏ. ரங்காச்சாரி, அமுத முகுந்த நிலையம், 6, ஜெயலட்சுமி காலனி, ஷெனாய் நகர், சென்னை 600030 என்ற முகவரியில் கிடைத்து வந்தது. நான் அந்நூலின் புகைப்படப் பிரதியை கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ தேசிகாச்சாரியார் அவர்களிடமிருந்து பெற்றேன். மகாயோகி ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யாவும், அவரது மகன் ஸ்ரீ தேசிகாச்சாரியாரும் சடமர்ஷண கோத்திரத்தில் பிறந்தவர்கள்.

    தன் கோத்திரத்தை அறிந்து அதை அடிக்கடி வெளிப்படுத்துவது, ஒருவர் தன் குடும்பத்தை நெறிப்படுத்திய பலப்பல குருமார்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்யும் நன்றிக் கடனாகக் கருதப்படுகிறது.

    'என் மரபு வழி இது. என் முன்னோர்கள் சாலச் சிறந்தவர்கள். அந்த வழி வந்த நான் தர்ம நெறி முறைகள் வழுவாமல் வாழ்வேன்' என்று பொறுப்பேற்றுக்கொள்ளும் அறிவிப்பு அது.

    எதிர்கால சந்ததியினருக்காக நான் சேகரித்த சில குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.

    அங்கிரஸ் ரிஷியின் உன்னதப் பெருமைகளை ரிக் வேதம் பேசுகிறது. பல கதைகள் இருக்கின்றன. ஃபானி என்ற அசுரன், அங்கிரஸ் ரிஷியின் அனைத்துப் பசுக்களையும் திருடிவிட்டான். பின்னர் அப்பசுக்களை ரிஷி திரும்பப் பெற இந்திரக் கடவுள் உதவினார். யக்ஞ மார்க்கத்தை உருவாக்கிய பெருமை அங்கிரஸ் ரிஷிக்கு உண்டு. அதர்வண வேதத்தை (நான்காவது வேதம்) உருவாக்கியதில் அங்கிரஸுக்குப் பெரும்பங்கு உண்டு. அதர்வ வேதத்திற்கு அங்கிரஸ் வேதம் என்றும் ஒரு பெயர் நிலவுகிறது.

    அங்கிரஸ், ப்ருகு பிரிவுகளுக்கிடையே நெருக்கமான உறவு உண்டு. சப்த ரிஷிகளில் இரண்டாவது ரிஷி ப்ருகு. அங்கிரஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1